-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
தொலைக்காட்சியில் முதன்முதலில் ஒரு நடிகருக்காக Talk Show நடத்தப்பட்டது
நடிகர்திலகம் சிவாஜி ஒருவருக்கு தான்.
விஜய் டி.வி.
... ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ஒரு கலைஞருக்கு விழா எடுக்கப்பட்டது சிவாஜி ஒருவருக்கு தான்.
ராஜ் டி.வி
அதே போல்,
ஒரு நாளிதழ் சார்பில் ஒரு கலைஞருக்கு
விழா எடுத்து கவுரவிக்கப்படுவது
சிங்கதமிழன் சிவாஜி ஒருவருக்கு தான்.
தி இந்து தமிழ் நாளிதழ்
சென்னை, கோவையை தொடர்ந்து
மதுரையில்,
கலங்கமில்லா, கள்ளமில்லா
தலைவர் சிவாஜி அவர்களுக்கு புகழ் பாட,
தி இந்து தமிழ் நாளிதழ் சார்பில்
இருபெரும் விழா
( சிம்மகுரேலான் 90 /
வீரபாண்டிய கட்டபொம்மன் 60 )
நடத்தப்படுகிறது.
சிம்மகுரேலான் புகழ்பாடும்
தி இந்து தமிழ் நாளிதழ் நிர்வாகத்தினருக்கு,
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான
சிவாஜி ரசிகர்கள் சார்பிலும்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும் நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5f&oe=5DCA9C32
நன்றி சுந்தர்ராஜன் (முகநூல்)
-
அனேகமாக மாலைமுரசுவில் வந்த செய்தியாக இருக்கலாம்... குறிப்பெழுதி வைக்காததால் குழப்பம்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cb&oe=5E11876A
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
-
மதுரையில்நடைபெரும்
இந்துதமிழ்அகிலஇந்தியசிவாஜிமன்ற்ம்நடத்தும்சிம்மகுரல ோன்90
கட்டபொம்மன்60விழா.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...18&oe=5E0C4ED6
நன்றி சிவாஜி பழனிகுமார் (முகநூல்)
-
-
வீரபாண்டிய கட்டபொம்மன் 60: தூக்கில் போடாதீர்கள்..!
இந்தியாவுக்கு வருகை தந்து சிவாஜி கணேசனை பாராட்டிய எகிப்து அதிபர் நாசர்
பி.தங்கப்பன்
... அசலான கலைஞர்கள் தேசத்தின் கண்ணாடிகள். அவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பங்குபெறும் படைப்புகள் வரலாற்றை மட்டுமல்ல; வாழும் காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிப்பவை. காரணம், தேசப்பற்று அவர்களின் சுவாசம். அப்படிப்பட்ட அரிய தேசியக் கலைஞர்களில் முதன்மையான ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
வாழ்நாள் முழுவதும், தேசத்தின் மீது, தேசத் தலைவர்களின் மீது, மக்களின் மீது மாறாப் பற்றுகொண்டவராக விளங்கியவர். கலை வழியே தனக்குக் கிடைத்த பொருளின் பெரும்பகுதியைத் தேசத்துக்கும் மக்களுக்கும் திரும்பக் கொடுத்த கலைஞர் என்று தயக்கமின்றி அவரை எடுத்துக்காட்டலாம். இதைவிடவும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது, பல வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களாக நம் கண்முன்னால் இருக்கின்றன.
நம் காலத்தில், நாம் பார்த்திராத பல தேசத் தலைவர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, வரலாற்று நாயகர்களைத் தனது நடிப்பின் மூலம் திரையில் உயிருடன் எழுப்பிக் காட்டினார். அவரை ‘நடிகர் திலகம்’ எனக் கலைரீதியாக நாம் போற்றுவதற்கு இதுவே உண்மையான காரணம்.
