http://i64.tinypic.com/kbpvro.jpg
Printable View
madurai -central 27-11-2015 -3.12.2015.
Makkal thilagam M.G.R. In ''olivilakku ''- one week collection rs.1,01,000/-
MESSAGE FROM KUMAR MADURAI
makkal thilagam mgr in
oli vilakku
now running at solai haal - dindugal.
message from kumar - madurai
http://s3.postimg.org/sto8f2ug3/WP_20151129_009.jpg
விரைவில் கோவை டிலைட்டில்
http://s30.postimg.org/envoedusx/FB_...ed_Picture.jpg
மக்கள் திலகத்தின் பக்தரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகருமான திரு மயில்சாமி அவர்கள் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயார் செய்து எடுத்து சென்றபோது எடுத்த படம். அவரின் இந்த மனிநேயப்பணிக்கு மக்கள் திலகத்தின பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மழை வெள்ளம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் உடமைகளையும் விட்டு வைக்கவில்லை.
http://i67.tinypic.com/2gwuhkg.jpg
நம் தெய்வத்தின் வீட்டை பாதுகாக்காத யாராக இருந்தாலும் சரி..அவர்களை நிச்சயம் நம் தெய்வம் (எம்ஜியார்) தண்டிப்பார். ஆட்சியில் அமரவும், புகழ் அடையவும் நம் தலைவர் தேவை..அவர் வாழ்ந்த வீடு இன்று குட்டிச்சுவர்..நன்றி கெட்ட மனிதர்கள்..நமது உயிர் உள்ள இடம் நமது உடல் கிடையாது..அது ராமாவரம் தோட்டத்தில் உள்ளது...என்னை மிகவும் பதித்த செய்தி இது..என்னால் சாபம் மட்டும்தான் கொடுக்கமுடிகிறது...காலம் நிச்சயம் பதில் சொல்லும்..காத்திருப்போம்..
எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே தமிழகத்தின் தலைநகரில் அன்றைய நிலவரப்படி வரலாறு காணாத வெள்ளம். சென்னை நகரே முழுகக் கூடிய அபாயம். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் நிலவியது. இதே ஆர்.கே.நகரில் மக்களின் குமுறல் ஒலிக்கத் தொடங்கியது.
அப்போது அதிமுகவும் நடிகர் திலகம் சார்ந்த காங்கிரஸும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்த நேரம்.
ஆர்.கே.நகரில் ராஜசேகரன் களமிறங்கி ஒரு வீட்டின் வாசலில் திண்ணையில் படுத்து வெள்ள நிவாரணப்பணிகளை முன்னின்று செய்து மக்களின் இன்னலைத் தீர்ப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவு மற்றும் அதியாவசியப் பொருட்கள் வழங்குவது, என எந்தெந்த வகையில் உதவி தேவைப்பட்டாலும் உடனுக்குடன் செய்து கொடுத்தார். இதே போல சிவாஜி மன்றத்தினர் தமிழகம் முழுதும் தீவிரமாக அவரவர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.
இன்றைக்கும் ஆர்.கே.நகர் மக்களின் நினைவில் ராஜசேகரனின் அபாரமான சேவை பசுமையாக உள்ளது. எம்.ஜி.ஆர். கட்சியாயிற்றே என சுணக்கம் காட்டவில்லை நடிகர் திலகம். தன்னுடைய ரசிகர் மன்றங்களை முழுதும் மக்கள் பணியில் ஈடுபடச் செய்தார்.
அது மட்டுமா, ஒரு வார்த்தை அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி நடிகர்களை ஒருங்கிணைத்து அன்றைய நிலவரப்படி ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்து நிவாரணப் பணிக்கு அளித்தார். மக்கள் பணத்தில் அதிகம் செலவு செய்யக் கூடாது என சக நடிகர்களுக்கும் அறிவுறுத்தி அனைவருமே ரயிலில் மூன்றாம் வகுப்பில் கட்டை இருக்கையில் தான் பயணம் செய்தனர். எம்.ஜி.ஆர். ஆட்சி ஆயிற்றே, நான் ஏன் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை, அரசைக் குறை கூறி்க் கொண்டிருக்கவில்லை. அங்கு நடிகர் திலகத்தின் கண் முன் தெரிந்தது மனித நேயம் மட்டுமே அரசியல் அல்ல. அது மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை. அரசுக்கு நிவாரண நிதி வழங்கியதோடு நிற்காமல், அன்னை இல்லத்திலும் ஏழைகளுக்கு அந்த வெள்ள நீர் வடியும் வரையில் அன்னதானம் செய்தார்கள்.
