திரு.லோகநாதன், திரு.பி.எஸ். ராஜு, திரு.சாய் நாகராஜன், திருமதி ஜெயந்தி கண்ணப்பன், திருமதி லதா ராஜேந்திரன்
http://i67.tinypic.com/2u8huz4.jpg
Printable View
திரு.லோகநாதன், திரு.பி.எஸ். ராஜு, திரு.சாய் நாகராஜன், திருமதி ஜெயந்தி கண்ணப்பன், திருமதி லதா ராஜேந்திரன்
http://i67.tinypic.com/2u8huz4.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு திரு.சைதை துரைசாமி மாலை அணிவித்தபின் திரு.பழனி காட்சி
http://i66.tinypic.com/2s0blsp.jpg
திருவாளர்கள் பி.எஸ். ராஜு,சாய் நாகராஜன், பழனி
http://i68.tinypic.com/t9cpis.jpg
திருவாளர்கள்லோகநாதன் , பி.எஸ். ராஜு,சாய் நாகராஜன், பழனி
http://i64.tinypic.com/2im6vq1.jpg
திருவாளர்கள்லோகநாதன் , பி.எஸ். ராஜு,சாய் நாகராஜன், பழனி ,ராஜேந்திரன்
http://i68.tinypic.com/20u30x4.jpg
திரு.பழனி தன் குடும்பத்தாருடன்
http://i65.tinypic.com/21ozm9t.jpg
பாக்யா வார இதழ் 02/11/18
http://i63.tinypic.com/2wq732f.jpg
http://i64.tinypic.com/2zgsy91.jpg
http://i64.tinypic.com/t8kfid.jpg
வாசகர் கருத்து
http://i66.tinypic.com/xp1yfq.jpg
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்
http://i63.tinypic.com/14ijsau.jpg
பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்களுக்கு சொந்தமான கே.பி.எஸ்.தியேட்டர் , கரூர் ஈரோடு சாலையில் கொடுமுடி அருகில்
அமைந்துள்ளது . இந்த அரங்கை திறந்து வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
என்பது குறிப்பிடத்தக்கது .,இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கும் திரை அரங்கத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய்யின் "சர்கார்" திரைப்படம் வெளியாக உள்ளது . அதன் பேனர் தற்போது புகைப்படத்தில் காணலாம்
http://i68.tinypic.com/1j0ow8.jpg
தினமணி -28/10/18
http://i68.tinypic.com/2a4tih.jpg
http://i65.tinypic.com/2gxfhbo.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர பக்தரான திரு.முருகன் ,சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதிய வீடு கட்டி குடி புகுந்தார் .அதன் கிரகப்பிரவேசம்
நேற்று காலை (28/10/18)ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்தவர்
என்பதால் அந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பித்து திரு.முருகன் தம்பதியரை வாழ்த்தினர் .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட (செல் காமிரா ) புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
புதுமனை புகுவிழா அழைப்பிதழின் தோற்றம்
http://i65.tinypic.com/2ep7qmw.jpg
.புதிய வீடு குடிபுகும் தம்பதியர் திருமதி மாலா முருகன் மற்றும் திரு.முருகன் அவர்களுக்கு திரு.பாண்டியராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகிறார் .
அருகில் திருவாளர்கள் : லோகநாதன், குணசேகர் , கணேஷ் ஆகியோர் .
http://i64.tinypic.com/2qrzxwg.jpg
திரு.குணசேகர், திரு.பாண்டியராஜ் , திரு.கணேஷ், திரு.முருகன், திருமதி மாலா
http://i67.tinypic.com/29aqkb6.jpg
திரு.லோகநாதன் , திரு.பாண்டியராஜ் , திரு.கணேஷ், திரு.முருகன், திருமதி மாலா
http://i68.tinypic.com/2jba8eq.jpg
இன்று (29/10/18) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸ் சானலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "விக்கிரமாதித்தன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/241r2j7.jpg
விரைவில் வெளியாகிறது கோவையில் உங்கள் அபிமான திரை அரங்கில்
http://i66.tinypic.com/2luwhac.jpg
புரட்சித் தலைவரின்
பக்தர்களே
இன்னும் எத்தனை காலம் கடந்தாலும்
தமிழ் திரையுலகில் எத்தனை படங்கள்
வந்தாலும் இந்த படத்தில்
பவனி வரும் தலைவரான
இளங்கோ கால் தூசுக்கு ஈடாகாது
என் வாழ்க்கை பயணத்தில்
எனக்கு கிடைத்த
மிகப்பெரிய அங்கீகாரம்
எங்க வீட்டு பிள்ளை திரைப்பட
விநியோகஸ்தர் என்ற பெருமை
இது ஒன்று போதும்
எங்க வீட்டுப் பிள்ளை1965..
தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது.
எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது.
குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். நம்பியார், அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.
தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான். இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.
தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.
நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.
ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான். இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.
இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்? ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை. காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார். பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.
எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.
