அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களுக்கு,
அட்டகாசமான "விஸ்வநாத நயகுடு" வீடியோ பதிவிற்கு, மகத்தான நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ஆனந்த்
அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களுக்கு,
அட்டகாசமான "விஸ்வநாத நயகுடு" வீடியோ பதிவிற்கு, மகத்தான நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ஆனந்த்
அருமை பம்மலார் சார்,
கார்த்திக் அவர்களை நெஞ்சை நெகிழ வைக்கும் உணர்வுகளில் மூழ்கச் செய்தது மட்டுமின்றி, எங்களையும் துணைக்கு அழைத்துச் சென்றதற்கு காரணமான தங்களுடை கப்பலோட்டிய தமிழன் பதிவு உணர்வு பூர்வமான ஒன்று. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பு வாசுதேவன் சார்,
நாகம்ம நாயக்கடு பாத்திரத்தினைப் பற்றி மஹேந்திராவின் பார்வையிலே நிகழ்ச்சியினை வசந்த் தொலைக் காட்சிக்காக வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. அவர் தர்பாரில் நடந்து வரும் காட்சியினைப் பற்றி ஒரு செய்தியினை அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். அந்த சுவையான செய்தியினை அந்தப் படம் வெளிவந்து நம் நண்பர்கள் பார்த்த பிறகு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
தெரிந்தவர்கள் அமைதி காக்கவும்,
தெரியாதவர்கள் பொறுமை காக்கவும்.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் ஆனந்த் சார்,
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
டியர் mr_karthik,
1972-ல் அதனுடைய முதல் மறுவெளியீட்டில், தாங்கள் உணர்ச்சிப்பெருக்கில் பார்த்து எமோஷனலான "கப்பலோட்டிய தமிழன்" காவிய அனுபவங்கள் பற்றிய தங்களின் பதிவு, தங்களது முந்தைய சிகர பதிவான "அவன் ஒரு சரித்திரம்(1977)" வெளியீட்டு நாள் அனுபவங்கள் பதிவை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது. அத்தனை அதியற்புதமான write-up..! தங்கள் பதிவின் அந்தக் கடைசி பதினோரு வரிகள் என் கண்களையும் குளமாக்கின. [இச்சமயத்தில் தங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் : "கப்பலோட்டிய தமிழன்" காவியம் கூடிய விரைவில் "கர்ண"னைப் போல் மறுவெளியீடு செய்யப்படும் சமயம், கர்நாடகாவில் இருக்கும் தாங்கள் அந்த நேரத்தில் ஒரு நாளேனும் சென்னைக்கு விஜயம் தந்து எங்கள் எல்லோருடனும் அக்காவியத்தை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும். இந்த வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தங்களை நாங்கள் (குறிப்பாக அடியேன்) நேரில் காண பிரியப்படுகிறோம், காண்பதற்கு மிகுந்த ஆவலாய் உள்ளோம்..!]
"கப்பலோட்டிய தமிழன்", முதல் மறுவெளியீடாக, ஜூன் 1972-ல் 'சித்ரா'வில் வெளியானதாக தங்களின் அபார நினைவு ஏட்டிலிருந்து எடுத்தியம்பியிருந்தீர்கள். என்னிடம் அந்த விளம்பரம் கைவசம் இல்லை. கிடைத்தவுடன் இடுகை செய்து விடுகிறேன். 'சித்ரா'வில் ஜூன் 1972-ல் என்றால் வெளியான தேதி கண்டிப்பாக 23.6.1972 வெள்ளியன்றுதான் வரும். ஏனென்றால் 10.3.1972 வெள்ளியிலிருந்து 'சித்ரா'வில் புதிய திரைப்படமாக வெளியாகி ஓடிக் கொண்டிருந்த மக்கள் திலகத்தின் "நல்ல நேரம்", 105 வெற்றி நாட்களை 22.6.1972 வியாழனன்று பூர்த்தி செய்தது. பின்னர் 'சித்ரா'வில் புதிய திரைப்படமாக மக்கள் கலைஞர் ஜெய்யின் "அவசர கல்யாணம்", 29.6.1972 வியாழனன்று வெளியானது. அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் [23.6.1972 வெள்ளி முதல் 28.6.1972 வரை], "கப்பலோட்டிய தமிழன்" வெளியாகி சக்கைபோடு போட்டிருக்கிறது.
