சன் லைப் தொலைக்காட்சியில் வால் போஸ்டர் என்கிற தலைப்பில் தவறான
செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------
நேற்று (27/09/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஆணையிட்டால் " ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இடையே வால் போஸ்டர் என்கிற தலைப்பில் சில தவறான செய்திகள் ஒளிபரப்பு
செய்து ரசிகர்கள் மனதை நோகடிதுள்ளனர் .
அதாவது, அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி நடித்த 25 வது படம்.-நான் ஆணையிட்டால்
மேலும் , நடிகை சரோஜாதேவி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மொத்தம் 30 படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் படம் "ஜெனோவா "
என்று தவறான செய்திகள்.
உண்மையான செய்திகள்.
நடிகை சரோஜாதேவி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மொத்தம் 26 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
முதல் படம் புக்கிங் ஆனது திருடாதே. ஆனால் முதலாவதாக வெளிவந்தது
நாடோடிமன்னன்.
நான் ஆணையிட்டால் நடிகை சரோஜாதேவிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன்
ஜோடியாக நடித்த 21 வது படம்.
திரைப்படங்களை ஒளிபரப்பும்போது, அந்த படத்தின் சிறப்பு, சாதனைகள், வெளியான தேதி, 100 நாட்கள் அல்லது அதிகபட்ச நாட்கள் ஓடியது,
கதையின் மூலக்கருத்து , அந்த காலத்தில் படத்திற்கு இருந்த வரவேற்பு ஆகியன
தெரிந்தால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், செய்தியாக வெளியிடலாம்.
இல்லாவிடில் வெளியிடாமல் இருப்பது நல்லது.
கடந்த வாரம் , எங்கள் தங்கம் திரைப்படம் ஒளிபரப்பு செய்யும்போது, அந்த படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் சோ, அந்த படத்திற்கு சிறிதும் தொடர்பு இல்லாத நடிகர் சோ இயக்கிய நாடகங்களின் எண்ணிக்கை, எத்தனைமுறை
அரங்கேற்றம் ஆனது, போன்ற விவரங்கள் செய்திகளாக ஒளிபரப்பு செய்தனர்.
எனக்கு தெரிந்த வரையில், எங்க வீட்டு பிள்ளை படம் வெளியானபோது தான்
சரியான தகவல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இனிமேலாவது சன் லைப் தொலைகாட்சி நிறுவனம் உண்மையான தகவல்களை
சேகரித்து வெளியிடும் என்று நம்புகிறேன்.
ஆர். லோகநாதன்.