- இந்து டாக்கீஸ் TheHindu ..
நன்றி
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி... Thanks Friends...
நேற்று மாலை ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியிருந்த சிங்கப்பூர் எம் ஜி ஆர் அவர்களை சந்தித்தோம்
அவர் கூறிய ஒர் சம்பவம்
நாங்கள் எங்கு தங்கினாலும் தலைவர் படத்தை டேபிளில் வைத்து விடுவோம்
வெளியில் சென்று திரும்பி வருகையில்
அறையை சுத்தம் செய்த ஒருவர் தலைவர் படத்திற்கு பூக்கள் இட்டு மரியாதை செய்திருந்தார் இதை
கண்டு நாங்கள் நெகிந்தோம் என்றார்
அந்த படத்தை தான் மேலே பார்க்கின்றீர் !
ஹயாத்!... Thanks Friends...
இவர்களுக்கு ஒரு சல்யூட்!
--------------------------------------------
இந்தப் பதிவு உங்களை வெகு நிச்சயம் பரவசப்படுத்தும்!
சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்--கலைமகள் பூங்கொடி11
தனி நபர்களாக எம்.ஜி.ஆர் லெஜண்ட் என்று இதுவரை ஐந்து பகுதிகளை சிங்கப்பூரில் நடத்திக்காட்டிய ஜயண்ட்ஸ்!1
இதில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆரின் அசுர சாதனை ஒன்றை தனியே பதிவிடுவேன்11
இனி,,,விஷயத்துக்கு வருவோம்1
சென்னை வந்திருக்கும் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்--பூங்கொடியை நேற்று அடியேன் உட்பட கனரா வங்கி சரவணன் ராஜகோபால்--திரு கோபால கிருஷ்ணன்-திரு சிவாஜி பாபு முருகேசன்--திரு பாபு--திரு ஹயாத் ஆகியோர் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் சந்தித்து நேற்றைய எங்கள் மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டோம்!
அவர்கள் அறையின் உள்ளே நுழைந்த எங்களை வரவேற்றது---எம்.ஜி.ஆர்11
சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்--ஹோட்டலுக்குப் போனதுமே செய்த முதல் காரியம்11
வரவேற்பு அறையில் ஒரு சிறிய டேபிளில் எம்.ஜி.ஆர் படத்தை வைத்து வணங்கி விட்டு--தங்கள் அன்றைய நிகழ்ச்சியில் கவனம் செலுத்தியிருக்கிறார்11
எப்போது அவர் சென்னை வந்தாலும்--கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மாலை சூட்டி பிரார்த்தனை செய்து விட்டே மற்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவார்!
அன்றும்,,அதைப் போலவே--கலைமகள் பூங்கொடி-மற்றும் தம்முடன் வந்திருந்த வாணி ஆகியோருடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குச் சென்று விட்டார்!
திரும்பவும் தம் அறைக்கு வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி??
அவர் டேபிளில் வைத்திருந்த எம்.ஜி.ஆர் ஃபோட்டோவுக்குக் கீழே அழகான வெள்ளை விரிப்பு1 அந்த விரிப்பின் மேல் புன்னகையுடன் எம்.ஜி.ஆர்1 அவருக்கு எதிரே கொத்தாக சிரிக்கும் உதிரிப் புஷ்பங்கள்!!
நாம் வெறும் எம்.ஜி.ஆர் புகைப்படம் தானே வைத்தோம்! இந்த அலங்கார ஜோடனை எப்படி வந்தது?
ஹோட்டல் ரிஸப்ஷனை தொடர்பு கொண்டு கேட்க--அறையை சுத்தம் செய்ய இரு இளைஞர்களை அனுப்பியதாக ஹோட்டல் நிர்வாகி தெரிவித்து--ஏன்? ஏதேனும் பிரச்சனையா என்று கவலையுடன் கேட்க-
அவர்களை என் அறைக்கு அனுப்புங்கள் என்று சிங்கையார் சொல்ல--நடுக்கத்துடன் இரு இளைஞர்கள் வயது--16--17 --வருகிறார்கள்!
நடுக்கத்துடன் வந்த அந்த இரு இளைஞர்களும்--டேபிள் மேல் இருந்த எம்.ஜி.ஆர் என்னும் நோபிள் மனிதருக்கு நாங்கள் தான் அப்படி அலங்கரித்தோம்!! அதிகப் பிரசங்கித் தனமாக இருந்தால் எங்களை மன்னிச்சுடுங்க சார்! எம்.ஜி.ஆர் மேல் எங்களுக்கு பெரிய அளவில் இருக்கும் பக்தியின் காரணமாக--தலைவரை வெறும் டேபிளில் பார்க்க எங்கள் மனம் ஒப்பவில்லை!!
