-
இது போன்ற போஸ்டர்கள்& பத்திரிகை விளம்பரங்கள் தான் எனக்கெல்லாம் பிடிக்கும்,
தலைவர் மட்டுமே வித விதமான ஸ்டைல்களில் இருக்க வேண்டும்,
19-05-2020
முரசு தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கும்& இரவு 7 மணிக்கும்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...06&oe=5EE8A11A
Thanks Sekar
-
19-05-2020
செவ்வாய்க்கிழமை,
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
கௌரவம் -.................................................. ........... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
நிச்சய தாம்பூலம் -.................................................. காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
ராமன் எத்தனை ராமனடி -...................................... காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்,
சாந்தி -.................................................. ................. காலை 11 மனிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்,
Thanks Sekar
-
-
-
தங்கை~19/05/1967
நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.
புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.
ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )
கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....
https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ
இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக
காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA
சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)
https://www.youtube.com/watch?v=LR3Rl5P1Zro
நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.
https://m.youtube.com/watch?v=QZGiY5OLWnE
Thanks Gobalakrishnan Sundararaman
-
-
-
'அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது...
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது....உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது...உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது....
காலம் போனால் திரும்பு வதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை."
இன்று 19/05/2020 மாலை 04.00 p.m. மணிக்கு சன் லைப்ஃ டி.வி.யில் நடிப்பின் இமயத்தின் " படித்தால் மட்டும்போதுமா ,"
காண தவறாதீர்கள். ¶
இதில் சிவாஜி கணேசன், சாவித்திரி, பாலாஜி, ராஜசுலோசனா பலரும் நடித்துள்ளனர்.
-
-
-
-
தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு..
(தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)
பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம் வட்டாரத்தில், அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன.
"திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் .
புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே !
சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !..
என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள்.
சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்தைகள் இருக்கின்றன .ஆனால் திரையுலகம் கொண்டாடும் வாத்தியார் பற்றி தான் சந்தேகம் நிறைய இருக்கிறது. மனைவிகளின் எண்ணிக்கையை சொல்கிறார்களே தவிர ,சாட்சிக்கு ஒன்றுகூட இல்லை. சிவாஜி பற்றி ஆராய்வதற்கு முன் திரையுலக பிரகஸ்பதிகள் ,வாத்தியாரை முதலில் சோதிக்கட்டும்.அரசியலிலே கொள்கை ரீதியாக விமர்சிப்பதை யாரும் வரவேற்பார்கள். ஆனால் சிவாஜி பற்றி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தூற்றுதல் அதிகமாக இருக்கிறது .இன்னொரு ஏட்டிலே சிவாஜி சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதுகிறது.
கன்னடத்து வலிப்பு நடிகனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதை பெருமையாக நினைத்து சிவாஜியை கேவலப்படுத்தி இருக்கிறது .இந்தப் போக்கு சரியில்லை .தேவையற்றதும் கூட.
எந்தக் கலைஞனையும் மக்கள்தான் புறக்கணிக்க முடியுமே தவிர யாராலும் அழிக்க முடியாது .சுமார் 500 படங்களைத் தாண்டி பிரேம்நஸீர் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை பெருமையோடு கேரள மக்கள் பாராட்டுகிறார்கள் .50 வயதை தாண்டி அறுபதை நெருங்கும் ராமராவ் ,நாகேஸ்வரராவ் போன்றவர்களை ஆந்திரர்கள் பெருமையோடு ரசிக்கிறார்கள். கர்நாடகத்தில் ராஜ்குமார் வணங்கப்படுகிறார் .அதேபோல பம்பாயிலே அசோக்குமார் சாகும்வரை நடிக்க வேண்டும் என்று வரவேற்கிறார்கள்.வங்கத்திலே
உத்தம்குமாருக்கு அந்த பெருமை இன்னும் இருக்கிறது. ரஷ்யாவில்
பீட்டர் உஸ்டினோவ் -அமெரிக்காவில் மார்லன் பிராண்டோ ,எகிப்திலே
ஹேமத் ஹமாதி...
இப்படி எந்த நாட்டிலும் கலை தொண்டாற்றிய மாபெரும் கலைஞர்கள் ஒழிந்து போக வேண்டும் என்று யாரும் எழுதியது கிடையாது .
தமிழகத்திலே தான் தமிழ் கலைஞனை மதிக்கிற எண்ணம் இல்லை. வேறு மொழி கலைஞர்களை தூக்கிவைத்துக்
கொண்டாடுகிறோம்.
மலையாளி -கன்னடர் என்று யார் யார் பின்னாலோ ரசிகர்களை இழுத்துக்கொண்டு போகும் எழுத்தாளர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள் .ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ,கேரளத்திலும் நம் தமிழர்களை வரவேற்கும் நல்லெண்ணமும் இல்லை!
ஆனால் நாம் மட்டும் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
தமிழ் நடிகர்களுக்கு என்று தனி சங்கம் உருவாகியிருக்கிறது .தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. விரைவிலேயே தமிழ் பத்திரிகையாளர் சங்கம் உருவாக இருக்கிறது .தமிழ் கலை காக்கப்படுவதோடு - தமிழ் கலைஞர்களை வளர்க்க நாம் பாடுபட வேண்டும் .அதை விட்டுவிட்டு சிவாஜி போன்ற நல்ல தமிழனை இழிவு படுத்துபவர்களை
இந்த நாடு மன்னிக்கவே கூடாது.
மதிக்கவே கூடாது.
மதிஒளி
01.11.79
குறிப்பு:
(...இந்த திரையுலகம் இந்த 2020லும் அப்படியே தானே இருக்கிறது.)