வால்கா நதிக்கரையில் நடப்பேன்
அப்படிப்பட்ட சிவாஜி, சொந்த தேசத்தை மட்டுமல்ல; நட்பு தேசங்களையும் அதன் கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கொண்டாடியவர். ரஷ்யாவை ஒருபடி அதிகமாகவே அவர் காதலித்தார். சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத்துக்கும் அவருக்குமான தொடர்பு அலாதியானது. அங்கே நூலகராகப் பணிபுரிந்து வந்த என் மீது, நட்பு என்பதைத் தாண்டி அவரது குடும்ப உறுப்பினர்போல் அன்பு பாராட்டினார். அடிக்கடி என்னை அழைத்து உரையாடுவார். ஒருமுறை, ‘வால்கா முதல் கங்கைவரை’ புத்தகத்தை வாசித்திருக்கிறாயா என்று என்னிடம் கேட்டுவிட்டு, “இங்கே நமது கங்கை, காவிரியைப் பார்த்தால், அவற்றில் நீராடினால் எத்தனை சிலிர்க்கிறதோ.. வால்கா நதியின் தீரத்தை அந்தப் புத்தகம் வழியே வாசித்தபோதும் அந்தச் சிலிப்பு எனக்கு உருவானது. ஏனென்றால், நமது நேச நாடான சோவியத் ரஷ்யாவின் மக்களுக்குச் சுவாசம் தருவது வால்கா நதியின் தீரம். அந்த தீரத்தில்தான் உலக வரலாற்றை அசைத்துப்போட்ட, மாபெரும் புரட்சியாளர் லெனின் பிறந்தார், ‘தாய்’ எனும் அற்புதப் போர்க் காவியத்தை எழுதிய உலக எழுத்தாளன் மாக்ஸிம் கார்க்கி பிறந்தார். இன்னும் எத்தனை எத்தனை ஆளுமைகளை பிரசவித்த அந்த நதியின் கரைகளில் நான் காலார நடந்து செல்ல விரும்புகிறேன். விரைவில் ரஷ்யாவுக்குச் செல்வோம். நான் சொல்லும்போது பயண ஏற்பாடுகளைச் செய்.
அரசின் விருந்தாளியாகச் சென்றால் ரஷ்யா முழுவதும் சுதந்திரமாக சுற்றி வர முடியாது. நீ... நான்.. அம்மா, ராம், அவனது மனைவி ஐந்து பேர் மட்டும் சுற்றுலாப் பயணிகளாகச் சென்று வருவோம்.” என்றார்.
சோவியத் ரஷ்யாவின் அழைப்பு
ஆனால், சோவியத் ரஷ்யா ஒருங்கிணைந்த ஒன்றியமாக, மிகையில் கர்ப்பாச் சேவ் அதன் தலைவராக பொறுப்பு வகித்தபோதே அரசு விருந்தினராக சிவாஜி அழைக்கப்பட்டார். ஆனால், சிவாஜி ஓய்வில்லாமல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அவரால் அப்போது ரஷ்யா செல்ல முடியவில்லை. சிவாஜியை சோவியத் அரசு விருந்தினராக அழைக்கக் காரணமாக அமைந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அது கெய்ரோ படவிழாவில் விருதுகளைக் குவித்துத் திரும்பியபின் ரஷ்யமொழி சப்-டைட்டில்களோடு அங்கே வெளியாகி ‘யார் இந்த சிவாஜி கணேசன்?’, என்று ரஷ்ய மக்களைக் கேட்க வைத்தது.
சோவியத் ரஷ்யாவின் மக்கள், நடிகர் ராஜ் கபூரின் படங்களுக்குத் தீவிர ரசிகர்கள். அவரையும் அவரது படங்களையும் இன்றைக்கும் கொண்டாடுகிறவர்கள். அவர்கள்தாம் சிவாஜியின் படங்களையும் அங்கே கொண்டாடினார்கள். அதில் ஒன்றுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அந்தப் படம் வெளியான நேரத்தில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘பிராவதா’ (உண்மை) இதழில் சென்னை அலுவலக ஆசிரியர் மிட்ரோவ்கின் சிவாஜியைப் பேட்டி கண்டு அதில் வெளியிட்டார். ரஷ்யமொழியில் வெளியான பேட்டி, சிவாஜி எத்தனைபெரிய கலைஞர் என்பதை சோவியத் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதன்பிறகு ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடங்கி, ‘முதல் மரியாதை’வரை சிவாஜியின் படங்கள் அங்கே ரஷ்யமொழி பெயர்ப்புடன் வெளிவந்தன. சிவாஜியைப் பேட்டி கண்டு எழுதிய மிட்ரோவ்கின், அந்தப் பேட்டி வெளியான 35 ஆண்டுகளுக்குப்பின் தன் மகளுடன் சென்னை வந்தபோது சிவாஜியைச் சந்திக்க விரும்பினார். அப்போது அவர்கள் இருவரையும் அன்னை இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். “நீ காண விரும்பிய கிரேட் ஆக்டர் மிஸ்டர் சிவாஜி கணேசன் இவர்தான்” என்று தன் மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து தன்னை மீண்டும் சந்தித்த பத்திரிகையாளரை கைகுலுக்கி, கட்டி அணைத்துக்கொண்டார் செவாலியே சிவாஜி.