'தனது மகன் நல்ல, சிறந்த திரைப்படங்களை மட்டும்தான் பார்க்கவேண்டும்' என்று தங்கள் அன்புள்ள அப்பா நினைத்ததில் தவறில்லை. தாங்கள்தான் தேசிய திலகத்தின் பக்தராயிற்றே..! "கப்பலோட்டிய தமிழன்" தவிர்த்து அன்று வேறு எந்தத் திரைப்படத்திற்கும் போகமாட்டீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..! தங்களின் இந்த அருமையான பதிவில் ஒரு மினி பயணப்பதிவும் இடம்பெற்றிருப்பது வெகு சுவாரஸ்யம். அதில் அன்றைய பஸ் கட்டண நிலவரங்களெல்லாம் தெரிய வருகிறது. முரளி சார், ராகவேந்தர் சார் மட்டுமா வரலாற்று விற்பன்னர்கள், தாங்களும்தான்..! 'சித்ரா'வில் நீங்கள் சென்றபோது 'ஹவுஸ்ஃபுல்' போர்டு மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு வருத்தமடைந்திருந்தாலும் படம் நன்றாகப் போகிறது என்று மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்..! பின்னர் திங்களன்று டிக்கெட் கிடைத்து படம் பார்த்த அனுபவம் லாட்டரியில் கோடி கிடைத்தது போன்றதொரு உணர்வுக்கும் மேலிருக்கும்..! அது சரி, பிஸ்தாக்களுக்கும், வஸ்தாதுகளுக்கும் எந்தக் காலத்தில்தான் குறைச்சல்..!
'வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம்' பாடல் கேவா கலரில் படமாக்கப்பட்டிருந்தது என்பது ஒரு அரிய-புதிய தகவல். தேசிய திலகம் வாழ்ந்து காட்டிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சி. பாத்திரம் தாங்கள் உட்பட படம் பார்த்த அனைவரையும் எமோஷனலாக்கியதைப் படிக்கும்போது எனது கண்களிலும் கண்ணீர்..! அடியேனும் அடிக்கடி குறுந்தகட்டில் பார்க்கும் திரைக்காவியம் "கப்பலோட்டிய தமிழன்". அப்படிப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் குளமாகாத சமயமே இல்லை.
தேசிய திலகத்தின் உயிரும், உள்ளமும், உணர்வும் மட்டுமா அக்காவியத்தில். அவரது அடியொற்றிய தேசிய நெஞ்சங்களான நமது உயிரும், உள்ளமும், உணர்வும் கூட இதில்தானே..!
சிதம்பரனார் குறித்த சிகர பதிவை வழங்கிய தங்களுக்கு இந்த சுவாமிநாதன் வழங்கும் இரு சிறந்த பரிசுப் பொக்கிஷங்கள்:
http://i1110.photobucket.com/albums/...CColor1a-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6525-1.jpg
தாங்கள் வழங்கிய மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
உணர்ச்சிப்பெருக்கில்,
பம்மலார்.