நடிகர்திலகத்தின் வானாளவிய புகழ் மென்மேலும் வளர்வதைக் கண்டு பொறாமைப்படும் கூட்டம் அன்றுமுதல் இருக்கிறது.அவர்கள் செய்த சதி வேலைகள் கலையுலக சக்கரவர்த்தியான
நடிகர்திலகத்திற்கு அதிகளவில் செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர்திலகம் 45 வருடங்கள்.
பின் இளையதிலகம் 1982ல் வந்தார் .
அவரும் 25 வருடங்கள் முண்ணனி நாயகனாக.இப்போது விக்ரம் பிரபுவும்..
என்ன இது! அன்னை இல்லமே இன்றளவும் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருப்பதா? என்று வயிற்றெரிச்சல் கூட்டம் பூதக் கண்ணாடி போட்டு ஏதாவது தவறுதெரிகிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. இளையதிலகத்தின் வளர்ச்சி, விக்ரம் பிரபுவின் வளர்ச்சியும் கண்டு பொறுப்பதில்லை அந்த வயிற்றெரிச்சல் கூட்டம்.இந்த கூட்டத்திற்கு
அன்னைஇல்லம் தக்க பதிலடி கொடுத்திருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.அப்படி செய்யாததே அன்னை இல்லத்தின் பெருமை!
காரணம்...
தமிழ்நாட்டின் சிறந்த பிரபல குடும்ப தலைவராக வாழ்ந்து காட்டிய சிவாஜிகணேசன் அப்படி அன்னை இல்லத்தை வளர்க்கவில்லை.
...செந்தில்வேல் சிவராஜ்...
Thanks Senthilvel
-
மீண்டும் ஒரு முறை அன்பின் இனியவர்களுக்கு.யாருடைய மனதையும் காயப்படுத்த இப்பதிவு வெளியிடவில்லை. அடுத்த தலைமுறை நண்பர்களுக்கே இந்த இறுதி பயணம் ரஷிய முன்னள் அதிபர் லெனின் அவர்களுக்கு கூட்டமல்ல! அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடிக்கு வந்த கூட்டமல்ல!இந்திய பெருந்தலைவர்களுக்கு வந்த கூட்டமல்ல!தமிழக முன்னாள் முதல்வர்களுக்கு வந்த கூட்டமல்ல! தலைவர்கள் இறந்த போது வந்த கட்சி தொண்டர்களுக்கு. அனைத்து ரயில்கள் இலவசம்.அனைத்து அரசாங்க பேருந்துகள் இலவசம் அனைத்து தனியார்பேருந்துகள்இலவசம்.அனைவருககும் சாப்பாடு இலவசம்.போதை ஆசாமிகளுக்கு.போதை பொருள் இலவசம்.கூட்டத்தினர்களுக்கு இலவசமாக.பிரியாணி இலவசம்.என்று கொடுத்து அழைத்து வரப்பட்டனர்...ஆனால் 21/07/2001.முதல்.23/07/2001.வரை வந்தவர்கள்.எல்லாம்.ரசிகரோ.தொண்டனாகவோ வரவில்லை.அண்ணன் சிவாஜி அவர்களின் இறுதி பயணத்தின் வந்தவர்கள்.எல்லாம் ஒரு தந்தையை பறி கொடுத்தவரகள் போல் தன் மகனை பறி கொடுத்தவர்கள் போல்.தனது தாய் மாமனை.பறிகொடுத்தது போல்.தனது ஆசானை பறி கொடுத்தது போல்.தனது உடன் பிறந்த சகோதரனை பறி கொடுத்தது போல். ஏதோ ஒரு உறவினரை பறிகொடுத்ததை போல்.தாய்மார்கள் தனது உடன் பிறப்பை பறி கொடுத்தவர்கள் போல் அலறி அடித்து புறண்டு அழுது துடித்தனர்.வந்தனர்.பார்த்தனர்.மேலும் அன்னை இல்லத்தில் இருந்து.பெசன்ட் நகர் மின் மயானம் வரை எறத்தாழ.எட்டு கிலோ மீட்டர் வரை.சாலை யோர இரு பக்கமும் நின்று கொண்டு.தங்களுது குடும்ப தெய்வத்திற்கு மலர்கள் தூவி இறுதி அஞ்சலி செய்தனர்..உலகில் எந்த தலைவனுக்கும் கிடைக்காத மரியாதையை தாங்கள் பெற்று வின்னுலகம் சென்று சொர்க்கத்தை அடைந்த முதல் மாபெரும் புனிதர் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வாழ்க புகழ்.ஓங்குக அவருடைய புகழ்...என்றும் உங்கள் பாதபூஜையில்.தஞ்சை காளிதாஸ்...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...74&oe=5EE9E121
Thanks Thanjai Kalidass
-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் விசாரணைக்குப்பின் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சுமார் 47 சென்ட் தனது சொந்த செலவில் வாங்கி அதில் கட்டிடம் கட்டி கட்டபொம்மனுக்கு 1970ஆம் ஆண்டு ஒரு குடிமகனின் கடமையாக வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தார் நடிகர்திலகம் ...........
கயத்தாறில் எங்கே இருந்து பார்த்தாலும் கட்டபொம்மனின் சிலை தெரியும் அளவுக்கு மிக உயரமான நிலையில் அமைத்து தந்தார் நடிகர் திலகம்.....