‘தாயே உனக்காக’ .
அந்தச் சந்திப்புக்குபின் ஒருமுறை ‘இனியாவது ரஷ்யாவுக்குச் சென்றுவிட வேண்டும். விசாவுக்கு ஏற்பாடு செய்’ என்று அவர் எனக்கு அனுமதி கொடுத்திருந்த நாட்களில்தான் அவர் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். மக்களுக்கான தலைவர்களும் படைப்புகளில் உச்சம் தொட்ட கலைஞர்களும் நிறைந்திருந்த ரஷ்ய மண்ணில் அவரது பாதம் இறுதிவரை பதியாமல்போனது பேரிழப்புத்தான்.
ரஷ்ய மண்ணின் கலாச்சாரத்தையும், அதன் ஒப்பற்ற தலைவர்கள், கலைஞர்களை அவர் பெரிதும் மதித்தார். சிவாஜி முதன்முதலாக சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அடிவைத்தது ‘புடோவ்கின்’ எனும் மாபெரும் ரஷ்யத் திரைப்படக் கலைஞனின் பெயரால் தொடங்கப்பட்ட திரைப்படச் சங்கத்தை (புடோவ்கின் பிலிம் கிளப்) தொடங்கி வைக்கத்தான். அதன்பின் அவர் பல விழாக்களுக்கு வந்திருக்கிறார். அவருக்குப் பிரம்மாண்ட பாராட்டு விழாவையும் சென்னையின் ரஷ்யக் கலாச்சார மையம் எடுத்திருக்கிறது. அவர் சோவியத் திரைப்படங்கள் பற்றி ஆவலோடு என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். இந்தியாவுக்கு யுத்தநிதி திரட்டித் தருவதற்காக எடுக்கப்பட்ட ‘தாயே உனக்காக’ திரைப்படத்தில் கேப்டன் சுவாமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்தப் படம் ‘பாலட் ஆஃப் எ சோல்ஜர்’ (Ballad of a Soldier) என்ற புகழ்பெற்ற சோவியத் படத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்டதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. கலைப் பயணமாகத் தமிழகம் வரும் ரஷ்யக் கலைஞர்களை அன்னை இல்லத்துக்கு அழைத்து, அவர்களுடன் அளவளாவி விருந்தளிப்பதைப் பெரும்பேறாகக் கருதினார் சிவாஜி.
“கலைஞர்களுக்கு என் வீடு எப்போதும் திறந்தே இருக்கும். எனக்குச் சிரமம் என்று மட்டும் நினைத்துவிடாதே.” என்று கூறிய சிவாஜி, கெய்ரோ படவிழா அனுபவங்களை என்னுடன் மனம் விட்டுப் பகிர்ந்திருக்கிறார்.
“எந்தக் காட்சியில் எல்லாம் நம் சொந்தங்கள் கைதட்டி, கண்ணீர் சிந்தி, வெகுண்டு எழுந்து ரசித்தார்களோ... அங்கேல்லாம் கெய்ரோவின் ரசிகர்களும் அழுதார்கள், சிரித்தார்கள் தங்கப்பா” என்றவர், இன்னொன்றையும் பெருமை பொங்கச் சொன்னார். “சிறந்த நடிகருக்கான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த அறிவிப்பை, விழா ஏற்பாடுகளுக்கு நடுவில் அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் மேடையில் கம்பீரமாக அறிவித்தான். அவன்தான்... மன்னிக்கனும்...