நமது தேசிய திலகத்தின் போர்வாள்
தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு
38வது ஆண்டு நினைவாஞ்சலி
[22.8.1974 - 22.8.2012]
அட்டைப்படம் : சிவாஜி ரசிகன் : 1.9.1974
[உதவி : நமது வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்திரன் சார்]
http://i1110.photobucket.com/albums/...itrib011-1.jpg
தேசிய திலகம் பற்றி தேசிய நடிகர்
வரலாற்று ஆவணம் : நடிகர் திலகத்தின் 175வது திரைக்காவியமான "அவன் தான் மனிதன்(1975)" காவிய சிறப்பு மலர் [வெளியீடு : 'சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் புகழ் பரப்பும் குழு', புதுவை]
http://i1110.photobucket.com/albums/...GEDC6526-1.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் வாசுதேவன் சார்,
மிகமிக அரிய "விஸ்வநாத நாயக்குடு(1987)" நிழற்படங்களுக்கும், காணொளிக்கும், தகவல்களுக்கும் மற்றும் தாங்கள் வழங்கிய அன்பான பாராட்டுக்களுக்கும் எனது வளமான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்,
உறக்கம் வராமல் எதேச்சையாக கணினியில் நம் மய்யம் திரியினை பார்த்த பொழுது தங்களுடை பதிவு.. காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் தங்களின் நலன் காப்பதில் நம் அனைவருக்கும் பங்கு இருக்கும் உரிமையில் வேண்டுகோள் விடுக்கிறேன். எப்போது சமயம் கிடைக்கிறதோ அப்போது தவறாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தங்களைப் போல் இந்த நேரத்தில் முழு ஈடுபாட்டோடு உழைப்பதில் எனக்கும் சௌகரியம் தான். அதனால் அந்த சுகம் எனக்கும் தெரிகிறது. தவறாமல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தைப் பேணுங்கள்.
சசிகுமாரின் நினைவாஞ்சலிப் பதிவு மீண்டும் கண்களில் நீர் வரச் செய்கிறது. சென்ற ஆண்டு இட்ட பதிவினையே மீண்டும் தருவதே பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன்.
சென்ற ஆண்டு சசிகுமார் நினைவாக நம் நண்பர்கள் இட்ட பதிவுகளுக்கான இணைப்புQuote:
சசிகுமார் நினைவாக சில பதிவுகள்...படங்கள் மட்டும்.. அவரைப் பற்றி எழுத என்னால் இயலவில்லை.. கண்ணீர் தான் வருகிறது...அவர் அளவிற்கு நடிகர் திலகத்தின் மேல் பாசம் கொண்டவர்கள் அந்தக் காலத்திலும் அதற்கு அடுத்த காலத்திலும் யாரையும் காண இயலவில்லை. தற்போதைய காலத்தில் சசிகுமார் இடத்தை நம் ஒய்.ஜி.மகேந்திரன் நிரப்பி வருகிறார் எனலாம்.
.....
சசிகுமாரின் மறைவையொட்டி நடிகர் திலகத்தின் கண்ணீர் அஞ்சலி
http://i872.photobucket.com/albums/a...Sasitrib03.jpg
....
சசிகுமார் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனியவர். பேசும் போது நொடிக்கு ஒரு முறை நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அண்ணா என்று தான் சொல்வார். நான் கேட்டேன், நீங்கள் அண்ணா என்று சொன்னால் அது அண்ணாதுரை அவர்களையல்லவா குறிக்கும் என்றதற்கு, என்னைப் பொறுத்த வரை அண்ணா என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்றார். அது மட்டுமல்ல, அண்ணன் என்றால் மரியாதைக் குறைவு, என்னால் அப்படி என்னை விட வயதானவரை மரியாதைக் குறைவாக அழைக்க முடியாது என்றார். நான் ஏற்கெனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தது போல் ராஜபார்ட் ரங்கதுரை மறுமணக் காட்சி படப்பிடிப்பு முடிந்த சில நாட்களில் அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய கார் மெக்கானிக்கினால் பழுது பார்க்கப் பட்டு முடிந்து அவர் வந்து அழைத்த பின்னும் அவர் அடியேனுடன் நடிகர் திலகத்தைப் பற்றியும் பெருந்தலைவரைப் பற்றியும் இந்த நாட்டைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அவரை மறக்க முடியுமா...
http://www.mayyam.com/talk/showthrea...Part-8/page118
கண்ணீருடன்
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்புக்கட்டளையை சிரமேற்கிறேன்..!
