http://i61.tinypic.com/2wdzu6d.jpghttp://i61.tinypic.com/2sbn8e0.jpg
Printable View
http://i60.tinypic.com/2jetgmh.jpgநான் பதிவிடும் ச்டில்ல்கள் அனைத்தும் எனது சொந்த தயாரிப்புகளே... இதற்காக பல இரவுகள் விழித்திருந்து தலைவரின் புகழை இந்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்ற காரணத்தால் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பதிவிட்டு வருகிறேன்.. இந்த திரியில் அனைத்து நண்பர்களும் தலைவரின் ஆவணங்களை பதிவு செய்து வருவது சிறப்பு. தலைமுறைகளை தாண்டி தலைவரின் " வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்" அதில் அந்த ராமருக்கு அணில் உதவி செய்த மாதிரி நாம் அனைவரும் நமது தெய்வம் RAMACHANDARARUKKU நமது கடமையை செய்வோம்.OK..
முத்தையன் சார்
இன்றைய மக்கள் திலகத்தின் படங்களின் பதிவுகள் எல்லாமே படு சூப்பர் . உங்கள் கடின உழைப்பும் செலவிடும் நேரமும் அறிய முடிந்தது .உடல் நலனில் கவனம்செலுத்தி விரைவில் பூர்ண குணமடைய வேண்டுகிறேன் .
I finally got access to this thread. My Sincere thanks to Vellore Ramamoorthy sir and to all MGR fans who are posting unseen pictures & information about Makkal thilagam MGR. Hats off to you all. ... Attachment 3740
பன்சாயி...
நேற்று இரவு வழக்கம் போல தொலைக்காட்சி சேனல்களை துழாவிக் கொண்டே சென்றேன். திடீரென இன்ப அதிர்ச்சி. ராஜ் டி.வியில் உலகம் சுற்றும் வாலிபன் படம். கண்டு களித்தேன். இதுதவிர, நேற்று பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வியில் அரச கட்டளை. இரவு 7.30க்கு முரசு டி.வியில் தாயின் மடியில். இன்று காலை சன் லைப் டி.வியில் தாய் சொல்லை தட்டாதே. ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா....’ என்று பாடிய பாரதியார் இன்று இருந்திருந்தால் ‘எங்கெங்கு காணிணும் எம்ஜிஆரடா, தம்பி, ஏழு கடல் அவன் வண்ணமடா.... விண்டுரைக்க முடியாத விந்தையடா’ என்று பாடியிருப்பார்.
பாரதியார் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாரதியார் மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னர் தலைவர் ஆட்சியின்போதுதான் அவரது குடும்பத்துக்கு தியாகிகள் பென்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், முதல் மாத பென்ஷன் வந்த அன்று அதை வாங்கிக் கொள்ள பாரதியாரின் மனைவி செல்லம்மாள் இல்லை. அன்று காலையில்தான் அவர் இறந்திருந்தார். ஏன்? சுதந்திர வீரனின் வரலாற்றை விளக்கும் திரைப்படமான திரு.சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கூட தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் (1983 அல்லது 84 என்று நினைக்கிறேன்) வரிவிலக்கு தரப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சியையோ ,ஆட்சியையோ குறை கூறுவதற்காக சொல்லவில்லை. தியாகிகளுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் உரிய மரியாதை அளிப்பவர் தலைவர் என்பதை, அதுவும் பாரதியார் பற்றி பேச்சு வந்ததால் குறிப்பிடுகிறேன்.
சரி.. உ.சு.வா.வுக்கு வருகிறேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். விரைவில் டிஜிட்டலில் பெரிய திரையிலும் காணப் போகிறோம். இந்த படத்தை பற்றி இதுவரை புத்தர் கோயில் மற்றும் ஹோட்டல் துசித் தானி ஆகியவை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். எழுத நிறைய உள்ளது. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது எழுதுவேன். இப்போது, பன்சாயி பாடலை பார்ப்போம்.
அணுசக்தி குறிப்பின் அடுத்த பகுதி ‘ஜப்பானில் உள்ள புத்த பிட்சு வீட்டில் இருக்கிறது’ என்ற ரகசிய குறிப்பை சந்திரகலா படித்ததுமே உடனே நாகேஷ், ‘அண்ணே, ஜப்பானுக்கு போலாம்ணே’ என்றதும் அடுத்த காட்சியே இந்தப் பாடல். மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையமைப்பில். படத்தின் கதையும் ஜப்பானிலேயே முடியும். இரண்டாம் உலகப் போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் முறையே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகள் வீசிய நாள். லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த உலக வரலாற்றின் கறுப்பு நாள். அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிலேயே, அழிவுக்கு காரணமான அணுசக்தி குறிப்பை எதிரிகளின் கைகளுக்கு கிடைக்காமல் தலைவர் கைப்பற்றி அணுஆயுத ஆபத்தில் இருந்து உலகை காப்பாற்றுவது போன்ற கதையமைப்பும், அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு ஏற்றார் போல அங்கு நடத்த எக்ஸ்போ 70 விழாவும், அதை காட்சிப்படுத்திய தலைவருக்கும், இப்போதும் கண்டுகளிக்கும் நமக்கும் இயற்கை அளித்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பன்சாயி பாடலின் ஆரம்பத்தில் சந்திரகலா அணிந்து வரும் உடைதான் ஜப்பானின் தேசிய உடை. புத்த பிட்சு வீட்டில் குறிப்பு உள்ள சங்கேத வார்த்தைகளான தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்று வருமே. அதில் கடைசியாக வரும் ‘கிமோனா’தான் சந்திரகலா அணிந்திருக்கும் உடை. தலைவர் செம ஸ்மார்ட் என்று திரும்ப திரும்ப நான் சொல்லப் போவதில்லை, தெரிந்ததுதானே.
