kadavulin siripai parthu mei maranthu vittaen
Printable View
சென்னை சரவணா திரையரங்கில் இந்த ஆண்டு (2015) தொடங்கியதில் இருந்து 6 மாதங்களில் தலைவரின் 15 படங்களை வெளியிட்டுள்ளனர் என்றால் தோராயமாக 12 நாட்களுக்கு ஒரு படம் என்ற கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு தலைவர் நடித்த படங்களுக்கு மக்கள் வரவேற்பும் ஆதரவும் இருப்பதால்தான் இந்த அளவுக்கு படங்களை வெளியிடுகின்றனர். சென்னை சரவணா தியேட்டர் என்றில்லை. தமிழகம் முழுவதும் மறு வெளியீடுகளில் தலைவரின் படங்கள் அதிக அளவில் வெளியாகின்றன.
திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பதிவில் இருந்து கோவையில் சிரித்து வாழ வேண்டும் திரையிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்துக்குள். மதுரை சென்ட்ரலில் ஏப்ரல் மாதம் வெளியான அடிமைப்பெண் திரைப்படம் ரூ.1,09,000/- வசூல் பெற்று சாதனை படைத்தது. சமீபத்தில் அதே திரையரங்கில் வெளியான நம்நாடு ரூ.1,03,000/- வசூலை குவித்தது.
சினிமாவில் நடிப்பதை தலைவர் நிறுத்தி 38 ஆண்டுகள் ஆகிறது. உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் கூட தலைவரின் படங்கள் நிகழ்த்தும் சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த ஆண்டில் சென்னை சரவணா திரையரங்கில் வெளியான தலைவர் படங்கள் பற்றிய தகவல்களை நினைவில் வைத்திருந்து பதிவிட்டதற்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அரசியல் களத்தில் தலைவர் எப்படியெல்லாம் மிக சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் என்பதையும் கடந்த கால உண்மைகளையும் விளக்குவதாக உள்ளது தலைவரின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய திரு.சீனிவாச மூர்த்தி அவர்களின் கட்டுரை. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.ஜெய்சங்கர் சார், தலைவருக்கு புகழ்மாலை சூட்டும் உங்கள் அழுத்தமான பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' நிழற் படங்கள் அனைத்தும் அருமை . நன்றி முத்தையன் சார் .
மறு வெளியீட்டில் குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் மக்கள் திலகத்தின் பல படங்கள்
மதுரை ,கோவை , சென்னை நகரங்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .
http://i57.tinypic.com/14r7r7.jpg
முரசு தொலைக்காட்சியில் தற்போது (7.30 மணி முதல் ) ஒளிபரப்பாகி
வருகிறது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் " நல்ல நேரம் "
கண்டு மகிழுங்கள்.
I tried to enhance the picture little bit. What a lovely smile ?
http://i58.tinypic.com/e8llrr.jpg