அவர்தான் பின்னால் எகிப்திய, ஐரோப்பிய சினிமாவில் மாபெரும் நடிகனாக புகழ்பெற்ற ஓமர் ஷெரிஃப்” என்றார். உண்மைதான் ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ தொடங்கி ஓமர் ஷெரிஃப் எத்தனை சிறந்த படங்களில் உச்சம் தொட்டு நின்றார்!
‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகம் பற்றி அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து எழுத ஏராளம் இருக்கின்றன. இருப்பினும் முத்தாய்ப்பாக ஒன்று. ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகம் மாபெரும் வெற்றிபெற்றிருந்தபோது சென்னை ராஜா, அண்ணாமலை மன்றத்தில் அந்த நாடகத்தைக் காண சிவாஜி அனுப்பிய காரில் வந்து முதல் வரிசையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் மூதறிஞர் ராஜாஜி.
இறுதிக் காட்சியில் கட்டபொம்மனைத் தூக்கிலிடும்போது “தூக்கில் போடாதீர்கள்.. தூக்கில் போடாதீர்கள்…” என்று தன்னை மறந்து கத்தி விட்டாராம். “ராஜாஜியின் உணர்வு நிலையை மதித்து அந்தக் காட்சியில் கட்டபொம்மனை நாங்கள் தூக்கில் போடவில்லை” என்று என்னிடம் சொன்னார் சிவாஜி.
நாடகம் முடிந்ததும் சிவாஜியிடம் “திப்பு சுல்தான் கதைக்கு உன்னால் மட்டும் தான் உயிர்கொடுக்க முடியும்.. முயற்சி செய்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.
கட்டுரையாளர்,
இந்திய - ரஷ்ய வர்த்தகசபையின்
பொதுச் செயலாளர்.
நன்றி : தமிழ் ஹிந்து.
Thanks Marimuththu Ramswami Marimuththu (F B )
-
-
-
-
-
-
-
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...08&oe=5DFE2922
இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாது அவர்தான் ஐயன் சிவாஜி
படம் உதவி நன்றி நிலா
-
-
-
-
சிகரங்களை நோக்கி.....
இணைந்த 80 வது நாள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...16&oe=5E05979A
நன்றி வான்நிலா விஜயகுமாரன் (முகநூல்)
-
-
நியூஸ் பேப்பர்ஸ் ஊடகங்கள் செய்திகள் பதிவிடும் ஏமாற்று வேலை,
அதாவது சமீபத்திய காலத்தில் பழைய படங்கள் ரீ மிக்ஸ் டிஜிட்டல் செய்யப்பட்டு திரைக்கு வந்து வசூல் ...ரீதியாக வெற்றிகரமாக ஓடியது என்றால் அது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே,
கர்ணன் 2012 ல் மறு வெளியீட்டில் 76 திரையரங்குகளில் வெளியானது முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே 2 கோடிக்கும் மேலாக வசூலித்தது,
ஏறக்குறைய 45 திரையரங்குகளில் 25 நாட்களையும், 34 திரையரங்குகளில் 50 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது, இறுதியாக 155 நாட்கள் சென்னையின் இரண்டு திரையரங்குகளில் ஓடியது.
மொத்தத்தில் சுமார் 12 கோடிக்கும் மேலாக வசூலித்ததாக இறுதி தகவல்கள் வெளியாயின,
அதன் பின்னர் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆகியன திரைக்கு வந்து வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடியது, நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் என்றால் அது எக்காலத்திலும் எல்லா தலைமுறையினருக்கும் ஏற்றவாறு இருக்கும் என்பது நிரூபனமானது , அதன் தொடர்ச்சியாக சிவகாமியின் செல்வன் திரைப்படமும் வெற்றிகரமாக 100 நாட்கள் கடந்து வெற்றி வாகை சூடியது,
எனவே மேற்கண்ட நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் கடந்த 2012 முதல் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன என்பது தான் நிஜமான செய்தி!