சும்மாவா நாங்கள் சொல்கிறோம் நடிகர் திலகத்தை மக்கள் தலைவர் என்று.
அரசியலிலும் சரி, தொழிலிலும் சரி போட்டியாளர்களாயிருந்தாலும் அந்த அந்த கடுமையான மழை வெள்ள நேரத்தில், சிவாஜியும் எம்.ஜி.யாரும் மக்களுக்கு ஆபத்து என்கிற போது ஓடி வந்தார்கள், தங்களுடைய உணர்வில் செயற்கைத் தனமில்லாமல் உள்ளன்போடு மக்கள் பணியில் ஈடுபட்டார்கள், உதாரண புருஷர்களாயிருந்தார்கள். நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள். நல்ல வழியையே காட்டினார்கள்.
இனிமேல் கனவில் கூட அப்படிப்பட்ட காலம் வராது. அது ஒரு பொற்காலம்.
Courtesy - facebook
rks
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி .
சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் திலகத்தின் ராமாவரம் இல்லத்தில் இருந்து அவருடைய பொக்கிஷங்கள் அடித்து செல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை யாக உள்ளது . ராமாவரம் வீட்டில் இருந்தவர்கள் மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை உரிய பாதுகாப்புடன் வைக்க தவறி விட்டார்கள் .
மக்கள் திலகம் நடித்த 30 திரைப்படங்களின் கோவை விநியோகஸ்தரும் எனது அன்பு நண்பருமான திரு உலகப்பன் அவர்களின் கோவை அலுவலகம் சென்றேன். அப்போது எடுத்த புகைப்படம்.
http://s10.postimg.org/8qsri19ax/WP_20151129_059.jpg
"ஒளி விளக்கு"- காவியம்- உலக நடிகர்களில் "100"- நூறாவது திரைப்பட ம் - மிக முக்கிய பங்கு மக்கள் திலகம் அவர்கள் வாழ்வில் அமைந்தது போல யாருக்கும் அமைய வில்லை... மறு வெளியிடுகளில் இடைவெளி அன்றி பட்டையை கிளப்புவது இவர்தம் காவியங்கள் மட்டுமே...
சிரித்து வாழ வேண்டும் படத்தில் பொழுதுபோக்கு விடுதி நடத்தி வந்த ரஹ்மான் பாய் ஆக வரும் மக்கள் திலகம், இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் பொன்மனச் செம்மலின் ஆலோசனைப்படி அந்த விடுதியை மூடி விடுவார். அங்கு வேலை செய்தவர்கள் கட்டில், மேஜைகளை எல்லாம் எடுத்துச் சென்று விடுவார்கள். கடைசியில் விடுதி காலியாக கிடக்கும். நகைச்சுவை நடிகர் வீரப்பன் வந்து ரஹ்மான் பாயிடம் தலையை சொறிந்து கொண்டே அவர் கையை பிடித்து விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை ஆசையாக பார்ப்பார். உடனே, ஏழைகளுக்கு அள்ளித் தரும் மக்கள் திலகம் புன்னகையுடன் அந்த மோதிரத்தை கழட்டி அவரிடம் கொடுத்து விடுவார். அவரும் வாங்கிக் கொண்டு போய்விடுவார்.
பிறகு, விடுதியில் ரஹ்மான் பாய் மட்டுமே தனியே நிற்பார். முழங்கையை கொஞ்சம் உயரமான மேடை மீது ஊன்றியபடி சாய்ந்து நிற்பார். சோகமான நிலையிலும் என்ன ஒரு சொக்க வைக்கும் ஸ்டைல் போஸ்?
