http://i57.tinypic.com/2yo5wjt.jpg
Printable View
கலங்கரை விளக்கம் - ஒரு விளக்கமான அலசல் :
“ It is better to walk alone than with a crowd going in a wrong direction “
வருடம் முடிவடைய இன்னும் சொற்ப நாட்களே இருக்கின்றன - இந்த படத்தை அலச இரண்டு காரணங்கள் - நல்ல படம் , நல்ல நடிப்பு , அருமையான பாடல்கள் , இவைகளையெல்லாம் மீறி இரண்டு காரணங்கள் - ஒன்று - வரும் வருடம் , இங்கு இருக்கும் எல்லாருடைய வாழ்விலும் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்ற ஓர் , ஆசை , ப்ராத்தனை ----
இரு திலகங்களும் நன்றாக வாழ்ந்து மறைந்தவர்கள் - இல்லை இல்லை - நம் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - இனியும் வாழ்பவர்கள் - நம் வாழ்க்கை அப்படி அல்ல - ஒரு தின காலன்டர் போல - Limited - தேதிகள் எல்லாம் கிழிந்தவுடன் - வாழ்க்கையை தூக்கி எரிய வேண்டியதுதான் - ஆனந்தன் தூர் எடுத்து போல நம் மனதில் இருக்கும் சில வேறுபாடுகளை தூர் எடுத்து ஒன்றாக சேர்ந்து இருவர் புகழையும் வளர்ப்போமே - இதில் யாருக்கும் எந்த தோல்வியோ,தாழ்வோ வரப்போவதில்லை ---- இது என் தாழ்மையான வேண்டுகோள் - அவ்வளவுதான் !!
இரண்டாவது காரணம் ஒரு சுய நலம் ! ஆமாம் -- இதில் என் பெயர் தான் MGR க்கும் - அவன் தான் மனிதனில் NT க்கு இருப்பது போல - பேரில் மட்டுமே ஒரு சிறிய பொருத்தம் - மற்றபடி , இவர்களின் உயர்ந்த பண்புகளுக்கும் எனக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது ...
தொடரும்
இந்த படத்தை இப்படி அலசலாம் என்று நினைக்கிறேன் :
Part 1 : கதை சுருக்கம்
Part 2 : நடிப்புக்கு சிறப்பு சேர்த்தவர்கள் ( ஒரே ஒருவர் தான் இந்த படத்தில் என்றாலும் , ஓர் , இரண்டு பேர்களை சற்றே துணைக்கு சேர்த்துக்கொள்ளலாம் )
part 3 : மதுர கானங்கள் - சுனாமியினால் அழிக்க முடியாத பாடல்கள்
Part 4: கற்று கொள்ள வேண்டியவைகள்
Part 1 : கதைச்சுருக்கம்
"A pretty face is nothing if you have an ugly heart "
ரவி (MGR ) ஒரு வக்கீல் - நீதிக்கு ஒரு கலங்கரை விளக்கம் - நடப்பை பெரிதாக மதிப்பவன் - தன் தொழிலின் மூலதனம் , நேர்மையும் , நியாமமும் தான் என்று நம்புவன் - ஓவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவன் - அவனுடைய உயிர் நண்பன் - V .கோபால கிருஷ்ணன் ( VG ) - ஒரு டாக்டர் . இருவரும் ஒரு நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தார்கள் - இருவருக்கும் ஒரு அருவருப்பான இதயம் இல்லை - அதனால் அவர்கள் இருவருமே அழகான முகத்திற்கு சொந்த காரர்கள் ---- நீலா ( சரோஜா தேவி ) ஒரு மனோ வியாதி உள்ளவள் - சரித்திரத்தில் மிகவும் நாட்டம் உள்ளவள் - ஒரு சமயம் மகாபலிபுரத்திற்கு தன் தோழிகளுடன் செல்லும் போது எதிர் பாராதவிதமாக கீழே விழுந்து அடிபட்டதால் தன சுய நினைவை இழக்கிறாள் - பல்லவ அரண்மனையில் தானும் ஒரு இளவரசி என்ற எண்ணத்துடன் வாழ்கிறாள் - அவளை குனபடுத்த VG விரைகிறார் . இதன் நடுவில் காரில் தனியாக செல்லும் ரவி , இரவில் ஒரு பெண் தனியாக ரோடில் நடனமாடுவதை பார்த்து அவளை பின் தொடர்ந்து செல்கிறான்
