இனிய காலை வணக்கம்...
Sent from my ASUS_T00J using Tapatalk
Printable View
இனிய காலை வணக்கம்...
Sent from my ASUS_T00J using Tapatalk
Second week confirmed in sathyam studio 5. 80% of the seats already booked for sunday 3.45 pm
வாசு - உங்கள் இந்த பதிவு இங்கு இருக்கும் எல்லா திரிகளிலும் பதிவிட வேண்டிய ஒன்று . உங்களுக்கு நினைவிருக்கலாம் - இப்படிப்பட்ட கருத்துக்களை நான் திரு கலை வேந்தன் அவர்களிடமும் , திரு வினோத் அவர்களிடமும் , பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் . உங்களிடமும் இதைப்பற்றி பேசினேன் . இவர்கள் நல்ல கருத்துக்களை , பாரபட்ச்சம் இல்லாத இப்படிப்பட்ட கருத்துக்களை வரவேற்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு - இன்னும் பல நல்ல இதயங்கள் அங்கும் இருக்கின்றன - இப்படிப்பட்ட கருத்துக்கள் அங்கும் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் . இந்த படம் திரு சிவாஜி கணேசன் நடித்த படமே இல்லை .. ஒரு கட்டபொம்மனை நிஜமாகவே உயிர்ப்பித்து இங்கு கூட்டிக்கொண்டு வந்த படம் . இருவருக்கும் வேண்டுமென்றால் சில உருவ ஒற்றுமைகள் இருந்திருக்கலாம் . இந்த தேசத்தில் இன்னும் தமிழ் வாழ்கிறது , இனிமேலும் வாழும் என்று நம்புவர்கள் , தேச பக்தி அழிந்து விடவில்லை - இன்னும் பலர் மனதில் வீரத்தழும்புகள் இருக்கின்றது என்று சொல்லிக் கொள்பவர்கள் , யாரும் சொல்லாமலே இந்த படத்தை மீண்டும் பார்க்க வருவார்கள் . நம் தலைமுறைக்கு மட்டும் அல்ல , இனி வரும் தலை முறைகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு படம் வரப்பிரசாதம் . இப்படியும் இனி ஒருவன் வரப்போவதில்லை - எவரும் இப்படிப்பட்ட படமும் எடுக்கப்போவதில்லை , தமிழை இனி எந்த ஒரு தமிழனும் இவ்வளவு அழகாக பேசி நாம் கேட்க்கப்போவதும் இல்லை .
திரு.ஆதவன் ரவி அவர்களே,
வருக. தங்களுடைய கவிதைகளை முகநூல் மூலமாகப் படித்து மகிழ்ந்திருக்கிறோம். சில கவிதைகள் இந்தத் திரியிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தங்களின் நேரடிப் பங்களிப்பில் இத்திரியில் தங்களின் பாமாலைகள் மூலம் நடிகர்திலகத்தின் புகழ்ப் பரணி ஒலிக்க வாழ்த்துக்கள்
வாசு சார்
தங்களுடைய அருமையான தெளிவான பதிவின் மூலம் இங்குள்ள அனைவர் உள்ளத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளீர்கள்.
நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரத விலாஸ், திருவிளையாடல் போன்ற திரைக்காவியங்கள், தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவை. இவற்றையெல்லாம் அவர்கள் வெறும் வசூலுக்காகவோ, சாதனைகளுக்காகவோ செய்யவில்லை. ஒரு தவம் போல் பணியாற்றி மக்களிடம் உன்னதமான விஷயங்களைச் சொல்வதற்கென்று மெனக்கெட்டார்கள். அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பொறுத்த மட்டில் உலக அளவில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இசை என மூன்று பிரிவுகளில் உலகப்பட விழாவில் வென்று தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற சூளுரையை நிரூபித்தது.
இவையெல்லாம் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய கொண்டாட வேண்டிய உன்னதத் திரைக்காவியங்கள். அதுவும் தங்களுடைய வீட்டில் உள்ள ஒவ்வொரு தலைமுறையினரையும் பார்க்க வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு சிலர் இவற்றின் தோல்வியில் மகிழ்ச்சியடைவதும் அதில் இன்பம் காணுவதும் உண்மையிலேயே அவர்கள் மனசாட்சியுடன் தான் செயல்படுகிறார்களா என்றோர் எண்ணத்தைத் தோற்றுவிப்பதை மறுப்பதற்கில்லை.
மனக்கசப்புகள், மனமாச்சரியங்கள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து ஒவ்வொருவரும் இதுபோன்ற உன்னதத் திரைக்காவியங்களை உளமார வரவேற்று ஆதரித்தால், தமிழனின் பெருமை மேலும் மேலும் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் சென்று சேரும்.
படம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சமாக இவற்றைத் தோல்விப்படமாக சித்தரிப்பதில் இன்பம் காணுவதும் ஈடுபடுவதும் தவிர்த்தாலே இது தமிழனின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும்.
Mr K C Sir,
Wish you many more happy returns of the day.
சற்றுமுன் வந்த செய்தி
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்தை தமிழக அரசே கட்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்.
Many happy returns of the Day Chandra