:clap:Quote:
Originally Posted by Arthi
:clap:
:exactly:
Printable View
:clap:Quote:
Originally Posted by Arthi
:clap:
:exactly:
யார் பெத்த பிள்ளையோQuote:
Originally Posted by saradhaa_sn
கொடுத்துவைச்சவன்
நிறையவே பிஸ்ஸா சாப்பிடுகிறான்
:omg:
நன்றி ஆனா மற்றும் ஆர்த்தி…..
மகள்கள் கல்யாணத்துக்கு சம்மதித்ததும், கற்பகம் தன் வழக்கமான வேலையைத் துவக்கிவிட்டாள். ஆம், இப்போது கற்பகமும் சாரதாவும் ஒரு ஜோதிடரைப் பார்க்க ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
‘அக்கா, அதான் அபி, ஆனந்தி ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்களே. இப்போ எதுக்கு மறுபடியும் ஜோசியரைபார்க்கணும்?. அவர் பாட்டுக்கு எதாவது தடங்கல் சொல்லிட்டாருன்னா, அதுவேறு மனதை உறுத்திக்கிட்டிருக்கும்’.
‘அப்படியில்லை சாரதா, ஜாதகத்தில் எதாவது குறையிருந்தால் கல்யாணத்துக்கு முன்பே அதற்கு பரிகாரம் செய்திடலாம் இல்லையா அதுக்குத்தான்’.
இந்த கற்பகத்தைத் திருத்தவே முடியாது என்ற எண்ணம் சாரதா மனதில் (இந்த சாரதா மனதிலும்தான்).
முதலில் ஆனந்தியின் ஜாதகத்தைப்பார்த்த ஜோதிடர் நல்லதாக நாலு வார்த்தை சொல்கிறார். ‘இந்த ஜாதககாரருக்கு கூடிய சீக்கிரமே குரு இடம் பெயருகிறான். அதுக்குப்பிறகு நல்ல யோகம்தான். இவங்க கல்யாணம் செஞ்சுகிட்டா நல்லா இருப்பாங்க’ என்று ஆரம்பித்து இன்னும் என்னென்னமொ ஜோதிட பாஷைகளில் அடிச்சு விடுகிறார். கற்பகத்துக்கு முகத்தில் நிம்மதி கலந்த சந்தோஷம். ஆனால் அது நிலைக்கவில்லை.
அடுத்து அபியின் ஜாதகத்தை எடுத்துப்பார்க்கும் ஜோதிடர் முகம் மாறுகிறது, அதைப்பார்த்த கற்பகத்தின் முகத்திலும் கலக்கத்தின் ரேகை படிகிறது. ‘என்ன ஜோசியரே என்ன ஆச்சு?’
‘அதாவது இந்த ஜாதகக்காரங்களுக்கு சில தோஷங்கள் இருக்கிறது’ என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லத்துவங்குகிறார். ‘இது நீங்கனும்னா பரிகாரம் செய்யணும்னு சொல்லத்துவங்கும்போது ஆடியோ கட்பண்ணப்பட்டு வெறும் வாயசைவு மட்டும் காண்பிக்கப்படுகிறது, சொல்லி முடித்ததும் ‘நான் சொன்ன மாதிரி தவறாமல் செஞ்சீங்கன்னா தோஷம் நீங்கிடும்’ எனும்போது மீண்டும் ஆடியோ கேட்கிறது.
பில்டர்ஸ் அசோஸியேஷன் மீட்டிங் ஆதி தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது...
அபி, விஸ்வநாதன், வரதராஜன் உள்பட அனைத்து மெம்பர்கள் அனைவரும் வந்துள்ளனர். ஆதி பேசத்துவங்குகிறான்...
'ஜெண்டில்மென், கடந்த அஞ்சு வருஷமா இந்த தலைவர் பதவியில் ரொம்ப சின்ஸியரா, ரொம்ப டெடிகேட்டடா பணியாற்றிக்கிட்டு இருக்கேன். என்னுடைய இந்த அஞ்சு வருஷ சர்வீஸ்ல நம்ம அசோஸியேஷன் எவ்வளவோ நல்ல பலன்களை அடைஞ்சிருக்கு. இதுவரையிலும் நான் போட்டி இல்லாமல்தான் ஜெயிச்சு வந்திருக்கேன், ஆனால் இப்போ சிலபேர் சேர்ந்து வரப்போகும் எலெக்ஷன்லே எனக்குப் போட்டியா சில பேரை நிறுத்துறாங்க. அது பற்றி நம்ம அசோஸியேஷன் செக்ரட்டரி சொல்வார்'
என்றதும், செக்ரட்டரி எழுந்து எந்தெந்த பதவிகளுக்கு யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்று ஒரு சின்ன பட்டியலை வாசிக்கிறார். அதில், தலைவர் பதவிக்கு ஆதித்யாவும் அபிநயாவும் நிற்பதாக அறிவிக்கிறார். மீண்டும் இப்போது ஆதி பேசத்துவங்குகிறான்...