.(இன்று கட்டபொம்மன் சிலை அருகில் பாலத்தைக் கட்டி கட்டபொம்மன் சிலை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டார்கள்... பாலம் கட்டுவதற்கு முன்பு கட்டபொம்மன் சிலையின் பீடத்தின் உயரத்தை அதிகரித்து பாலத்தை கட்ட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை அரசு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு வேதனையான விஷயம்) ........
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவுக்கு ஆந்திர காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த சஞ்சீவி ரெட்டி அவர்கள் தலைமை ஏற்க. ....
சிலையை சிவாஜியின் அன்புக்குரிய தலைவர் காமராசர் அவர்கள் திறந்து வைத்தார்.....
சிவாஜி சிலை அமைத்து தந்ததோடு கட்டபொம்மன் சிலையை பராமரிப்பதற்கு பஞ்சாயத்து யூனியனுக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்தார் ........
கட்டபொம்மன் வாரிசுதாரர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாடை போர்த்தினார் ..சிலையை செய்த சுப்பையா ஆசாரி அவர்களுக்கு பட்டாடை போர்த்தி தங்க மோதிரம் பரிசளித்தார் ....
.சிவாஜி நடத்திய பெருவிழாவில் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி ஆகியோரோடு கலை உலகைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் ..........
பின்னர் இந்த இடத்தை அரசிடமே ஒப்படைத்து விட்டார் நடிகர் திலகம்....
அது மட்டுமல்ல இந்த விழாவுக்கான முழுச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார்..................
வீரபாண்டிய கட்டபொம்மனால் தான் தனக்கு உலக அளவில் பெரும் புகழும் கிடைப்பதாக தன்னடக்கத்தோடு நடிகர் திலகம் சொல்லிக் கொண்டாலும்........
நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் பக்தியையும் அன்பையும் மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து உணர்த்தியவர் நடிகர் திலகம் தான்......
நடிகர் திலகத்தின் வடிவிலேயே நாங்கள் கட்டபொம்மனை கண்டார்கள் மக்கள்.....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...db&oe=5EE9098A
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b7&oe=5EE9056B
Thanks Luxmanan
-
-
-
சிவாஜி சினிமாவில்
யாரையும் நோகடித்ததில்லை,
நஷ்டப்படுத்தியதுமில்லை,
அடுத்தவரை வளரவிடாமல் அழித்தவருமில்லை.
சிவாஜி அரசியலில்
அடுத்தவரிடம் பணம் வாங்கியதில்லை.
கூட்டம் நடத்துபவர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அது இன்று வரை நடைமுறையில் இருப்பது.
ஆனால் கூட்டத்திற்கான செலவையும் கொடுத்து, தனது சொந்த செலவிலேயே வருகை தந்தவர்
சிவாஜி ஒருவரே.
தனி அரசியல் இயக்கம் கண்ட போதும்,
தனது சொத்தை விற்று செலவு செய்தாரே ஒழிய,
எவரிடமும் அன்பளிப்பு பெற்றதில்லை.
அரசியலில் பல ஆண்டு காலம் இருந்த போதும்,
இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை எவராலும் சொல்ல முடியாது.
இப்படி ஒரு தலைவரை அரியணை ஏற்ற தயங்கிய தமிழகமே....
இன்று உன் நிலைமை.......
இது போல் ஒரு தலைவரை இனி காண முடியுமா...
Thanks Thoppumani
-
நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளிவிழா நிறைவு செய்தபோது, மதுரை நியூசினிமாவில் நடிகர் திலகம், திரு பந்துலு மற்றும் கலைஞர்கள் ரெண்டு காட்சிகள் இடைவேளை நேரத்தில் ரசிகர் முன் தோன்றி நன்றி உரைக்கும் வழக்கம் இருந்தது. இந்த புகைப்படம் அப்போது எடுத்தது.
பதிவு :திரு. சுப்பு. டிவிட்டர் பதிவு
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...56&oe=5EE8D80E
Thanks Senthilvel
-
-
-
-
-
22-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
1) பாச மலர் -.................................................. .................... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்
2) நல்லதொரு குடும்பம் -................................................ காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
3) இமைகள் -.................................................. .................... காலை 9:30 க்கு ராஜ் டிவியில்,
4) சாந்தி -.................................................. .......................... காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
5) பாலும் பழமும் -.................................................. .......... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
6) விடுதலை -.................................................. ...................பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,
7) நீல வானம் -.................................................. .................இரவு 10:30 க்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,
8) அம்பிகாபதி -.................................................. ...............இரவு 11 மணிக்கு பாலியல் டிவியில்,
Thanks Sekar Parasuram
-
டிஜிட்டல் யுகத்தில் சாதனை படைத்த நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 22 முதல் இன்று மே 21 வரையிலான இரண்டு மாத காலகட்டத்தில் மட்டுமே ஒளி பரப்பான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மற்றும் இடம்பெற்ற டிவிச் சேனல்களின் விவரங்கள், ( சில படங்கள் ஒளி பரப்பான சேனல்கள் விடுப்பட்டிருந்தால் கமெண்ட்ஸ் பகுதியில் குறிப்பிடவும்)
வரிசைப்படி
1) பணம் -.................................................. ............................................ வசந்த் டிவி, கேப்டன் டிவி
2) மனோகரா -.................................................. ................................... ராஜ் டிஜிட்டல் டிவி
3) அந்த நாள் -.................................................. .................................... சன் லைப்
4) கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி-.................................... கேப்டன் டிவி, வசந்த் டிவி, மெகா டிவி
5) தூக்கு தூக்கி -.................................................. ............................... முரசு டிவி, வசந்த் டிவி
6) முதல் தேதி -.................................................. ................................... கேப்டன் டிவி
