-
முரளி சார்,
செல்வம் படத்தைப் பற்றிய தகவல் செல்வத்தை அள்ளித் தந்து, பம்மலார் சொன்னது போல் ஹப்பின் நிரந்தர செல்வமாகத் திகழ்கின்றீர்கள். பாராட்டுக்கள்.
அந்த ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் குறைவு ஆனால் தரத்தில் நிறைவு.
சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் வாழையடி வாழை படத்தில் இந்தப் பாடல் முழுமையாக இடம் பெறும்.
செல்வம் படத்தைப் பொறுத்த மட்டில் அவளா சொன்னாள் பாடலுக்காகவே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டிய படம். அதே போல் ஒன்றா இரண்டா பாடலின் இறுதியில் ஒரு சில கணங்கள் சற்று தனியாக தொக்கி நிற்கும் என்பது ஒரு நெருடல். இருந்தாலும் நடிகர் திலகத்தின் நடிப்பு அனைத்துக் குறைகளையும் மறைத்து விடும்.
மீண்டும் தங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்
-
முரளி சார்,
செல்வம் பட திறனாய்வு வழக்கம் போல் அருமை, VKR இந்த படம் தவிர NT அவர்களை வைத்து லட்சுமிகல்யாணம் படம் தயாரித்திருக்கிறார் அல்லவா? அது எப்படி ஓடியது?
-
மிக்க நன்றி ராகவேந்தர் சார். நீங்கள் சொன்னது போல் செல்வம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய படம்தான்.
ராதா, நன்றி. லட்சுமி கல்யாணம் வி.கே.ஆர். தயாரிப்பு இல்லை. அதை தயாரித்தவர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் அவர்கள். ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ். லட்சுமி கல்யாணம் above average வெற்றி.
அன்புடன்
-
"திரும்பிப் பார்"ஐ 'திரும்பிப் பார்'க்க வந்தது வாய்ப்பு
'மாடர்ன் தியேட்டர்ஸ்' திரைப்பட நிறுவனத்தின் அதிபர், டி.ஆர்.சுந்தரத்தின் தயாரிப்பு, இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதியின் கதை, உரையாடலில், கதாநாயக-வில்லனாக நமது நடிகர் திலகம் கலக்கிய "திரும்பிப் பார்", நெடுந்தகடு(DVD) வடிவில் வெளிவந்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்த்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் ஐந்தாவது திரைக்காவியமான இதனை வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டோர் 'Magnasound Home Video'.
அன்புடன்,
பம்மலார்.
-
-
Dear Pammalar sir,
Sorry for the error. I stand to be corrected.
REgards
Shiv
-
Dear murali sir,
thankyou very much for the excellent write up on selvam which rekindled the old memories of watching that movie some 20 years ago.
Did lakshmi kalyanam have an above average run?I thought it was a hit movie which it truly deserved.I guess another NT film played villain here.
Pammal sir can u please provide the details of it's run ?
-
NT SIGNATURE - WHEN HE WAS CAMP AT NEW JERSY, USA DURING 1996 Letter to Tararts
http://abkhlabhi.blogspot.com/2010/1...nature_16.html
-
Thanks Senthil. Regarding Lakshmi Kalyanam it was a hit compared to it's budget. Will provide more details soon.
ஸ்ரீதர் நடத்திக் கொண்டிருந்த சித்ராலயா இதழில் சித்திரமே சொல்லடி என்று ஒரு பகுதி வரும். அதில் வாரம் ஒரு நட்சத்திரத்தை ஏதாவது படம் வரையச் செய்து அதை பார்த்து அவர்களின் குணநலன்களையும் எதிர்காலத்தையும் பற்றி சொல்லக் கூடிய கையெழுத்து நிபுணர் ஒருவர் தன் கருத்துகளை வெளியிடுவார். யார் வரைந்தார்கள் என்ற விவரம் நிபுணரிடம் தெரிவிக்கப்பட மாட்டது.
அதில் ஒரு முறை நடிகர் திலகம் அவர்களிடம் ஏதாவது படம் வரைய சொல்ல அவர் வரைந்தது ரத்தம் சொட்டும் அம்பு துளைத்திருக்கும் ஒரு இதயம். அதை பற்றிய நிபுணர் கருத்து சுருக்கமாக.
