அடுத்த முறை யாராச்சும் கமல்கிட்ட மைக்கை நீட்டும்போது, ஏன் உங்களோட படத்திற்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து முறையாக வசூல் நிலவரம் வெளிவருவதில்லை, ஏன் உங்களுடைய படங்களின் வசூலை ஊடகம் சரியான விதத்தில் மக்களுக்கு கொண்டு செல்வதில்லை? என கேள்வி கேளுங்கள். கமல்கிட்டதான் கேட்கனும்னு அவசியம் கிடையாது. ட்வீட்டர் போன்ற தளத்தில் இருக்கும் ஊடகவியலார்கள், கமலுடன் இதுவரை இணைந்த தயாரிப்பாளர்கள் போன்றவர்களிடம் கேள்வியை எழுப்பனும். சரியான பதில் வராமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இதுபோன்று கேள்வி கேட்கவும் ஆள் இருக்கிறார்கள் என்பதை வசூல் நிலவர பண்டிதர்களாக நடைபோடும் மனிதர்களும், அவர்கள் சொல்வதையே வேதவாக்காக எழுதித் தள்ளும் ஊடகங்களும் உணரும் காலம் வந்துவிட்டது. சினிமாவில், ரசனையில் நமக்கென்று ஒரு முகவரி இருக்கு. அது வணிகத்தில் மட்டும் அங்கீகரிக்கப் படாமல் இருப்பது சரியல்ல.