அந்த இரு இளைஞர்களின் விளக்கம்--அனுபவப்பட்ட சிங்கப்பூர் குழுவுக்கும்--அதைக் கேட்ட எங்கள் குழுவுக்கும் ஆனந்த அருவியைக் கண்கள் கொட்டிய அதே சமயம்--
ச்சே! இன்றைய ஆட்சியாளர்களின்--எம்.ஜி.ஆரால் பயன் பெற்றவர்களின் இன்றைய பாசாங்குத் தன பக்தியை எதிர்பார்த்தோமே!!எம்.ஜி.ஆரைப் பார்த்தே இராத ! இந்த இளைஞர்களின் இந்த செயலுக்கு முன்னால் அவர்கள் கால் தூசி பெறுவார்களா என்ற நியாயமான வெட்க உணர்ச்சி வெடித்துக் கிளம்பியது!!
இன்று வரை அந்த இரு இளைஞர்களும் தினமும் அந்த அறையில் புதிதாக மலர்களை அர்ப்பணித்து வருகிறார்கள்!!
கடற்கரை வந்து எனக்கு மாலை அணிவிக்கிறாயே? இதோ உன் அறையில் உனக்காகவே இப்படி பூக்களுடன் காட்சி தருகிறேன் பார்11 என்று சிங்கப்பூர் எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஜி.ஆர் கூறுவது போல் எனக்குத் தோன்றுகிறது!! உங்களுக்கு???... Thanks Friends...
இந்திய திரையுலகிலும் அரசியலிலும் வெற்றிக்குஒருவன். புரட்சித்தலைவர். எம்.ஜி.ஆர். தான் இன்றையதலைமுறை ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது அதனால்தான் படம் வரும்போதும் விழா.நடத்தும்போதும் புரட்சித்தலைவரின் படத்தையேபோடுகிறார்கள் அன்றைய நடிகர்கள் சிவாஜி. ஜெமினிகணேசன் ரவிச்சந்திரன் அரசியல்வாதிகள் கருணாநிதி மூப்பனார் படங்களைப் போடுவதில்லை ஆக என்றுமே சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் ஒருவர்தான் அவரைச் சொன்னால்தான் வெற்றி கிடைக்கும் என்றநம்பிக்கைத் தொடரட்டும் இந்த ரசிகர்களுக்கு தெரிந்தரகசியம் புரட்சித்தலைவரின் அருளால்வாழும் அரசியல்வாதிகளுக்கு தெரியாதது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்ற கெத்தேஇரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...
பல்லாண்டு வாழ்க!
----------------------------------
மக்கள் திலகம் இதில் ஜெயிலராக ஜொலித்திருப்பார் லதா மேடம் பொம்மை விற்கும் பெண்ணாக காட்சியின் தரம் இவரால் உயர் தரம்
கொடுமையான ஆறு கைதிகள் கடுமைகாட்டாமல் திருத்தும் திருத்தமான நடிப்பு
இந்திய வரைபடத்திற்கு பின் மனிதனுடைய படத்தினை வரைந்து கிழித்து விடுவார் பின் வரைபடத்தை ஒன்று சேர்க்க தவிக்கும் பெண்களிடம் மனித உருவத்தை ஒன்று சேர்க்க சொல்லி தனி மனிதன் திருந்தினால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்ற கருத்தை தெளிவு படுத்தி உயர்ந்த கருத்தை நம் மனங்களில் பதிவிடுவார்!
தேசிய விருதுக்கு தகுதியுள்ள படம்
இப்படத்தின் கடைசி காட்சி கண்கொள்ளா காட்சி ரசிகர்கள் இருக்கையை விட்டு கிட்டத்தட்ட பறப்பார்கள் விசில் விணணை பிளக்கும் திரையரங்கம் கரவொலியால் அதிரும்!
வில்லனை துரத்த அறுபது வயது இளைஞனான நம் மக்கள் திலகம் ஜீப்பின் பின்னால் ஓடுவார் இருபது வயது வாலிபனுக்கு கூட சாத்தியமில்லை
ரசிகர்களின் கரவொலிக்கு காரணம் இதுவே
அதோ எழுந்து வருகிறார்கள் பாருங்கள் அறிவு ஜீவிகள் இது கேமராவின் விந்தை என்று கூறி!
சமீபத்தில் எத்தனையோ ஆங்கில படங்கள் வருகின்றன ஆனால் நாம் ஏன் டோனிஜாவை கொண்டாடுகிறோம் மனிதனின் ஆற்றலுக்கும் கேமராவின் விந்தைக்கும் வித்தியாசத்தை அறிந்ததனால்!
ஹயாத்!... Thanks Friends...
குமுதம் வார இதழ் -07/11/18
http://i65.tinypic.com/2lvfhh5.jpg
http://i66.tinypic.com/kajyww.jpg
நாடோடி மன்னன் வெளியான தேதி 22/8/1958. குமுதம் இதழில் தவறாக 1956 என்று பிரசுரம் ஆகியுள்ளது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "படகோட்டி " திரைப்படத்தின் புகைப்படங்கள் சில
நண்பர்களின் பார்வைக்கு .
தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i67.tinypic.com/zmfnnt.jpg