http://i62.tinypic.com/2djxyrc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i62.tinypic.com/2djxyrc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2d9b60n.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/10wuzuo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/102wf3m.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/334kl6b.gif
மிஸ்டர் அண்ணாதுரை எழுந்து நில்லுங்கள் !
திராவிட முன்னேற்ற கழகம் 1967 ல் முதல்முறையாக தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது . அமைச்சரவை பதவியேற்ற பின்னர் கடற்கரையில் நடைபெற்ற வெற்றி விழா கூட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர் .
நாவலர் நெடுஞ்செழியன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் , கலைஞர் கருணாநிதி போன்ற முன்னணித் தலைவர்கள் பேசிமுடித்தவுடன் தன் பேச்சினை துவக்கினார் பேரறிஞர் அண்ணா .
பேச்சின் நடுவில் ஒருமுறை தன்னுடைய சுட்டு விரலை உயர்த்தி அனைவரும் எழுந்துநில்லுங்கள் என்றார் . அதுவரை கடற்கரை மண்தரையில் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் உடனே எழுந்து நின்றது , உடனே தன் சுட்டுவிரலை தாழ்த்தி அனைவரும் அமருங்கள் என்றார் கூட்டம் மொத்தமும் உடனே அமர்ந்து கொண்டது .
அதன் பின்னர் பேச்சை தொடர்ந்த அண்ணா அவர்கள் உங்கள் அனைவரையும் சிரமபடுத்திவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் , இங்கே காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் நம்முடைய இந்த வெற்றிவிழாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் .
நாங்கள் ஒருமுறை போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் சென்றிருந்தோம். நீதிபதியின் வருகைக்காக காத்திருந்த நேரத்தில், அங்கே வளாகத்தில் ஒராமாகப் போடப்பட்டிருந்த மேசையில் நான் அமர்ந்தேன் , அப்போது இங்கே பாதுகாப்பிற்கு வந்துள்ள அதே அதிகாரி அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
நான் மேஜையில் அமர்ந்தவுடன் தன் சுட்டுவிரலை உயர்த்தி மிஸ்டர் அண்ணாதுரை எழுந்து நில்லுங்கள் என்றார். அந்த உயரதிகாரியின் சுட்டுவிரல் அசைவுக்கு உள்ள மதிப்புக்கு மரியாதை கொடுத்து நான் எழுந்து நின்றுகொண்டேன் அப்போது, இப்போது என் சுட்டுவிரலின் மதிப்பையும் மரியாதையையும் அவருக்கு உணர்த்திடத்தான் என் அன்புத்தம்பிகளாகிய உங்களைச் சிரமப்படுத்திவிட்டேன் என்றார் .
இந்த அரிய தகவலை எனக்கு சொன்னவர் பழங்காநத்தம் விக்ரம் ஸ்டீல்ஸ் உரிமையாளர் நண்பர் Rajasekar Rp அவர்களின் தந்தையார் நினைவில் வாழும் திரு இரா.பாண்டியன் அவர்கள் .
Thanks to Madakkulam Prabhakaran Sir.
http://i59.tinypic.com/3517iwg.gif
" பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
அந்த வேதனைக் காலத்தை நினைக்கும்போது அதனுடன் ஒப்பிட்டு இன்று அல்லல்படும் மக்களை எண்ணி, அவர் வேதனைப்படுகிறார். அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும் கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத் துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை அளிக்கிறார்.
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான் அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக் கழகமே உள்ளது. தம்பி எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்.
எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னாலான உதவியைச் செய்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல நல்ல காரியங்களைச் செய்வதினால் பெருமைப்படுகிறேன் ! "
- அறிஞர் அண்ணா (நம்நாடு - 4.12.61)
Thanks to Mr. Chandran Veerasamy, FB.
தேவர் பிலிம்ஸ் - ''தனிப்பிறவி '' இன்று 48 ஆண்டுகள் நிறைவு நாள் .
16.9.1966
மக்கள் திலகம் எம்ஜியாரின் புகழ் பெற்ற பாடல்கள்
உழைக்கும் கைகளே ...உருவாக்கும் கைகளே
நேரம் நல்ல நேரம் .....
ஒரே முறைதான் உன்னோடு ....பேசி
கன்னத்தில் என்னடி காயம் ....