'வெல் ஜெண்டில்மென், இப்போ இது வரைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் நான்தான் தலைவரா இருந்துக்கிட்டிருக்கேன். ஸோ, என்னுடைய அதிகாரத்தின்படி நான் நம்ம அசோஸியேஷனுக்கு புதுசா ஒரு மெம்பரை சேர்த்திருக்கேன். அவங்க யாருன்னு இப்போ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்' என்றதும், மேனகா காரில் இருந்து இறங்கி உள்ளே வருகிறாள்.
'ஷி இஸ் அவர் நியூ மெம்பர், என்னுடைய ஃப்ரெண்ட் அண்ட் பார்ட்னர் மிஸ் மேனகா' (சிலர் கைதட்டுகிறார்கள்).
'ஸாரி மிஸ்ட்டர் ஆதி' வரதராஜன் ஆட்சேபிக்கிறார்... 'கம்பெனியின் ரூல்ஸ்படி எலெக்ஷன் டைம்ல புது மெம்பர்ஸ் சேர்க்கக்கூடாது. எலெக்ஷன் முடிஞ்ச பிறகுதான் சேர்க்க முடியும்'
'வரதராஜன், அப்படி எதுவும் ரூல்ஸ் இல்லையே'
'இருக்கு மிஸ்ட்டர் ஆதி, ஆனா அஞ்சு வருஷமாக நீங்க அதையெல்லாம் ஃபாலோ பண்ணாததால் உங்களுக்கு நினைவில்லை'
'வரதராஜன், தலைவர்ங்கிற முறையில் எனக்குன்னு சில அதிகாரங்கள் இருக்கு. அதன்படிதான் இவங்களைச்சேர்த்தேன்'.
இப்போ கிரி குறுக்கிடுகிறான், 'குறுக்கே பேசுறதுக்கு மன்னிக்கனும். மேனகா மேடம் பத்துநாளைக்கு முன்னரே மெம்பராக சேர்ந்தாச்சு. எங்க பாஸும் பத்துநாளைக்கு முன்பே அவங்க அளிகேஷனை அப்ரூவ் பண்ணி கையெழுத்துப் போட்டிருக்கார். இதோ பாருங்க அதன் காப்பியை'.
விஸ்பநாதன், 'இங்க பாருங்க கிரி, நம்ம கையில் பேனா இருக்கும்போது, எந்த தேதியை வேணும்னா போட்டுக்கலாம். இவங்களை மெம்பரா சேர்க்கப்போவது பற்றி இதுவரை ஏன் மிஸ்ட்டர் ஆதி சொல்லைலை?'
இப்போ அபி தன் ஆட்சேபனையைத் தெரிவிக்கிறாள். 'மிஸ் மேனகா ஒரு என்.ஆர்.ஐ. அவங்களை மெம்பரா சேர்க்கணும்னா முதல்ல கமிட்டியை கூட்டி ஒப்புதல் வாங்கியிருக்கணும். ஆதி அதைச்செய்யவில்லை'.
'ஏன் மிஸ்ட்டர் ஆதி, நான் இந்த அசோஸியேஷன்ல மெம்பராகறதுல இவ்வளவு பிரச்சினை இருக்கா?' - மேனகா.
'அதெல்லாம் எந்த பிரச்ச்னையும் இல்லை மேம். என் கிட்டே சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த அபி, இந்த எலக்ஷனில் போட்டியிடும்போது, என்.ஆர்.ஐ. யாக இருக்கும் மேனகா மெம்பராவதில் என்ன தப்பு?'.
'Mind your words Adhi,. நான் உங்ககிட்டே சம்பளம் வாங்கியது உண்மைதான். அப்படிப்பட்டவ இன்னைக்கு உங்களை எதிர்த்து நிற்குமளவுக்கு வளர்ந்துட்டாளேன்னு உங்களுக்கு பொறாமை. இந்த தேர்தல்ல தோத்திடுவோம்ணு பயத்தினாலதானே புது மெம்பர்ஸையெல்லாம் சேர்க்கிறீங்க?'.