7) கள்வனின் காதலி -.................................................. ...................... ஜெயா மூவிஸ்
8) நான் பெற்ற செல்வம்-.................................................. .............. முரசு டிவி,வசந்த்
9) நானே ராஜா -.................................................. .............................. புதுயுகம் டிவி, வசந்த் டிவி
10) தெனாலிராமன் -.................................................. ....................... முரசு டிவி, வசந்த் டிவி
11) அமர தீபம் -.................................................. ................................. முரசு டிவி, வசந்த் டிவி
12) தங்க மலை ரகசியம் -.................................................. .............. ராஜ் டிஜிட்டல்
13) அம்பிகாபதி -.................................................. ......................... வசந்த் டிவி, மெகா டிவி, கேப்டன் டிவி
14) பாக்கியவதி -.................................................. ......................... ஜெயா மூவிஸ்
15) உத்தம புத்திரன் -.................................................. ................. முரசு டிவி, வசந்த் டிவி, பாலிமர் டிவி
16) பதிபக்தி -.................................................. ............................... ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
17) சபாஷ் மீனா -.................................................. ........................ முரசு டிவி
18) வீரபாண்டிய கட்டபொம்மன்-.............................................. ராஜ் டிவி
19) பாகப்பிரிவினை -.................................................. .............. கலைஞர் டிவி, முரசு டிவி, வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
20) பாவமன்னிப்பு -.................................................. .................. ராஜ் டிஜிட்டல், முரசு
21)பாசமலர் -.................................................. ............................. ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
22) மருத நாட்டு வீரன்-.................................................. ............ கேப்டன் டிவி, வசந்த் டிவி
23) பாலும் பழமும் -.................................................. ................. ஜெயா மூவிஸ், சன் லைப் சேனலில்
24) கப்பலோட்டிய தமிழன்-.................................................. .. ராஜ் டிஜிட்டல்
25) பார்த்தால் பசி தீரும்-.................................................. ........ சன் லைப்
26) நிச்சய தாம்பூலம்-.................................................. ........... வசந்த் டிவி
27) படித்தால் மட்டும் போதுமா-.......................................... சன் லைப், பாலிமர், ராஜ் டிஜிட்டல்
28) பலே பாண்டியா -.................................................. ............. சன் லைப்
29) ஆலயமணி -.................................................. ...................... ஜெயா மூவிஸ், மெகா டிவி,
30) இருவர் உள்ளம் -.................................................. ............... கலைஞர் டிவி
31) நான் வணங்கும் தெய்வம்-............................................... ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
32) குல மகள் ராதை-.................................................. ............. சன் லைப் , வசந்த் டிவி
33) குங்குமம் -.................................................. ........................ சன் லைப், பாலிமர் டிவி
34) ரத்தத் திலகம் -.................................................. ................ வசந்த் டிவி, சன் லைப், கேப்டன் டிவி
35) கல்யாணியின் கணவன்-............................................... சன் லைப், பாலிமர் சேனல்
36)அன்னை இல்லம்-.................................................. ............. ஜெயா மூவிஸ்
37) கர்ணன் -.................................................. ............................ ராஜ் டிவி
38) பச்சை விளக்கு -.................................................. ............... முரசு டிவி
39) ஆண்டவன் கட்டளை-.................................................. ..... முரசு டிவி, வசந்த் டிவி,மெகா டிவி
40) கை கொடுத்த தெய்வம்-.................................................. பாலிமர் டிவி
41) புதிய பறவை -.................................................. ................... ஜெயா டிவி,ஜெயா மூவிஸ்,
42) முரடன் முத்து -.................................................. .................. ராஜ் டிஜிட்டல்
43) நவராத்திரி -.................................................. ....................... சன் லைப், வசந்த் டிவி
44) அன்புக்கரங்கள் -.................................................. .............. சன் லைப்
45) சாந்தி - .................................................. ..................................முரசு டிவி, சன் லைப்
46) சரஸ்வதி சபதம்-.................................................. ................ வசந்த் டிவி, சன் லைப்
47) கந்தன் கருணை-.................................................. .................. சன் லைப்,மெகா டிவி,வசந்த் டிவி,கேப்டன் டிவி, ஜீ தமிழ் டிவி, ஜீ திரை டிவி, கே டிவி
48) திருவருட்செல்வர் -.................................................. ............ சன் லைப், வசந்த் டிவி
49) இரு மலர்கள் -.................................................. .................... சன் லைப்
50) ஊட்டி வரை உறவு -.................................................. ........ சன் லைப்,வசந்த் டிவி, மெகா டிவி, புதுயுகம் டிவி, பாலிமர் டிவி, முரசு டிவி
51) கலாட்டா கல்யாணம்-.................................................. ... சன் டிவி, சன் லைப், வசந்த் டிவி, பாலிமர் சேனல், மெகா டிவி, புதுயுகம் சேனல்
