http://i64.tinypic.com/4vib5x.jpg
Printable View
#MGR சுடப்பட்ட வழக்கு, மர்ம முடிச்சுக்கள் அவிழ்ந்ததெப்படி? #புரட்சித்தலைவரிடம் விளக்கிய தடய அறியியல் நிபுணர் பி.சந்திரசேகரன்..
துப்பக்கி சூடு சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் 1977-ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகியிருந்த சமயம் அது...
சந்திரசேகரனுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து ஒருநாள் போன் வந்தது. மொலாஸஸ் எனப்படும் சர்க்கரை கழிவு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்பதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் அழைப்பதாக சொல்லப்பட்டது.
அந்தச் சந்திப்பு முடிந்து சந்திரசேகர் கிளம்பியபோது எம்.ஜி.ஆர்..
"உங்களுடன் கொஞ்சம் தனியே பேச வேண்டும்" என்றார்.
"சொல்லுங்கள்"
“அது நடந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும் எனக்கு நீண்ட நாள்களாக மனதில் ஒரு சந்தேகம் உள்ளது. நான், ராதாண்ணன் இருவருமே மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டோம். ஆனால் சினிமாக்காட்சியைப் போல இருவருமே பெரிய ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டது எப்படி, ஒரு பாமரனைப்போல் இன்னமும் இது என் மனதில் குழப்பத்தைத் தந்து கொண்டிருக்கிறது இந்த விஷயம்” என்றார்.
அதற்கு பி.சந்திரசேகரன்
“ பொதுவாக ஒரு துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டதும் அதனுள் இருந்து வெளிவரும் குண்டு அதனுள் வெடிமருந்து எரிவதனால் உண்டாகும் வெப்பத்தின் காரணமாக விரிவடைந்து barrel என சொல்லப்படும் துப்பாக்கிக்குழலின் உள்பகுதியை உரசிக்கொண்டு பாயும்.
அப்போது துப்பாக்கிக் குழலின் முகப்புப் பகுதியில் லேசான கோடுகளை உருவாக்கும். இது துப்பாக்கிக்குத் துப்பாக்கி வேறுபடும். ஒன்று மற்றொன்றைப்போல் இருக்காது. அதேபோல் ஒரே துப்பாக்கியில் இருந்து எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் அது ஒரே மாதிரியாக அடையாளத்தையே பெற்றிருக்கும்.
ஒரே துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் அத்தனை குண்டுகளின் மேற்பகுதியிலும் ஒரே மாதிரியான உரசல் கோடுகள் தென்படும். இதன் அடிப்படையில் இருவரது உடலிலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட துப்பாக்கியில் பொருத்தி மைக்ராஸ்கோப்பில் வைத்துப் பார்த்தபோது, அந்த 2 குண்டுகளும் ஒரே துப்பாக்கியில் இருந்து வந்தவை என்பது உறுதியானது.
இதன்பின் அந்தத் துப்பாக்கியாருடையது என்ற கேள்வி எழுந்தது. காவல்துறையுடன் உதவியுடன் வேறொரு சோதனை மூலம் அது எம்.ஆர். ராதாவுக்குச் சொந்தமானது எனக் கண்டறிந்தோம்”
என மிக நீண்ட விளக்கமளித்து வழக்கின் முடிச்சை அவிழ்க்கக் காரணமான விஷயங்களை முதல்வர் எம்.ஜி.ஆருடன் பகிர்ந்துகொண்ட பி.சந்திரசேகரன்...
தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சந்தேகத்துக்கு விளக்கம் தந்தார்.
“ எம்.ஆர்.ராதா அந்த சம்பவத்திற்கு பயன்படுத்தியது ரிவால்வர் ரக துப்பாக்கி. பித்தளை அல்லது தாமிரக்குப்பியிலான இதன் ரவைகள், இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் மூடிய அமைப்புடன் வெடிமருந்து அடைக்கப்பட்டிருக்கும்.
திறந்திருக்கும் பக்கத்தில் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். மூடிய அடிப்பாகத்தில் 'தாக்கப்படும் பாகம்' ஒன்று இருக்கும். துப்பாக்கி விசை இதனை தாக்கியவுடன் அதிலிருந்து தீப்பொறி கிளம்பி வெடிமருந்தை கொளுத்தும். எரிகிற வெடிமருந்துக்கு மிக குறுகிய இடமே குப்பியினுள் இருப்பதால் அங்கு ஒரு பேரழுத்தம் உருவாகி அதன்காரணமாக குண்டு துப்பாக்கியிலிருந்து சீறிக் கிளம்பும்.
குப்பியினுள் தரப்படும் அழுத்தத்திற்கு தக்கபடிதான் குண்டின் வேகம் கூடும், அல்லது குறையும். எனவே துப்பாக்கிக் குண்டின் வேகத்தை நிர்ணயிப்பது குப்பியில் இணைக்கப்பட்டிருக்கும் குண்டு பிடிப்புதான்.