மகாபலிபுரத்தில் ஆரம்பிக்கும் கதை சென்னை வழியாக மைசூர் சென்று மீண்டும் மகாபலிபுரத்தில் முடிவடைகிறது -
VG வைத்தியம் பார்க்க இருக்கும் பெண்ணும் , ரவி சந்தித்த பெண்ணும் ஒருவளே - நீலா தான் அது - நீலாவின் தந்தை அவள் நிலைமையை கண்டு வேதனை படுகின்றார் - அதுவே அவரை படுத்த படுக்கையாக்கி விட்டது - ஏகபட்ட சொத்துக்கு சொந்தக்காரரை கழுகுகள் சுத்தாமல் இருக்குமா ?- ஒரு கழுகு நம்பியார் ரூபத்தில் அவருடைய தம்பியாக அந்த வீட்டில் அவரை கொன்று சொத்தை அபரிக்க நினைக்கின்றது - மகளை கொன்று விட்டால் , பிறகு தந்தையை கொல்வது மிகவும் சுலபம் தானே ? - நீலாவின் தந்தையின் வேண்டுதல் படி ரவியும் . VG யும் அந்த வீட்டில் நீலா குணமாக வேண்டி அவள் வீட்டில் தங்குகிறார்கள் --- சிறிது நாளில் - நீலா மர்மமான முறையில் , மகாபலிபுரத்தில் இருக்கும் கலங்கரை விளக்கத்தின் உயரத்தில் இருந்த தள்ளப்பட்டு கீழே விழுந்து இறந்து விடுகின்றாள் -- அதை கேள்விப்பட்டு அவளுடைய தந்தையும் இறந்து ( கொல்லப்பட்டு ) விடுகிறார் --- நம்பியார் நீலாவின் உருவத்தில் அச்சாக இருக்கும் மல்லிகாவை ( சரோஜா தேவி ) - (அவருடைய தாலி கட்டாத மனைவியின் சகோதரி ) கொண்டு வந்து அவளை நீலாவாக நடிக்க வைக்கிறார் - சொத்துக்கள் இடம் மாறுகின்றன - ரவி ,மல்லிகாவை ஒரு இசை கச்சேரியில் எதேச்சையாக சந்திக்கிறான் - நீலாவின் மரணத்தில் ஒரு பெரிய மர்மம் இருப்பதை உணர்கிறான் - மல்லிகாவை வைத்து இந்த மர்மத்தை உடைக்கலாம் என்று VG யுடன் திட்டம் போடுகிறான் - பல திருப்பங்கள் - ரவி , மல்லிகாவை மணக்கிறான் - அவளை நீலா வைபற்றி உண்மை சொல்லாத வகையில் அவளை வேண்டா வெறுப்புடன் , துன்புறுத்துகிறான் . மல்லிகா வாழ்க்கையை வெறுக்கின்றாள் - தன் முடிவை தேடி அதே கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு செல்கிறாள் - நம்பியார் இருவரையும் சுட அங்கு தயாராக இருக்கிறார் - தன்னிடம் துப்பாக்கி உள்ள தையிரத்தில் நீலாவின் மரணத்திற்கும் , அவளுடைய தந்தையின் மரணத்திற்கும் தான்தான் காரணம் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார் - ரவியின் சமயோஜிதம் , போட்ட plan வெற்றி அடைகிறது - ரவியும் , மல்லிகாவும் உண்மையிலேயே இணைகிறார்கள்
சுபம்
தொடரும்
மதுரை மாநகரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 27 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதன் சுவரொட்டிகள், பேனர்கள் , புகைப்படங்கள் நமது
திரியில் பதிவிட அனுப்பி உதவிய மதுரை திரு. எஸ். குமார். அவர்களுக்கு
மீண்டும் நன்றி.