52) என் தம்பி -.................................................. ........................ ஜெயா மூவிஸ்
53) தில்லானா மோகனாம்பாள்-........................................ சன் டிவி
54) லட்சுமி கல்யாணம்-.................................................. .... முரசு டிவி, வசந்த்
55) அன்பளிப்பு -.................................................. .................. சன் லைப்
56) தங்கச் சுரங்கம் -.................................................. .......... ஜெயா மூவிஸ், ராஜ் டிஜிட்டல்
57) குரு தட்சணை-.................................................. ............. ராஜ் டிஜிட்டல்
58) நிறைகுடம் -.................................................. .................. புதுயுகம் டிவி,மெகா டிவி
59) தெய்வ மகன் -.................................................. ............ சன் லைப்
60) சிவந்த மண் -.................................................. .............. மெகா டிவி
61) ராமன் எத்தனை ராமனடி-....................................... முரசு டிவி, கலைஞர் டிவி
62) எங்கிருந்தோ வந்தாள்-............................................... ராஜ் டிவி, வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
63) சொர்க்கம் -.................................................. ................. சன் லைப்
64) இரு துருவம்-.................................................. .............. வசந்த் டிவி
65) குலமா குணமா-.................................................. ....... விஜய் சூப்பர் டிவி, கேப்டன் டிவி
66) சுமதி என் சுந்தரி -.................................................. ... சன் லைப்,மெகா டிவி,வசந்த் டிவி, பாலிமர் டிவி, புதுயுகம் டிவி, கேப்டன் டிவி
67) சவாலே சமாளி-.................................................. ....... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
68) மூன்று தெய்வங்கள் -............................................... சன் லைப், வசந்த் டிவி, முரசு டிவி, பாலிமர் டிவி, புதுயுகம்
69) பாபு -.................................................. .......................... சன் லைப்
70) ராஜா - .................................................. ........................ஜெயா மூவிஸ், ஜெயா டிவி
71) ஞான ஒளி-.................................................. ............... சன் லைப், முரசு டிவி- வசந்த் டிவி
72) பட்டிக்காடா பட்டனமா -........................................ வசந்த் டிவி
73) தவப்புதல்வன் -.................................................. ...... சன் லைப், வசந்த் டிவி
74) நீதி -.................................................. ............................ ராஜ் டிஜிட்டல், புதுயுகம்
75) பாரத விலாஸ் -.................................................. ....... சன் லைப்
76) ராஜ ராஜ சோழன்-.................................................. . ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
77) பொன்னூஞ்சல் -.................................................. ..... ராஜ் டிஜிட்டல்
78) கௌரவம் -.................................................. ............... ஜெயா டிவி, ஜெயா மூவிஸ்
79) ராஜபார்ட் ரங்கதுரை -........................................... சன் லைப்
80) சிவகாமியின் செல்வன்-...................................... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
81) வானி ராணி-.................................................. ........ சன் லைப், பாலிமர் டிவி
82) தங்கப் பதக்கம் -................................................ ஜெயா டிவி, ஜெயா மூவிஸ்
83) என் மகன் -.................................................. .......... முரசு டிவி, சன் லைப், பாலிமர் டிவி, புதுயுகம் டிவி, ராஜ் டிஜிட்டல்
84) அன்பே ஆருயிரே .-............................................... சன் லைப்
85) வைர நெஞ்சம் -................................................. வசந்த் டிவி
86) பாட்டும் பரதமும் -............................................. வசந்த் டிவி
87) உனக்காக நான்-.............................................. சன் லைப், வசந்த்
88) கிரஹப்பிரவேசம் -.......................................... சன் லைப்
89) சித்ரா பௌர்ணமி-.......................................... வசந்த் டிவி
90) அவன் ஒரு சரித்திரம் -................................... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
91) தீபம் -.................................................. ............... முரசு டிவி, வசந்த் டிவி
92) அண்ணன் ஒரு கோயில்-.............................. புதுயுகம் டிவி, முரசு டிவி
93) அந்தமான் காதலி -........................................ வசந்த் டிவி, முரசு டிவி,சன் லைப், புதுயுகம் டிவி, பாலிமர் டிவொ
94) தியாகம் -.................................................. ....... முரசு டிவி, வசந்த் டிவி
95) என்னைப் போல் ஒருவன் -.......................... ராஜ் டிவி
96) புண்ணிய பூமி-............................................... சன் லைப்
97) திரிசூலம் -.................................................. ..... பாலிமர் டிவி, புதுயுகம் டிவொ
98) நல்லதொரு குடும்பம் -................................ சன் லைப், வசந்த் டிவி
99) வெற்றிக்கு ஒருவன் -................................... சன் லைப், புதுயுகம் டிவியில்
100) ரிஷிமூலம் -................................................. ஜீ டிவி
101) அமரகாவியம் -........................................... ராஜ் டிஜிட்டல்
102) கல்தூன் -.................................................. .... வசந்த் டிவி
103) இமயம் -.................................................. ..... சன் லைப்
104) கீழ் வானம் சிவக்கும் -............................. முரசு டிவி, வசந்த் டிவி, பாலிமர் டிவி
