http://i67.tinypic.com/2pz0co7.jpg
Printable View
25.4.1968
49 th ANNIVERSARY
http://i65.tinypic.com/9kqxec.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பணக்கார குடும்பம் -
24.4.1964 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் . மக்கள் திலகத்தின் நவரச நடிப்பு நம்மை எல்லோரையும் மயக்கியது .
கவியரசரின் வரிகள் ''என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே ''- 1964ல் ஒலித்த குரல் .....1967 முதல் இன்று வரை 49 ஆண்டுகளாக ...
தொடர்ந்து ஒலிக்கபோகும் பாடல் . என்ன நிதர்சனமான உண்மை .
கவியரசர் எழுதினார்
மெல்லிசை மன்னர்கள் இசையில்
பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
மக்கள் திலகம் - மணி மாலா பாடி நடித்தார்கள் .
மக்கள் திலகம் வாழ்ந்து காட்டினார் .
நம் திராவிட ஆட்சி தொடர்ந்தது .... தொடர்கிறது ... தொடரும் ...
அதுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
TIMES OF INDIA-19/04/2016
http://i63.tinypic.com/14949bt.jpg
இன்று (24/04/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " ஒளிபரப்பாகிறது
http://i66.tinypic.com/k5mat.jpg
தகவல் உதவி :மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
thalaivar rerelease records
http://i1170.photobucket.com/albums/...ps4bud8e6o.jpg
courtesy bsr
aayirathil oruvan records 2007
http://i1170.photobucket.com/albums/...psucfuwsdq.jpg
புரட்சித்தலைவருக்கு நூற்றாண்டு விழா கொண்டடாடும் காலமிது***
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியலிலும் திரையுலகிலும் திருப்புமுனையாக அமைந்தவர் புரட்சித்தலைவர் mgr அவர்கள்
கலைத்துறையின் மூலம் சமூக விழிப்புணர்வு சிந்தனைகளையும் மனிதநேயத்தையும் சத்துவத்தையும் உழைப்பின் பெருமையையும் போதித்து புரட்சியை ஏற்படுத்தியவர்
அரசியலில் ( கருணாநிதியால் ) ஊழல் லஞ்சம் வறுமை தலைவிரித்தாடியபோது மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பேற்று ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றவர்
வாரி வாரி வழங்கிய வள்ளல்,
உலகின் தூய்மையான உணவே தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் உணவே எனகூறி முன்மாதிரியாக திகழ்ந்தவர்
கொடுமை...
இடம்: கோவில்பட்டி
http://i1170.photobucket.com/albums/...psmxzlqemj.jpg
தலைவரை அவரின் எதிரி கட்சி கூட இன்றும் தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் இப்படி ஒரு தலைவர் இனி ஒரு முறை இந்த தமிழகம் காணுமா ?
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள்
கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.
Arasa Kattalai (1967)
M.G.R, B. Saroja Devi, Jayalalithaa, M.N. Nambiar, C.K. Nagesh, R.S. Manohar, C.T. Rajakantham, ‘Friend’ Ramasami, S.A Asokan, Madhavi, Chandrakantha, A. Sakunthala, ‘Kottapuli’ Jayaraman, Gundumani, P.S. Veerappa and K.R. Ramasami (Guest appearance)
Arasa Kattalai was directed by M.G. Chakrapani. He also played a cameo role in the film. It was written by Sornam, based on the story created by MGR Pictures Story Department. The story of Arasa Kattalai deals with a ruler of Kumarinadu (Veerappa in a guest role), a despotic king, who is aided by his ambitious and villainous minister (Manohar) and also Vijayan (MGR) who is the leader of the common people.
Vijayan loses his father due to the villainy of the king, and therefore, he plans to take revenge in the middle of the night by killing him. The king and Vijayan engage in a sword fight, and finally, the king, who is greatly impressed with Vijayan’s skills, announces that he will rule Kumarinadu and kills himself. Prior to that, he hands over his daughter (Saroja Devi) to his custody and expresses his desire that they must get married. This ignites the minister’s anger and he hatches a plan to kill Vijayan.
As expected, the story goes through several twists and turns and ends with Vijayan marrying the princess. The highlights of the film were the sword fights between MGR and Manohar (stunts by Shyamsundar), the song and dance sequences with MGR and Saroja Devi, and also with a 19-year-old Jayalalithaa (it is for the first time that her name was affixed with Kavarchi Kanni in the tiltle), and the dialogues in chaste Tamil penned by Sornam.
http://i66.tinypic.com/2dr5u8x.jpg
The music composed by K.V. Mahadevan, assisted by his able disciple Pugazhendi, was a big hit too. The film has seven songs rendered by T.M. Soundararajan and P. Susheela, with lyrics by Vaali, Alangudi Somu and Muthukkoothan.