http://i57.tinypic.com/21mg7xi.jpg
ஆர். லோகநாதன்
Part 2 : நடிப்புக்கு சிறப்பு சேர்த்தவர்கள்
One of the hardest decisions you ll ever face in life is choosing whether to walk away or try harder
MGR : நடிப்பில் ஒரு புயலை பார்க்கிறோம் -- ஒரு வில்லத்தனம் நிறைந்த அதே சமயத்தில் மனிதாபிமானம் உள்ள வேடம் - இரண்டையும் அழகாக கையாண்டுள்ளார் - "பல்லவன் பல்லவி பாடட்டுமே" - இந்த பாடலில் அவர் நடித்த விதம் , காட்டும் சுறுசுறுப்பு , ஒரு திருஷ்ட்டி சுத்தி போட வேண்டும் - கதை வளைந்து நெளிந்து போனாலும் , அவரால் படம் தொய்வு இல்லாமல் செல்கிறது . நண்பனை அடித்துவிட்டு அதற்காக அவர் வருந்தும் காட்சி கல்லையும் கரைய வைக்கும் - " Try harder " - இதுதான் அவர் இந்த படத்தில் அடைந்த பெரிய வெற்றி ----
சரோஜா தேவி - நீலாவாகவும் , மல்லிகாகவும் இரண்டு வேறுப்பட்ட கதாபாத்திரங்கள் - இரண்டுமே "சபாஷ் " வாங்கக்கூடிய பாத்திரங்கள் - பார்க்கும் நமக்கெல்லாம் ஒரு பயம் வருகின்றது - பக்கத்து வீட்டுக்கு போவது போல , நினைத்தால் , கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு ஓடி போய் விடுகிறார்
நம்பியார் : எவ்வளவு படங்களில் வில்லனாக வந்தாலும் , இவன் வேற மாதிரி என்பதை போல நடிப்பவர் - கண்ணில் கொடூரம் - வார்த்தைகளில் விஷம் - இவை இரண்டும் இருந்தால் சுலபமாக கிடைப்பது உதை தானே - கை நிறைய வாங்குகிறார்
VG : MGR ருடன் நண்பனாக நடிக்க கொடுத்து வைத்தவர் - அளவாக வந்தாலும் அழகாக வருகிறார்
நாகேஷ் & மனோரமா : நகைச்சுவை பிரமாதம் - மூன்று கேள்விகள் , மனோரமாவை மணந்து கொள்ள - கடைசி கேள்வி பிரமாதம் - உங்கள் குழந்தை தொலைந்து விட்டது - நீங்கள் தீவிரமாக தேடுகிண்டீர்கள் - குழந்தை கிடைத்து விடுகிறது - உடனே என்ன செய்வீர்கள் ?? - நாகேஷ் உடனே - casual ஆக தேடுவதை உடனே நிறுத்திக் கொள்வேன் என்று கூறி ஜெயித்துவிடுவார் ----- அருமை . இன்னமொரு இடத்தில் ரவியிடம் - ரொம்ப நேரம் உங்களுடன் பேசிக்கொண்டு இருக்க முடியாது - இப்பொழுது தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் - நீங்கள் வக்கீல் - யாரவது பார்த்தால் பாவம் உடனே விவாகரத்து செய்யத்தான் உங்களிடம் பேசி கொண்டுருக்கிறேன் என்று நினைப்பார்கள் -- நாங்கள் வருகிறோம் ----
மற்றவர்கள் : சொல்லும்படியாக ஒருவரும் இல்லை
தொடரும்
Part 3 மதுர கானங்கள் - சுனாமியினால் அழிக்க முடியாத பாடல்கள்
The mind replays what the heart cannot delete
சிவகாமி ------ - இந்த பாடல் காலத்தை வென்ற பாடல் - ஒவ்வொரு தடவை கேட்க்கும் போதும் சுவை கூடுமே அல்லாமல் குறைவதில்லை - ஒரு மன்மதனும் , ரதியும் பாடுவதுபோல் இருக்கும் .