105) ஊருக்கு ஒரு பிள்ளை -............................. ராஜ் டிஜிட்டல்
106) நான் வாழ வைப்பேன் -........................... பொதிகை
107) வா கண்ணா வா-...................................... முரசு டிவி
108) ஊரும் உறவும் -.......................................... ராஜ் டிஜிட்டல்
109) நீதிபதி -.................................................. ..... முரசு டிவி, வசந்த் டிவி, புதுயுகம் டிவி, விஜய் சூப்பர்
110) சந்திப்பு -.................................................. ... வசந்த் டிவி
111) மிருதங்க சக்கரவர்த்தி -............................ ராஜ் டிவி
112) வெள்ளை ரோஜா-..................................... சன் லைப், கே டிவி, பாலிமர் டிவி
113) கிருஷ்ணன் வந்தான் -.............................. புதுயுகம் டிவி
114) திருப்பம் -.................................................. ... வசந்த் டிவி
115) வாழ்க்கை -.................................................. சன் லைப்,முரசு டிவி, புதுயுகம் டிவி, பாலிமர் டிவி,
116) இரு மேதைகள் -......................................... வசந்த் டிவி
117) தாவனிக் கனவுகள் -.................................. சன் லைப்
118) பந்தம் -.................................................. ........ வசந்த் டிவி
119) நேர்மை -.................................................. ..... சன் லைப், வசந்த் டிவி
120) முதல் மரியாதை -...................................... ஜெயா டிவி, ஜெயா மூவிஸ்
121) படிக்காதவன் -............................................ கே டிவி, சன் லைப்
122) சாதனை -.................................................. ... வசந்த் டிவி
123) ஆனந்தக் கண்ணீர் -................................. சன் லைப்
124) விடுதலை -.................................................. . கே டிவி, பாலிமர், சன் லைப், வசந்த் டிவி
125) தாய்க்கு ஒரு தாலாட்டு -........................... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
126) லட்சுமி வந்தாச்சு -...................................... சன் லைப்
127) ஜல்லிக்கட்டு -.............................................. சன் லைப், முரசு டிவி, வசந்த் டிவி, புதுயுகம் டிவி, பாலிமர் டிவி, ஜெயா மூவிஸ்
128) முதல் குரல் -................................................. ஜீ திரை
129) தேவர் மகன் -............................................... விஜய் டிவி, விஜய் சூப்பர் டிவி
130) என் ஆசை ராசாவே -................................. கே டிவி,
131) திருவிளையாடல் -....................................... சன் டிவி, வசந்த் டிவி
132) எங்க மாமா -................................................. ராஜ் தொலைக்காட்சி
133) வியட்நாம் வீடு -........................................... ஜெயா மூவி,
134) நீல வானம் -.................................................. . சன் லைப்
என்னுடைய கணக்கைக் கொண்டு மட்டுமே 134 திரைப்படங்கள் ஒளி பரப்பாகியிருக்கிறது,
அதிகப்படியான திரைப்படங்கள் அதிகப்படியான சேனல்களிலும் இடம் பெற்றதோடு திரும்ப திரும்பவும் ஒளி பரப்பாகியது,
Thanks Sekar Parasuram
-
-
நடிகர்திலகத்துடனான நினைவுகள்
மீள் பதிவு....
சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில்
ஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்
எங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும்
ஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான்.
கால சுழற்சி.
1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்து சேர்ந்தேன்.
காலடி எடுத்து வைப்பதற்குள் அம்மாவிடம் இருந்து பதில்.
"சிவாஜி வந்திருக்கிறார்.சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது."
எங்கே? என்று கேட்டேன்.
அடுத்த நிமிடம் புயலென விரைந்தேன்.ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி.ஸ்கூல் யூனிபார்மிலேயே ஓடிக் கொண்டிருந்தேன்.மனம் எண்ணியது.
வந்திருப்பது...
கர்ணனா
கட்டபொம்மனா
கப்பலோட்டிய தமிழனா
spசௌத்ரீயா
பாரிஸ்டர் ரஜினிகாந்தா
பிரெஸ்டீஜ் பத்மநாபனா
ஒவ்வொரு வேடமும் மனத்திரையில் காட்சிகளாய் ஓடின.
சூட்டிங் இடம் வந்தது.கும்பலாய் ஜனங்கள்.எட்டி எட்டி பார்த்தேன்.எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சத்தங்கள்.ஜனக்கூட்டத்திற்குள் நுழைந்து காமிரா வைத்த இடத்திற்கு அருகில் சென்று விட்டேன். ஐந்து அல்லது ஆறு அடிகள் இருக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!என் கண்களில் தெரியும் உருவம் நிஜம்தானா.?அவர்தானா? ஆகா அவரேதான்.அந்த உண்மையை உணரவே பல நிமிடங்கள் ஆயிற்று.உடமபில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் அந்த தெய்வமகன் என் எதிரில்.சதா சர்வ காலமும் யாரை நினைத்து உருகிக் கொண்டிருந்தோமோ அவர் என் எதிரில்.
வெள்ளை வேட்டி.பிரௌன் கலர் கோடு போட்ட சட்டை.செக்கச் செவேலென்ற முகம்.சுருட்டை முடி.அடர்த்தியான நுனி முறுக்கிய மீசை.மேல் பட்டன்கள் அணியாமல் அணிந்த சட்டை.அதனால் தெரிந்த மார்பு.எவரும் எதிர்த்து பேச அஞ்சும் விழிகள்.
நடிகர்திலகம்
கலையுலகச்சக்கரவர்த்தி
தெய்வப்பிறவி
எங்கள்
சிவாஜிகணேசன்.
அவர் முகம் தவிர்த்து எதையும் பார்காமல் நான்.
ஷுட்டிங் தொடங்குகிறது.
வீகே ஆர் சில துணை நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின் படப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.காட்சி அமைப்பின்படி நடிகர்திலகம் வீகேஆருடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது இடையில் வந்து வேலையாள் வேடத்தை தாங்கிய நடிகர் ஒருவர் ஒரு செய்தியை நடிகர்திலகத்திடம் சொல்வதாக அமைக்கப்பெற்ற காட்சி.டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல காமிரா பதிவு தொடங்குகிறது.அதுவரை சாதாரணமாக மௌனமாக நின்று கொண்டிருந்த நடிகர்திலகம் ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மாறிய விதம் பார்த்து ஊரே அசந்துவிட்டனர்.நெஞ்சை நிமிர்த்தி பார்வையை கூர்மையாக்கி குரல் ஒலித்த கம்பீரத்தில் மொத்த கூட்டமும் நிசப்தமாகிப்போனது.