சிரிப்பென்ன சிரிபென்ன ... சின்னம்மா
எதிர்பாராமல் நடந்ததடி .... இந்த பாடலில் மக்கள் திலகம் முருகராக தோன்றி இருப்பது சிறப்புஅம்சம் .
ஜூடோ -சண்டை காட்சிகள் புதுமையாக இருந்தது .
தனிப்பிறவி - மக்கள் திலகதிற்கு பொருத்தமான பெயர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் .
CONGRATULATIONS VINODH SIR FOR COMPLETING 10000 POSTINGS
http://i1170.photobucket.com/albums/...ps86392a03.jpg
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பேரறிஞர் என்றழைக்கப்பட்டார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறை சாற்றும் "விடுதலை" & குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தார் .
1942ல் "திராவிட நாடு" என்ற ஏட்டினை துவக்கி அதன் ஆசிரியராக சிறந்து விளங்கினார்.
பின்னர் அது "காஞ்சி" என்று பெயர் மாற்றி அதில் தம்பிக்கு என்ற தலைப்பில் அற்புதமான மடல்களை தீட்டி ஓர் எழுச்சியினை ஏற்படுத்தினார்.
"home land" என்ற ஆங்கில பத்திரிகையினை துவக்கி அதில் கழக கொள்கைகளையும் செய்திகளையும் பதிவிட்டு மேட்டுக்குடி மக்களிடையே ஓர் விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார்.
1944ல் நடந்த சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
1949ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி, (தந்தை பெரியார் பிறந்த தினத்தில்) திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்.
சிறுகதைகள் புதினங்கள், மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவைகளை கீழ் கண்ட புனைப் பெயர்களில் எழுதினார் : :
1. சௌமியன்
2. சாவடி
3. நக்கீரன்
4. வீரன்
5. சம தர்மன்
6. சம்மட்டி
7. ஒற்றன்
8. ஆணி
9. பரதன்
எழுதிய நூல்கள் :
1. கம்பரசம்
2. ஆர்ய மாயை
3. ஏ - தாழ்ந்த தமிழகமே
4. தீ பரவட்டும்
5. இலட்சிய வரலாறு
நாடக வடிவில் எழுதிய கதைகள் :
1. சந்திரோதயம்
2. சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
திரைக்கதைகள்
1. சொர்க்க வாசல்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. வேலைக்காரி
5. தாய் மகளுக்கு கட்டிய தாலி
6. நல்லவன் வாழ்வான்
7. காதல் ஜோதி
அறிஞர் அண்ணா அவர்கள் திரை உலகிற்கு வந்த பின்புதான், அழகிய தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, திரை உலகில் தமிழ் நடையில் ஓர் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உதாரணமாக -
ஸ்ரீமான் மற்றும் ஸ்ரீமதி என்பது திரு மற்றும் திருமதி என்று அழைக்கப்பட்டது.
நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.
விவாக சுப முஹூர்த்தம் என்பது திருமணம் என்று சொல்லப்பட்டது.
காரியதரிசி என்ற வார்த்தை செயலாளர் என்று கூறப்பட்டது.
அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றழைக்கப்பட்டது.
================================================== ==========
தம்பி என்று கழகத் தொண்டர்களை அழைத்து குடும்ப பாசத்தை உருவாக்கிய உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. இந்த வழியில்தான் நமது புரட்சித் தலைவரும், தொண்டர்களை "ரத்தத்தின் ரத்தமே" என்று அன்புடன் அழைத்து ஒரு நேசத் துடிப்பினையும், இணைப்பினையும் உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
மாற்றுக் கட்சியை மதித்த பண்பாளார் பேரறின்ஞர் அண்ணா அவர்கள். உதாரணமாக, காஞ்சி மாநகரத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்தி, மக்கள் குறைகளை அவர் கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் மூலம் களைய ஆவன செய்தார்.
இந்த பண்பு மக்கள் திலகத்திடமும் காணப்பட்டதால் அவரை மிகவும் நேசித்து, தனது "இதயக்கனி" என்று புகழ்ந்தார்
அறிஞர் அண்ணாவின் மிக குறுகிய கால ஆட்சி (1967 - 69) சாதனைகள் :
================================================== =======
1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினார்.,
2. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி பாரினை வியக்க வைத்தார்.
3. பண்டைய தமிழ் அறிஞர்களை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு சிலைகள் நிறுவி சிறப்பு சேர்த்தார்..
4. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அமுலாக்கி இந்திய தேசத்தின் முழு கவனத்தையும் தன்பால் திருப்பினார்.
5. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு மாநிலம் என்று மாற்றி சுந்தரத் தமிழில் உச்சரிக்க வைத்தார்.
6. குடிசை மாற்று வாரியம் அமைத்து, ஏழைகளுக்கு தீபிடிக்காத வீடுகள் கட்டி தந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக அமைய
நமது புரட்சித் தலைவர் அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அந்த கால் கட்டத்திலேயே, முதல் தவணையாக வழங்கினார்
குறிப்பிடத் தக்கது.
7. கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க, தானே கைத்துறி துண்டுகள் ஏந்தி விற்பனை செய்தார்
8. சிறு மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அமுல் படுத்தினார்.
செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இதையொட்டிய பகிர்வு...
அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!
* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!
* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!
* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!
* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!
* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!
* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!
* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!
* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!
* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!
* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!
* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!
'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!
* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
courtesy - vikatan e magazine
http://i1170.photobucket.com/albums/...psac3b2e30.jpg
courteysy boominathan aandavar
ஒரு வேளை விட்டுப்போச்சோ என்ற டவுட்டில் பார்த்திட்டிருக்கேன் புரட்சித் தலைவரின் கன்னித்தாய்.
மாட்டு வண்டியில் வரும் எம்ஜியாரிடம் ஒரு முதியவர் பிச்சை கேட்கிறார்.
அவரிடம் எம்ஜியார்: 'அய்யா உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும்?'
'ஒரு எட்டணா, பத்தணா தம்பி!' (படம் 1965!)
பையில் துழாவி எம்ஜியார் ஒரு அஞ்சு ரூபாயைக் கொடுத்து,
'இத ஒரு வாரத்துக்கு வெச்சிக்கிட்டு அதுக்குள்ள ஒரு வேலைய தேடிக்குங்க. பிச்சை எடுக்குறது தப்பு!'
ஏந்திய கை உயர எழும்பி, 'நீங்க நல்லா இருக்கணும் சாமி!' என்று கும்பிடுகிறது.
புரட்சித்தலைவர் தன் வழக்கமான பாணியில் வலது கையை ஆட்டிச் சின்முத்திரை காட்டியவாறு சொல்கிறார்: 'மனுஷனை சாமி ஆக்காதீங்க அய்யா. அதுக்கு எந்த மனுஷனும் தகுதியில்லை!'
யார் சொன்னது எம்ஜியார் நாத்திகர் என்று!
courtesy net
தமிழ் நடிகரான ராஜீவ், கன்னடத்தில் 35 படங்களிலும், தெலுங்கில் 15 படங்களிலும் நடித்து சாதனை படைத்தார்.
"ரயில் பயணங்களில்'' (1981) படத்தின் மூலம் நடிகரான ராஜீவ், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் தமிழ்ப்படங்கள் 100. கன்னடம் 35; தெலுங்கு 15; மலையாளம் 5.
கன்னடப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், "ஜென்மத ஜோடி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதில் வில்லனாக நடித்த ராஜீவ், சிறந்த வில்லன் நடிகருக்கான பரிசு பெற்றார்.
தமிழில் வெளியான "சிறைச்சாலை'', "அரசன்'', "அரண்'' ஆகிய படங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு `டப்பிங்' குரல் கொடுத்தார்.
"பாரதி'' படத்தில், பாரதியாராக நடித்த சாயாஜி ஷிண்டேக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்தான். 40 பேர்களின் குரல்களை `டெஸ்ட்' செய்து, ராஜீவின் குரலை தேர்வு செய்தனர்.
பாரதியாருக்கு உள்ள கம்பீரத்துடன் குரல் கொடுத்தார், ராஜீவ். அந்த ஆண்டு, சிறந்த டப்பிங் கலைஞருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
சத்துணவு திட்டத்துக்கு நிதி திரட்ட கங்கை அமரனுடன் சேர்ந்து பல ஊர்களில் ராஜீவ் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சிகளில் பாடல்களும் பாடினார்.