http://youtu.be/DjIwy5zY9JI
காற்று வாங்க போனேன் ----
" நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்க வில்லை ; கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்க வில்லை " காதலை எவ்வளவு மென்மையாக , சுத்தமாக , அழகாக எடுத்து சொல்கின்றன - பாடல் அல்ல ஒரு பைபிள் இது
சங்கே முழங்கு
http://youtu.be/xoV2U-G2ioA
தமிழை தூக்கி நிறுத்தி வைக்கும் பாடல்
என்னை மறந்ததேன் தென்றலே ?------ இன்னமொரு அருமையான பாடல் - சுசிலாவின் தேன் குரலில்
http://youtu.be/UOOgtrapjB0
பல்லவன் பல்லவி பாடட்டுமே ! - சுறு சுறுப்பு குறைந்தவரா நீங்கள் - மருந்து வேண்டாம் , மருத்துவர் வேண்டாம் , டானிக் வேண்டாம் . இந்த பாடல் உங்களை சரி படுத்திவிடும் .
http://youtu.be/gFmetxJOhR4
என்ன உறவோ , என்ன பிரிவோ - அருமையான பாடல் வரிகள்
http://youtu.be/yrXimulam08
தொடரும்
"Always remember that your present situation is not your final destination – the best is yet to come !"
Part 4: கற்று கொள்ள வேண்டியவைகள் :
Best yet to come - என்பதை விட நம்மிடம் இருக்கும் பல "best " க்களை காப்பாத்தினால் - இந்த மாதிரி நல்ல படங்களையும் சேர்த்துதான் , எவ்வளவு நன்றாக இருக்கும் !! -
நல்ல நட்பு , செய்யும் தொழிலில் நேர்மை , பொய் சொல்லாத வக்கீல்தன்மை , சூழ்நிலையை சந்தோஷமாக்குதல் - இந்த படம் சொல்லும் பாடங்கள் இன்னும் பல ---
என் எல்லா பதிவுகளையும் பொறுமையுடன் படித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
திரு லோகநாதனனின் வேகத்துடன் போட்டி போட முடியவில்லை - இமைகளை சற்றே மூடுவதற்குள் - 300 பதிவுகளை போட்டு விடுகிறார் - ஒரே நொடியில் என் பதிவுகள் பல பக்கங்கள் பின்னாடி சென்று விடுகின்றதே ! hats off to you sir ! --
2015 இல் மீண்டும் சந்திப்போம் .
நன்றி
அன்புடன்
ரவி
My double side desktop calendar for 2015
http://i61.tinypic.com/308jwyf.jpg
THIRUVALLIKENI
http://i59.tinypic.com/2co1pq0.jpg
[SIZE=4]PYCROFTS ROAD, THIRUVALLIKENI[/SIZE
http://i60.tinypic.com/1zmkq53.jpg
CHEPAKKAM
http://i61.tinypic.com/eqx9g3.jpg
CHEPAAKKAM
http://i62.tinypic.com/sevadg.jpg
அன்பிற்கினிய திரு.ரவி சார் அவர்களுக்கு,
தாமதத்துக்கு மன்னிக்கவும். நேற்று திரிக்கு வரமுடியவில்லை. இன்றுதான் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். கேளம்மா சின்னப் பொண்ணு கேளு பாடலுக்கு உங்கள் விளக்கம் அற்புதம். அதற்கு நன்றி தெரிவித்து பதில் போடலாம் என்று பார்த்தால், அதற்குள் கலங்கரை விளக்கத்தை அலசி இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள். புரட்சித் தலைவரின் எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று கலங்கரை விளக்கம். படத்தை அருமையாக அலசியுள்ளீர்கள். பல்லவன் பல்லவி... பாடலில் ராக பாவங்கள் பாடலில் விளங்க... பாராவில் மக்கள் திலகத்தின் நடன அபிநயங்கள் கொள்ளை அழகு. அதிலும், பாட்டின் முடிவில் சரோஜாதேவி அவர்களின் கையை பிடித்துக் கொண்டு குதித்துக் கொண்டே சுற்றுவது மிகவும் கடினம். நின்ற இடத்தில் குதிக்கலாம். அல்லது குதிக்காமல் சுற்றுவதும் சுலபம். குதித்தபடியே வட்டமாக சுற்றுவது ரொம்ப கடினம். அதை அனாயசமாக செய்திருப்பார். நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகரான நீங்கள் மக்கள் திலகத்தின் படங்களை உங்கள் பார்வையில் இருந்து அலசுவது எங்களுக்கு வேறொரு கோணத்தில் அதைப் பார்க்க உதவுகிறது.