Some songs like ‘Aadi vaa…aadapiranthavaley aadivaa’ (voice: TMS; lyrics: Muthukkoothan) ‘Vettaiyaadu vilaiyaadu’ (voices: TMS and P. Susheela; lyrics: Alangudi Somu) were immensely popular.
Cinematography was by A Shanmugam and the film was produced by M.C. Ramamurthi under banner of Sathyaraja Pictures and made at Sathya Studios. In spite of excellent cast, songs and dances.
courtesy - the hindu 24.4.2016
26.4.1957
MAKKAL THILAGAM MGR IN 'RAJA RAJAN '' 59TH ANNIVERSARY.
http://i67.tinypic.com/wt6gqx.jpg
நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா
இப்படி குடிச்சு உடம்பைக் கெடுத்து வீணா பொழுது போக்குறீங்களே. இந்த நேரத்திலை நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா?' நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் வரும் பாடலின் இடையில் எம்ஜிஆர் பேசும் வசனம் இது. பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நாயகன் குடிப்பது போன்ற காட்சி இருக்காது. விதிவிலக்காக அவரது நூறாவது படமான ஒளிவிளக்கில் அவரே குடித்துப் போட்டு வருவதான காட்சி இருந்தது. அப்படிக் குடித்து விட்டு வரும் அவரை நாலு எம்ஜிஆர்கள் வந்து „தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?' என்று கேட்டு „மதுவால் விலங்கிலும் கீழாய் நின்றாய்' என பாடி விட்டுப் போவார்கள்.
courtesy - ஆழ்வாப்பிள்ளை- net
சிரிக்கும் சிலை, பவானி, இணைந்த கைகள், மாடி வீட்டு ஏழை, அன்று சிந்திய ரத்தம் என்று சில படங்கள் எம்ஜிஆர் நடித்து இடையில் நின்று போன திரைப்படங்கள். இதில் பவானி திரைப்படத்திற்கு கதை எழுதி, தயாரிப்பாளராகவும் கண்ணதாசனே இருந்தார். நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு பானுமதி ஜோடி. பத்து வருடங்களாகியும் படம் முடியவில்லை. அதற்குள் எம்ஜிஆர் சரோஜாதேவியுடன் இணந்து நடித்து அடுத்த கதாநாயகி ஜெயலலிதாவுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார். கண்ணதாசனுக்கு இழப்புகள் வராத வண்ணம் பவானி திரைப்படத் தயாரிப்புச் செலவுகளை எல்லாம் எம்ஜிஆர் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
1967இல் பவானி திரைப்படக் கதையை சற்று மாற்றி இணைந்த கைகள் திரைப்படத்தில் சிலவற்றைச் சேர்த்து உருவானதுதான் அரச கட்டளை. பகுத்தறிவுப் பட்டறையில் இருந்தாலும் படத்திற்குப் பெயர் வைப்பதில் இராசி பார்த்துக் கொள்வார்கள். எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் வெளி வந்து பெருவெற்றி கண்ட நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு ஏழு எழுத்துக்கள். அரச கட்டளை திரைப்படத்திற்கும் ஏழு எழுத்துக்கள்தான்.
அரச கட்டளை திரைப்படத்தை தனது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்திருந்தார். எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் சத்தயராஜா பிலிம்ஸ் சார்பாக எம்ஜிஆரின் அண்ணனின் பிள்ளைகளான எம்.சி.இராமமூர்த்தி, சத்யபாமா இருவரும் தயாரித்திருந்தார்கள்.
படம் எடுக்கும் பொழுது இருந்த கதைக்கும் படத்தை முடிக்கும் பொழுது இருந்த கதைக்கும் நிறையவே வேறுபாடு. பவானி திரைப்படக் கதையின் படி இறுதியில் நாயகன் இளவரசியை மணம் செய்கிறான். அவனது அத்தை மகள் துறவியாகப் போகிறாள். அரச கட்டளை படத்தை எடுத்து முடிக்கும் பொழுது நாயகன் அத்தை மகளை மணக்கிறான். இளவரசி இறந்து போகிறாள் என்று மாற்றி விட்டார்கள். சரோஜாதேவியின் திருமணத்தோடு அவரின் பாத்திரம் படத்தில் குறைக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு அதிகமாகச் சேர்த்து விட்டார்கள். அரச கட்டளை படம் எடுக்கும் பொழுது இனி ஜெயலலிதாதான் எம்ஜிஆரின் புது நாயகி என்ற நிலை வந்து விட்டிருந்தது. நாடோடி மன்னன் திரைப் படத்தில் தன்னுடன் அதிக படங்களில் நடித்த பானுமதியை சாகடித்து எம்ஜிஆர் சரோஜாதேவியை திருமணம் செய்து கொள்வார். பானுமதியின் அன்றைய நிலைதான் அரச கட்டளையில் சரோஜாதேவிக்கும் வந்திருந்தது.
