Originally Posted by Murali Srinivas
இன்றைய மறக்க முடியுமா மிக அழகாக தொகுக்கப்பட்டிருந்தது. வெரைட்டி என்று சொல்லுவோமே, அது போல் பல படங்கள் மற்றும் அது தொடர்புடைய பேட்டிகள் என்று ஒளிப்பரப்பானது. இன்று பங்கு பெற்றவர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், YGee மஹேந்திரன், பி.என்.சுந்தரம், அரூர்தாஸ், குகநாதன், சித்ராலயா கோபு, சி,வி.ஆர். இன்று இடம் பெற்ற படங்கள் கெளரவம், விடி வெள்ளி, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், எங்க மாமா, என் மகன், பொன்னுஞ்சல் மற்றும் பாச மலர். இதில் குறிப்பாக மகேந்திராவின் ஆணித்தரமான பேச்சு, அவர் பேச்சுக்கு பலம் சேர்க்கும் விதமாக காட்டப்பட்ட காட்சிகள், அரூர்தாஸின் பாசமலர் கிளைமாக்ஸ் பற்றிய கண்ணிர் மல்கும் நினைவுகள், விடி வெள்ளியின் பாடல் காட்சிகள், சிவந்த மண் பாடல் மற்றும் காட்சிகள், நெஞ்சிருக்கும் வரை பாடல் மற்றும் காட்சிகள் என்று நேரம் போனதே தெரியாமல் செய்திருந்தார்கள். படப்பிடிப்பு தொடங்கி சில பல காரணங்களால் நின்று போன கண்ணா நீ வாழ்க என்ற படத்தை பற்றி குகநாதன் சொன்ன செய்திகள் நிகழ்ச்சியின் சுவையை கூட்ட உதவின. நடிகர் திலகம் நடித்த படங்களில் இடம் பெற்ற ஓரங்க நாடகங்கள், அதன் நிழற்ப்படங்களும் காண்பிக்கப்பட்டது. சேரன் செங்குட்டுவன், சாக்ரடிஸ், சலீம், சாம்ராட் அசோகன், ஜுலியஸ் சீசர், சத்ரபதி சிவாஜி, ஒதெல்லோ மற்றும் பாடல் காட்சிகளில் இடம் பெற்ற பாரதியார், திலகர், வாஞ்சிநாதன், ஜகாங்கீர், கிங் ஜார்ஜ் ஸ்டில்களும் இடம் பெற்றன. அடுத்த வாரம் தொடரும் என்ற இனிப்பான செய்தியும் இறுதியில் வந்தது.
அன்புடன்