'தோல்வியா?. எனக்கா?. நான் இதுவரை எதிலும் தோத்ததே கிடையாது'.
'ஆனால் இப்போ முதல் முறையா என் கிட்டே தோற்கப்போறே ஆதி. Be ready to face it. எலெக்ஷன்ல பார்ப்போம்'. அபி கிளம்புகிறாள்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
இந்த திமிர்தான் :bangcomp:Quote:
Originally Posted by saradhaa_sn
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, நேற்றைய எபிஸோட் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் கோலங்கள் வரை ஒளிபரப்பாகியது. அரசியில் இருந்து கட் பண்னிட்டு திரைப்படம் போட்டுவிட்டார்கள். (அதை அரை மணி நேரம் முந்தி போட்டிருக்கலாம். காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்).
காரில் வந்துகொண்டிருக்கும் அலமேலு, வழியில் கலாவைப் பார்த்ததும் இறங்கி, (ஊரான் காசில் தனக்கு வாய்த்த) வளமான வாழ்க்கையைப்பற்றி (வழக்கம்போல) பெருமைப்பட்டுக்கொள்கிறாள்.
'என்னடி கலா, வீட்டுப்பக்கமே வரக்காணோம்?'
'அதான் உங்க பிள்ளை திடீர் யோக்கியனாகி, என்னைப்பார்த்து ஊதுபத்தியும், ஊறுகாயும் விற்கச்சொல்லிட்டாரே. அப்புறம் எப்படிக்கா வர்ரது?'
'அது கிடக்கட்டும்டி, அந்த அபி வீட்டு சமாச்சாரம் எதுவும் தெரியுமா?'
'அதான் கற்பகத்தோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்களாமே'
'என்னடி சொல்றே?. அந்த கழுதைங்களுக்கு கல்யாணமா?'
'ஆமாக்கா, இதுவரை கல்யாணம் வேண்டாம், வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்த அந்த ஆனந்திகூட இப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளாம்'.
'என்னடி இப்படி குண்டைத்தூக்கிப்போடுறே. அய்யோ... அய்யோ... அந்தக்கல்யாணம் ரெண்டும் எப்படியாவது நின்னு போகணும்டி. நடக்கவே கூடாது. அந்தக் குடும்பம் சந்தோஷமாவே இருந்திடக்கூடாது. கெட்டழிஞ்சு நடுத்தெருவுல நிக்கணும்'.
'ஏன்க்கா, எப்பவும் அந்தக்குடுமப்த்து மேலே இப்படி கர்வமாவே இருக்கீங்க?'.
'பின்னே என்னடி, அந்த அபி என்ன பண்ணினா தெரியுமா?. ஒருநாள் ஒரு பெரிய கல்லைத்தூக்கிக்கிட்டு என்னைக்கொல்ல துரத்திக்கிட்டு வந்தாள்'.
(இப்போ பழைய ஃப்ளாஷ்பேக் காட்சி, ஆனந்தியின் கல்யாணம் நின்று போன அதிர்ச்சியில் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது, ஐம்பதாயிரம் ரூபாய் செக் திரும்பி வந்துவிட்டதைக் காட்டி அலமேலு பணம் கேட்க, அபி கோபப்பட்டு அலமேலுவை விரட்டியடிக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது).
'ஏண்டி கலா, உனக்கும்தானே அந்தக் குடும்பத்தைப் பிடிக்காது. அப்புறம் என்ன என்னை மட்டும் கேட்கிறே?. அய்யோ... எப்படியாவது பில்லி, சூனியம் வச்சாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடணூம்' என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறிப்போகப்போகும்போது....
'அக்கா, போற வழியிலே என்னையும் உங்க காரில் கொண்டு இறக்கி விட்டுடுங்களேன்'
'கலா, நீ வலது பக்கம்ல போகணும். ஆனா நான் இடது பக்கம்ல போறேன். வரட்டா'
இந்தப்புதுப்பணக்காரியிடம் கேட்டிருக்க வேணாமோ என்று தோன்றுகிறது கலாவுக்கு.