தேசிய நடிகர் சசிகுமார் குறித்த பதிவுகள் மீண்டும் கண்களை குளமாக்கிவிட்டது.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களுடைய "கப்பலோட்டிய தமிழன்" படத்தைப் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாகவும், சுவை படவும் அதே நேரம் பல இடங்களில் கண்களில் நீரை வரவழைப்பதுமாயும் இருந்தது.
மிக்க நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
'தேசிய நடிகர்' சசிகுமார் அவர்களின் 38வது ஆண்டு நினைவாஞ்சலி (ஒரு அர்ப்பணப் பதிவு)
'தேசிய நடிகர்' சசிகுமார் அவர்களின் 38வது ஆண்டு நினைவாஞ்சலி. நடிகர் திலகத்தின் மேல் தீவிர பற்றுதல் உள்ளவராகவும், ரசிகர் மன்ற வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவராயும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தீவிர தொண்டராகவும், நாட்டுக்குழைத்த ராணுவ வீரராகவும், அழகும், திறமையும் வாய்ந்த நல்ல நடிகராகவும், மனைவியைக் காப்பாற்ற தன்னுயிரையே தந்த தியாகக் கணவராகவும் பல்வேறு பரிமாணங்களில் நம் நெஞ்சில் குடியேறியவர். அவர் நினைவு தினத்தில் அவரை வணங்கி அவர் புகழ்பாடுவோம்.
திரு சசிகுமார் அவர்கள் தன்னைப் பற்றி கூறுவதாவது.
http://www.kalyanamalaimagazine.com/.../Sasikumar.jpg
"என்னுடைய இயற்பெயர் விஜயகுமார். என்னுடைய அப்பா தந்தை பெரியார் அவர்களின் தீவிர அபிமானி. என்றும் பெரியார் வழியையே கடைபிடித்தவர். ஆதலால் தந்தை பெரியார் அவர்கள் எனக்கு 'வெற்றிசெல்வன்' எனப் பெயர் சூட்டினார். நான் ராணுவத்தில் பணிபுரிந்த போது என்னுடைய பெயர் வெற்றிசெல்வன் மட்டுமே. நான் ராணுவத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததும் என்னுடைய பெயரை சசிகுமார் என மாற்றி வைத்துக் கொண்டேன். நான் ஒரு தேசத்தைக் காக்கும் வீரன். காங்கிரஸ் கொள்கைகளில் தீவிர பற்றுடையவன். என் உயிருள்ளவரை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை, அக்கட்சியின் தியாகங்களை நாட்டுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன். சினிமா எனது உயிர் மூச்சு. என் இறுதி மூச்சு உள்ளவரை சினிமாவில்தான் இருப்பேன்".
'ராஜபார்ட் ரங்கதுரை'யில் நடிகர் திலகத்துடன் சசிகுமார்.
http://i1087.photobucket.com/albums/...31355/2-99.jpg
'ராஜபார்ட் ரங்கதுரை'யில் சசிகுமார்.
http://i1087.photobucket.com/albums/...31355/3-76.jpg
'காசேதான் கடவுளடா' படத்தில் சசிகுமார்.
http://www.shotpix.com/images/88111007416952263816.png
சசிகுமாரின் மகன் விஜயசாரதி (சன் டிவி "நீங்கள் கேட்ட பாடல்" நிகழ்ச்சியின் காம்பியராக இருந்தவர்)
http://www.hindu.com/mp/2005/01/01/i...0100450701.jpg
விஜயசாரதி நேயர்களின் விருப்பப் பாடல்களை கேட்கிறார்
http://bp2.blogger.com/_4lEybjSEwmY/...320/vijaya.jpg
சசிகுமாரின் மகன் விஜயசாரதி தன் தந்தை சசிகுமார் அவர்களைப் பற்றி கூறுவதாவது.