கர்ணன் வெற்றியை செய்திகளில் முக்கியத்துவம் அளித்து வெளியிடும் ஊடகங்கள் அதே தருணத்தில் மற்ற நடிகர்களையும் சேர்த்து விடுவது விநோதமான ஒன்று,
அதாவது செய்திகள் எப்படி வருகின்றன என்பதை பார்த்தால்
எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வசூல் குவித்தது, ரஜினி கமல் படங்களும் வரத் தயாராகிறது,
இதில் உண்மை என்ன என்று பார்த்தால் எம்ஜிஆர் நடிப்பில் டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் கடந்த 2014 ல் சுமார் 120 திரையரங்குகளில் வெளியானது ஆனால் அடுத்த வாரமே ஓடிய திரையரங்குகளின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே, படம் ஒரு கோடி வசூலித்தது என்ற விளம்பரம் 100 நாட்கள் வரை ஓடிய பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது,
அடுத்து ரஜினி, கமல் இருவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் " நினைத்தாலே இனிக்கும் " இந்த படம் வந்த மூன்று நாட்களுக்கு பிறகு திரையில் கிடையாது,
இப்படியான நிகழ்வுகளை மறைத்து விட்டு உண்மையான வெற்றியை கொடுத்த நடிகர்திலகத்தின் பெயரை மட்டுமே போட்டு செய்திகளை வெளியி்ட வேண்டிய ஊடகங்கள் அதைத் தவிர்த்து
பொத்தாம் பொதுவான செய்திகளை போடுவதை போடுவதை பார்க்கும் போது ஒரு சிறந்த பழமொழியைத்தான் நினைவில் கொள்ள வேண்டியதாகிறது
" பூவோடு சேர்ந்த நாரும் மனப்பது போல "
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0a&oe=5DFA8922https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e1&oe=5E12401C
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a3&oe=5DF1F3DDhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...21&oe=5DF83560https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...05&oe=5DFFB872https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...54&oe=5DF923B2https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...68&oe=5DF8E456
Thanks Sekar ( Facebook)
-
கயத்தார்.வீரபாண்டியகட்டபொம்மன்
நினைவிடம்.
நடிகர்திலகம்சிவாஜிஅரசுக்கு
கொடுத்தது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...98&oe=5E0049FFhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f1&oe=5DFB9AEE
Thanks Sivaji Palanikumar ( Facebook)
-
ஆவணப் பொக்கிஷங்கள்
Sivaji Ganesan honouring DVS Raju at Bhishma Award Function
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2a&oe=5DF3503A
Thanks Vasu Devan(Facebook)
-
இனிய காலை வணக்கம் அன்பு நட்பு வரும் ஆகஸ்ட் 4 ஐயன் சிவன் சிவாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடத்தும் கண் சிகிச்சை முகாம் பல் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் கண் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் முன் வரலாம் அன்று இரவு இன்னிசை கச்சேரி நடைபெறும் திருப்பூர் வடக்கு மாவட்ட சிவாஜி மன்றம் செயலாளர் சன் ராமலிங்கம் சிவாஜி மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் 9865619185 & 9344477721
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5E0C9B4Bhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...21&oe=5E07CD3D
நன்றி ராமலிங்கம் சன் (Dr .சிவாஜிகணேசன் Fanbook)
-
-
-
-
-
-
-
பாலும் பழமும்-9/9/1961.(58வருட நிறைவு)
ஒரு முக்கோண காதல் அல்ல மணவாழ்வு கதை. காதல் வாழ்வு என்பது மக்களுக்கும் ,நாட்டுக்கும்,உலகத்துக்கும் சேவை செய்யும் உன்னத நோக்குடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை சொல்லி ,பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி கேட்டதுண்டா?
உலகம் தோன்றிய நாளிலிருந்து ,இருந்து வரும் ஒரு உன்னத ,மக்களை காக்கும் தொழில் செய்யும் அனைவரும் ,ஒரு படம் பார்த்து தங்கள் தொழிலையே நினைத்து பெருமிதம் கொண்டு ,அந்த படத்தின் நாயகனை பிரதி செய்து லட்சியமாக்கிய அதிசயம் கேட்டதுண்டா?
தமிழின் ஒரே ஸ்டார் நடிகன் ,முப்பது வயது இளைஞன் , தூக்கி வாரிய தலை முடியுடன், சில நரை சேர்த்து (salt &Pepper look )லட்சியவாதி மருத்துவராய் 1960 களில் நடித்து ,ஊரையே மலைக்க வைத்த அற்புதம் கண்டதுண்டா?