வேலையாளாக நடித்த நடிகர் செய்தியைசொல்லிவிட்டு சட்டென்று சென்று விட்டார். ஷாட் முடிந்தபின்பு நடிகர்திலகம் அவரையழைத்து"சொல்லிட்டு நீ பாட்டுக்குநகர்ந்து போயிர்றதா.அதுல என்ன எதார்த்தம் இருக்கு. காட்சியில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் நீ வந்துசெல்லும் காட்சி ஒரு நெருடலாய் இருக்காதா.அடுத்த ஷாட்ல இப்படிச் செய்யாதே" என்றுசொல்லி அந்த ஷாட் அந்த மேற்சொன்ன தவறு வராமல் மீண்டும் சரியாக எடுக்கப்பட்டது.
சிவாஜின்னா சிவாஜிதான்.
தொழில்பக்தின்றது இதுதான்.
சிவாஜி படசீன்ஸ் எல்லாம் பின்னுதுன்னா இதுதான் காரணம்.
இவை ஜனக்கூட்டத்தில் இருந்து வந்து விழுந்த கருத்துக்கள்.
வாழ்நாளின் சிறப்பு மிக்க நாளாக அந்த நாள் அமைந்து விட்டது.
தொடர்ச்சியாக பல காட்சிகள் எங்களூரில் படமாக்கப்பட்டது.ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்று.
படம்:வீரபாண்டியன்.
மேலும் சில....
அதற்கு முன்னர்1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு பிங்க் கலர் பைஜாமா வேட்டியில் அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
பின் 1988 ஆம் வருடம் தமிழக முன்னேற்ற முண்ணனி யின் பிரச்சாரத்திற்காக வந்த தலைவர் வேனை நிறுத்தி நாங்கள் எங்கள் ஊர் ஜமீன் ஊத்துக்குளியில் வைத்த கொடி கம்பத்தில் கொடியெற்ற வைத்து மாலைகளும் சால்வைகளும் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.அந்த போட்டோவை ஏற்கெனவே நான் பதிவிட்டுள்ளேன்.ஒரு சிறிய கிராமமான ஜமீன் ஊத்துக்குளியில் நாங்கள் வைத்த 60 அடி கொடிகம்பம்தான் பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கொடி கம்பம் அப்போது.அந்த முயற்சி என் அண்ணன் சிவாஜி வெற்றிவேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சி.
பின் தேவர்மகன்,பசும்பொன் ஷுட்டிங்கில் அவருடன் கலந்து உரையாடியது பசுமையிலும் பசுமையான நினைவுகள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக தஞ்சையில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த போது சூரக்கோட்டை பண்ணை வீட்டில் ஐந்து அடி தூரத்தில் வைத்து அவரை மட்டும் தனியாக ஒரு பிலிம்ரோல் முழுவதும் பிளாஷ் அடித்து 36 போட்டோக்கள் எடுத்தேன்.அவர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்.என் ஆர்வம் அவரின் பார்வையில் தெரிந்தது..
சந்தோசமாக எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்.
Thanks Senthilvel Sivaraj
-
-
-
-
நாடெங்கும் நடிகர் திலகத்துடன் நட்புடன் இருந்தார்கள், என்பதை விளக்கும் மற்றொரு அரிய புகைப்படம்.¶
தத்தாராம் மராத்திய நாடக்குழு நடிகர்களுடன் நடிகர் திலகம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...34&oe=5EEC420E
Thanks Jeyavelu Kandaswami
-
-
என் பாட்டிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை, என்றார் ஹேமநாத பாகவதர்.
அவரே ,விறகுவெட்டியின் பாட்டு கேட்டு பின் அவருக்கு அடிமையானதாக சாசனம் எழுதித் தந்தார்.நடிகர்திலகத்தின் பாதிப்பால் முன்னேறிய இந்த தமிழ் திரையுலகம் நடிகர்திலகத்திற்கு அடிமையே!
அவர் ஜம்மென்று வழி அமைத்துக் கொடுத்த பாதையில் ,பின்னால் வந்தவர்கள் சுகமான பயணம் செய்து விட்டு அதை தங்களின் வெற்றி பவனியாக கூறிக் கொள்வதில் என்ன
பெருமையோ?
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவிலும் ஒரு தூயதமிழ் வலம் வந்தது உண்டென்றால், நடிகர்திலகத்திடம் இருந்துதான் வந்திருக்கிறது.
தமிழ்நிலத்தில் அதிகம் பதியப்பட்ட காலடித் தடமும் அவரையன்றி யாரை சொல்ல முடியும்?
திரையுலகம் பெரும் சாம்ராஜ்யமாய் பின்னாளில் விரிய யார் மூல காரணம்?
அதிகார வர்க்கத்தை தாங்கி நடிக்கும் எந்த நடிகனின் படைப்பிற்கும் முன்னோடியாக நடிகர்திலகத்தின் பாத்திர படைப்புகள் தானே முன்னுதாரணமாய்
காட்டப்படுகிறது?
யாராலும் அடக்க முடியாத காட்டாற்று வெள்ளமென சென்று கொண்டிருந்த நடிகர்திலகத்தின் நடிப்புக்கு தீனி ஓரளவே போடப்பட்டிருக்கிறது.
தெனாலிராமன் படத்தை பாருங்கள்! என்ன அழகான நடிப்பு! சரித்திர கதைகளில் எந்த நடிகனும் சகஜமான நடிப்பை செய்திருக்க மாட்டான்.
ஆனால் தெனாலிராமனில் அதை சர்வ சாதாரணமாக செய்திருப்பார்.
வணங்காமுடியில் சிற்பியின் பாத்திரமும் அதே போல்தான்.
