லேட்டஸ்ட் உட்டலங்காடி
Printable View
லேட்டஸ்ட் உட்டலங்காடி
//பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன// இங்க வெளியில் 42 டிகிரி.. பனி பெய்யுதாக்கும்..ஆமா அந்தப் பாட்டுல நடிச்சது யாரு ?
டியர் வாசு சார்,
மதுர கானங்கள் திரியில் அதிகமாக நடிகர்திலகத்தின் ரசிகர்களே பங்கு கொண்டாலும், இது இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரியே தவிர, யாருடைய சார்பும் இல்லாதது என்பதை விளக்கும் வண்ணம், மக்கள்திலகத்தின் வண்ணக்காவியமான 'பறக்கும் பாவை' படத்தின் அருமையான பாடலை அலசியதன் மூலம் உரக்க சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பங்கேற்றாலும், இதுவரை கிட்டத்தட்ட 1.000 பதிவுகளை நெருங்கியபோதும், இன்னும் நடிகர்திலகத்தின் பாடல் ஒன்று கூட அலசப்படவில்லைஎன்று நினைக்கிறேன். அனைத்தும் சாமான்யர்களின் பாடல்களே அலசப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம், நிழலுக்குள் தள்ளப்பட்ட பல அருமையான பாடல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதே இத்திரியின் நோக்கம் என்பதால், இரு ஜாம்பவான்களின் பாடல்கள் முடிந்தவரை தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இல்லாவிட்டால் இதுவும் இன்னொரு நடிகர்திலகம் திரியாக, அல்லது இன்னொரு மக்கள்திலகம் திரியாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.
இப்போதுதான் மக்கள்திலகத்தின் பாடலொன்று, அதுவும் இதுவரை எந்தப்பாடலுக்கும் இல்லாத அளவுக்கு உங்களால் சிரத்தை எடுத்துக்கொண்டு சிறப்பாக அலசப்பட்டிருப்பது நிச்சயம். பெருமையாகவே இருக்கிறது.
நீங்கள் எடுத்துக்கொண்ட பாடல் எனக்கும் பிடித்ததுதான் என்ற போதிலும், அப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது 'கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா' பாடல்தான். அது எழுத்தாளர் பாலகுமாரன் வாழ்க்கையில் மட்டுமல்ல, என் சொந்த வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். அதுபற்றி பின்னர் சொல்கிறேன்.
அருமையான அலசலுக்கு பாராட்டுக்கள் வாசு சார்.
சி க சார்
நடிகர் நம்ம நடிப்பு சுடர் ஏவிஎம் ராஜன்
நடிகை -
சாயலை பார்த்தால்
சந்திர காந்தா மாதிரி தெரியுது
கலாட்டா கல்யாணம் படத்தில்
"உறவினில் பிப்டி உதட்டினில் பிப்டி தருவது சுகம் தங்க கட்டி "
அவங்களா இவங்க
வாசு சார் /கார்த்திக் சார் /வேந்தர் சார் யாரவது
என்னுள் கலந்த கான்ங்கள் -6
*
பாக்குறான் கொட்டக் கொட்ட
..பூவிழி சிமிட்டா மல்தான்
காக்கவும் நீதான் அம்மா
..கொஞ்சவும் நீதான் என்றே
நோக்கிடும் அவனைத் தரையில்
.. நீஞ்சுடா என்றே விட்டால்
பேக்குபோல் கோணி கண்ணில்
..பேய்மழை கொண்டு விட்டான்..
எந்தக் காலத்திலும் எந்த வயதிலும் மனதை விகசிக்க வைக்கும் விஷயம் எது.. சின்னக் குழந்தையின் விஷம்ம், புன்னகை, மழலை..
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்ற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள எனப் பெண்ணைப் பற்றிப் பாடிய வள்ளுஸ் குழந்தையைப் பற்றி என்ன சொல்கிறார்..
குழலினிது யாழினிது என்பார் அவர்தம்
மழலைச் சொல் கேளாதவர்..
எந்தக் குழந்தையானாலும் மழலைச் சொல் அழ்குதான்..
//எதிர் ஃப்ளாட்ல ஒரு யுவதி ஒரு கைக்குழந்தையை வச்சுக்கிட்டு நின்னுருந்தாங்க.. ரொம்ப ச் சின்னப் பொண்ணா இருக்க், என்னம்மா இது யாரோட்து.. எனக் கேட்டேன்.. என்னுடைய அக்காவோட்து அங்க்கிள் என அவள் மழலையில் சொல்ல குழந்தையும் மழலை மொழியில்ங்கா எனச் சொல்லி என்னிடம் தாவியது.. //இரண்டு குரலுமே நன்னாயிட்டு இருந்த்தாக்கும்..
இந்தப் பாடலில் டிஎம் எஸ் சுசீலா..(வாயசைப்பு கன்னக்குழி எஸ் எஸ் ஆர்.. அந்தக்கால அழுகை இளவரசி விஜயகுமாரி) பாட நம் மனமும் கொள்ளை போகும் தானே
**
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
மலர் போல சிரிக்கின்ற பிள்ளை
கண்டு மகிழாத உயிரொன்றும் இல்லை
மடி மீது தவழ்கின்ற முல்லை
மழலை சொல் இன்பத்தின் எல்லை
உள்ளாடும் உயிரொன்று கண்டேன்
அவன் உருவத்தை நானென்று காண்பேன்
தள்ளாடி தள்ளாடி வருவான்
தனியாக இன்பத்தை தருவான்.