பாடலை படமாக்க தலைவர் தேர்ந்தெடுத்துள்ள லொகேஷன்கள் அற்புதம். ‘தொட்டிலைப் போல நானும்... பிள்ளையைப் போல நீயும்..’ என்ற வரிகள் வரும்போது காட்டப்படும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசம் கண்களுக்கு விருந்து. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடத்தில் ஆறு. அந்த இடத்தில் அன்னபட்சி போன்ற பிரம்மாண்ட படகு போன்ற ஒரு கட்டமைப்பு. அந்த வரிகள் இடம் பெறும்போது மேலே ஓடும் மோனோ ரயில். அந்த இடத்தை தேர்வு செய்ததுடன் மோனோ ரயிலுக்காக காத்திருந்து, நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்தில் அதற்குள் காட்சியை அழகாக எடுக்க எத்தனை திட்டமிடலும் டைமிங் சென்சும் வேண்டும்?
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜப்பானில் இந்தக் காட்சி 1970ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு வீச்சுக்குப் பின் 25 ஆண்டுகளில் ஜப்பான் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு எக்ஸ்போ 70யும் இந்தக் காட்சியில் காட்டப்படும் மோனோ ரயிலுமே சான்று. சிங்காரச் சென்னையிலே இன்னும் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பாடில்லை. மோனோ ரயில் இன்னும் திட்ட வடிவிலேயே இருக்கிறது. இதற்கு மாநில அரசை குறை சொல்லி அர்த்தமில்லை. இரண்டரை ஆண்டுக்கு முன் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை உலகத் தமிழர்களுக்கு ‘மகிழ்ச்சியுடன்’ தெரிவிக்கிறோம்.
அந்தப் பாடலில் வரும் டால்பின் கண்காட்சி. இதற்கு முன் தமிழ் படங்களில் வந்ததில்லை. தலைவர் படம் எடுக்கும்போது சிறப்பானவற்றை எல்லாம் கேமராவுக்குள் அடக்கியுள்ளார். சரியான இடங்களில் அந்தக் காட்சிகளை இணைத்து நமது கண்களுக்கு விருந்தாக்கிய அவரது மேதைமையையும் தொழில்நுட்பத் திறனையும் என்னென்பது? மீன் கண்காட்சியின்போது தலையில் தொப்பியுடன் தடுப்பு கம்பியில் கைகளை ஊன்றியபடி தலைவர் கொடுக்கும் இரண்டு அட்டகாச போஸ்கள் அற்புதம்.
கடைசி பாராவின் போது ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற எரிமலையை காட்டியிருப்பார்கள். படகில் தலைவரும் சந்திரகலாவும் செல்லும் இந்த காட்சியை இன்னொரு படகில் இருந்து படமாக்கியிருப்பார்கள். கேமரா தலைவரையும் சந்திரகலாவையும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிமலையை காட்ட விட்டு விட்டால் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். கேமராக்காரருக்கு நினைவுபடுத்துவதுபோல எரிமலையை நோக்கி தலைவர் சிரித்தபடியே கை காட்டுவார். அவரது கையை தொடர்ந்து செல்லும் கேமரா எரிமலையை காட்டும். இந்த காட்சியை பாடலில் பார்க்க முடியும். இதயம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.. பன்சாயி.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு அப்போது ஏற்பட்ட எதிர்ப்புகள், இடையூறுகள் யாவரும் அறிந்ததே. நேற்றும் எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு படத்துக்கு அல்ல, எனக்கு. என் மீது கொண்ட அக்கறையால் ஏற்பட்ட எதிர்ப்பு. ‘எப்போதும் வேலை.... வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறீர்கள். காலாகாலத்தில் படுக்கக் கூடாதா?’ என்ற என் மனைவியின் அன்பான எதிர்ப்பு. இருந்தும் படத்தை பார்த்து விட்டுத்தான் இரவு 2 மணிக்கு படுத்தேன், மனைவியின் எதிர்ப்பையும் மீறி. (‘கலைவேந்தா, நீ சிங்கம்டா’........ ஏய், மனசாட்சி, எனக்கு புகழ்ச்சி பிடிக்காது, அடங்கு..ஹி.ஹி.)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்