அப்போது, இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் புரட்சித் தலைவர், விடுதிக்கு வருவார். சூழ்நிலையை பார்த்து நிலைமையை புரிந்து கொண்டு கண்களில் கோத்திருக்கும் நீருடன் அழுகையை அடக்கிக் கொண்டு ‘ரஹ்மான் பாய்...’ என்று அழைத்துக் கொண்டே விடுதி வாசலில் இருந்து கைகளை நீட்டியபடி ஓடி வருவார். எதிர்பக்கத்தில் இருந்து ‘ராமு பையா..’ என்று கூவிக் கொண்டே ரஹ்மான் பாயாக வரும் மக்கள் திலகம் ஓடிவருவார். இருவரும் அணைத்துக் கொண்டு கண்கலங்குவார்கள். வசனமே இல்லாமல் இரண்டு பேரின் எண்ண ஓட்டங்களை மக்கள் திலகம் காண்பித்திருப்பார். என்னை இந்த காட்சி மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு முறை இந்த காட்சியை பார்க்கும்போதும் நம்மையறியாமல் அழுகை வரும்.
தனக்கென்று வேண்டி விரும்பி எந்த பொருளையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல், தனது ராமாவரம் தோட்டத்து வீட்டையும் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு அளித்து விட்டார்.
கொல்ல வந்த துப்பாக்கி குண்டுக்கும் தனது தொண்டையில் அடைக்கலம் கொடுத்த கலியுக கர்ணனாம் நம் தலைவர், இதுவரை வெள்ளத்துக்கும் மழைக்கும் தனது பொருளை எதுவும் கொடுக்காமல் இருந்தார். இப்போது, அதையும் செய்துவிட்டார். தான் பயன்படுத்திய கிராமபோன் போன்றவற்றை மழை, வெள்ளத்துக்கு காணிக்கையாக அளித்து விட்டார். செய்தி படித்தபோது ரொம்ப மனசு வருத்தமாக இருந்தது.
செய்தியை சன் டிவி நியூசில் பார்த்தபோது சிரித்து வாழ வேண்டும் படக் காட்சியும் வெள்ளத்துக்கும் தனது பொருட்களை புரட்சித் தலைவர் கொடுத்து விட்டார் என்பதும்தான் என் நினைவுக்கு வந்தது.
1985 ஆம் ஆண்டில் அப்போது ஒருமுறை ராமாவரம் தோட்டத்தில் மழையால் வெள்ளம் புகுந்தது. அப்போது, பொன்மனச் செம்மலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அப்படியும் தோட்டத்தில் இருந்து வெளியேற மறுத்தவரை மற்றவர்கள் வற்புறுத்தி அழைத்து சென்று ஓட்டலில் தங்க வைத்தனர்.
ராமாவரம் தோட்டத்தில் இருந்து மக்கள் திலகம் பயன்படுத்திய சில பொருட்கள் வெள்ளத்தில் போனாலும் புரட்சித் தலைவரின் நினைவு இல்லத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி, கண்ணாடி, வாட்ச், பூட்ஸ், வேட்டி, ஜிப்பா, பேனா, படங்களின் வெற்றி விழா கேடயங்கள் உள்பட பல பொருள்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் நமக்கெல்லாம் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பது நமக்கு பெரிய ஆறுதல். அதையெல்லாம், மறுபடியும் ஒருமுறை போய் பார்த்தால்தான் மனசு திருப்தியாக இருக்கும்.
http://i66.tinypic.com/33uz5oo.jpg
மக்கள் திலகம் அவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்களுடைய குறையைக் கேட்கிறார். 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் இது. மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அதிகமாக உள்ளது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது சமயம் வெள்ளம் இந்த ஊருக்குள் புகுந்து விடும் இது வழக்கம். மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சரான பிறகு, இப்படி மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இது ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் உடனடியாக அந்த இடத்திற்கு சில முக்கிய அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வை இட்டார். அது சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தது மட்டுமல்லாமல், இனிமேல் இப்படி இந்த ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் கட்டும்படி உத்தரவு இட்டார். காலதாமதம் செய்யாமல் தடுப்புச் சுவரும் விரைவாக கட்டப்பட்டது.
