Great Joe. 14?Quote:
Originally Posted by joe
Printable View
Great Joe. 14?Quote:
Originally Posted by joe
:oops: your PM said today :confused2:Quote:
Originally Posted by groucho070
naa vera Hubbers Events thread la pOttuttEn :D
கல்யாணியின் கணவன்Quote:
Originally Posted by groucho070
:oops: Sorry birather, let's celebrate today as what it is, the birthday of one of the greatest film actors in the world!!!! :DQuote:
Originally Posted by NOV
உலகெங்கிலுமுள்ள் நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் 'சிவாஜி ஜெயந்தி' நல்வாழ்த்துக்கள்.
எங்கள் உயிர் இருக்கும் வரை உன் நினைவிருக்கும்.
கலைதாயின் முதல்மகன் புகழ் வாழ்க
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்ககான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும் நம் இணைய தளம் சார்பிலும் நடிகர் திலகத்திற்கு நமது பிறந்த நாள் வணக்கங்ககள்.
ராகவேந்திரன்
'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..! - பஞ்சு
பதினாறு ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக 'பராசக்தி' படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக 'உயர்ந்த மனிதன்' வெளிவருகிறது. 'பராசக்தி' பட மாக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடி யோவில்தான் 'உயர்ந்த மனித னும்' உருவாகி இருக்கிறது. பராசக்தியை டைரக்ட் செய்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் இந்தப் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்கள். திரு.பஞ்சு, சிவாஜி கணேசனைப் பற்றி இங்கே சொல்கிறார்:
''முதன்முதலாக நாங்கள் சிவாஜி கணேசனைப் பார்த்தது 1948-ம் வருஷத்தில். அதற்கு முன்பே 'சிவாஜி'யாக நடித்து விட்டபோதிலும், அப்போது அவர் வெறும் வி.சி. கணேசன் தான். என்.எஸ்.கே. நாடக சபா வில் மனோகரா நாடகத்தில் 'விஜயாள்' வேஷம் போடுவார். அந்த நாடகத்தில்தான் அவரைப் பார்த்தோம். அவரது நடிப்பில் அப்போதே ஓர் அலாதித் தன்மை பளிச்சிட்டது. பிற்கா லத்தில் அவர் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான அறிகுறிகள் அவரது நடிப்பில் இருந்தன. அப்போதே அவரைச் சினிமா உலகுக்குக் கொண்டுவர விரும்பினோம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை. 1950-ல்தான் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது - பராசக்தி படம் மூலமாக.
'பாவலர்' பாலசுந்தரம் எழுதி, நாடகமாக நடிக்கப்பட்டு வந்த பராசக்தியைத் திரைப் படமாக்க நினைத்தபோது, யாரைக் கதா நாயகனாகப் போடுவது என்ற பிரச்னை எழுந்தது. எங்களுக்கு கணேசனைப் போட வேண்டும் என்ற எண்ணம். தயாரிப்பாளர் களுக்கும் அப்படித்தான். ஆனால், ஒரு சிலர் வேறு நடிகர்களைப் பற்றிச் சொன்னார்கள். கே.ஆர்.ராமசாமியின் பெயரும் அடிபட்டது. கடைசியில் 'அண்ணா'விடம் போய், அவரு டைய யோசனையைக் கேட்டோம். 'உங்கள் எண்ணம்தான் சரி! கணேசனையே போடுங் கள். அவர் நன்றாக நடிப்பார். தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புதிய நடிகர் கிடைத்த மாதிரியும் இருக்கும்' என்றார் அண்ணா.
அப்போது கணேசன் பெரிய குளத்தில் 'சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். தினசரி நாடகம். 'டெஸ்ட்'டுக்கு ரயிலில் வந்து போவதென்றால் நாடகங்கள் பாதிக்கப்படும். எனவே, பெரிய குளத்திலிருந்து திருச்சி வரை காரிலும், அங்கிருந்து சென் னைக்கு விமானத்திலும் அழைத்து வந்து, மறுபடியும் விமானத்திலேயே அனுப்பி வைத்தோம். உயரப் பறந்து வந்து, சினிமா உலகுக்குள் நுழைந்து, உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட நடிகர் அவர்'' என்றார் பஞ்சு.