சிவசு, கவிதாவைப்பார்க்க வருகிறான். அவன் வந்ததைப்பார்த்து கவிதா பதறுகிறாள். காரணம், அது ராஜேஷ் அவளைத்தேடி வரும் நேரம். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜேஷ் வந்து விடுகிறான். வெளியே போக வழியின்றி, ராஜேஷின் கண்ணில் படாமல் இருக்க, சிவசு கட்டிலின் அடியில் ஒளிந்துகொள்ள, அதே கட்டிலின் மேலே ராஜேஷ் உட்கார்ந்து மதுவருந்துகிறான். போதையில் அவன் தடுமாறிக் கொண்டிருக்கும்போது அவனுக்கு தெரியாமல் சிவசு வெளியேறி வாசலுக்குப்போக, கவிதா அவனை சீக்கிரம் வெளியே போகச்சொல்கிறாள். அவர்களின் ஏற்பாட்டின்படி, படுக்கையறையில் ஒளித்து வைத்திருக்கும் கேமராவை மறக்காமல் 'ஆன்' செய்யும்படி சிவசு சொல்ல, அது ஏற்கெனவே 'ஆன்' செய்யப்பட்டு ரெடியாக இருப்பதாகச்சொல்லி அவனை அனுப்பி கதவைடைக்கிறாள். கட்டிலில் ராஜேஷ், கவிதாவை நெருங்கி வரும் நேரம், நம் கேமரா, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கேமராவை நோக்கிப்போய் அதில் நிலைக்கிறது.
ஒரு தொழிலதிபரைப்பார்த்து ஆதரவு திரட்ட அபியும், வரதராஜனும் சென்று அவரிடம் பேச, அவர் ஆதியின் அடாவடிச் செயல்களை எடுத்துச்சொல்லி அபிக்கு ஆதரவு தருவதாக வாக்களிக்கிறார். அவர்கள் புறப்படும் நேரம் அங்கு ஆதியும் மேனகாவும் வர, மீண்டும் மேனகா, அபி, ஆதியிடையே மோதல் முற்றுகிறது. வழக்கம்போல வார்த்தைதடிப்புகள், ஏளனப்பேச்சுக்கள், சவால்கள் (சவால்கள் எல்லாம் ஏற்கெனவே அரைத்து, அரைத்து புளித்துப்போன மாவு. அதனால் வேண்டாம்).
அபி போனதும் அந்த தொழிலதிபர் அப்படியே பல்டியடித்து, வரதராஜனுக்காக சும்மா பொய் சொன்னதாகவும், அவரது ஆதரவு எப்போதும் ஆதிக்குத்தான் என்றும் சொல்கிறார். (நிஜமாகவே ஆதிக்கு சப்போர்ட் செய்கிறாரா அல்லது அவனை நம்ப வைத்து கவிழ்க்க சதியா தெரியவில்லை).
மொத்தத்தில் நேற்றைய எபிஸோட் கதையோட்டத்துக்கு எந்த வகையிலும் உதவியாயில்லை. இன்றைக்கு கோலங்கள் ஒளிபரப்பாகுமா என்பது தெரியவில்லை.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்) :exactly:
எபிஸோட் துவக்கத்தில் மீண்டும் அலமேலுவைக் காண்பித்ததும், ஐயய்யோ இன்னைக்கும் அவ்வளவுதானா என்று நினைத்தோம். நல்லவேளை அப்படியில்லை. துவக்கத்தில் இரன்டு பாத்திரங்களுக்கு ஆட்களை மாற்றிவிட்டார்கள். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத அலமேலுவின் மகள் வித்யாவாக பிரியதர்ஷிணிக்கு பதில் இன்னொருவர், அவள் கணவர் ரோலுக்கு பிரபாகருக்கு பதிலாக இன்னொருவர்.
அலமேலு வீட்டுக்குள் வந்ததும், மகள் வித்யாவிடம் மீண்டும் அபி, ஆனந்தி கல்யாணம் பற்றி அலுத்துக்கொள்கிறாள். அந்த குடும்பம் விளங்காமல் போக வேண்டும், அபிக்கு கால் ஊனமாக வேண்டும், ஆனந்திக்கு கையிரண்டும் விளங்காமல் போக வேண்டும், கற்பகத்துக்கு வாய் கோணிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக ஒரு பவர்ஃபுல்லான மந்திரவாதியிடம் போய் பில்லி, சூனியம் வைக்கப்போவதாகவும் சொல்ல, அதை மாடிப்படியில் நின்றவாறு சங்கீதா கேட்டுக்கொண்டிருக்கிறாள். இப்படியும் ஒரு மனிதப்பிறவியா என்று அவள் மனதுக்குள் தோன்றுகிறது. (நாராயணன் இறந்தபோது கற்பகமும் அபியும் அலமேலு வீட்டில் மாங்கு மாங்கென்று வேலை செய்ததெல்லாம் எப்படி இவளுக்கு மறந்துபோனது?. சரி, அபி தன் மகனின் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியதால்தானே, தன்னால் இப்படி ஒரு புதுப்பணக்காரியாக முடிந்தது என்பதெல்லாம் எப்படி அலமேலுவுக்கு மறந்துபோகிறது?. அது சரி, மனிதப்பிறவியாக இருந்தால்தானே).
இரவில் தெருவோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆதித்யா காத்திருக்க, அங்கே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கிறது. வந்தது தொல்காப்பியன்....
'மிஸ்ட்டர் ஆதி, எதுக்காக என்னை வரச்சொன்னீங்க?'
'என் தலையெழுத்து, என்னுடைய ஸ்டேட்டஸுக்கு உன் மாதிரி ஆளுங்களூக்காகவெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கு'.
'ஸ்டேட்டஸ்னு எதைச்சொல்றீண்க்க ஆதி?. பெட்டி நிறைய பணமா?. என்னைப்பொறுத்தவரை ஸ்டேட்டஸ்ங்கிறது வெறும் பணம் இல்லை. நல்ல பண்புகள், அடுத்தவருக்கு நன்மை செய்யும் குணம், பிறருக்கு இடைஞ்சல் பண்ணாமல் இருப்பது இதுதான் ஸ்டேட்டஸ். அந்த வகையில் நான் உங்களைவிட ஸ்டேட்டஸில் உயர்ந்தவன்'.
'பார்த்தா பூனை மாதிரி இருப்பே, வாயைத்திறந்தால் ஒரே தத்துவம் இதானே உன் வேலை?'
'நீங்க எதுக்கு என்னை வரச்சொன்னீங்கன்னு இன்னும் சொல்லலை'.
'எனக்கும் உஷாவுக்கும் இடையில் நீதான் இப்போ பெரிய இடைஞ்சலா இருக்கே'.
'மிஸ்ட்டர் ஆதி, உஷாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ளது உங்க குடும்ப பிரச்சினை, உங்க சொந்த விவகாரம். அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?.'
'இப்போ நீதானே அவ கூட இருக்கே'
'வார்த்தையை அளந்து பேசுங்க ஆதி, இதெல்லாம் ரொம்ப அநாகரீக்ம'.
'நீ கூட இருக்கிற தைரியத்துலதான் அவ இப்படி ஆடுறா'
'மறுபடியும் சொல்றேன் ஆதி, இது உங்களுக்கும் உஷாவுக்கும் இடையேயான சொந்த விவகாரம். அதை நீங்க ரெண்டு பேரும்தான் பார்த்துக்கணும். இதில என்னை இழுக்காதீங்க. நான் உஷாவுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் அவ்வளவுதான்'.
'போதும்... இப்படி சொல்லி சொல்லி ஏமாத்தினதெல்லாம் போதும். இப்படித்தான் அபியின் ஃப்ரெண்ட்னு சொல்லி நுழைஞ்சு, அபியையும் பாஸ்கரையும் பிரிச்சே. இப்போ உஷாகூட சேர்ந்துகிட்டு சுத்துறே'.
'ஸ்டாப் மிஸ்ட்டர் ஆதி, இனிமேல் இது விஷயமா உங்க கிட்டே பேச விரும்பலை'.
ஆதியின் பதிலுக்குக் கூட காத்திராமல் தொல்ஸ் பைக்கில் ஏறிப்போக, ஆதி லோபத்தில் தனியே நின்று கத்துகிறான்.
அபியின் வீடு... ஆர்த்தி ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நுழைகிறாள்...
'அக்கா... அக்கா..., அம்மா அக்கா இல்லையா?'
'வா ஆர்த்தி, அக்கா ஆஃபீஸுக்குப் போயிட்டாளே'.
'அக்கா போயிடுச்சா?. நாம ரெண்டு பேரும் சேர்ந்து பேரும் சேர்ந்து போகலாம், வான்னு சொல்லியிருந்துச்சே. அப்படீன்னா ஆஃபீஸ் போயிருக்காது. எலெக்ஷன் வேலையாத்தான் போயிருக்கும். ஏம்மா, அக்காவுக்கு கல்யாணம் ஆகப்போது, இந்த நேரத்தில ஏம்மா இந்த எலெக்ஷன், தலைவர் பதவியெல்லாம்?'
'எனக்கென்ன்ம்மா தெரியும், அபி யோசிச்சுத்தானே இறங்கியிருப்பா'.
