-
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!! மங்காத தங்கம் எங்கள் தங்கம் புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்..... ...... Thanks...
-
தமிழகத்தின் முதல்வராக நான்குமுறை பதவி வகித்த ஜெயலலிதா ஜெயராம் எனப்படும் செல்வி ஜெ. ஜெயலலிதா, தனக்கு முந்தைய நான்கு முதலமைச்சர்களைப் போலவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சினிமாத் துறையில் இருந்தவர்.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.
எம்ஜிஆருடன் ஜெயலலிதா
அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் 1982ல் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஜெயலலிதா, அடுத்த ஆண்டிலேயே கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக்கப்பட்டார்.
1984ல் உடல்நலம் குன்றுவதற்கு முன்பாக, ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கே இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது
1984ல் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ஜெயலலிதாவின் பிரசாரத்தை ஏற்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அவரைச் சந்திக்கவும் ஜெயலலிதாவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
பிளவுபட்டது அஇஅதிமுக
எம்.ஜி.ஆருடன் பிரசார வாகனத்தில்
ஆனால், சிறிது காலத்திலேயே முதலமைச்சருடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவரை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவதற்கு நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு ராயபுரத்தில் நடந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
முதலமைச்சரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஜெயலலிதாவின் ஆங்கிலப் புலமையை கவனத்தில் கொண்டு, அவரை 1984-ஆம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.
1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும் ஜெயலலிதா தலைமையிலும் மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியின் தலைமையிலுமாக அ.இ.அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. ...1989 ம் ஆண்டு இரு அணிகளும் ஒன்று சேர்ந்து சரித்திரம் படைக்க தொடங்கியது... Thanks...
-
ஷாலின் மசரியா லாரன்ஸ் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் பற்றி ஒவ்வொரு நடைஉடை பாவனை மற்றும் அவர் வெற்றிக்கான காரணம் இளமையாய் இருந்தால்தான் இனிமையாக இருக்க முடியும் பாடல் வரிகளையும் இசையையும் மக்களுக்கு எளிதாக போய் சேரவேண்டும் என்று கவனம் செலுத்துவார் பணம் வாங்கினோம் ஒவர் நடிப்பு நடித்தோம் என்று இல்லாமல் எதார்தத்தைமக்களிடம் கொண்டு சேர்த்த இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.... Thanks...
-
தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன் அல்லவா நிறத்தை தந்தது
சூரியன் அல்லவா தேஜஸ் தந்தது
கருணை அல்லவா மனதை தந்தது
இறைவன் அல்லவா உன்னை தநதது எங்களுக்கு இறைவனாக
வாழ்க எம்ஜிஆர் புகழ் ... Thanks...
-
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.
அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.
நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.
அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..
என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.
அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..
இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.
எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.
இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.
புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.
மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.
முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
— புவனா, மும்பை..... Thanks...
-
-
மக்கள் திலகம் MGR , சரோஜாதேவி , பாரதி மற்றும் பலர் நடித்த " நாடோடி" 14 / 04 / 1966வெளிவந்தது.
1966 ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத் திரைப்படத்தை , பத்மினி பிக்சர்ஸ் சார்பாக பி.ஆர்.பந்துலு அவர்களே தயாரிப்பும் கூட , இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக எம்ஜிஆர் அவர்கள் , சாதி கொடுமைகளை சாடி கண் பார்வையற்றவராக சிறப்புடன் நடித்த இப்படத்தின் நீளம் 4698 மீட்டர் ஆகும். மக்கள் திலகம் அவர்கள் 1966 ம் ஆண்டு மொத்தம் 9 படங்கள் நடித்தார்.
நாடோடி திரைப்படம்
சென்னையில்... பிளாசா , பிராட்வே , உமா திரையரங்குகளில் 57 நாட்கள் ஓடியது.
*
NADODI (transl.Vagabond : Tamil pronunciation : (na:do:di) is a 1966 Indian Tamil - Language film produced and directed by B.R. Panthulu.
The film Stars M.G.Ramachandran and B.Sarojadevi in the Lead roles.
Direct and produced by :
B.R. panthulu
Written by :
R.K.Shanmugam
Story by :
G.Balasubramaniam
Starring :
M.G.Ramachandiran
B. Sarojadevi
Bharathi
Music by :
M.S.Vishvanathan
Cinematography
V.Ramamoorthy
Edited by :
R.Devarajan
Production company :
Padmini pictures release
Date : 14 April 1966
Running time 155 minutes
Country : India
Language : Tamil
Budget : 7 Lakhs
Box office : 17 Lakhs
Ulagamengum ore mozhi
T.M.Soundararajan / P.Suseela 3 : 24
Liric : Kannadasan
Kadavul seida paavam
T.M.Soundararajan 4 : 43
Liric : Kannadasan
Androru naal
T.M.Soundararajan / P.Suseela
Liric : Kannadasan
Naadu adhai Naadu
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali
Paadum Kural
P.Suseela
Liric : Kannadasan
Rasikka Thaane indha
P.Suseela
Liric : Kannadasan
Thirumbhi Vaa Oliye
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali
Kadavul Thandha Paadam
T.M.Soundararajan
Liric : Kannadasan
Kanghalil
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali
Four productions of padmini pictures , with M.G.R , Nadodi was the only film in block and white .
B.R.Panthulu has an uncredited role in the film as a poet.
One theme of the film deals with caste system.
K.R.Ramasamy plays the doctor Nagendran while N.M.Nambiyar plays jambu. Bharathi in her debut plays Meena.
P.S.Venkatachalam after this film plays. Thyagu's father Arumugam Mudhaliar.... Thanks...
-
பாடலாசிரியர் வாலி எழுதிய பாடல்கள் டெலிவிஷன் களிலும் குக்கிராமங்களிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தலைவர் காகவே எழுதிய பல பாடல்கள் சாகாவரம் பெற்று ஒலித்துக்கொண்டு இருப்பதை நாம் காணலாம். கழக கூட்டங்களிலும் இவர் பாடல்கள் முதன்மை பெற்று திகழ்கின்றன வாலி எழுதிய கீழ்காணும் பாடல்கள் மக்கள் திலகத்தின் கீர்த்தியை என்றும் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது எனலாம். தெய்வத்தாய்1964 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படகோட்டி 1964 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ஆசை முகம்1965 எத்தனை பெரிய மனிதனுக்கு ஆயிரத்தில் ஒருவன்1965 எங்க வீட்டுப் பிள்ளை1965 பணம் படைத்தவன் கண் போன போக்கிலே கலங்கரை விளக்கம்1965 காற்று வாங்கப் போனேன் அன்பே வா1966 புதிய வானம் புதிய பூமி சந்திரோதயம்1966 புத்தன் இயேசு காந்தி பிறந்தது பெற்றால் தான் பிள்ளையா1966 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி காவல்காரன்1967 நினைத்தேன் வந்தாய் நூறு வயது ஒளிவிளக்கு1968 இறைவா உன் மாளிகையில் அடிமைப்பெண்1969 உன்னைப் பார்த்து இந்த உலகம் நம் நாடு1969 நல்ல பேரை வாங்க வேண்டும் நாளை நமதே1975 நாளை நமதே முதலிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை நன்றி நெல்லை எஸ் எஸ் மணி அவர்கள்.... Thanks...
-
MGR Filmography Film 49 (1961) Poster
"சபாஷ் மாப்பிள்ளே"
வித்தியாசமான எம்ஜியார் படங்கள் என்று, ஒரு மிகச் சிறு பட்டியலிட்டால், அதில் அடங்கக் கூடிய ஒரு படமாக இந்தப் படமும் அடங்கும் என்பதே இதன் சிறப்பு. எம்ஜியார் நடித்த முழு நீள காமெடி படம் இது ஒன்றே.