ஒரு தத்துவ பாடல், பாடல் ,இசை, நடிகனின் பங்களிப்பு(பாடகனும்) ஆகியவற்றால் அமரத்துவம் கண்டு, இன்றளவும் பெஞ்ச்மார்க் என்று சொல்ல படும் தர உன்னத அளவுகோலாக cult status அடைந்த கதை தெரிய வேண்டுமா?
உன்னத மனிதர்களை வைத்தே ,ஒரு படம் முழுவதையும் சுவாரச்யமாக்கும் கலை தெரிய வேண்டுமா?ரசிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி பயணித்த பேரதிசயம் நிகழ்ந்த வரலாறு அறிய வேண்டுமா?
கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு,பாடல்கள்,படமாக்கம் அனைத்திலும் உயரம் தொட்டு ,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பார்வை, அனைத்து ரக(நகரம்,கிராமம்) ஆண் பெண் ரசிகர்களை ஒருங்கே கட்டி போட்ட அறுபதுகளின் ஒரு படத்தை காண வேண்டுமா?
நடிகர்களின் இமயம், கதாசிரிய இமயம் (ஜி.பாலசுப்ரமணியம்),இயக்குனர்களின் இயக்குனர் ,கவிஞர்களின் கவிஞன்,மெல்லிசை சக்ரவர்த்திகள் இணைந்து நடத்திய கலை சாம்ராஜ்யம் தான் பாலும் பழமும்.
ஒரு செல்வ குடும்பத்தால் எடுத்த வளர்க்க பட்டு ,மருத்துவம் முடிக்கும் அனாதையான ரவி, தன்னுடைய லட்சியமாக கொள்வது புற்று நோய்க்கு மருத்துவ தீர்வு. அதற்கு உறுதுணையாக நிற்கும் சாந்தி என்ற செவிலி (nurse ) அனாதையாக நிற்கும் போது ,அவள் தன் லட்சியத்துக்கும் துணை நிற்பாள் என்று மணமுடிக்கிறான் .எடுத்த வளர்த்த பெரியவர்கள் தங்கள் பெண் நளினியை ரவிக்கு மணமுடிக்க எண்ண ,ரவியின் விருப்பத்தை அறிந்து பெருந்தன்மையாக அங்கீகரிக்கின்றனர்.மணவாழ்வில் சாந்தியின் அன்பினால் கவர படும் ரவி, ஒரு கட்டத்தில் முற்றிய காச நோய் கண்ட மனைவியை விட்டு நகராமல் தொழிலை உதாசீனம் செய்ய, அவனை விட்டு அகல்கிறாள் சாந்தி. தான் ஒரு விபத்தில் இறந்ததாக நம்ப வைக்கிறாள். பிறகு விதிவசத்தால் நளினியின் பிடிவாதத்தால் அவளை மணந்தாலும் ,சாந்தியின் நினைவால் ,நளினியுடன் விலகியே இருக்கிறான். ஒரு உணர்ச்சி போராட்டத்தில் ,கண் பார்வையை தற்காலிகமாக இழக்கிறான். ஒரு பெரியவரின் தயவால் சுவிட்சர்லாந்து சென்று நோய் குணமாகி வரும் சாந்தி, ரவியின் நிலையறிந்து ,அவனுக்கே பணி புரிய நீலா என்ற பெயரில் வர, முக்கோண போராட்ட உணர்ச்சி குவியலின் பின் ரவியும்,சாந்தியும் இணையும் கதை.
நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.
இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.
நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)
அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)
சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)
பாலும் பழமும் படத்தின் மிக பெரிய பலம், எந்தொவொரு எதிர் மறை பாத்திரமும் இல்லாமல் , வாழ்க்கையின் சுருதி பேதங்களை அடிநாதமாக கொண்ட நிகழ்வுகள்,உணர்வுகள். சிறுசிறு மனத்தாபங்கள் (திருமணத்திற்கு ஒப்பும் பெரியவர்கள் ,மணத்திற்கு நேரில் வராதது அழகாக register ஆகும்) உணர்வு போராட்டங்கள் இவையே கதையை நடத்தி செல்லும்.