அந்தப் பகுதியல் வசிக்கும் மக்களுக்கு இந்த வெள்ளப் பெருக்கு பற்றிய கவலை அறவே ஒழிந்தது. இப்படிப் பட்ட வள்ளல் வசிக்கும் ராமாபுரம் தோட்டம் வீட்டுக்குள்ளும் இதே ஆற்று வெள்ளம் புகுந்தது வெள்ளத்தின் சீற்றத்திற்கு இவர் யார், அவர் யார் என்று பாகுபாடு கிடையாது. 1985ல் மக்கள் திலகம் அவர்கள் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆன பிறகு, அந்த வருடம் மழை தமிழ்நாட்டில் மிக அதிகமாக பெய்தது. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒரு வாரமாக ஓயாத பெரும் அளவில் மழைபெய்தது. அது சமயம் எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஆறு அது எம்.ஜி.ஆர். தோட்டத்தை ஒட்டியவாறு செல்கின்றது. இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு கண்மூடித் தனமாக சென்று இரவு நேரத்தில் மக்கள் திலகம் வசிக்கும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்து, அது மேலும் அதிகமாகி வெள்ளம் வீட்டிற்குள்ளேயும் புகுந்துவிட்டது. தோட்டத்தில் உள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிலைமை என்ன ஆகி இருக்கும்.
மக்கள் திலகம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்த்து உடல் நலம் பெற்று, சென்னைக்கு வந்து மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இனிமேல் முன்போல் நீங்கள் ரொம்பவும் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது இப்படி சில விஷயங்களை சொல்லி உள்ளார்கள் டாக்டர்கள் அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்கள் முன்போலவே அரசுப் பணிகளையும், அரசியலையும் கவனிக்க தவறவில்லை. தனக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் கூட வரக்கூடாது என்று நினைக்கும் வள்ளலுக்கு, அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கும் அளவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அவர் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இம்மாதிரி வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து பழகிப் போனவர். ஒரு உதாரணம் இவருடைய தந்தை கோபாலன் அவர்கள் இறந்து போனவர் இவருக்கு முன்னால் பிறந்த இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் நோயால் இறந்து போனவர்கள். பிறகு, தான் ஒரு சினிமா நடிகர் ஆனதும், அது சமயம் இவருக்குத் திருமணம் ஆகி, அந்த மனைவி ஒரு வருடத்திலேயே இறந்து போனதும், அடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவி, சில வருடங்களில் உடல் நலமில்லாமல் இறந்து போதும், இதைவிட தன்னை தங்கமகனே! நீ இந்தத் தரணியில் நீ ஒரு தனி மனிதனாக புகழோடு வாழவேண்டும் என்று தன்னுடைய தாய் அடிக்கடி சொல்வார். அந்தத் தாயும் சிலமாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். பிறகு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் தனக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடன் பிறந்த அண்ணனும் இறந்து போனார்.
இப்படி இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கும் இதயத்திற்கு தன் வீட்டுக்கு தண்ணீர் புகுந்து விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாரே தவிர, கவலைப்படவில்லை. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த விஷயத்தை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், மேலே இருந்து உடனே கீழே வந்து விட்டார். அது சமயம், கீழே வீடு முழுவதும் ஒரு அடி தண்ணீர் நின்றது. உடனே வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு, வெளியே தோட்டத்தில் தண்ணீர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
தன்னுடைய பாதுகாப்பாளர் (போலீஸ்) அவரை அழைத்து வேலை ஆட்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இரவில் அவர்களுடைய வீட்டுக்குப் போகாமல், தோட்டத்திலேயே தங்குபவர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மேலே போய் இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் மேலே போய் இருந்து கொள்ளுங்கள். ஆடு, மாடுகள் எல்லாம் என்ன ஆச்சு? இப்படி தண்ணீருக்குள் நின்று, தன்னுடைய தோட்டத்திற்கு 1962-ல் குடிவந்த பிறகு, அதாவது 1985 நவம்பர் மாதம் 25 வருடம் ஆகிவிட்டது. இப்படி ஒரு வெள்ளம் தோட்டத்திற்குள் புகுந்தது இல்லை இதுவும் ஒரு சோதனையா என்று பெருமூச்சு விட்டார் இதைபிறகு மற்றவர்களிடமும் சொன்னார். அடுத்தநாள் தோட்டத்திற்குள் புகுந்த தண்ணீர் குறைந்த பாடில்லை. மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் திலகம் அவர்களை, உடனே தோட்டத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஒரு நல்ல ஒட்டலில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் முடிவு எடுத்து, மக்கள் திலகம் அவர்களை தோட்டத்தில் இருந்து அழைத்து வரலாம் என்றால் அவருடைய கார்கள் அனைத்தும் தண்ணீருக்குள் நிற்கிறது. அதனால் அரசாங்கக் காரில் புறப்பட்டார் ஜானகி அம்மாளுடன், மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்க வைத்தார்கள். பிறகு, அங்கிருந்து கொண்டே கோட்டைக்குச் சென்று, வெள்ளநிவாரணப் பணிகளை கவனித்தார். சென்னையில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் மிக மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகியது. தோட்டத்திற்குள் இருந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல் அனைத்தும் காப்பாற்றப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது.