எஸ் ராகவனின் தயாரிப்பு இயக்கத்தில் கேவி மஹாதேவனின் இசையுடன் வெளியாகி பாடல்கள் பிரபலமாயின. ஆக்ஷன் ஹீரோவான எம்ஜியாரை ஃபுல் டைம் காமெடி ரோலில் ரசிகர்கள் அதிகமாக விரும்பவில்லை; காமெடி + ஆக்ஷன் என்று உருவாக்கிய ஃபார்முலா எம்ஜியார் காலத்தில் ரசிக்கப்படவில்லை. வீராதிவீரனாக மக்கள் மனதில் நிலைபெற்று விட்டவரை ஒரு சாதாரண ஜேப்படித் திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்து வேலை இழந்து போலிசுக்குப் பயந்து பம்பாய்க்கு திருட்டு ரயிலேறும் ரோலில் எப்படி ஏற்றுக் கொள்வதாம்! ஒருவேளை இது மாபெறும் வெற்றி பெற்றிருந்தால் , எம்ஜியார் தன் இமேஜிலிருந்து வெளிவந்திருக்கலாம்; வாய்ப்பில்லாமல் போனது.
எம்ஜியாரின் இசைக்குரலாக டிஎம்எஸ் நிலை பெற்றுவிட்டபோதிலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனையும் பிபி ஸ்ரீனிவாசனையுமே கேவிஎம் பயன்படுத்தினார் என்பதும் சுவாரசியமான தகவல்.
இதன் நாயகி மாலினியின் பொருளாதார நிலை அறிந்து இலவசமாய் நடித்து கொடுத்தார் என்ற பேச்சும் உண்டு........ Thanks...
-
MGR Filmography Film 48 (1961) Poster
ஏற்கனவே சில சமூகப்படங்களில் நடித்து அவற்றில் ஒன்றிரண்டு .மாபெரும்வெற்றி பெற்றிருந்தாலும் ராஜாராணி கதைகளின்.கதாநாயகனாகவே பெயர் பெற்றிருந்த எம்ஜியாரை சமூக கதைகளின் ட் வெற்றி நாயகனாக நிலைநிறுத்திய படம் என்ற பெயர் பெற்றது ஏஎல்எஸ் தயாரிப்பில் 1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படம்.
இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே எம்ஜியாருக்கு இரண்டாம் நாயகியாக நாடோடி மன்னனில் தோன்றியிருந்தாலும், அவரது மோஸ்ட் லவபிள் ஜோடி என்று சரோஜாதேவியை உறுதி செய்ததும் இப்படம்தான். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு அந்த ஜோடி தொடர்ந்து ஒரு இருபத்தைந்து படங்களில் தோன்றியது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்களும் கூட. எம்ஜியாருக்கு மிகப் பொருத்தமாக அமைந்த ஜோடி என்று மூன்று நடிகைகளைச் சொல்வார்கள்; அதில் முதல் சரோஜாதேவி அமைய இப்படமே முதற்கல் ஆனது.
எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு ஜாலியான திருடனாகத் துவங்கும் எம்ஜியார் தனது பிக்பாக்கெட்டால் ஒரு உயிர் பறிபோனதை அறிந்து வருந்தி திருந்துவதாக கண்ணதாசனின் திரைக்கதை வசனம் அமைய எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் பிரபலமாயின. அவற்றில் திருடாதே பாப்பா திருடாதே எனத்துவங்கும் பட்டுக்கோட்டையின் பாடலும், என்னருகே நீயிருந்தால் என்று துவங்கி எம்ஜியாருக்காக பிபிஎஸ் குரல்கொடுத்த பாடலும் எவர்க்ரீன் அந்தஸ்தை அடைந்தன.
இந்தப் படம் பற்றி ஒரு சுவாரசியமான தகவல். பொதுவாக எம்ஜியார் வசனம் பேசும்போது கைகால்களை அதிகம் ஆட்டிப் பேசுகிறார் என்றொரு விமர்சனம் உண்டு; இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தன் கைகள் இரண்டையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டுதான் அவர் நடித்தாராம்!
தெலுங்கில் டப் செய்யப்பட்ட எம்ஜியார் படங்களில் இதுவும் ஒன்று; ஜெபுடொங்கா என்ற பெயரில் வெளியானது.இத்திரைபடத்திற்க்கு சிறந்த தலைப்பு சொல்பவர்க்கு பரிசு அறிவித்து திருடாதேனு தலைப்பு சொன்னவர் பரிசு பெற்றார்.எம்.ஜி.ஆர் அவர்களின் சமூக படங்களின் டிரெண்ட் செட்டர் என கூறலாம்.1961 ல் அதிக வசூல் ஆன திரைப்படம்..... Thanks...
-
படத்தில் பாடம் நடத்திய ஒரே தலைவர் நம் தலைவர் அவருக்கு நிகர் யாருமில்லை வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்...அதனால் தான் வாத்தியார்... Thanks...
-
பேச்சு வழக்குல இந்த குஸ்தி சிலம்பம் பயிற்றுவிற்பவர்களை வாத்தியார்னுதான் சொல்லுவாங்க ! தலைவர் சிலம்பத்தில் நிபுணர் . ஆகையால் வாத்தியார் என அழைக்கப்பட்டார்... Thanks...
-
மூகராசிபடத்லெயெ தலைவர்க்கு வாத்தியார் என்று பெயர் வந்துவிட்டது. இதுதான் சரி ... Thanks...
-
சிலம்பச் சண்டைக் காட்சிகளில் OAKதேவர், சின்னப்பதேவர் போன்ற திறமைசாலிகளுடன் புரட்சித்தலைவர் சண்டையிடுவது எதிரிக்கு பாடம் நடத்துவது போல் அமைந்திருக்கும்! அதனாலேயே அவர் வாத்தியார் என்று ரசிகப் பெருமக்களால் அழைக்கப்பட்டார் என்பதே உண்மை!... Thanks...
-
நாங்கள் வாத்தியாரே என்றுதான் அழைப்போம் தலைவரை. அப்படி வாத்தியாரே என்று கூறும்பொழுது அந்த வாத்தியாருக்கு அழுத்தம் கொடுத்து சொல்லும் பொழுது அவர் நமக்கே சொந்தம் என்று தோன்றும் நாம் அனைவருமே அவரை நமக்குத்தான் சொந்தம் என்று போட்டி போட்டுக்கொண்டு சொல்லுவோம் வாத்தியாரே என்று கூப்பிடும் பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அதை ஒரு முறை சொல்லிக் கொண்டு இப்பதிவை பதிவு செய்தேன்.... Thanks...
-
நாமக்கல் மாவட்டம குமாரபாளையம், கலைமகள் தெருவில் எம்ஜிஆர் பெயரில் உடற்பயிற்சி நிலையத்தில் நான் பயற்சி செய்து உள்ளேன்!...
எனக்கு தெரிந்து மலைக்கள்ளன் திரைப்படம் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு,
வாத்தியார் POSTING கிடைத்திருக்கும்,
அருமையான வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க!..... Thanks...
-
எப்படியோ பட்டங்கள் படித்து மூளை கல்வி வாத்தியர்களை விட தன் வாழ்க்கையை பாடமாக சினிமா என்ற ஊடகம்மூலம் வாத்தியராகி விட்டார் ஓவ்வொரு படமும் ஒரு பாடம்..... Thanks...
-
சும்மா சொல்ல கூடாது."வாத்தியார்" என்பது எவ்வளவு உயர்ந்த, உன்னத அந்தஸ்து தெரியுமா?! நம் முன்னோர்கள் "மாதா, பிதா, குரு, தெய்வம், என வகைப்படுத்தி கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அம்மா, அப்பா, பிறகு குரு (வாத்தியார், உபாத்தியாயர்) எனும் மிக சிறந்த இடத்தையல்லவா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு வழங்கியுள்ளனர் பொதுமக்கள். இந்தவொரு அசைக்க முடியாத நெறியுடைய பெயர் நிச்சயமாக இறைவன் அருளால் கிடைத்தது என்றால் மிகையாகாது......... Thanks.........
-
நம் நாடு படத்திலேயே " வாங்கையா வாத்தியாரையா " என்ற பாடல் உள்ளது . அதற்கு முன்பாகவே தலைவரை வாத்தியார் என்று அழைத்தோம்..... Thanks...