ஒரே எதிர்மறை பாத்திரம் செல்லத்துரை என்கிற எம்.ஆர்.ராதா நகைசுவைக்கு பயன் படுத்த பட்டிருப்பார்.கதையோடு ஒட்டாதெனினும் ,செந்தில்-கௌண்டமணி போல கருணாநிதி-ராதா நன்கு நகைச்சுவை மிளிரும்.
பாடல்கள் 1961 அதுவும் பீம்சிங் படம் , அதிலும் வேலுமணி (பதிபக்தி பங்குதாரர்கள் )படமென்றால், அதிலும் சிவாஜி என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி உற்சாகத்தை கேட்கவும் வேண்டுமா?பா படங்களே பாடல் படங்கள் ,அதிலும் இதில் இரண்டு பா. ஆலயமணியின்,நான் பேச ,பாலும் பழமும்,போனால் போகட்டும்,காதல் சிறகை,என்னை யாரென்று,இந்த நாடகம் என திணற வைக்கும் அளவு சிறந்த பாடல்கள் அருமையான படமாக்கத்தில் மிளிரும். இதில் தென்றல் வரும் என்ற எனது பிரிய பாடல் நீக்க பட்டு விட்டது நீளம் கருதி.
லாஜிக் அருமையாக வரும். குடும்பத்தினர் கல்யாணத்திற்கு வராதது (சாந்தியை தெரியாது),எம்.ஆர்.ராதா மட்டும் பார்ப்பது,ரயில் விபத்து எல்லாம் சரி. சுவிட்செர்லாந்து சினிமா கற்பனை என்று விடலாம். சில வேளைகளில் டாக்டர் கொஞ்சம் நிதானமிழப்பார். ஆனால் பெரிய துன்பம் என்பதால் சில நேரம், குணமாற்றம் தடுமாற்றத்தில் ஏற்படுவதில்லையா?
படம் தொடுக்க பட்டிருக்கும் மாலை போல அழகான திரைக்கதையால்.ஒவ்வொரு கணமும் ,பார்வையாளருடன் பிணைந்திருக்கும். போர் என்று ஓர் நிமிடம் கூட இருக்காது.இது போன்ற படங்கள் மனிதனின் மனத்தில் உன்னதம் வளர்க்கும். வாழ்க்கை ஏற்ற-தாழ்வு,இன்ப-துன்பம் யாவற்றிலும் உயர் சமூக நோக்கம் ,மனிதத்துடன் ஜீவிக்க இப்படி பட்ட படங்கள் உதவின.
Thanks Gopalakrishnan Sundararaman (நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் முகநூல்)
-
-
நடிகர்திலகத்தின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு 30:09:2018 அன்று 52 வார தொடர் அன்னதான நிகழ்ச்சியினை ஒரு புள்ளியிலிருந்து துவக்கினோம். ஐயனின் ஆசிர்வாதத்தால் இன்று பொன்விழா வாரத்தை எட்டியிருக்கிறது இந்த சமூகப்பணி.
ஓரிரு வாரங்கள் நடக்கும்...
நாலு வாரங்கள் நடந்தாலே பெரிய விஷயம்...
கூட்டு முயற்சி பலன் தராது...
ஒவ்வொரு வாரமும் யாரைப் பிடிப்பது......
என்று எந்தவொரு கேள்விக்கும் இடங்கொடுக்காமல், எந்த வேகத்தில் புறப்பட்டோமோ அதே வேகத்தில் ஐம்பதாம் வாரம்வரை பயணித்திருக்கிறது இந்தக்குழு.
இந்தப் பெரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய நடிகர்திலகத்தின் அத்தனை ரசிகர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி.
தமிழகத்தில் எந்தவொரு ரசிகக் கூட்டமும் செயல்படுத்தியிராத அரும்பணி இது.
தொடர்ந்து ஐம்பது வாரங்களும் நிகழ்ச்சியின் நேர்த்தி குறையாமல், உணவின் சுவை குறையாமல், ஆதரவளித்த நெஞ்சங்களின் கூட்டம் குறையாமல் நடந்திட்ட இச்சேவைக்கு முதன்மைக் காரணம் குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் அமைப்பாளர் திரு.பி.கணேசன் என்றால் மிகையாகாது. பொன்விழா வார நிகழ்ச்சி முடிந்தகையோடு இதோ அடுத்த ஐம்பது வாரங்களுக்கான அன்னதான அறிவிப்பையும் அவர் வெளிப்படுத்திவிட்டார்.
