http://www.mayyam.com/images/article...03sagunini.jpgஹைதராபாத்தில் நடைபெற்ற MAA TV விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் கார்த்தி. அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி இணையத்தில் வலம் வருகிறது. அந்த நிகழ்ச்சியில், கார்த்தியிடம் அவரிடம் " உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களைப் பிடிக்குமா?" என்ற கேள்விக்கு " நிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான்.. தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கை தட்டி விசிலடிச்சு ரசிக்கிறாங்க.. ஆனா தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லே.. "என்கிறார் கார்த்தி.
கார்த்தியின் இந்த பதிலால் தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை குறித்து நடிகர் கார்த்தி " தமிழ்த் திரையுலகமும், தமிழ் ரசிகர்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நம் பெற்றோரை நாம் நேசிக்கிறோம் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டா இருக்கிறோம்.?
நான் என் ரசிகர்களை மிகவும் மதிக்கிறேன். மனப்பூர்வமாக நேசிக்கிறேன். தமிழ் ரசிகர்கள் படத்தின் நாயகனோடு உணர்வுபூர்வமாக ஒன்றி விடுவார்கள். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் திரைப்படங்களை பொழுதுபோக்கு அம்சமாக தான் பார்ப்பார்கள்.
ஹைதராபாத்தில் நடந்த விழாவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுத்ததற்கு தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். எனக்கு சரியாக தெலுங்கு பேச வராததால், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது." என்று கூறியுள்ளார். |