-
எது எப்படியோ
நமக்கு
எதிலும்
எப்போதும்
வாத்தியார்
புரட்சி தலைவர் ஒருவரே.........நாடோடி மன்னன் காலத்திலிருந்தே வாத்தியார் பட்டபெயர் வந்துவிட்டது....... Thanks...
-
இந்த போட்டோ 1985ல் நான் நடத்திய விழா.யோகேந்திர மக்வானா என்ற மத்திய மந்திரியும் அவரது மனைவியும் மேடையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.கௌரவிப்பது எனது மனைவி.இந்த மந்திரி நமது தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தலைவருக்கு நெருக்கடி அதிகம் கொடுத்தார்.தரக்குறைவாக விமர்சனமும் டெல்லியில் இருந்து செய்து வந்தார்.அவர் தமிழகம் வந்தார்.கன்னியாகுமரிக்கு மனைவியுடன் வந்தார்.தலைவர் தரப்பில் இருந்து எனக்கு உத்தரவு வந்து ,நான் அவர்களை குமரியில் சுற்றிக்காண்பித்து நான் நடத்திய அரசு விழாவில் அவர்களை கௌரவித்தேன்.சிறந்த விருந்தோம்பல்.மனம் குளிர்ந்து தமிழர்களின் விருந்தோம்பலை புகழ்ந்து மேடையில் பேசினார். பின்னர் சென்னை சென்று தலைவர் முதல்வரை சந்தித்தார்.முதல்வர் விருந்தோம்பலின் சக்கரவர்த்தி ஆயிற்றே. மக்வானா மனம் குளிர்ந்தார்.பின்னர் தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர் புகழை டெல்லியில் பாடும் பக்தனானார் என்பது வரலாறு....... Thanks...
-
காரை நிறுத்தச்சொல்லி நடைபாதை கடையை நோக்கி வேகமாக சொன்ற புரட்சித்தலைவர்... திகைத்துப் போன கடைக்கார்..
ஒரு நாள் காலை பொழுது..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார்.
அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார்.
அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார்.
வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது.
அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார்.
பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார்.
அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார்.
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது.
புரட்சித்தலைவர் நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல.
வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
#ஏழைகளின்தலைவர் எம் ஜி ஆர்..... Thanks...
-
உ. எம்ஜிஆர் துணை... அட்சயதிதி. கொடுப்பதும் கேட்பதும் பன்மடங்காக உயரும் நாள்... ..நினைவு தெரிந்த நாள் முதல் ஒரே உருவம்.ஒரே குரல்.ஒரே கொள்கை பரப்புதல். ஒரே புகழ் பாடுதல் என்று எல்லா நிலையிலும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் ஆகிய எங்களை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களை ஆட் கொண்டு இருக்கும் எங்கள் இதய தெய்வமே.. மக்கள் திலகமே.... இன் நன்நாளில் வேண்டுவது.... (1) எதிர்கால சந்ததிகள் நல்ல பண்பாகவும் ஒழுக்கமாகவும் ஈவுகுணமாகவும் வளரவேண்டும் என்றாலும் மக்கள் தங்களை என்றும் வழிபடவேண்டும் என்றாலும் சரித்திர சாதனையாக விளங்கும் 136 படங்களில் ஒரு சிலவற்றை தவிர இருப்பதையாவது மெருகேற்றி பாதுகாக்க வழி ஏற்படவேண்டும். (2) தங்கள் பெயரில் பொதுவான பத்திரிகை தொலைகாட்சி அமையவேண்டும். (3) மெரினா கடற்கரையில் உள்ள நினைவு இல்லத்தில் ஒரு கோபுரம் அமைத்து அதன் உள் வழியாக பிறந்த நாளில் சூரிய ஒளி பட வேண்டும். (4) சென்னை அண்ணா சாலையில் ஒரு ஆலயம் எழுப்பி அதன் அருகிலேயே ஒரு சிறிய திரையரங்கு கட்டி அதில் தங்கள் திரைபடம் மட்டுமே திரையிட வேண்டும்.அதன் அருகிலேயே பக்தர்களின் தலைமை அலுவலகம் செயல்படவேண்டும்... (5). தங்கள் நாமமும் தங்கள் திருவுருவமும் தங்கள் கொள்கையையும் மட்டுமே பயன்படுத்துகிற நல்லாட்சி தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் உழைப்பால் அமையவேண்டும் என்று என் ஆசை. இது மட்டும் அல்லாமல் வேறு என்ன என்ன வேண்டினால் நல்லது என்று இதை படிக்கும் தலைவர் பக்தர்களாகிய உங்கள் ஆசையை தெரிந்தவற்றை (தமிழ் நாட்டிற்கே தலைவர் பெயர் வைக்கவேண்டும் என்று கூறாமல்) நியாயமானதாக கூறவேண்டும். இவன் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர்..ஷிவபெருமாள்..... Thanks...
-
-
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 12/04/2020
"இந்தப் பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்! நானும்
'நாடோடி மன்ன'னில் ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்"
என்றேன்.
“நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும் என்
படத்தில் ஒப்பந்தம் செய்யறேன்'' என்றார் ஏ.எல்.எஸ். அவர்கள்.
"நான் எந்தத் தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து
நடிக்கணும். அதை மறக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து
கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் நினைவு படுத்தினேன்.
முதலில் நான் சொன்னது யோசனை.
ஆனால், அதுவே 'நிபந்தனை' ஆயிற்று.
பிறகு அது ‘கட்டளை'யாகி விட்டது.
"காரியத்தை இந்த வகையில் செய்தால் நல்லதாச்சே" என்று
கூறுவது யோசனை. "அப்படிச் செய்தால்தான் நான் உங்களோடு
இருக்க முடியும்” என்று சொல்வது நிபந்தனை.
"நீங்க இப்படித்தான் செய்ய வேண்டும்; செய்து விடுங்கள்"
என்று அவர்களைக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு நிலையை
உண்டாக்குவது கட்டளை...!
ஆனால், ஏ.எல்.எஸ். அவர்கள் நான் கட்டளையிட்டதாக
நினைத்தார் என்று சொல்ல முடியாது.
“நான் கொடுக்கும் கால்ஷீட்டுகளிலெல்லாம் அந்தப் புதுமுக
நடிகை வந்து நடிக்கணும்” என்று நான் சொன்னேனே, அது
கட்டளையில்லாமல் வேறென்ன?
இப்படிக் கட்டளையிடத் தூண்டியது எது? அறிவுதானே!
அதன் விளைவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள
வேண்டாமா?
ஏனென்றால் நான்தான் தெரிந்து, அனுபவித்து கண்ணீர்
வடித்துத் திருந்தியவனாயிற்றே!
எனது அகம்பாவத்திற்குக் கிடைத்த அடையாளச் சின்னத்தை
அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா?
மறக்கத்தான் கூடுமா?
"அகந்தைக்குக் கிடைத்த அறிவுரை"
"வெற்றியும் தோல்வியும்"
அறிவுதான் ஒரு மனிதனுக்கு
வழிகாட்டியாக அமைகிறது.
அனுபவந்தான் தெளிவைத் தருகிறது.
ஒருவன் தனது முயற்சியில் வெற்றி
அடையும்போது 'அறிவாளி' ஆகிறான்;
தோல்வி அடையும் போது 'முட்டாள்'
ஆகிறான்.
இவை புறத் தோற்றத்திற்கு.
ஒரு கலைஞன் தன்னுடைய செயலிலே,
நடிப்புத் தொழிலிலே தோல்வி அடைந்து
விடுகிறான். அதாவது மற்றவர்கள்
அவனைத் தோல்வி அடையச் செய்து
விட்டார்கள் என்பதே அதன் பொருள்.
ஆனால், அனுபவ அறிவுத் தெளிவுள்ள
கலைஞன் அதைத் தோல்வியாக எடுத்துக்
கொள்ளமாட்டான்.
வேறொரு சமயம் அதே கலைஞன்
பிறரால் வெற்றி மகுடம் சூட்டப்படு
கிறான். ஆனாலும் அப்போது, அவனது
லட்சியம் நிறைவேறவில்லை என்று அவன்
உணருவதால் அவனுடைய உள்ளம்
வருந்துகிறது. “நான் தோல்வி அடைந்து
விட்டேன்'' என்று.