ஆனால் இத்தனை சக்தி மிக்க துப்பாக்கியால் சுடப்பட்டும் நீங்கள் இருவரும் பிழைக்கக் காரணம், சுடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரவைகளின் தன்மை.
இந்த ரவை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. இதை ராதா தன் வீட்டின் மேஜை டிராயரில் ஒரு தகர டப்பாவில் போட்டு வைத்திருந்திருக்கிறார். அந்த மேஜை டிராயரில் வேறு பல பொருள்களையும் அவர் வைத்திருந்ததால் தினமும் அதை பலமுறை திறந்து மூடவேண்டியதிருந்தது.
சராசரியாக ஒரு நாளைக்கு 10 முறை திறந்து மூடினாலும் இந்த 15 வருடத்தில் அவர் ஐம்பதினாயிரம் முறைக்கு மேல் திறந்து மூடியிருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் திறந்துமூடும்போது தகர டப்பாவில் இருந்த குண்டுகள் ஒன்றோடோன்று உரசியும் அடிபட்டும் அவற்றின் மேல் பிணைப்பாக இருந்த குழாயின் பிடிமானம் தளர்ந்துபோய்விட்டது.
இதனால் குண்டின் பிடிப்பு, அழுத்தம் குறைந்து அதன் ஊடுருவும் சக்தி குறைந்துபோய்விட்டிருந்தது. இதனால்தான் அது தன் முழுச் சக்தியை வெளிப்படுத்தமுடியாமல் போனது. ஒரு கட்டத்திற்கு மேல் அது உடலை ஊடுருவாமல் தேங்கி நின்றது. இருவருக்கும் ஆபத்து இல்லாமல் போனது. நீங்கள் எமனை வெல்ல இதுதான் காரணம்”
என சந்திரசேகர் எம்.ஜி.ஆரின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தார். எம்.ஜி.ஆர் தடய அறிவியலின் முக்கியத்துவத்தை உணர இது காரணமானது.
இப்படி நீதியை நிலைநாட்ட ஒரு வழக்கிற்கு பேருதவியாக தடய அறிவியல் துறை இருப்பதை அறிந்துகொண்ட அவர் தன் ஆட்சிக்காலத்தில் தடய அறிவியல் துறையின் மேம்பாட்டுக்குத் தாராளமாக உதவிகள் புரிந்தார்.
1984 ல் எம்.ஜி.ஆர் பக்கவாதம் தாக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவருக்குக் காந்த சிகிச்சை அளிக்கப்பட முடிவெடுத்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் தொண்டையிலேயே குண்டுத்துகள்கள் தங்கிவிட்டதைக் கண்டுபிடித்தனர்.
அது உலோகமாக இருக்கும்பட்சத்தில் காந்த சிகிச்சையளிப்பது எம்.ஜி.ஆரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அதை உறுதி செய்ய சந்திரசேகரைத்தான் அணுகினார்கள். அவர் அவை உலோகம் அல்ல என உறுதியளித்தபின்னரே எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தடய அறிவியல் துறை வரலாற்றில் சந்திரசேகர் விட்டுச்சென்ற தடயத்தை யாராலும் அழிக்கமுடியாது... Thanks Friends. .....
தமிழ் கூறும் நல்லுலகம்
வாழும் தமிழ் நெஞ்சங்களே
தலைவரின் தமிழறிவு திறமையை
பறைசாற்றும்
சிறப்பு பதிவு
படித்து பாருங்கள்
எம்ஜிஆர் 100 தமிழ்ப் புலமை மிக்கவர்.
M.G.R. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட ,அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.
சினிமா, அரசியல் என்று இரு துறை களிலும் முதல் இடத்தில் இருந் தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங் கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக் கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.
பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங் களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல் லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:
‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்
கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’
பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத் தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர் களுக்கு ஆசிரியர் திருக் குறளை கரும்பலகை யில் எழுதி பாடம் நடத் துவதுபோல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அத னால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக் கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும் பலகையில் எழுதப் பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவ னித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.
நீதியரசர் மு.மு.இஸ்மா யிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறு வடிவமாக விளங்கிய நடுநிலை தவ றாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலை வராகவும் பணியாற்றியவர்.
ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்ப ராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம் பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட் டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேச முடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.
இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.
விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.
பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங் களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!
எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.
அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத் துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...
‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;
சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’
தொகுப்பு ஶ்ரீதர் சுவாமிநாதன் ,நன்றி
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி... Thanks Friends...
இன்று முதல் "தீபாவளி" வெற்றி மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே திலகங்களின் திலகம் ... 👍 மக்கள் திலகம் 👌 "பல்லாண்டு வாழ்க" மதுரை - சென்ட்ரல் dts தினசரி 4 காட்சிகள் தரிசனம் தருகிறார்...
இன்று முதல் சென்னை- ஸ்ரீனிவாசா dts தினசரி 2 காட்சிகள் தொடர்ந்து இணைந்து 2 வது வார வெளியீடு வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் "பணம் படைத்தவன்"...👌
1977 - ஆட்சி அதிகாரம் எங்களுக்கு ஒன்றும் புதிதில்லை நாங்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலை தான் இது - கருணாநிதி
.
