Originally Posted by
madhu
ஆஹா.. மிதிலா விலாஸ், பொன்னியின் செல்வன், இது சத்தியம், படகு வீடு, மலர்கள், வேங்கையின் மைந்தன் தொடங்கி கதம்பாவின் எதிரி, ராஜமுத்திரை, சத்திய வெள்ளம் என்று ஓடி மறுமுறை பதியப்பட்ட அலை ஓசை, சிவகாமியின் சபதம், உடல் பொருள் ஆனந்தி வரைக்கும் ஏறக்குறைய ரெண்டாயிரம் புத்தகங்கள்... கடலளவு கரையான் சாப்பிட கையளவு தப்பித்தன்.. ( அதிலும் அந்தக் கால பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அப்படியே கிடைத்தது விசேஷம் )... அனுத்தமாவின் நைந்த உள்ளம் நையாமல் இருந்ததும் ஆச்சரியம். பாட்டு புத்தகங்களில் தெருவோரம் வாங்கிய பத்து, பனிரெண்டு எஸ்கேப் ஆயின. ஆனாலும் மூர் மார்க்கெட் வாசலில் தேடிப் பிடித்து வாங்கிய பல அரிய பாட்டுப் புத்தகங்கள் ( படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் விற்கும் ஒரிஜினல்கள் மிஸ் ஆயிட்டா எப்போதாவது அப்பாவுடன் மூர் மார்க்கெட் போகும்போது குடை குடை என்று குடைந்து ஆர்ப்பாட்டம் செய்து வாங்கி வைத்தவை ) எல்லாம் போயே போச்சே !
கோபால் ஜி... நெய்வேலி வீட்டுத் தோட்டங்கள் அலாதியானவை. மெயின் பஜார் இந்தியன் காபி ஹவுஸ் பிற்பகல் பஜ்ஜி... செவ்வாய் சந்தை வாழைப்பழ ஏலம்... மந்தாரக்குப்பம் கண்பதி, சென் ட்ரல் பஸ் ஸ்டாண்டு அமராவதியில் சினிமாக்கள், மாத ஆரம்பத்து பே டே பஜாருக்கு சைக்கிளில் போய் சுற்றுவது என்று அது ஒரு பொற்காலம்....