அரச கட்டளை திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே என்றும் கேட்கக் கூடியவை. ஆலங்குடி சோமு, கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் வாலி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். „வேட்டையாடு விளையாடு';, „என்னைப் பாட வைத்தவன் ஒருவன்', „முகத்தைப் பார்த்ததில்லை', புத்தம் புதிய புத்தகமே', „ஆடிவா ஆடிவா', „பண்பாடும் பறவையே என்ன தூக்கம்' என்று இனிமையான பாடல்கள் இத் திரைப்படத்தில் நிறைந்து இருந்தன.
„ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற பாடலை இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழரசுக் கட்சி பெரிதும் பயன் படுத்தியது. வாகனத்தில் வந்து துண்டுப் பிரசுரம் விநியோகித்து தேர்தல் கூட்டத்தை அறிவிக்கும் பொழுது ஒலிபெருக்கியில் இந்தப் பாடலையே ஒலிக்க விடுவார்கள். பாடலின் இடையில் வரும் வரிகள், „முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ' என்பதை எதிரணிக்கு அறைகூவலாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். பின்னாளில் தமிழரசுக் கட்சியும், தமிழ் கொங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழர் கூட்டணியாக மாறிய பொழுதும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பதை தங்களது உதயசூரியன் தேர்தல் சின்னத்திற்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற அந்தப் பாடலை கவிஞர் முத்துக்கூத்தன் எழுதி இருந்தார். முதலில் கவிஞர் வாலிதான் இந்தப் பாடலின் மெட்டுக்கு வரிகளை எழுதி இருந்தார். அவர், „ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும்' என்று பல்லவி எழுதிக் கொடுக்க எம்ஜிஆர் கடுப்பாகிப் போனார். ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் சிவாஜி நடித்திருந்தார். எம்ஜிஆரின் கோபத்திற்கு அதுவே காரணம். அதன் பின்னரே கவிஞர் முத்துக்கூத்தனுக்கு அந்தப் பாடலை எழுத வாய்ப்புக் கிட்டியது. அவர் எழுதிய தொகையறாவே „ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை'
வழமையான எம்ஜிஆர் திரைப்படங்களில் வீரம், கொள்கை, கோட்பாடு, போதனை என்று பாடல்கள் இருக்கும். அப்படியான பாடல்களை படத்தில் அவரே பாடி வருவார். அரச கட்டளை திரைப் படத்தில் சற்று மாறுதலாக விடுதலை வேண்டி மக்களை அழைக்கும் பாடல் ஒன்று படத்தின் நாயகிக்கு இருந்தது. அகிலனின் கயல்விழி சரித்திரக் கதையில் விடுதலைக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக நாயகி கயல்விழி நாட்டியங்கள், நாடகங்களை நடத்துகிறாள். அதை ஒத்ததுதான் அரச கட்டளையில் சரோஜாதேவி பாத்திரமும். அகிலனின் கயல்விழி கதை உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் வாங்கி இருந்ததை இங்கே குறிப்பிடுகிறேன்.
இழந்து போன தங்கள் நாட்டை மீண்டும் பெற ஒரு பெண் பாடும் பாடலாக கவிஞர் வாலி எழுதிய பாடல் „பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?' அந்தப் பாடல் „தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா? பெற்றதாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா?' என்று பண்போடு கேட்டு „கொடுத்த பாலில் வீரம் கலந்து கொடுத்தாள் உந்தன் அன்னை குடித்த பிறகும் குருடாய் இருந்தால் கோழை என்பாள் உன்னை' என்று உரிமைக் குரலை உயர்த்திக் கேட்டு இறுதியில் „விடுதலை காணத் துடித்து வா உறங்கியதெல்லாம் போதும் உடனே விழித்து எழுந்து வா' என்று மக்களை அழைப்பதாக இருக்கும்.
courtesy- ஆழ்வாப்பிள்ளை
http://s31.postimg.org/75486gj23/IMG...425_WA0014.jpg
Courtesy - Mr.R.Saravanan - Madurai
கோவை சண்முகா
திரை அரங்கில்
29.04.2016 முதல்
மக்கள் திலகத்தின்
உரிமைக்குரல்.
இன்று (25/04/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/33uprmf.jpg
இன்று (25/04/2016) பிற்பகல் 2 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"குடும்ப தலைவன் " ஜெயா டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2dhwqcz.jpg
பாக்யா வார இதழ் -29/04/2016
http://i63.tinypic.com/15waw5u.jpg
http://i63.tinypic.com/t67a74.jpg