பாவம்! மக்களுக்கு எப்படித் தெரிய முடியும், அந்தக்
கலைஞனுக்கு ஏற்பட்ட தலைகுனிவும், உண்டாக்கப்பட்ட
சோதனையும், அவன் அடைந்த வேதனையும்?
இதே நிலையில்தான் நானிருந்தேன், ‘திருடாதே' என்ற அந்தச்
சமூகப்படம் வெளிவந்து வெற்றி பெற்று, மக்களால் நான்
பாராட்டப்பட்ட அந்த நேரத்தில்!
அதற்கு என்ன காரணம்?
நான் அடைந்த வெற்றியையும் பாராட்டுகளையும்விடப்
பன்மடங்கு பலமுடையதாக, என் அகம்பாவத்திற்குக் கிடைத்த
தண்டனை அல்லவா என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது!
நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று புகழ் மாலை சூட்டப்
பட்ட அந்த நேரத்தில், அந்த வெற்றியின் பின்னணியில் அணு
அணுவாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த
வேதனையில் அல்லவா நான் சோர்ந்து துவண்டு போயிருந்தேன்.
"தலையை முட்டிக்கொண்ட பிறகு..."
திரு.ஏ.எல்.எஸ். சீனிவாசன் அவர்கள் 'திருடாதே' படத்தில்
நான் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டுக்கொண்ட
போது, அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி என் கருத்னை
வெளியிட்டதற்கு, இப்பேர்ப்பட்ட தண்டனையா கிடைக்
வேண்டும்!
நான் அவரிடம் சொன்னது இருக்கட்டும். அவ்வாறு நான்
சொன்னதற்கு அடிப்படையாக, என் உள்ளத்தில் தோன்றிய அந்த
எண்ணம் என்ன?
"அவரது படம் ஒழுங்காக நடைபெற்று முடிய வேண்டும்!"
என்பது ஒன்று.
மேலும், "பரபரப்பான சூழ்நிலையில் என்னைப் போலவே
கதாநாயகி வேடம் ஏற்பவரும் இருந்தால், நான் கொடுக்கும்
நேரத்தில் அவரும் அவர் கொடுக்கும் நேரத்தில் நானும் 'கால்ஷீட்,
கொடுக்க முடியாமல் போக நேர்ந்து, படப்பிடிப்பு தடைப்
படக்கூடுமே” என்ற எண்ணமும் உண்டாகவே புது முகமாகவும்,
என் கால்ஷீட்டை அனுசரித்து நடிக்க வருபவராகவும் உள்ள
ஒருவரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! ஒருவகையில்
அந்த எண்ணம் சரிதான் அல்லவா? ஆயினும் எனது நல்ல ஆசை
அதை வெளிப்படுத்தும்போது நிபந்தனையாகவும் கட்டளையாகவும்
அல்லவா அது மாறிவிட்டது!
ஆனால், அப்போது எனக்கு அது ஒரு நிபந்தனை என்றோ ,
கட்டளை என்றோ புலப்படவில்லை! தலையை முட்டிக்கொண்ட
பிறகு குனிந்து போவது போல் அல்லவா என் நிலைமை
ஆகிவிட்டது! முன்னதாகவே புலப்பட்டிருந்தால் அப்படிச்
சொல்லியிருக்கவே மாட்டேனே! ஆயினும் ஒன்றைத் தெரியாமல்
செய்தாலும் தெரிந்து செய்தாலும், செய்து விட்ட குற்றத்திற்குத்
தண்டனையை ஏற்கத்தானே வேண்டும்?
நண்பர்களா? நயவஞ்சகர்களா?
"திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்பிய
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதற்கும்
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.......... Thanks.........
-
தருமம் செய்யும் குணம் உள்ளவர்கள்,
விளம்பரம் தேடுவதில்லை.
விளம்பரம் தேடுவோர்கள்...
யார் ? எங்கே ?
இலவசப் பொருள் தருகிறார்களோ...?
அங்கே இருப்பார்கள்
படம்பிடித்து
தனது பெயரை விளம்பர படுத்திக்கொள்ள ,
வலது கை கொடுப்பது
இடது கைக்கு தெரியாமல் இருப்பதே ,
தர்மம்...உயர்ந்த தர்மம்
சிறந்த தர்மம்.
பசித்த வயிறு வாயார வாழ்த்தினாலே ,
வாழ்வாங்கு வாழலாம்.
அதைத் தான் தருமம் தலைக் காக்கும்என்று சொன்னார்....
தரும மகாபிரபு
தர்மதேவன்
தங்கத்தலைவன்
எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள்.
அதுதான் பண்புள்ள தர்மம்........ Thanks...
-
முதல் முறையாக.....
நமது ,
" உழைக்கும் குரல் " தளம்
மற்றும் ,
ஆண்டவன் MGR குடும்பத் தளத்தில் ,
"இலங்கை நாளிதழ்கள்"
" வார மலர்கள்"
பார்த்து... படித்து...பரவசம்
அடையுங்கள்.
இந்த முயற்ச்சி ,
முழுக்க...முழுக்க நமது...
புரட்சித்தரைவரின் மீது உண்மை விசுவாசமுள்ள பக்தர்களாகிய உங்களுக்காக....!
நன்றியுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
&
ஆர்.ஜி.சுதர்சன்........ Thanks.........
-
-
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 11/04/2020
உடனே நான்.
"அந்தப் புதுமுகம் நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து
நடிக்கத் தயாராக இருக்கணும்! எந்த நேரத்தில் நான் கால்ஷீட்,
கொடுத்தாலும் வந்து நடிக்கணும். சேர்ந்தாற்போல் நான்
பத்துநாள் கால்ஷீட் தந்தாலும் நடிக்க வரணும். இந்த நிபந்தனை
யோட அந்தப் புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யணும்" என்றேன்.
அதற்கு ஏ.எஸ்.எஸ். அவர்களும் சம்மதித்தார்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள் என்னிடம்,
''ஒண்ணு செய்யலாமே! பத்மினி பிக்சர்ஸ் 'தங்கமலை
ரகசியம்' படத்துக்காக ஒரு 'குரூப்டான்ஸ்' காட்சியை நான்
இயக்கினேன். அதுலே ஆடின ஒரு பெண் நல்லாவே இருந்தது"
என்று சிபாரிசு செய்தார்.
"யார்?" என்று விவரம் கேட்டேன்?
"அந்தப் பொண்ணுக்கு சரோஜாதேவின்னு பேராம். இந்தப்
பக்கம் பார்த்தா வைஜயந்திமாலா மாதிரி இருக்கு. அந்தப்பக்கம்
பார்த்தா பத்மினி மாதிரி இருக்கு. தாய்மொழி கன்னடம், தமிழ்
பாஷை அவ்வளவாகத்தெரியாது. ஆனால் நாளடைவிலே
பேசிப்பேசிப் பழக்கிடலாம்! ஒரு நல்ல கதாநாயகியாக அந்தப்
பெண்ணை ஆக்கிட முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
என்றார்.
இதற்கு முன்னால் சரோஜாதேவி அவர்களைப் பார்த்த நினைவு
எனக்கு வந்தது. நான் 'நாடோடி மன்னன்' படப்பிடிப்புத்
துவக்கியிருந்த நேரம்.
புது முகத்தின் அறிமுகம்!
இப்போது 'விஜயா ஸ்டூடியோ' என்று அழைக்கப்படும்
அப்போதைய 'ரேவதி' ஸ்டூடியோவில் இயக்குநர் திரு. கே. சுப்ப
மணியம் அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்
'கச்சதேவயானை' என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பு நடந்து
கொண்டிருந்தது.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள் சொன்ன இதே பெ
(சரோஜா தேவி) அந்தப் படப்பிடிப்பில் தேவயானையாக
நடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். ஒரு குடத்தை இடுப்பில்
எடுத்துச் சுமந்து கொண்டு, அவர் நடந்த காட்சி அப்போது படம்
பிடிக்கப்பட்டது. படத்தில் நடிப்பதற்குத் தேவையான தோற்றம்,
உடம்பு இருப்பதை அறிந்தேன்.
இரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் எனக்கு சரோஜா தேவியை
அறிமுகம் செய்து வைத்தார்.
நான் திருமதி சரோஜா தேவியிடம் "டான்ஸ் ஆடத்
தெரியுமா?" என்று கேட்டேன்.
"ஓ! ஆடுவேனே!" என்றார்.
"தமிழ் பேசத் தெரியுமா?" என்று கேட்டேன்.
"தெரியும்" என்றார்.
அப்போது சரியாகத் தமிழ் பேச வராது என்றாலும், ஆர்வத்தில்
அப்படிச் சொன்னார்.
இந்த நினைவு வரவே, நான் திரு.ப. நீலகண்டன் அவர்களிடம்
''நீங்க சொன்ன அந்த சரோஜாதேவி, "கச்சதேவயானை ”யிலே
நடிக்கிற பெண்தானே?" என்று கேட்டேன்.
"ஆமாம்" என்றார்.
"டெஸ்ட் எடுத்துப் பாருங்க” என்றேன்.
"செய்யறேன்! நான் பொறுப்பேத்துச் செய்யறேன்'' என்றார்.
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள், "தமிழ் பேசத் தெரியாத
பெண்ணைப் போட்டால், அப்புறம் சங்கடமாக இருக்குமே" -
என்றார்.
"இல்லைங்க. முதலில் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்.
அப்புறம் முடிவு செய்யலாம்" என்றேன்.
தொடர்ந்து இருவரும் கலந்து பேசியதன் விளைவாக அவரை
நான் சம்மதிக்க வைத்தேன்.
மிரட்சியும், கவர்ச்சியும்
இன்றைக்கு இயக்குநராக உள்ள கதை. உரையாடல்
ஆசிரியரான திரு.மா. லட்சுமணனுடன் திருமதி சரோஜா
பர்கள் வந்த
தேவியை நடிக்க வைத்து (டெஸ்டுக்காக) ஒரு காட்சியைப்
எடுத்தார்கள்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் அவர்கள் வ
போது, "டெஸ்ட் எடுத்ததிலே எப்படியிருக்கு?'' என்
கேட்டேன்.
"திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் "டயலாக்கு சரியா இல்லையே
நாம கன்னடப் படம் எடுக்கறதானா போடலாம்'' என்றும்
எப்போதும் போல மற்றவரைக் கேலி செய்கிறோமே என்பது
புரியாமல் கூறினார்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள்
"பரவாயில்லை! பேச்சு கொச்சையாக இருந்தாலும்
இயற்கையா இருக்கும். பழகப்பழகச் சரியாகிவிடும்'' என்றார்.
பிறகு நான் படத்தைப் போட்டுப் பார்த்தேன்.
தமிழ்ப் பேச்சு கொச்சையாகத்தான் இருந்தது.
தோற்றத்தில் ஒரு மிரட்சி இருந்தது என்றாலும் ஒரு கவர்ச்சியும்
இருக்கவே செய்தது.
நான் திரு.ஏ.எல்.எஸ். அவர்களிடம்,
( தொடரும்)
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். .... Thanks...
-
நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.* வெகு விரைவாக குறுகிய*காலத்தில் 4000 பதிவுகள்*என்கிற*சிகரத்தை*தொட்டதற்கும், தனியொரு*பதிவாளராக*தற்போது* இந்த பாகம் வேகமெடுத்து பயணிக்க காரணகர்த்தாவாக இருப்பதற்கும், பல்வேறு சுவையான*தகவல்களை*பகிர்ந்து வருவதற்கும் எனது இதயங்கனிந்த , பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.*இதன் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில்*99000 பதிவுகள்*என்கிற*நிலையை*எட்டுவதற்கு தங்கள் பங்கும் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து*மட்டற்ற மகிழ்ச்சி.* விரைவில் தங்களின் பதிவுகள்*5000என்கிற சிகரத்தை அடையவும், ஒட்டு மொத்தமாக 1,00,000 பதிவுகள்*என்ற நிலையை*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.* திரி*அடைவதற்கும் அட்வான்ஸ்*வாழ்த்துக்கள்.*
-
அருமை சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் எம்மை ஊக்கப்படுத்தும் பொருட்டு கொஞ்சம் அதிகமாக பாராட்டு தெரிவிப்பதாக கருதுகிறேன். நீங்கள் படைத்த 27000+ பதிவுகள், மற்றும் சகோதரர் திரு வினோத் அவர்கள் கண்டிருக்கும் பதிவுகள் முன்னால் இது நிரம்ப சாதாரணம். நம் கலைவேந்தன் மக்கள் திலகம் சாதனை, சரித்திரங்களை இயன்ற வரையில் பதிவு செய்ய வேண்டுமென்பதே நம் முக்கிய லட்சியம். சிறு தொண்டு...அதை நோக்கி நாம் பயணிக்கும்பொழுது உங்கள் எல்லோரின் ஆசியும், நமது மற்ற திரி உறுப்பினர்கள் தக்க ஒத்துழைப்பு அளித்து இங்கு பதிவுகள் இட்டால் அதுவே நம் எதிர்பார்ப்பாகும், நன்றி...வணக்கம்...
-
"தர்மம் ஒருவருடைய இல்லத்திலிருந்து தான் புறப்படுகிறது"
எம்..ஜி.ஆர். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘நாடோடி மன்னன்’எடுத்துக் கொண்டிருந்த 1957 காலகட்டம் அது. அந்த சமயத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து செல்வராஜ் என்ற ஓர் இளைஞர் – எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் – அவரை நேரில் பார்த்து பேசி மகிழவேண்டும் என்று ஆவல் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். எம்.ஜி.ஆரின் ‘தாய் வீடு’ இல்லம் அமைந்திருந்த ‘லாயிட்ஸ்’ ரோட்டில் (தற்போதைய அவ்வை சண்முகம் சாலை) அவர் வீட்டின் எதிரே நடைபாதையில், தினமும் நின்று கொண்டு எம்.ஜி.ஆர். முகத்தைக் காண ‘தவம்’ இருந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டைவிட்டுப் புறப்படும்போதும், திரும்பி வீட்டிற்கு வரும்போதும் கார் கதவின் கண்ணாடி முழுவதுமாக ஏற்றப்பட்டிக்கும். இதனால் அவர் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாமல் செல்வராஜ் தவித்தார். உள்ளே இருந்தபடி தினமும் அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர்., ஒருநாள் காரை அவர் அருகில் நிறுத்தச் செய்து கதவின் கண்ணாடியை இறக்கி அவரைப் பார்த்துக் கேட்டார்:-
எம்.ஜி.ஆர்:- நீ யாரு? தினமும் ஏன் இங்கேயே நின்னுகிட்டிருக்கே? உனக்கு என்ன வேணும்?
செல்வராஜ்:- (கும்பிட்டு) என் தெய்வமே! நான் உங்கள் பக்தன். உங்களைத் தரிசிக்கிறதுக்காக குமாரபாளையத்தில் இருந்து வந்து தினமும் இங்கே தவம் இருக்கிறேன்.
இன்னிக்குத்தான் உங்களைப் பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆர்:- சரி. கார்ல உட்காரு என்று கூறி முன் கதவை திறந்து விட்டார். அவ்வளவுதான். பக்தர் செல்வராஜ் உள்ளே பாய்ந்து உட்கார்ந்து விட்டார்.
எம்.ஜி.ஆரின் கார் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, மேக்-அப் அறைகளுக்கு அருகில் நின்றது. எம்.ஜி.ஆரோடு சேர்ந்து செல்வராஜூம் காரிலிருந்து இறங்கி வேரறுந்த மரம் போல ‘தடால்’ என்று நெடுஞ்சாண் கிடையாக, அவர் காலடியில் குப்புற விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. வேறு வழியின்றி எம்.ஜி.ஆர். குனிந்து அவரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். கள்ளங்கபடம் இல்லாத அந்த அப்பாவியின் கண்களிலிருந்து கங்கை கரை புரண்டது! அதைக்கண்ட எம்.ஜி.ஆர். இதயம் இளகிப்போய் தன் அன்புக்கரங்களால் அவர் கண்ணீரைத் துடைத்து விட்டு…
எம்.ஜி.ஆர்:- உன் பேரென்ன?