தோட்டதிற்குள் புகுந்த தண்ணீர் வெளியேறிய பிறகு, வீட்டுக்குள் புகுந்த சில பாம்புகளை அடித்துவிட்டு, வீட்டைக் கழுவி, சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வாரம் ஓட்டலில் தங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த கதி என்றால் தமிழ் நாட்டின் ஏழை மக்களுடைய நிலைமை எப்படி இருந்து இருக்கும். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். மழையில் நனைந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கெல்லாம் நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடு செய்த, அந்த முதல்வருடைய வீட்டுக்குள் பெரும் வெள்ளம் புகுந்து, அவர் வெளியே வரமுடியாமல் இருந்ததை என்னவென்று சொல்வது.
COURTESY = NET
மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டம் முழுவதும் மழை வெள்ளத்தில் பலத்த சேதாரம் ஏற்பட்டு இருக்கும் நிலை கண்டு மனம் வருந்தும் நேரத்தில் 2011ல் திரு எம்ஜிஆர் விஜயன் நினவு தினம் அன்று நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எடுத்த நிழற் படங்களை இங்கே பகிர்ந்து கொண்டு
மக்கள் திலகத்தின் கம்பீரமான இல்லத்தின் படங்களை மீண்டும் பதிவிட்டு அந்த நாள் இனிய நினைவுகளை நினைத்து இன்றைய நிலையினை சற்று மறக்க விரும்பும் பல ரசிகர்களில் நானும் ஒருவன் .
http://i63.tinypic.com/2m5z968.jpg
http://i66.tinypic.com/rh6at4.jpg
SENIOR MAKKAL THILAGAM MGR DEVOTEE THIRU DHAMOTHARAN .
http://i66.tinypic.com/2wfiz9h.jpg
BANGALORE MAKKAL THILAGAM MGR FANS
தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சன் டி .வி. குழுமம் பேட்டி எடுக்கும்போது, அமைந்தகரை பெண்மணி, நம் மக்கள் திலகம் ஆட்சியில் இருந்த போது, இது போன்ற வெள்ளத்தை பார்த்ததாகவும், அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 75 கிலோ அரிசி வழங்கியதாகவும், அவரது பெருமையை நினைவு கூர்ந்தார். விளம்பரமேயின்றி செய்த பல செயல்களால், இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறார், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல். நான் வணங்கும் என் குல தெய்வம் பாரத ரத்னா, டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள், ஜால்ராக்களை என்றுமே ஊக்குவித்தது கிடையாது
மனித நேயத்துடன், மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, நோய்வாய்ப்பட்ட கால கட்டத்தில் கூட, குளு குளு வாச ஸ்தலங்களுக்கு செல்லாமல், ஒய்வின்றி உழைத்த, மக்களின் உண்மை தலைவர்தான், பொற்கால ஆடசி தந்த நம் பொன்மனச்செம்மல். அதனால் தான் அவரை கலியுக கடவுளாக பார்க்கின்றோம்.
இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த இந்த மனிதப்புனிதர் போல் இனி ஒருவரை இந்த தமிழகம் காணப்போவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை..
வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களின் துயரம் ஒரு புறம். மறு புறம் என் தங்கத்தலைவன் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வேதனை. சோகத்தின் உச்ச கட்டத்துக்கே சென்று விட்டேன். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் பயன் படுத்திய பொருட்களை முதல் தளத்தில் எடுத்து சென்று பாது காக்க தவறியது துரதிருஷ்டமே ! ,