நடிகர்திலகத்திற்காக எப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்குவது என்று படைப்பாளிகள் தங்களின் நூறு சதவீத கற்பனை திறனையும் மூளையை கசக்கி உருவாக்கப்பட்ட கதைகளும் கூட நடிகர்திலகத்தின் நடிப்புக்கு போதவில்லை.அதனால் தான் தன் சில படங்களை வேகாத சோறு, இதை தயாரித்திருக்கவே வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
சம்பூர்ண ராமாயணத்தில் பரதன் வேடத்தை செய்து மொத்த படத்தையும் தன்பால் இழுக்க செய்திருப்பாரே, இதுவே அவருடைய நடிப்பின் வெற்றி.
அதனால் தான் கதாநாயனுக்கு உரிய பாத்திர படைப்புக்களை தாண்டி வெரைட்டி நடிப்பகளை தேர்ந்தெடுத்து அதை ஜெயமாக்கினார்.எதிர்பாராதது, அந்தநாள் திரும்பிப்பார் கூண்டுக்கிளி என்று ஏனைய கதாநாயர்கள் செய்யாததை துணிவுடன் செய்து நடிப்பின் மேல் தான் கொண்ட வேட்கையை உணர வைத்தார்.
பின்னாளில் நடிக்க வந்தவர்கள் வித்தியாசமான வேடங்களை செய்கிறோம் என்று ஏதோ ஒப்புக்கு செய்வதற்கு தைரியம் வந்து செய்தவைகள் எல்லாம் அவர் பாதை அமைத்துக் கொடுத்து பாத்திரங்கள் தான்
அவர்களுக்கு டிக்ஸனரியாக வழிகாட்டின.
பார்த்தால் பசி தீரும் பாகப்பிரிவினையில்
கை ககால் ஊன வேடங்களை கடைசிவரை மாறாமல் செய்திருப்பார்.அதிலென்ன சிறப்பென்றால் அவர் அந்த படங்களை மட்டும் அதே காலகட்டத்தில் செய்து கொண்டிருக்கவில்லை.
அதனூடே பல படங்களில் ஷிப்டிங்கில் செய்து கொண்டே இந்த வேடங்களையும் செய்திருக்கிறார்.
"பல படங்களுக்கான உழைப்பை தன் ஒரு படத்தில் செய்பவர் நடிகர்திலகம்."
நவராத்திரியில் அவருக்கு ஒன்பது பட உழைப்பு.மேலே கூறிய கருத்தை வைக்கும்போது இதை என்னவென்று சொல்வது?
இப்படிப்பட்ட வேடங்களை எல்லாம் இரவு பகலாக செய்துவிட்டு, வீட்டுக்கு சென்று கதராடையுடன் நெற்றியில் விபூதி பூசி டென்ஷன் இல்லாமல் இயல்பாக வருகிறவர்களிடத்தில் பேசி பழக எப்படி அவரால் முடிந்தது?
உயர்ந்த மனிதன் படத்தை நினைக்கையில் அது ஒரு பிரமாண்டமாக இன்னும் நெஞ்சில் நினைவு வர என்ன காரணம்?
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர் வழியமைத்துக் கொடுத்த வழிகள் நடிகர்கள் எல்லோரும் சுகமாக பயணிக்க உதவுகிறது.பயணங்கள் தான் வீண்!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...43&oe=5EEEADB1
Thanks Senthilvel Sivaraj
-
நேற்றைய தினம் எனது அருமை நண்பர் கயத்தார் சென்ற போது எனது வேண்டுகோளின் படி எடுத்து அனுப்பிய படங்கள்........
நடிகர் திலகத்தின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட பிரமாண்டமான நினைவு தூண்...
அதில் அண்ணாந்து பார்த்தால் கட்டபொம்மனின் திருவுருவச் சிலை....
மணிமண்டபம்...
கட்டபொம்மனின் குல தெய்வம் வீரசக்கம்மாள் ஆலயம்........
பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்......
பாலம் மட்டும் மறைக்காமல் இருந்தால்...
அந்த இடத்தை கடப்பவர்கள் கட்டபொம்மனை தரிசிக்காமல் போக மாட்டார்கள்......
நடிகர் திலகத்தின் கொடைத் தன்மையையும் கண்டு வியந்திருப்பார்கள்.............
கயத்தார் செல்பவர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள்.....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a7&oe=5EF0D779
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...47&oe=5EEE472F
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f8&oe=5EEE395A
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...69&oe=5EEDFBF6
Thanks Lakshmanan Lakshmanan
-
-
இன்று 25/05/2020 மதியம் 01.30 p.m. மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் நடிகர்திலகம் நடித்த " சந்திப்பு "
படத்தை காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகம், பிரபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...10&oe=5EEED96A
-
'மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்...வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா..காதல் மழை பொழியும் கார் முகிலா..காதலன் நான் இருக்க பேரெழிலாய்...'
இன்று 25/05/2020 சன் லைப்ஃ டி.வி.யில் மதியம் 04.00 p.m. மணிக்கு நடிகர்திலகம் நடித்த "இரு மலர்கள்"
படத்தை கண்டு மகிழுங்கள். ¶
இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர். விஜயா, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
-
தமிழ்மகன் கூறுகிறார்…..
தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
https://i1.wp.com/archives.chennaionline.c…/…/06mar-ph01.jpg
அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.
https://i1.wp.com/…/…/2005/10/06/images/2005100600670301.jpg
கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
“ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.
“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.
மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
Thiru Jivaajeyan Govindarajoo அவர்கள் பகிர்ந்து கொண்து
Thanks Sekar
-
-
-