Quote:
பால் மணக்கும் பருவத்தில் பட்டாடை தொட்டிலிலே சிட்டுப் போல் கிடந்த அனுபவம் பெரும்பாலும் வளர்ந்தவுடன் நாம் மறந்து விடுவோம்! ஆனால் நமது கண் முன்னே பச்சிளம் குழந்தைகள் தொட்டிலில் கிடத்தப் பட்டு செவ்வாயில் வடியும் ஜொள்ளுடன் காற்றிலே கைகால் அசைத்து அவை மிழற்றுவதைக் கண்ணுறுகையில் அந்தக் குழந்தையாக நாம் மாறி விடக்கூடாதா என்று ஒரு ஏக்கம் மனதில் நிரவிப் பரவும் அனுபவம் நம் எல்லோருக்குமே கிடைத்திருக்கும் !!
தூரியில் கிடக்கும்போது வெளியில் நடப்பது தெரியாது வாயில் விரலை அல்லது பீடிங் பாட்டில் ரப்பரை வைத்து சப்பிக் கொண்டு அன்னையின் ஆனந்தத் தாலாட்டில் காலாட்டிக் கொண்டே தூங்கியிருப்போம் !
பிறக்கும்போதே வெள்ளி ஸ்பூனுடன் பிறந்திருந்தால் அம்சதூளிகா மஞ்சங்களான ஆடும் தொட்டில்களில் உருண்டு புரண்டு உறங்கி மகிழ்ந்திருப்போம் !
துரியோ தூளியோ கட்டிலோ மஞ்சமோ ....தாலாட்டுக் கேட்டுத் தூங்குவதற்கும்....நனைத்து வைப்பதற்குமே!!
தூங்கி எழுந்து சிணுங்கும்போது ஓடோடி வந்து அள்ளியெடுத்து அணைத்து உச்சிமுகரும் அன்னையின் ஸ்பரிசம் ஆனந்த அனுபவமே!
ஆடும் தொட்டிலும் அம்சதூளிகா மஞ்சமும் :