இவர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுவார். இவர் எல்லோருக்கும் நன்மை செய்வார். ஆனால் இவர் செய்யும் காரியங்கள் இவரை சுற்றியுள்ளவர்களால் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அது இவர் மனதில் வேதனையை ஏற்படுத்தும். 45 வயதுக்கு மேல் பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவார். பொறுப்புகளை ஏற்பார்.
இவர் காலத்தால் அழியாத புகழ் அடைவார்.
இவர் வாழ்க்கையின் பிற்காலத்தில் இதய மற்றும் ரத்த சம்மந்தமான பிரச்சினைகள் வரலாம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது வெளியானது இன்றைக்கு சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம்.
அன்புடன்
-
சினிமா விமர்சனம் : திருவிளையாடல்
மீனாட்சி: ஒரு நல்ல புராணப் படம் பார்த்ததிலே மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா?
சண்முகம்: ஆமாம் மீனாட்சி, கண் குளிர காட்சிகளையும், காதுகுளிர பாட்டுக்களையும் கேட்டு, நான் சில இடங்களில் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் கே.பி.சுந்தராம்பாளோட குரல்...
மீனா: 'முருகா’ என்று அந்த ஒளவைப் பாட்டி கூப்பிடறபோது நம்ப மனசெல்லாம்கூட உருகுதுங்க. அதே மாதிரி, சிவாஜி கணேசனுக்கு சிவன் வேஷம் என்ன பொருத்தமா இருக்குது!
சண்: அதிலும் ருத்ரமூர்த்தியா வரபோது, ரொம்பப் பொருத்தம்!
மீனா: பாண்டியன் சபையிலே வந்து நக்கீரனை மடக்கின காட்சி, என் கண் முன்னாலயே நிக்கு துங்க!
சண்: ருத்ர தாண்டவமும் பிரமாதமாத்தான் இருந்துது. மீனவனா வந்து ஒரு நடை நடக்கிறாரே... எப்படி?
மீனா: அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம் சிரிப்பும் வந்தது. அங்கே எனக்கொரு சந்தேகங்க! பிட்டுக்கு மண் சுமந்த கதையிலேதானே, ஈசன் உடம்பிலே பட்ட அடி எல்லார் உடம்பிலேயும் படறதாக வரும். இதுலே...
சண்: இதோ பார் மீனாட்சி, திருவிளையாடல் புராணம் ரொம் பப் பெரிசு! அதிலே எல்லாத்தையும் காட்டமுடியுமா? அத னால, ஒரு கதையிலே இன்னொரு சம்பவத்தைப் புகுத்தி இருக்காங்க... கதையா முக்கியம்? தத்துவம்தானே முக்கியம்! இவ்வளவு பெரிய புராணக்கதையை எடுத்துக்கிட்டு, சிறப்பா திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி, டைரக்ட் செய்த ஏ.பி.நாகராஜனைக் கண்டிப்பா பாராட்டத்தான் வேணும்.
மீனா: பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா’ங்கற பாட்டு என் காதிலே இன்னும் ஒலிச்சுக்கிட்டிருக்குங்க!
சண்: எந்தப் பாட்டுதான் ஒலிக்கலே?! டி.ஆர்.மகாலிங்கம் பாடறாரே 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ அதைச் சொல்றதா, இல்லே 'பாட்டும் நானே’ங்கற டி.எம்.சௌந்தரராஜன் பாடற பாட்டைச் சொல்றதா? கே.வி.மகாதேவனுக்கு ஒரு 'சபாஷ்’ சொல்ல லாம்.
மீனா: எல்லாம் சரி... ஒரு தமிழ்ப் புலவரை வச்சுக்கிட்டு 'காமெடி’ பண்ணி இருக்க வேண்டாமோன்னு தோணிச்சு!
சண்: ஏன், நாகேஷ் ரொம்ப நல்லா பண்றாரே அதை! புரா ணப் படத்திலே ரொம்ப அழகா காமெடி கொண்டு வந்திருக்காங் கன்னுதான் எனக்குத் தோணுது!
மீனா: சமூகப் படங்கள் பெரு கிப் போய்விட்ட இந்தக் காலத் திலே, இப்படி ஒரு புராணப் படம் வந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்க. அடுத்த வாரம் நான் இன்னொரு தடவை இந்தப் படத்தை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்.
சண்: போகும்போது சொல்லு; நானும் வரேன்!
விகடன் விமர்சனக் குழு