அடுத்த 52 வாரங்களுக்கான தொடர் அன்னதான நிகழ்ச்சி ஞாயிறு மட்டுமன்றி சனிக்கிழமையும் சேர்த்து வாரம் இருமுறை நடைபெறும் என்று அவர் கூறியபோது மனம் துள்ளலில் லயிப்பது வியப்பில்லை.
திலகத்தின் ரசிகர்களின் எண்ணமும், ஆசைகளும் ஒரு நதியினைப்போல... அதை வெறும் சங்குக்குள்ளேயெல்லாம் அடங்கி விடாது.. அடக்கவும் முடியாது என்பது உறுதி.
நிற்க.
இன்றைய தொடர் அன்னதானத்தின் பொன்விழா வார உபயதாரராக பங்களிப்புச் செய்தவர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த திரு. ஸ்ரீதர் அவர்கள்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு குழுவின் சார்பாக திரு.K.S.நரசிம்மன் அவர்கள் ஐயனின் நூல்களும் நினைவுக் குறிப்பேடும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு திரு.ML.கான், திரு.R.S.சிவா, திரு.ஏழுமலை, திரு. R. குமார், திரு. பாண்டியன், திரு. பாலாஜி, திரு.S.ராமஜெயம், திரு.E.நந்தகுமார், திரு. காமராஜ், திரு. பூவராகன், திரு.சுகுமார், திரு. MM.சக்திவேல், திரு.காந்தி ( ஒரகடம்) உள்ளிட்ட சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி...
வருகின்ற அக்டோபர் முதல்தேதி நடைபெறவுள்ள ஆயிரம் பேருக்கு அன்னதான நிகழ்ச்சிக்குத் தன் பங்களிப்பாக ஆயிரம் ரூபாயினை இன்றைய நிகழ்ச்சியில் அமைப்பாளர் கணேசனிடம் வழங்கிச் சிறப்பித்தார் மயிலை உலகமாமன்னன் சிவாஜி மன்றத் தலைவரான திரு. காமராஜ் அவர்கள். அவருக்கு எம் நன்றி.
நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு...
அன்புடன்... வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3d&oe=5E0D7B67https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f2&oe=5E03B943
Thanks வான்நிலா விஜயகுமாரன்
-
-
டிஜிட்டலில் மறுவெளியீடு கண்டு சாதனை படைத்து யாராலும் எட்டிப்படிக்க முடியாத
முதலிடத்தில் இருக்கும் கர்ணன் படத்தின் சாதனை பட்டியல்
இதுதான்டா_சாதனை
2012 மார்ச் 16-ல் தொடங்கி 2012 ஆகஸ்ட் 15 ஆம் நாளுக்குள், சரியாக 5 மாதகால இடைவெளியில் 300க்கும் மேலான அரங்குகளில் திரையிடப்பட்டு, சுமார் 500 வாரங்கள் வரை இணைந்து ஓடி, தொடர்ச்சியாக 152 நாட்கள் ஒரே அரங்கவளாகத்தில் வெற்றி நடைபோட்டு, 5 கோடி ரூபாய்வரை வசூலை ஈட்டிய படம் #நடிகர்திலகத்தின்_கர்ணன்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு பழைய திரைப்படம் குறுகிய காலத்துக்குள் இத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டு இத்தனை பெரிய வசூலை ஈட்டியதாக கர்ணனுக்கு முன்பும்சரி பின்பும்சரி எதுவும் இல்லை.
அத்திரைக்காவியம் தமிழகத்தில் மாவட்ட ரீதியாக திரையிடப்பட்ட அரங்குகளும் ஓடிய நாட்களும் முகநூலில் முதன்முதலாக உங்கள் பார்வைக்கு பதிவிட்டிருக்கிறேன்.
#நன்றி #திவ்யாபிலிம்ஸ்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...92&oe=5E118C5E
கர்ணன் மறுவெளியீட்டில் 20 வாரம் கடந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது
வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து
நன்றி வான்நிலா விஜயகுமாரன் (முகநூல்)
-
-
-
-
-
-
-