http://i1065.photobucket.com/albums/...psx824er74.jpg
Printable View
Just for sharing some paragraphs only, from today's Varamalar. About M.M.A. Chinnappa devar.
தன் முத்திரைச் சிரிப்பை வெளிப்படுத்திய எம்.ஜி.ஆர்., 'அண்ணே... சில ஆண்டுகளாக நாம ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலைன்னாலும், நமக்கு, 17 வருஷம் பழக்கம். இனிமேலும், உங்க வார்த்தையை மீற மாட்டேன். ஆனா, ஒரு விண்ணப்பம்; நீங்க எங்கையில அடிச்சு சத்தியம் செய்து தரணும்...' என்றார்.
எம்.ஜி.ஆரின் பீடிகை தேவருக்கு புரியவில்லை!
'அண்ணே... தம்பி கணேசன் நடிச்ச படம் பார்த்திருக்கீங்களா...' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
வேகமாக தலையாட்டிய தேவர், 'அவர் படத்தைப் பார்த்து ரசிக்காம இருக்க முடியுமா... உத்தம புத்திரன்ல என்ன ஸ்டைலு... பாவமன்னிப்புல சாய்பு கேரக்டருல என்ன ஒரு உருக்கம். பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... பாகப்பிரிவினையில கை நொண்டியா வருவாரே... அடடா என்ன ஒரு நடிகரு அவர்...' என்ற தேவரின் குரல், புது வீரியம் பெற்று ஒலித்தது.
எம்.ஜி.ஆரின் முக மாறுதலை உணர்ந்த தேவர், அதன் பின், அடக்கி வாசித்தார்.
'ஏன் முருகா... திடீர்ன்னு கணேசனப் பத்தி விசாரிக்கிறீங்க... உங்களுக்குள்ள ஏதாவது பிரச்னையா...' என்று கேட்டார்.
'அண்ணே... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. அப்பத்தான் என் நிலைமை புரியும்; தம்பி கணேசனுக்கு நீங்க பரம ரசிகர். அதோட இப்ப நீங்க பட அதிபர். நாங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா, நல்ல நட்போடு இருந்தாலும், நான் இல்லன்னா கணேசன்; கணேசன் இல்லன்னா நான். அப்படித்தான் பல முதலாளிங்க கண்ணாமூச்சி வியாபாரம் செய்ய வராங்க. தேவர் பிலிம்ஸ்ல மட்டும் அது கூடவே கூடாது.
'அஞ்சு ஆண்டுகள் கழிச்சு, நாம மறுபடியும் ஒண்ணு சேர்ந்துருக்கோம். என் கால்ஷீட் கிடைக்கலன்னு, நீங்க சிவாஜியை வெச்சுப் படம் எடுத்தால், நாளைக்கே நமக்குள்ள திரும்பவும் சண்டை, சச்சரவுன்னு பேப்பர்ல எழுதுவாங்க. நம்மள நிரந்தரமா பிரிக்க, எதிரிங்க சதி செய்வாங்க. உங்களுக்கு நான் முக்கியமோ, இல்லையோ, எனக்கு நீங்க வேணும். அதுக்கு நீங்களாவது தம்பி கணேசனைத் தேடிப் போகாம, எப்பவும், எங்கூடவே இருக்கணும்; சத்தியம் செய்ங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,
சத்தியம் செய்து கொடுத்தார் தேவர்.
பாசமலருக்கு வசனம் எழுதிய ஆருர்தாசுக்கு பெரும் வரவேற்பு. தொடர்ந்து சிவாஜி கணேசனின் படங்கள் அவருக்குக் கிடைத்தன. தாய் சொல்லை தட்டாதே படத்தின் கதை வசனகர்த்தாவும் ஆரூர்தாஸ் தான். எப்படி, அவரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்துவது என்று தயங்கினார் தேவர்.
கதாநாயகருக்காக கதாசிரியரை மாற்றுவதா, ஆரூர்தாஸே எம்.ஜி.ஆரிடம் சென்று கதை சொல்லட்டும். எம்.ஜி.ஆருக்கு கதை பிடித்திருந்தால், படமாக்குவோம் என்று முடிவெடுத்தார் தேவர்.
ஆரூர்தாஸை விடாமல் கேள்விகள் கேட்டு, தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயன்றார் எம்.ஜி.ஆர்., அவரது வினாக்கள் அத்தனையும், சிவாஜி கணேசனைக் குறித்தே இருந்தன.
கடைசியில், கதையை ஏற்றுக் கொண்டார்
எம்.ஜி.ஆர்., ஆளை விட்டால் போதுமென்று தேவரிடம் ஓடிவந்தார் ஆரூர்தாஸ்.
இந்த வரிகள் சுட்டிக்காட்டுவது எது என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ..Quote:
நாங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா, நல்ல நட்போடு இருந்தாலும், நான் இல்லன்னா கணேசன்; கணேசன் இல்லன்னா நான். அப்படித்தான் பல முதலாளிங்க கண்ணாமூச்சி வியாபாரம் செய்ய வராங்க.
இருந்தாலும் தெரியாதவர்களுக்கும் புரியாதவர்களுக்கும் நமக்குப் புரிந்த வரையில் நாம் தெரிந்து கொண்ட வரையில்...
இருவருமே சமநிலையில் இருந்ததும், இருவருக்குமே சம அளவில் தயாரிப்பாளர்களிடம் டிமாண்ட் இருந்ததும், இருவரின் படங்களின் வசூலிலும் தயாரிப்பாளர்கள் ஆழமான அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்ததும் யாரும் யாருக்கும் சளைத்தவரல்ல, இளைத்தவரல்ல, என்பதும் தெளிவாகத் தெரிகிறதல்லவா...
http://i1065.photobucket.com/albums/...psln5poffh.jpg
http://i1065.photobucket.com/albums/...psr3agex2k.jpg
http://i1065.photobucket.com/albums/...pswepy49jv.jpg
http://i1065.photobucket.com/albums/...pshoj5kuze.jpg
http://i1065.photobucket.com/albums/...psshxror1v.jpg
http://i1065.photobucket.com/albums/...ps94h8ahy3.jpg
http://i1065.photobucket.com/albums/...psingvnzit.jpg
http://i1065.photobucket.com/albums/...pskltnlt1p.jpg
http://i1065.photobucket.com/albums/...pswpfljjdn.jpg
டியர் செந்தில்வேல் சார்,
உங்களின் ஆவணப் பதிவுகள் அருமை. பொக்கிஷங்களைப் பாதுகாத்து, தொடர்ச்சியாக அளித்துவரும் தங்களுக்கு நன்றி.