OMG Melodies and Melancholies Part 2
ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !
https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE
Printable View
OMG Melodies and Melancholies Part 2
ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !
https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE
Gap filler from GG starrer Thenmazhai!
'Cho' Ramaswamy comedy with Nakesh and GG!
https://www.youtube.com/watch?v=kohJzpbHd-0
an enchanting solo song!
https://www.youtube.com/watch?v=VK4-okqTIx4
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி
சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !
Quote:
சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
Monotony breaker !
சூரக்கோட்டை சிங்கக்குட்டியாக பிரபு உருவகப்படுத்தப் பட்டபோது சிவாஜிக்குப் பதிலாக பிரபுவின் தந்தையாக நடித்தார் ஜெமினி.
வயதின் முதிர்ச்சி முகத்தில் அப்பிக் கொண்டாலும் வழக்கத்துக்கு மாறாக 'விக்'கேல்லாம் வைத்துக் கொண்டு வழக்கம்போல விஜயகுமாரி ஒரு பக்கம்
பிரமீளா இன்னொரு பக்கம் என்று காதல் மன்னன் இமேஜை போட்டியில்லாத நிரந்தர நிலையிலும் தக்கவைத்துக் கொள்கிறார் ஜெமினி !
https://www.youtube.com/watch?v=pRMwQmoWDj8
https://www.youtube.com/watch?v=JV4fNy6zeIA
சிரித்தாலும் கண்ணீர் வரும் ...அழுதாலும் கண்ணீர் வரும்......
சிரிக்காமலும் அழுகாமலும் கண்ணீர் வருமா... ? வருமே...
வெங்காயம் உரித்தாலும் ! பதுக்கி வைத்த வெங்காயம் அழுகும் போதும் ...வெங்காயத்தின் விலை பட்டம்போல ஏறிப் பறக்கும் போதும்....!
GG starrer பெண் என்றால் பெண் திரைப்படத்தில் ..
https://www.youtube.com/watch?v=UhKMqafjLas
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்
பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!
Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!
முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !
https://www.youtube.com/watch?v=eNvjPjKqd6k
Quote:
கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....
இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !
(காதல் மன்னரின் Each for all and All for Each முறையான மேற்கத்திய பாணி ஆங்கில உச்சரிப்பு அவரது பள்ளிவழி ஆங்கில போதனையாலும் பின்னாளில் அவரது கல்லூரி விரிவுரையாளர் பணி மூலமும் இயற்கையாக அமைந்ததே !)
https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc
என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!
மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)
செந்தில்
Gap filler
From Lalitha ....GG starrer with Sujatha and kamalhaasan!
https://www.youtube.com/watch?v=-4HJ5D7fs-Y
Rudhraveena movie scenes (unnaal mudiyum thambi with kamal) with chiranjeevi!
https://www.youtube.com/watch?v=bOY7VV8yn8M