இப்போது ஆனந்தி குறுக்கிட்டு, 'ஆர்த்தி, அக்கா எலெக்ஷனில் நிக்கிறதுலயும் தலைவர் ஆகிறதுலயும் என்ன பிரச்சினை?'
'பிரச்சினைக்காக சொல்லலைக்கா, ஏற்கெனவே கம்பெனி வேலைகளே தலைக்குமேலே இருக்குது, இதுல அடிஷனலா இந்த தலைவர் பதவியெல்லாம் ஏத்துக்கிட்டா அக்காவுக்குத்தானே கஷ்ட்டம்?. வரப்போற கணவரையும் கவனிக்கனும் இல்லையா?' (அக்கா மேல் ரொம்ப கரிசனம் போல பேசுகிறாள். ஆனால் இது ஆதி மந்திரம் செய்யும் வேலை என்று யாருக்கும் தெரியவில்லை).
அப்போது உள்ளே நுழையும் டாக்டர் மகேஷ், 'ஆர்த்தி, அபி தன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் செய்யட்டும், அதுக்கு நான் முழு சப்போர்ட் பண்ணுகிறேன். ஏன்னா, நான் அபியை நல்லா புரிஞ்சிக்கிட்ட்வன். அபி என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்'.
என்னடா இது கிணறு வெட்டப்போக உள்ளிருந்து பூதம் கிளம்பியது போல, நாம் ஒண்ணு நினைத்து சொன்னால், அது அபியின் பக்கம் ஸ்ட்ராங்கான ச்ப்போர்ட்டாக அல்லவா முடிஞ்சுபோச்சு என்று ஆர்த்திக்கு படு ஏமாற்றம். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வாசலுக்கு வரும்போது, 'ஆதியண்ணா' சொன்னவை நினைவுக்கு வர, அதை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் முகத்தில் தோன்றுகிறது. ஏனென்றால், இப்போது அவளுக்கு 'ஆதியண்ணா' தான் 'அறிஞர் அண்ணா'.
ஆதியின் கெஸ்ட் அவுஸ்...
தேவராஜ பாண்டியனுடன் ஆதி ஆலோசனையில் இருக்கிறான். என்ன உருப்படியான ஆலோசனயா, எல்லாம் சதியாலோசனைதான்.
'அஞ்சு வருஷமா அந்த அசோஸியேஷன் தலைவரா இருக்கேன் தேவராஜ். அதிலும் நாலு முறை போட்டியில்லாமல் தலைவராகியிருக்கிறேன். ஆனா இப்போ ஒரு கிழவன் எனக்கெதிரா போட்டியைக்கிளப்பியிருக்கிறான். அதுவும் அந்த அபியை எனக்கெதிரா நிறுத்தியிருக்கான்'.
'யாருன்னு சொல்லுங்க தம்பி. தூக்கிடுவோம்'
'இல்லை தேவராஜ், உங்க அடிதடியெல்லாம் இங்கே எடுபடாது. ரொம்ப கவனமா செயல்படணும்'.
'அப்படீன்னா லேசா அவனை மிரட்டி வைப்போம், அல்லது கொஞ்சம் பனத்தை வீசுவோம்'.
'தேவராஜ், அந்தக்கிழவன் மிரட்டலுக்கோ, பணத்துக்கோ மசிகிறவன் இல்லை. அதுவுமில்லாமல், இப்போ அவனுக்கும் எனக்கும் போட்டிங்கறதாலே, அவனுக்கு என்ன நேர்ந்தாலும் அந்த பழி என் மீதுதான் விழும். அது எலெக்ஷன்லே என் இமேஜை ரொம்ப பாதிக்கும். அதனால் நான் சொல்றபடி செய்யுங்க'..... சொல்லத்துவங்கியதும் வழக்கம்போல வெறும் வாயசைவு மட்டும், பின்னணியில் இசை... 'இதுல நீங்க நேரடியா ஈடுபட வேண்டாம் தேவராஜ். அதுபோல வழக்கமா அனுப்புற ஆளுங்களை அனுப்ப வேண்டாம். புது ஆளுங்களை அனுப்புங்க. அவங்க யாருன்னு யாருக்கும் தெரியக்கூடாது. ஏன், எனக்கே அவங்க யாருன்னு தெரியக்கூடாது'
'சொல்லிட்டீங்கல்ல?, முடிச்சிடுவோம் தம்பி....'
தேவராஜ் பாண்டியன் புறப்படுகிறான்.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
Thanks for the update.