"என்னுடைய தந்தை 1974 இல் எண்ணூரில் நடக்கவிருந்த ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச தயாராகக் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் சூடாகப் பால் சாப்பிட்டுவிட்டு கிளம்புவது அவருக்கு வழக்கம். என் தாயார் எங்கள் அனைவருக்கும் பால் காய்ச்சுவதற்காக ஸ்டவ்வை பற்றவைக்க பம்ப் செய்யும் போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்தது. என்னுடய அம்மாவின் சேலை தீப்பற்றிக் கொண்டது. நானும், என் தங்கையும் அப்போது சிறுவயதுக் குழந்தைகள். எனக்கு அப்போது வயது நான்கு. எனது சகோதரிக்கு வயது ஆறு. ஆகையால் நாங்கள் தெருவில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே ஓடினோம். என்னுடைய தந்தை அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு கிச்சனுக்கு ஓடி அம்மாவின் மேல் பற்றிய நெருப்பை அணைக்க அம்மாவை இறுகப் பற்றிக் கொள்ள நெருப்பு அவரையும் கவ்விக் கொண்டது. என் தாயும், தந்தையும் எப்படியோ பாத்ரூமிற்கு ஓடி ஷவரில் தண்ணீரைத் திறந்து விட்டு தம் மீது பற்றிக்கொண்ட நெருப்பை அணைக்க முயன்றனர். இருவருக்குமே பெரிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் இருவரும் ராயப்பேட்டா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். என்னுடைய தந்தை என்னையும், என் சகோதரி நந்தினியையும் அழைத்து கண்டிப்பாக குணமடைந்து வீடு திரும்பி விடுவோம் என்று நம்பிக்கையுடன் சைகையால் கூறினார்.
விஷயம் அறிந்ததும் நடிகர் திலகம், மக்கள் திலகம், மேஜர் சுந்தர்ராஜன், ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா அனைவரும் ஓடோடி வந்து டாக்டர்களை கலந்து ஆலோசித்தனர். திரு ஏ.வி.எம்.சரவணன் அவர்களும், கே.ஆர்.விஜயா அவர்களும் ஏர்கூலர்களை வாங்கி வந்து எங்கள் பெற்றோரின் அறையில் பொருத்தச் செய்தனர். பல நல்ல உள்ளங்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். மூன்று நாட்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் என் பெற்றோர்களைக் காப்பாற்ற முடிய வில்லை. என் தந்தை தன் கடைசி நிமிடங்களில் தன்னை சூழ்ந்திருந்த அனைவரையும் 'வந்தே மாதரம்' சுலோகத்தை உரக்கச் சொல்லச் சொன்னதும், 'ஜன கன மன' தேசிய கீதத்தை பாடச் சொன்னதும் நன்றாக நினைவில் இருக்கிறது. 22-8-1974 அன்று எனது பெற்றோர் அகால மரணமெய்தினர். என் தாய் இறந்த இரண்டு மணி நேரங்களில் சிகிச்சை பலனளிக்காமல் என் தந்தையும் இறைவனடி சேர்ந்தார். கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் ராணுவ மரியாதைகளுடன் என் பெற்றோர்களின் இறுதிச் சடங்கு நடந்தது. அனைத்து திரையுலக பிரபலங்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் 'வந்தே மாதரம்' என முழங்க அனைத்து திரையுலகினரும் ஒரு சேர 'வந்தே மாதரம்' என முழங்கி எனது பெற்றோர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். என் தந்தை நடித்த திரைப்படங்களைப் பார்க்கையில் என் கண்களின் கண்ணீரை என்னால் எப்படி கட்டுப் படுத்த முடியும்?"
சசிகுமார் நடித்து அவர் மிகவும் புகழ் பெற்ற 'அவள்' திரைப்படத்தில் இருந்து ஒரு மறக்க முடியாத டூயட் பாடல்.(வீடியோவாக)
"கீதா... ஒருநாள் பழகும் உறவல்ல".
http://www.youtube.com/watch?v=6DE36...yer_detailpage
ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புடன்
வாசுதேவன்