அதிலும் இடையிடையே நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் ஆங்கிலத் தலைப்புகளும் கவிதையும் உங்கள் உயர்ந்த விசாலமான குணநலன்களை காட்டுகிறது. தின காலண்டர் போல தேதிகள் கிழிந்தவுடன் நம் வாழ்க்கையை தூக்கி எறிய வேண்டியதுதான் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. இப்போது ஆயுளில் பாதிக்கும் மேல் கடந்து விட்டோம். இன்னும் 25 ஆண்டுகள் இருப்போம் (அதுவே அதிகம்) என்று வைத்துக் கொண்டாலும் (25x365) 9,125 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் நமக்கு என்ன ஈகோ வேண்டியிருக்கிறது? புத்தாண்டில் சந்திப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். இன்னும் 3 நாட்கள் உங்கள் பதிவுகள் வராது என்பது எங்களுக்கு ஏமாற்றமே. நட்புக்கோர் கலங்கரை விளக்கம் நீங்கள். நன்றிகள் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
CHEPAAKKAM
http://i60.tinypic.com/33w4fac.jpg
தலைவரின் நினைநாள் அஞ்சலி தொடர்பான படங்களையும் போஸ்டர்களையும் பதிவிடும் நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றிகள். மேலே உள்ள போஸ்டர் அருமை. திரு.மதுரை குமார் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
CHEPAAKKAM
http://i62.tinypic.com/2hzzg2.jpg
CHEPAAKKAM
http://i62.tinypic.com/156vdj5.jpg
CHEPAAKKAM
http://i57.tinypic.com/11j2fc1.jpg
CHEPAAKKAM
http://i59.tinypic.com/4lnias.jpg
திரு.கோவிந்தராஜ் சார், அருமையான தகவல்களை பதிவிட்டுள்ளீர்கள். நேரத்தைப் பார்த்தால் விடிய, விடிய தூங்காமல் பதிவிட்டிருப்பது தெரிகிறது. தூக்கத்தை துறந்து தலைவர் புகழ் பாடும் உங்களுக்கு நன்றிகள். மேலே உள்ள தகவலும் தலைவரின் அட்டகாச ஸ்டைலும் என்ன உயர்வாக சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
CHEPAAKKAM
http://i59.tinypic.com/v7cha9.jpg
CHEPAAKKAM
http://i59.tinypic.com/2usv2w2.jpg
CHEPAAKKAM
http://i59.tinypic.com/rkv634.jpg
http://i61.tinypic.com/fu58qv.jpg
நாடோடி மன்னன் படப்பாடலை வண்ணத்தில் வெளியிட்ட திரு.சைலேஷ்பாசு அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
2,000 பதிவுகள் கண்ட திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
CHEPAAKKAM
http://i58.tinypic.com/6oipnr.jpg
NEAR ELEPHANT GATE JUNCTION
http://i60.tinypic.com/2cs9mx4.jpg
NEAR ELEPHANT GATE JUNCTION
http://i62.tinypic.com/14s01t.jpg