சிவாஜியின் நடிப்பு, கிருஷ் ணன்-பஞ்சுவின் டைரக்ஷன், கலைஞர் கருணாநிதியின் அரு மையான வசனங்கள் எல்லாம் சேர்ந்ததால், பராசக்தி படம் 'ஓஹோ'வென்று ஓடியது. சினிமாவில் வரும் பண்டரிபாய் வேஷம் நாடகத்தில் இல்லை. கருணாநிதியின் புதிய படைப்பு அது. நாடகத்தின் கதைப் போக்கில் இருந்த குறைகளைச் சரி செய்வதற்காக, மற்றவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்காக, கருணாநிதி அந்தப் பாத்திரத்தைச் சிருஷ் டித்தாராம்.
''இப்போது சிவாஜி நடிப்பில் அலாதியான மெருகு ஏற்பட் டிருக்கிறது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். பராசக்தியைப் போல் 'டயலாக்' படங்களுக்கு அப்பொழுதும் சரி, இப்பொழு தும் சரி, அப்படித்தான் நடிக்க வேண்டும். இப்போது 'டயலாக்' பாணிதான் மாறிவிட்டதே! ஆனால், இந்தப் பாணியில் கூட சிவாஜிக்குத்தான் வெற்றி. ஏனெனில் எந்தெந்த வசனத்தை எப்படியெப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உலகில் எந்த நடிகரை எடுத்துக்கொண்டாலும், சிவா ஜியைப் போல் யாரும் இவ்வ ளவு 'வெரைட்டி'கள் செய்த தில்லை. 'வெரைட்டி' மட்டு மல்ல, ஒரே வேஷத்தைப் பல கோணங்களில், பலவிதமாகச் செய்யக்கூடியவர் சிவாஜி. உயர்ந்த மனிதன் படத்தில் இளைஞராகவும், அப்பாவாக வும் வருகிறார் கணேசன். அப்பா வேஷம் அவருக்குப் புதிதல்ல. மோட்டார் சுந்தரம் பிள்ளை, எங்க ஊர் ராஜா ஆகிய படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருக்கிறார். ஆனால், இந்த மூன்று அப்பா வேஷங்களிலும் மூன்று வித மான 'அப்பா'க்களைக் காட்டி யிருக்கிறார். சிவாஜியைத் தவிர வேறு யாராலும் அதைச் செய் திருக்கமுடியாது.
உயர்ந்த மனிதனில் தீப் பிடித்து எரிகிற ஒரு வீட்டுக்குள் போக வேண்டும். தயங்காமல் போயே விட்டார். கை கால்களி லிருந்த ரோமங்கள் எல்லாம் அனலில் கருகிவிட்டன. 'இந்த இடத்தில் உங்கள் முகத்தில் கொஞ்சம் கரி இருக்கவேண் டும்' என்றால், 'அவ்வளவு தானே!' என்று, அணைந்தும் அணையாமலும் இருக்கும் ஒரு கொள்ளியிலிருந்து கரியை எடுத்துப் பூசிக் கொள்வார். வேஷத்தில் அவருக்கு அவ்வ ளவு ஈடுபாடு!'' என்றார் பஞ்சு.
நன்றி : விகடன்
Dear Joe Sir,
Your prompt repro of vikatan reminiscences really makes us feel great. Thank you Sir.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒழிகிறதோ இல்லையோ, எல்லை தாண்டிய சிவாஜி வாதத்தை யாராலும் அழிக்க் முடியாது. தமிழ் தாண்டி தெலுங்கு தேசத்தில் நடிகர் திலகத்தின் திரைப்ப்டங்களைப் பற்றிய விவரங்களைக் கீழே கண்டுள்ள இணைப்பில் காண்க.
http://www.justtollywood.com/profiles.php?pid=00004996
A tribute by a web blog:
http://www.musicquencher.com/blog/
Raghavendran
:notworthy: