கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 29
கே: திரும்பவும் வெளியாகியுள்ள 'பராசக்தி' எப்படி நடை போடுகிறது? (சாந்தி கன்னியப்பன், மலேசியா)
ப: ராஜ நடை!
(ஆதாரம் : பொம்மை, பிப்ரவரி 1969)
அன்புடன்,
பம்மலார்.
Printable View
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 29
கே: திரும்பவும் வெளியாகியுள்ள 'பராசக்தி' எப்படி நடை போடுகிறது? (சாந்தி கன்னியப்பன், மலேசியா)
ப: ராஜ நடை!
(ஆதாரம் : பொம்மை, பிப்ரவரி 1969)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 30
கே: ஸ்ரீதர், ஏ.பி.என்., கே.எஸ்.ஜி., மல்லியம் ராஜகோபால் முதலியோர் தமது லட்சியப் படங்களில் சிவாஜியை நடிக்கச் செய்வது ஏன்? (பெ.சுப்பண்ணன், ராமநாதபுரம்)
ப: லட்சியப் படங்களிலாவது நடிப்புத்தரம் உயர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால் இருக்கலாம்.
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக முதல்வர் டாக்டர் சிவாஜி அவர்களும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இணைந்து பணியாற்றிய திரைக்காவியங்கள் :
1. பராசக்தி(1952)
2. பணம்(1952)
3. திரும்பிப் பார்(1953)
4. மனோகரா(1954)
5. இல்லற ஜோதி(1954) [அனார்கலி - சலீம் ஓரங்க நாடகம் மட்டும்]
6. ராஜா ராணி(1956)
7. ரங்கோன் ராதா(1956)
8. புதையல்(1957)
9. குறவஞ்சி(1960)
10. இருவர் உள்ளம்(1963)
11. மாடி வீட்டு ஏழை(1981)
நாளை (3.6.2010), திரை இலக்கியத் திலகமாகத் திகழும் முதல்வர் கலைஞர் அவர்களின் 87வது பிறந்த நாள். ஆம், திராவிட சூரியனுக்கு 87வது உதயம்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 31
கே : இப்பொழுது சிவாஜிக்கும், ரவிச்சந்திரனுக்கும் தோற்றத்தில் வித்தியாசமே தெரியவில்லையே...? (எம்.எஸ்.விஸ்வநாதன், மாயூரம்)
ப: நடிப்பில் தெரிந்து விடுகிறதே...!
(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
விஜய் தொலைக்காட்சி வழங்கும் 'செவாலியே சிவாஜி விருதை' இவ்வாண்டு பெற்ற நடிகர் திலகத்தின் சீடர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களை வாழ்த்துவோம்.
நிச்சயமாக. செவாலியே விருதினை ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விழாவிற்கு வரமுடியாத பட்சத்தில் அவர்கள் இல்லத்திற்கு சென்று அளிப்பது மரபாக வைத்துள்ளனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் தானே நேரில் சென்று பெற்றுள்ளது, நடிகர் திலகத்தின் பால் அவர் வைத்துள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் காட்டுகிறது.
பாராட்டுக்கள் ரஜனிகாந்த் அவர்களே,
ராகவேந்திரன்
ராகவேந்திரா சார்,
விழாவுக்கு ரஜினிகாந்த் அவர்கள் வராததால் , பிரபுவும் ராம்குமாரும் ரஜினி வீட்டுக்கே சென்று வழங்கியதாக கேள்விப்பட்டேன்.
பெங்களூரில் சிவாஜி கணேசன் திரை இடப்படும் திரை அரங்கம் - நடராஜ், கினோ, ஸ்வஸ்திக், தேவி, லக்ஷ்மி , லாவண்யா முதலியவை தான் எனக்கும் என் நண்பர்களுக்கும் வெள்ளி , சனி மற்றும் சண்டே கோவிலாக இருந்தது. முதல் முன்று நாட்களும் சாயங்காலம் ஷோ கண்டிப்பாக செல்வோம். என் நண்பர்கள் ரமேஷ், நீலு, ஜகன், குரு , கிருஷ்ணமுர்த்தி, ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமுர்த்தி எங்களைவிட வயதில் பெரியவர். ஸ்ரீனிவாசன் TM படத்தை தொடர்து 25 தடவை பார்த்தவர். (இவர் மராதியன்). நீலு நடிகர் திலகத்தின் வெறியன். (gowaram படத்தை ௦ தடவைக்கு மேல் பார்த்தவன். அவருடைய பற்றிய தகவல் அனைத்தும் சேகரித்து வைத்தவன். இப்பொழுது எல்லாம் மிஸ்ஸிங். நானும், மற்றவர்கள் ரசிகர்கள் . பசுமையான நினைவுகள். வரவு இல்லாமல் செலவு செய்த அந்த நாட்கள் மிண்டும் வராதா ? அப்பொழுது பிரமசாரிகள் இப்பொழுது குடும்பம், மனைவி, மக்கள், கடமை. UM பாடல் தான் நினைவுக்கு வருகிறது. .................... பாதைகள் மாறினோம் , கடமையும் வந்தது கவலையும் வந்தது. நண்பர்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. பணம் இருக்கிறது. டைம் அண்ட் என்ஜாய் செய்ய நண்பர்கள் இல்லை. multiplex culture மற்றும் பழைய படங்களை போல் இப்பொழுது படங்கள் வருவதில்லை அதுவும் ஒரு காரணம்.
தினமலர் (22.5.2010) திருச்சி பதிப்பில் வெளியாகியுள்ள செய்தி:
http://pammalar.webs.com/apps/photos...otoid=85223766
தினமலர் (23.5.2010) எல்லா பதிப்புகளிலும் வெளியாகியுள்ள செய்தி:
http://pammalar.webs.com/apps/photos...otoid=85223767
இச்செய்திகளை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார், தினமலருக்கு புதிதாக சிவாஜி மீது அக்கறை வந்தது மகிழ்ச்சியே :) . நடிகர் திலகத்துக்கு சிலை வைத்த கலைஞரின் கவனத்துக்கு உரிய முறையில் எடுத்துச்செல்லப்பட்டால் அரசு சார்பில் மரியாதை பட்டியலில் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை .. பிரபுவோ ,ராம்குமாரோ ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றிவிடக்கூடிய காரியம் இது.