-
வளர்ந்த்துக்கப்புறம் தான் இருக்கு..டாட் சாம்ஸங்க் எஸ் 5 வாங்கிக் கொடுக்கறயா , இல்லையான்னு இமெய்ல் வர்றச்சே..ம்ம் பாவம் அப்பாக்கள்.. :)
பின்ன வாரேன் :)
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன
தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தாலென்ன
உறவுக்கு மேலே சுகம் கிடையாது அணைக்கவே தயாக்கமென்ன
இது ஓட்டைவீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசை என்ன
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல்தானே (சென்சார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்)
மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதைதானே
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே
இது மேடுபள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றிவிடு
விரகதாபம் கொண்ட பெண்ணுக்கும், வாழ்வில் விரக்தி கொண்ட ஒருவனுக்கும் நடக்கும் உணர்ச்சி உரையாடல்கள் கருத்தாழம் மிக்க பாடலாக.
இது மாலை நேரத்து மயக்கம் பாட்டு தனியாகக் கேட்டால் வெகு நன்னாயிட்டு இருக்கும்.. வீடியோவில் பார்த்தால் கொஞ்சம் ஆன்மீகத்தில் நாட்டம் வரும் ( வாழ்க்கை வெறுத்து விடும்..) அந்தப் பெண் தனக்குத் தெரிந்த நடிப்பை எல்லாம் கொட்டி ஏவிஎம் ராஜனை செட்யூஸ் பண்ணப் பார்க்க.. இவர் துறவி நிலையில் பாடுவதாக நினைத்து கொஞ்சம் வெறித்த பார்வை வெறித்த நடை என செய்வதாக நினைத்துக் கஷ்டப் பட..பார்க்கும் நமக்கு வரும் உணர்ச்சியை என்னென்று சொல்ல!
முன்பே யாராவது பதிவு செய்தார்களா என்று தெரியவில்லை அப்படி பதிவு வந்திருந்தால் மன்னிகவும்.
மீண்டும் ஒரு முறை
வானம்பாடி படத்தில் பல பாடல்கள் இருந்தாலும், இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல...
'கங்கைக்கரை தோட்டம்.. கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே'
அறுபதுகளில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், 'மாமா'வின் அற்புதமான கைவண்ணம்; கவியரசரின் காலத்தை வென்ற வரிகள்; சுஷீலம்மாவின் இனிய குரல்; தேவிகாவின் முகக்குறிப்பு...........
ஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா?
கவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்!
"கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்
"கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்......
ஆகாகா...இசையரசியின் இனிய குரல் கண்ணனை உருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நிஜமாவே சில சமயம் கண்ணிலே நீர் வரும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது
அதிலும் "கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ.......என்ற கட்டம் மிகவும் உணர்ச்சிகரமானது
இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் அமுதம். இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் ஒரு முனைப்பாகி கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது.
"கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை" தொடங்கி எத்தனை எத்தனை அமுத வரிகள். அப்பப்பா.....
கவியரசே கண்ணதாசா நீ வாழ்க, வாழ்க உங்கள் புகழ்.
அருமையான பாடலோடு இசையும் அருமையாகச் சேர்ந்து வந்ததால் காலத்தை வென்ற பாடல்னு சொல்லலாம்
http://www.youtube.com/watch?v=UlocUamrLqQ
இந்தப் பதிவை எழுதும் போது கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது. இது நிஜம்
'இதயக்கமலம்' பாடல்களுக்கொரு படம் என்று சொல்லலாம். கே.வி.மகாதேவன் மாமா அட்டகாசமாகப் பின்னியிருப்பார் (அதனால் இந்த பதிவு கோபால் அவர்களுக்கு சமர்ப்பணம்). இப்படத்தில் இசைக்குயில் பி.சுசீலாவுக்கு மூன்று தனிப்பாடல்கள். இந்தப்பாடல் மற்றும் 'உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல', 'மலர்கள் நனைந்தன பனியாலே' முரசு சேனலின் ஒருபடப்பாடல் தயவால் இப்படத்தின் பாடல்கள் அடிக்கடி காணக்கிடைக்கின்றன. அதில் சுசீலாவின் தேன்சொட்டும் குரலில் ஒரு பாடல். பாடல் காட்சியில் அழகான ஷீலாவும், சுமாரான கே.ஆர்.விஜயாவும் மாறி மாறி தோன்றுவார்கள்.
என்னதான் ரகசியமோ இதயத்திலே - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
விழி பார்க்கச்சொன்னாலும் மனம் பார்க்க விடாது
மனம் பேசச்சொன்னாலும் வாய்வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
குளிர் பஞ்சணை மேலே உடல் பள்ளிகொள்ளாது
அது பள்ளிகொண்டாலும் துயில் கொள்ளவிடாது
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
பேரழகிருந்தென்ன ஒரு ரசிகன் இல்லாமல்
தேன் நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை இன்பமில்லாமல் - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
எப்போது கேட்டாலும் மனதை அள்ளிக்கொண்டு செல்லும் பாடல். கவியரசர் - திரை இசைத்திலகம் - கானக்குயில் கூட்டணியில் எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அருமையான, அழகான, மென்மையான, மனதை வருடும் இசைத்தென்றல்.