செல்வராஜ்:- செல்வராஜ்.
எம்.ஜி.ஆர். செல்வராஜின் முகத்தை ஒரு கணம் உற்று நோக்கி அதில் ஒருவித வெகுளித்தனமும், கோமாளித்தனமும் நிறைந்திருப்பதைக் கவனித்து:-
எம்.ஜி.ஆர்:- உனக்கு நடிக்க வருமா?
செல்வராஜ்:- நல்லா நடிப்பேண்ணே. ஊர்ல பள்ளிக்கூட நாடகத்துல நிறைய நடிச்சிருக்கேன்.
எம்.ஜி.ஆர்:- என்ன வேஷம் போடுவே?
செல்வராஜ்:- காமெடி வேஷம் போட்டு கற்பனையா பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பேன்.
எம்.ஜி.ஆர்:- (புன்னகையுடன்) அப்படியா? சரி. நீ இங்கேயே இரு. தினமும் காலையில் வந்து ஷ¨ட்டிங்ல கலந்துக்க. உன்னை கம்பனியில் கவனிச்சுக்குவாங்க. செல்வராஜ்:- ரொம்ப நன்றிங்கண்ணே. எம்.ஜி.ஆர்:- (உதவித் தயாரிப்பு நிர்வாகியைக் கூப்பிட்டு) இந்தப் பையனுக்கு மேக்-அப் போட்டு நம்ம கம்பெனி நடிகர் குழுவோட சேத்துவச்சிக்க. தினமும் அவனுக்குச் சாப்பாடு மத்த சம்பள விஷயத்தையும் கவனிச்சிக்க. பாவம்! வெளியூர்லேருந்து வந்திருக்கான்.
நிர்வாகி:- சரிங்கண்ணே. நான் பார்த்துக்குறேன்.
எங்கிருந்தோ வந்த இளைஞர் செல்வராஜ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நடிகர் குழுவில் இடம் பெற்று நாளடைவில் அவருடைய இதயத்திலும் இடம் பெறலானார். ஒருநாள் எம்.ஜி.ஆர். அவரை அழைத்து:-
எம்.ஜி.ஆர்:- நீ தமிழ் நல்லா பிழை இல்லாம எழுதுவியா?
செல்வராஜ்:- எழுதுவேண்ணே.
எம்.ஜி.ஆர்:- எங்கே? ஏதாவது எழுதிக்காட்டு என்று உதவி இயக்குநரிடமிருந்து பேப்பர் பேடை வாங்கிக்கொடுக்க, செல்வராஜ் அதில்,
‘என் தெய்வம் எம்.ஜி.ஆர். வாழ்க’
‘வள்ளல் எம்.ஜி.ஆர். வாழ்க’
‘என்னை ஆதரித்து அன்பு காட்டிய அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!’என்று எழுதிக்காட்ட அதைப்பார்த்த எம்.ஜி.ஆர். வாய்விட்டுச் சிரித்து:-
எம்.ஜி.ஆர்:- ஏம்பா? ஏதாவது எழுதுன்னு சொன்னா எனக்கு வாழ்த்து பாடி இருக்கியே. பரவாயில்லை. குண்டு குண்டா கையெழுத்து அழகா இருக்கு. (உதவி இயக்குநரிடம்) இவனை உன்னோட வச்சிக்கிட்டு, வசனங்களை காப்பி எடுக்கிறது, கிளாப் அடிக்கிறது, கன்டினியூட்டி எழுதுறது, எல்லா வேலையும் கத்துக்கொடு. அதோடகூட சின்னச்சின்ன நகைச்சுவை வேஷங்கள்ளேயும் மேக்கப் போட்டு நடிக்க வைச்சிப்பார்த்துக்க.
உதவி டைரக்டர்:- நல்லதுங்கண்ணே!
அவ்வளவுதான். அடுத்த நாளிலிருந்து குமாரபாளையம் செல்வராஜ் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ‘நாடோடி மன்னன்’படத்தில் டைரக்டர் எம்.ஜி.ஆரின் குழுவில் இடம் பெற்று மாதச் சம்பளத்தில் ‘அஸிஸ்டெண்ட் டைரக்டர்’ ஆகிவிட்டார். செல்வராஜின் இடுப்பில் கட்டியிருந்த கைத்தறி நாலுமுழ வேஷ்டிக்குப் பதிலாக இப்பொழுது முழுக்கால் ‘பேண்ட்’ சட்டை ஏறிவிட்டது. முகமும் மாறிவிட்டது.
முற்காலத்தில் தமிழில் ‘அடைப்பக்காரன்’ என்ற ஒரு சொல் உண்டு. பெரும் செல்வந்தர்கள், மிட்டா மிராசுதாரர்கள், ஜமீன்தார்களின் பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி,
கைதுடைக்கும் துணி முதலியவற்றை வைத்துக்கொண்டு நிற்கும் சிப்பந்திக்கு ‘அடைப்பக்காரன்’ என்று பெயர். அதைப்போல இந்த செல்வராஜ் உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட அந்தஸ்து நிலையில் எம்.ஜி.ஆரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அன்றாடம் ஸ்டூடியோவில், படப்பிடிப்பில் அவருக்கு உண்மையான உள்ளத்துடன் ஊழியம் புரிந்தார். எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் தனக்காக வீட்டிலிருந்து கொண்டு வரும் பணம், அவருடைய மூக்குக்கண்ணாடி மற்றும் முக்கிய பொருள்களை செல்வராஜிடம்தான் கொடுத்து வைத்திருப்பார்.
வாழ்க்கையில், உண்மையான அன்பு உள்ள ஒருவரிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கும். அதைப்போல உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவரிடத்தில் அதிக அன்பும் இருக்கும். அன்பும், நம்பிக்கையும் உடன் பிறந்தவை! இது அனுபவபூர்வமான உண்மை!
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் பாசத்திற்குப் பாத்திரமான உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர்தான் என் அன்பிற்கினிய அருமைத்தம்பி ‘இடிச்சபுளி’ செல்வராஜ்.
ஒரு படத்தில் ‘இடிச்சபுளி’ என்று பெயர் கொண்ட நகைச்சுவை வேடத்தில் நடித்ததை வைத்து அவருக்கு ‘இடிச்சபுளி’ என்ற ஒட்டுப்பெயர் உண்டானது.
பின்நாட்களில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த தம்பி ‘பாண்டு’, செல்வராஜின் சகோதரர் ஆவார். அன்றைய நாட்களில் எம்.ஜி.ஆருக்கு நான் நிறைய படங்கள் எழுதி அவற்றின் படப்பிடிப்பு சமயத்தில், அவரைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வராஜ் வருவார். அப்பொழுது அவரை எம்.ஜி.ஆர். எனக்கு அறிமுகம் செய்வித்து, நான் எழுதும் படங்களில் வேஷம் கொடுக்கச் சொல்வார். அதிலிருந்துதான் செல்வராஜூக்கு என்னுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. எனது தமிழாக்கப்படங்களில் குரல் கொடுக்கும் குழுவிலும் இடம் பெற்று, என்னிடம் அதிக அன்பு செலுத்தினார்.
எனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மறக்காமல் நினைவு வைத்திருந்து வாழ்த்துக்கடிதம் அனுப்புவதுடன், தொலைபேசி வாயிலாகவும் என்னை அழைத்து வாழ்த்து தெரிவிப்பார். நேரிலும் வந்து சந்திப்பார். அத்தகைய அன்பும், பண்பும் உள்ளவர் அவர்.
எம்.ஜி.ஆர். 1972-ல் தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோதும், 1977-ல் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆனபோதும் செல்வராஜ் அவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் மூலம் தியாகராயநகர், சத்தியமூர்த்தி நகரில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராஜூக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டு, தன் மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தார்.
