-
-
-
'காத்தவராயன்' மல்யுத்தக் காட்சி ஒரு ஆய்வு
http://i1087.photobucket.com/albums/..._001942112.jpg
'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)
பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து N.T. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் N.T. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் N.T. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, N.T. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி உங்களுக்காக.
http://www.youtube.com/watch?v=uOOft...layer_embedded
-
-
-
வாசு,
மல்யுத்த காட்சியை மனகண்ணில் பார்த்து விட்டேன். காட்சி வர்ணனை கலந்த விவரிப்பென்றால் நீயும் சாரதி யும்தான்.
-
காத்தவராயன் (அமர் பிரேம் 1960) இந்தியும் பேசியது. அதிலிருந்து ஒரு இமேஜ்.
http://cineplot.com/gallery/wp-conte...-bollywood.jpg
Thanks to cineplot.com
-
நன்றி கோபால் என் வீட்டில் நாம் இருவரும் சேர்ந்து காத்தவராயன் மல்யுத்தக் காட்சியைக் கண்டு ரசித்து மகிழ்ந்ததை நினைவுபடுத்தியதற்கு.
அற்புதமான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம். ஒரு இடம் கூட போரடிக்காமல் அவ்வளவு பிரமாதமாகப் போகும் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெறாமல் போன காரணம் தெரியாமல் இன்று வரை மண்டையை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
தங்கள் தகப்பன் சாமிக்கும் மிக பிடித்தபடம் என்று நினைக்கிறேன்.
ஆரம்பம் முதல் இறுதிவரை காட்சிக்கு காட்சி ஆரவாரக் கைத்தட்டல்களை அள்ளும் படம். இந்தப் படத்திற்கு கடலூர் முருகாலயாவில் அமர்க்களம் செய்து போலீஸ் வந்து எச்சரித்தது நினைவுக்கு வருகிறது.
தலைவர் கொள்ளை அழகு. அற்புத மல்யுத்தம், மாயா ஜாலக் காட்சிகள், அற்புதமான கரகாட்டம், கலக்கல் பாடல்கள், பலதரப்பட்ட மாறு வேடங்கள், தங்கவேலு, சந்திரபாபு, பாலையா கூட்டணியின் மெகா காமெடி, கண்ணாம்பாவின் கனல் தெறிக்கும் வசனக் காட்சிகள், கிளைமாக்ஸ் பிரம்மாண்டம் என்று சகல அம்சங்களும் சரிவிகிதக் கலவையில் கலந்து நட்சத்திரக் குவியல்களுடன் ஜொலித்த படம்.
காத்தன் என்றால் காத்தன்தான்.
-
'இதயராஜா' அளித்த கௌரவம்.
தலைவரின் அசத்தல் கரகாட்டம்.
http://i1087.photobucket.com/albums/...2/DSC00377.jpg
-
காத்தவராயன், இன்னொரு நடிகர் நடிப்பதாக இருந்து நம் தலைவரிடம் வந்தது. இந்த படம் மட்டும் உரிய வெற்றியை பெற்றிருந்தால் ,நடிகர்திலகம்-ராமண்ணா இணைவில் பல அற்புத பொழுது போக்கு படங்கள் அன்றே தொடர்ந்திருக்கும். Fantacy படங்களின் charm மங்க ஆரம்பித்த காலகட்டத்தில் வந்து மாட்டி கொண்டது.
துறையூர்,கே.மூர்த்தி என்னுடைய Favourite திரைக் கதை-வசனகர்த்தா.