இதைப் பாராட்டி, எம்.ஜி.ஆர். மோதிரம் பரிசு கொடுத்தார்.
today sunlife channel willbe telecast on @ 1900 hrs nam nadu
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
முத்தான 10000 பதிவுகள் பதிவு செய்த நமது மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
அதேபோல் 3000 பதிவுகள் மிகவும் குறுகிய காலத்தில் பதிவு செய்த்த திரு லோகநாதன் சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
http://i60.tinypic.com/153bdhc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
யார் மனதையும் புண்படுத்தாமல் கிண்டல், கேலி செய்யாமல், ஓரிரு பதிவுகளை பாராட்டியவர்களைக் கூட மறக்காமல் நன்றி கூறி, தரமான வார்த்தைகளாலும் கண்ணியம் மிக்க நம் தலைவரின் புகழ்பாடியும், சுயநலத்தை மறந்து கடும் உழைப்பின் மூலம் பத்தாயிரம் பதிவுகளை கடந்துள்ள திரு. எஸ்.வி.சார் அவர்களே, நீங்கள் நமது திரியின் முத்தாயிரம்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
THANIPIRAVI FANS CELEBRATION AT CHENNAI NATRAJ THEATER
http://www.youtube.com/watch?v=RZvez0AGtaA
http://i58.tinypic.com/v3g3rm.gif
உரியவர்களுக்கு,
வயது மற்றும் அனுபவத்தால் இளையவனின் வணக்கங்கள்!
http://i58.tinypic.com/b69dw2.jpg
வேலூர் records 21
http://i1276.photobucket.com/albums/...psaf9f2880.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மக்கள்திலகம் திரியின் எங்க வீட்டு பிள்ளையாம், பதிவாளர்களில் ஒளிவிளக்கு-போல திகழும் சஹோதரர் எஸ்வி., 10001 - அட்டகாசமான புள்ளிகள் இட்டு அழகான கோலம் இட்டுருக்கிறார்...அவருக்கு திரி பார்வையாளர்கள்,பதிவாளர்கள் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்... அதே சமயம் 3401- பதிவுகளை கடந்த திருப்பூர் ரவிச்சந்திரன்- அவர்களுக்கு அருமை நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி...3001- பதிவுகளை கண்ட லோஹநாதன் சார்- அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...
வேலூர் records 22
http://i1276.photobucket.com/albums/...psa51d74b3.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மன்னார்குடி நகரில் செண்பகா-திரை அரங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இந்த அரங்கில் ஜெர்மனி நாட்டு தயாரிப்பு - சவுண்ட் பாக்ஸ் மிக பிரசித்தி பெற்றது...அவ்வளவு துல்லியமாக கணீர்,கணீர் என்று குரலும் பாடலும், இசையும் கேட்கும்... இதில் பல படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன...அவற்றில் மக்கள்திலகம் காவியங்களே முதல் வெளியீடு, மற்றும் மறு,மறு வெளியீடுகளிலும் பட்டையை கிளப்பியுள்ளது...1977- ஆண்டு இரண்டாம் வெளியீடில் " மீனவ நண்பன் '-காவியம் 45- நாட்களை அருமையாக கடந்த நேரத்தில் புயல் காற்று அடித்தது ...பின் 20 நாட்கள் திரை அரங்கம் இயங்கவில்லை...பிறகு அரங்கம் சரி செய்யப்பட்டு மீண்டும் "மீனவ நண்பன்" திரையிட்டு மொத்தம் 10 வாரங்கள் பெரிய வசுலுடன் ஓடியது வரலாறு...
http://i57.tinypic.com/23gy9o4.jpg
பச்சையப்பர் கல்லூரியில் அண்ணா - 1930
(Thanks to Kalai Arasan)
http://i60.tinypic.com/2cwls11.jpg
வேலூர் records 23
http://i1276.photobucket.com/albums/...psd060ca47.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வேலூர் records 24
http://i1276.photobucket.com/albums/...pse8483b97.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வேலூர் records 25
http://i1276.photobucket.com/albums/...ps610a8276.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வேலூர் records 26
http://i1276.photobucket.com/albums/...psa808fdca.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
பத்தாயிரம் பதிவுகள் முடித்து சிகரம் தொட்ட இந்த திரியின்
தலைவனாக திகழும் திரு.வினோத் அவர்களுக்கு ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 200 வது நாளை
நெருங்க உள்ள இந்த தருணத்தில் ,தங்களின் நெருங்க முடியாத இமாலய சாதனைகளுக்கு இருகரம் கூப்பி
வணங்கி என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் /
பாராட்டுக்கள்.
http://i58.tinypic.com/219z1v7.jpg
ஆர். லோகநாதன்.