எம்.ஜி.ஆரின் இறுதிக்கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு 1987-ல் சரியாக – தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்தார். அப்பொழுது, தன்னைப்பார்க்க வருவோருக்கெல்லாம் – அவர்கள் கேட்டும், கேட்காமலும், கல்யாணம் முதலிய நல்ல காரியங்களுக்குப் பொருளுதவி செய்து வந்தார். வாழ்க்கையில் வசதி குறைவானவர்களுடன், வசதி நிறைந்திருந்த நடிகர்கள் மற்றும் திரைப்படக்கலைஞர்கள் பலரும் கூட பணமாகவும், மற்றும் தங்க ஆபரணங்களாகவும் பெற்றுப் பயன் அடைந்தனர். 1987 டிசம்பர் மாதம் 23-வாழ்நாள்ல நான் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கேன். ஆனா உன் ஒருத்தனுக்கு மட்டும் நான் கொடுக்கிறதா சொல்லி கொடுக்காம கடன்பட்டுட்டேன். ஆனா, அது என் தவறு இல்லை. நீதான் வந்து வாங்கிக்காம இருந்திட்டே. பரவாயில்லை. அடுத்த ஜென்மத்துல உனக்கு நான் பட்ட கடனை அடைச்சிடுவேன். கவலைப்படாதே… “
எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சர் ஆன பிறகும் சபாபதி அவரை விட்டுப் பிரியாமல், முன்பு போல அன்றாட வழக்கப்படி அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். சென்னையை விட்டு எம்.ஜி.ஆர். வெளியூர் முகாம் செல்லும் போதெல்லாம், அவர் கூடவே சென்று அம்மாவின் அறிவுரைப்படி அவரைத் தன் கண் போலக் காத்துக் கவனித்துக்கொள்வார்.
ஒருநாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியூர் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னாலும், பின்னாலும் உதவியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் மிஞ்சிய ஆரம்பகால எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான அருமைத்தம்பி சபாபதி ஒரு ‘ஜீப்’ வண்டியில் வந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட அந்த ஜீப் விதிவசமாக கோயம்புத்தூரில் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே சபாபதி அகால மரணம் அடைய நேரிட்டு விட்டது. இதுநாள் வரையில், இமைகள் கண்களைக் காப்பதுபோல எந்த பிள்ளை தன்னைக் கவனித்துக் காத்து வந்ததோ – அந்த சபாபதி இப்போது இறந்து கண் மூடிக்கிடந்ததைக்கண்டு எம்.ஜி.ஆர். கதறி அழுதார். அந்த அழுகையை அதற்கு முன்பு தன் வாழ்நாளில் அவர் அழுததே இல்லை.
எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை
இந்தக் ‘கொடுக்கும் குணம்’, ‘வள்ளல் தன்மை’ பெயரும், புகழும், வசதிகளும் பெற்று வாழ்ந்த பிற்காலத்தில் மட்டும் வந்தது அல்ல. அதற்கு முற்காலத்திலும் வசதிகள் அதிகம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த ஆரம்ப நாட்களிலும், எம்.ஜி.ஆரிடம் அதே வள்ளல் தன்மை இருந்ததை பல பழைய மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 10 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக மதிக்கப்பட்ட அந்தக்காலத்தில், அவர் சில 10 ரூபாய் நோட்டுகளை மடித்து தனது முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டி அதற்குள் வைத்திருப்பார். நலிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர்கள் கேட்காமலேயே பத்து, இருபது என்று கைக்கு வந்ததை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார்.
* தர்மத்தின் பொருட்டு தன் தலையைக்கூட கொடுக்கத் தயாரான குமணன்.
* வேடனிடமிருந்து அவன் விரட்டி வந்த கள்ளங்கபடம் இல்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காக அதை தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்குச் சமமாகத் தனது சதையை அறுத்து நிறுத்துக்கொடுத்த சோழப் பெருமன்னன் ‘சிபிச்சக்ரவர்த்தி!’
* படர்வதற்குத் தக்கக் கொம்பு எதுவும் இன்றி தரையில் சுருண்டு கிடந்த முல்லைக் கொடியை எடுத்து தனது தேரில் படரவிட்டு, அதன் அழகைக்கண்டு மகிழ்ந்து கால்நடையாக நடந்து அரண்மனைக்குத் திரும்பிய கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ‘பாரிவேந்தன்!’
* தன் ஆரோக்கியத்திற்கும், ஆயுள் விருத்திக்காகவும் வேடுவர்கள் கொண்டு வந்து கொடுத்த அரிய கருநெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வை பிராட்டிக்கு அளித்து அகம் மகிழ்ந்த வள்ளல் அதியமான்! * மழையிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலைக்கண்டு மனம் இரங்கி, உடனே தனது தங்க இழை வைத்து நெய்யப்பட்ட அங்க வஸ்திரத்தை எடுத்து அந்தக் கோல மயிலின் மீது போர்த்தி அதன் குளிரைத் தவிர்த்த கோமான் ‘பேகன்!’ ‘கவிச்சக்ரவர்த்தி’ கம்பனை ஆதரித்து, அவன் தமிழை வளர்த்த சடையப்ப வள்ளல்! * ஊர்தோறும் அன்னச்சத்திரங்கள் நிறுவிய கருணை வள்ளல் காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார்!
* இறந்து அடக்கமான பிறகும்கூட வெளியே தனது விரலை நீட்டி அதில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொள்ளச் செய்த செத்தும் கொடை கொடுத்த ‘சீதக்காதி’ போன்ற வள்ளல் பெருமான்களின் இனத்தைச் சார்ந்து, அவர்களின் குணத்தைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவராலும் அறியப்பட்ட ஓர் உண்மையே! அதனால்தான் ‘திருமுருக கிருபானந்த வாரியார்’ அவருக்கு ‘பொன்மனச்செம்மல்’ என்று புகழாரம் சூட்டினார்.
‘சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அதற்கு, ‘தர்மம் ஒருவருடைய இல்லத்தில் இருந்துதான் புறப்படுகிறது’ என்று பொருள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் – வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன்.
"படித்ததில் பிடித்தது"
MG.Nagarajan 19 April 2020 10:32 AM
Thanks for: Kalai vithagar Aaroordas
சினிமாவின் மறுபக்கம்........ Thanks.........
-
MGR-ன் மெய்க்காப்பாளர் கே பி ராமகிருஷ்ணன் பற்றிய ஒரு முன்னோட்டம் - MGR's bodyguard K P Ramakrishnan....https://www.youtube.com/watch?v=t__BCtdMb7k....... Thanks...
-
-
-
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்"... Thanks...
-
#என் #பிள்ளைகள்...!!!
முதல்வர் பதவிக்கு வந்தபின்,
"தன் இல்லம்... ராமாவரம் தோட்டம் தான்... அது போல தனது அலுவலகம் ...
எம்ஜிஆர் புரொடக்ஷன்ஸ் இருந்த அலுவலகம் தான் " என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்...
"தோட்டத்து மேசை நாற்காலிகளெல்லாம் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருந்தன... அவைகளை மாற்றலாமா ? என உதவியாளர் கேட்டதற்கு ... '#இவை #என் #பிள்ளைகள் #போல...#அதனால #இதுவேபோதும்'
என்று சொல்லிவிட்டார்...
அதே போல தனது வீட்டு முன் ஹாலில் உள்ள நாற்காலி மேசையை குண்டடி பட்டபோதே மாற்றப் போனார்கள்...புரட்சித்தலைவர் தடுத்து "#வேணாம் #என்ரத்தம்பட்ட #இந்த #மேசைநாற்காலி #இருக்கட்டும்...#பணம் #நல்லவர்களையும் #எப்படி #மாற்றிவிடுகிறது என்பதற்கு இதெல்லாம் தான் எனக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்" என்றார்...
இப்படி ...! உயிரற்ற
பொருட்களிடமும் அன்பு காட்டியவர் பொன்மனச்செம்மல்........... Thanks.........
-
1978 மார்ச் மாதம் ஒருநாள் பட தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ் அவருடன் ஒளிப்பதிவாளர் மாருதிராவ் இருவரும் கவி வாலி அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.
ஒரு முக்கிய புள்ளி படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்துக்கு கதை வசனம் பாடல்கள் நீங்கள் எழுத வேண்டும் இதை அவரே எங்களிடம் சொல்லி உங்களை சந்திக்க சொன்னார் என்று சொல்ல.
யார் அந்த வி.ஐ.பி. என்று வாலி அவர்கள் கேட்க அவர்தான் தமிழக முதல்வர் எம்ஜியார் என்று சொல்ல தூக்கிவாரி போட்டது வாலிக்கு.
என்ன எம்ஜியார் மீண்டும் படத்தில் நடிப்பதா என்று சந்தேகம் கொண்டு மறுநாள் காலை முதல்வரை பார்க்க அவரும் ஆமாம் என்று சொல்ல...
அது எப்படி சாத்தியம் என்று வாலி யோசிக்க படம் பெயர் உன்னை விடமாட்டேன் என்று முடிவாக....ஒரு சில நாட்களில் மாநில முதல்வர் படங்களில் நடிப்பது தவறல்ல என்று பிரதமர் விளக்கம் பத்திரிகையில் வர படம் சூடு பிடித்தது.
கதை 10 நாட்களில் தயார் ஆக தலைவருடன் சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் போய் கொண்டே வாலி கதை சொல்ல தலைவர் அருமை என்று ஒப்புதல் தர.
ஏப்ரல் 14 அன்று பட துவக்க விழாவில் முதலில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த கவர்னர் பட்வாரி அவர்கள் பின்னர் வராமல் பட பூஜை பிரசாத் அரங்கில் கோலாகலமாக நடந்தது.
இயக்குனர் ஆக கே.சங்கர், தயாரிப்பு ஜி.கே.தர்மராஜ்....இசை இளையராஜா என்று முடிவாகி விழா முடிந்து வாலி எழுதிய பாடல் டி.எம்.எஸ்.அவர்கள் பாட தலைவர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது..
வழக்கம் போல பாடலில் ஏதோ ஒன்று குறைவதாக தலைவர் சொல்ல மீண்டும் டி.எம்.எஸ்..பாடி அதுவும் சரிவராமல் பின்பு ஒருநாள் பாடகர் மாற்றி மலேசியா வாசுதேவன் பாடி அதை இளையராஜா அவர்கள் தலைவரிடம் போட்டு காட்ட....
அதுவும் திருப்தி அளிக்காமல் கடைசியில் தலைவர் பேசாமல் நீங்களே எனக்கு குரல் கொடுத்து பாடுங்கள் என்று சொல்ல உடனே ராஜா அது சரிவருமா ஐயா என்று கேட்க நீங்கள் எப்படிவேண்டுமானாலும் பாடுங்கள் அதற்கு ஏற்ப நடிப்பது என் பொறுப்பு என்று தலைவர் சொல்ல.
அதன் படி அந்த பாடல் பாட பட்டு ஒலிப்பதிவு செய்ய பட்டது...ஆனால் அன்று தமிழகம் எங்கும் பரபரப்பாக பேச பட்ட அந்த படம் ஒரு சில காரணங்களால் நின்று போனது..
அல்லது இளையராஜா அவர்கள் இசை அமைப்பில் தலைவர் தலைவர் நடித்த படம் வெளிவந்து இருக்கும்
படத்தில் பட துவக்க விழாவில் தலைவர் இளையராஜா மீசை முறுக்கி வைத்து இருப்பவர் தயாரிப்பாளர் தர்மராஜ் நடுவில் இருப்பவர் 1977 பொது தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆக சென்னை மயிலை தொகுதியில் போட்டி இட்ட திரு சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்..
ஒரு தலைவர் படம் போச்சு.... நன்றி..
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி... உங்களில் ஒருவன் நெல்லை மணி ..நன்றி..தொடரும்........ Thanks...
-
#சிவாஜி #ரசிகனை #எம்ஜிஆர் #ரசிகனாக #மாற்றிய #என் #வரலாறு
பசுபதி பரசுராம் சார் அவர்களின் பதிவைப் பார்த்தவுடன் என் கல்லூரி கால நினைவு ஒன்று என் முன்னால் நிழலாடுகிறது.என்னுடன் கோவையில் கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒரே டெஸ்க், ஒரே ரூம் அதுமட்டுமின்றி ஊரும் ஒன்றே, அப்படிப்பட்ட நண்பனைப் பற்றிய நிகழ்வு.அப்போது ஹாஸ்டலில் இரு குழுக்கள்.ஆம்.நீங்கள் நினைத்ததுதான்.ஒன்று எம்.ஜி.ஆர் குரூப் மற்றொன்று சிவாஜி குரூப்.நான் எம்.ஜி.ஆர் குழு.நாங்கள் அனைவரும் எப்போதும் குழுவாகவே தலைவர் ரிலீஸ் படங்களுக்கு செல்வோம்.
மேலே சொன்ன என் ஊர் நண்பன் பக்கா சிவாஜி ரசிகன்.எனக்கு தெரிந்து அதுவரை எம்.ஜிஆர் படங்களே பார்த்தது இல்லைஅவனுக்கும் எனக்கும் அடிக்கடி எம்.ஜிிஆர்-சிவாஜி சண்டை வரும்.இங்கே ஒன்றை நேர்மையாக குறிப்பிட வேண்டும்.நான் தலைவர் ரசிகனாக இருந்தாலும் சிவாஜி படங்களையும் பார்ப்பவன். நான் என் நண்பனோடு சிவாஜி படங்களுக்கு செல்வேன்.ஆனால் என் நண்பன் எங்கள் குழுவோடு எம்.ஜி.ஆர் படங்களுக்கு வரமாட்டான்.ஆனால் நான் அவ்வப்போது எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களையும் தெரிவிப்பேன்.கல்லூரியில் முதல் வருடம் இவ்வாறே கழிந்தது.இரண்டாம் வருடம் ஆரம்பம். எங்கள் கல்லூரி இருந்த ஊரில் ஒரு தியேட்டர் இருந்தது.அதில் பழைய படங்கள் தான் திரையிடப்படும்.(ரீலீஸ் படங்கள் இல்லை- ரீலிஸாகி ஆறு மாதங்கள் கழித்து) அப்போது அந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிட்டார்கள்.நான் என் நண்பனிடம் ஒரு பந்தயம் வைத்தேன்.இந்த படத்திற்கு நாம் இருவரும் செல்வோம்.இந்த படம் உனக்கு பிடித்தால், என்னுடன் அடுத்த இரு எம்.ஜி.ஆர் படங்களுக்கு கட்டாயமாக என்னுடன் வரவேண்டும்.என் செலவில் அழைத்து செல்வேன்.அப்படி பிடிக்க வில்லையென்றால் நான் இனி உன்னுடன் சிவாஜி படங்களுக்கு வரமாட்டேன்.இதுதான் பந்தயம்.அவனும் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டான். என்னுடன் முதல் முதலாக எம்.ஜி.ஆர் படத்துக்கு வந்தான்.படம் ஓடும்போது நான் அவனையே கவனித்துக் கொண்டிருந்தேன்.(நான் ஏற்கனவே 5 தடவைகளுக்கு மேல் படத்தை பார்த்திருந்தேன்.) என் நண்பன் படத்தை நனறாக ரசிப்பது புரிந்தது.இந்த படத்தை எவர்தான் ரசிக்க மாட்டார்? பந்தயத்தின் படி நான் அடுத்த இரு தலைவர் படங்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றேன்.கல்லூரியின் மூன்றாவது வருடம் முடிவடைவதற்குள் என் நண்பன் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் நாளன்றே பார்க்க ஆசைப்படும் அளவுக்கு மாறிவிட்டான்.இதுதான் சிவாஜி ரசிகனை எம்.ஜி.ஆர் ரசிகனாக மாற்றிய வரலாறு.(பரவாயில்லையே தனி பதிவு போடும் அளவுக்கு விபரம் நீண்டு விட்டது.)....... Thanks mr. VN.,
-
சூப்பர் சார்.எனது வாழ்நாட்களில் பல நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
அக்காலத்தில் சிவாஜி ரசிகர்கள் எம் ஜி ஆர் படம் பார்க்கக்கூடாது என வெறி பிடித்து அலைந்தனர்........ Thanks GK.,