Dr .எம்.ஜி.ஆர் (சிரித்துக்கொண்டே) நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதை கணக்கெடுக்கவே நான் வந்து இருக்கிறேன்..
# தலைவர் ...................... Thanks Friends...
மக்கள் திலகத்தின் படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் எப்படி அமைய வேண்டும்.. அந்தக் காட்சிகளுக்கான 'செட்' எப்படி அமைய வேண்டும் என்று தன் மனதில் கற்பனை எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை.. கொஞ்சமும் மாறாமல் காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர்.. எம்ஜிஆரின் பிரியத்துக்குரிய... அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.
எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் சிறப்பம்சம்..!
கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.
அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.
அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..!... Thanks Friends...
மக்கள் திலகம் பற்றிய சிறு தொகுப்பு ''காட்சி பிழை '' என்ற தளத்திலிருந்து எடுக்கப் பட்டது .- நன்றி .
நடிகர் எம்ஜியார் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டுதான் கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர்.மஹா-லிங்கம், சிவாஜி கணேசன், பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரித் திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல; எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.ராஜன், ‘ஸ்பெஷல்’ அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்--தது போல ‘செகண்ட் ஹீரோ’ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல; படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ‘ரோல்’ செய்து-விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல; சிவகுமார் போல சற்று கௌரவமான சிறுபாத்திரங்களில் நடித்துப் பின் கதாநாயகனாக உயர்ந்த--வரும் அல்ல.
எம்.ஜி.ஆர். போராட்டம் நீண்--டது. கதாநாயகனான பின்னும் எம்.ஜி.ராம்சந்தர் என்றே ஆரம்ப காலப் படங்களில் அவர் பெயர் ‘டைட்டிலில்’ வரும். ‘மருத நாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’, ‘மர்மயோகி’ வெற்றிகளுக்குப் பின்பும் அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்-தேகங்கள் தொடர்ந்தது. இந்த சந்--தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல 1952இல் சிவாஜி புயல் பிரவேசம் ‘பராசக்தி’ மூலம் நிகழ்ந்--தது. 1953இல் ஜெமினியின் ‘மனம் போல் மாங்கல்யம்’ வந்தது. மும்முனைப்போட்டி ஆரம்பமானது. (சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் 1950, 60களில் இருவர்தான், எம்.ஜி.ஆரும் ஜெமினிகணேசனும்.)
1950களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்று மூவேந்தர் தோற்-றம்கொண்ட தமிழ் சினிமா பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு திலகங்களிடம் மையம் கொண்டுவிட்டது. சிவாஜிக்கு செகண்ட் ஹீரோவாக ஜெமினி ‘பெண்ணின் பெருமை’யில் துவங்கி (கதாநாயகனாகவும் வெள்ளிவிழா நாயகனாகவும் ஜொலித்த காலத்--திலேயே) ‘கட்டபொம்மன்’, ‘கப்ப-லோட்டிய தமிழன்’, பீம்சிங்கின் ‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பந்தபாசம்’, ஏ.பி.என் படங்கள் ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவருட்செல்வர்’ உட்பட பல படங்களில் நடிக்கும்போதே எம்.ஜி.ஆர்., “ஜெமினி இப்படி தனித்-தன்மையை விட்டுத் தருகிறாரே” என வருத்தப்பட்டார். ஜெமினி, ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் அசோகனுக்கே வில்லனாக நடித்தார். இனி என்ன என்று எம்.ஜி.ஆர்., சலித்துப்போய் தான் நடித்த தேவரின் ‘முகராசி’ படத்தில் ஜெமினியையும் நடிக்க வைக்கும்படியானது. ஆனால், ஜெமினி பின்னால் வந்த ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமனுக்கெல்லாம் கூட ‘செகண்ட் ஹீரோ’வாக ‘ஈகோ’ பார்க்காமல் நடித்தார். இத்தனைக்கும் அந்தக் கால கட்டத்தில் ‘பணமா பாசமா’ வெள்ளிவிழா கண்ட படம்; ‘இருகோடுகள்’, ‘சாந்திநிலையம்’, ‘காவியத்தலைவி’ போன்ற படங்கள் வந்த காலம். ஜெமினிக்குப் பின் சிவாஜி கணேசன் படங்களில் ஜெமினி செய்த அதே மாதிரி பாத்-திரங்களை முத்துராமன் செய்தார். இவ்வளவும் சொல்லக் காரணம் எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. எம்.ஜி.ஆர். ‘கூண்டுக்கிளி’ படத்தில் மட்டும் சிவாஜிகணேசனுடன் நடித்-தார்.
சிவாஜி தொடங்கி சிவகுமார் வரை எல்லோரும், வயது முதிர்ந்த பின் வேறு துணைப் பாத்திரங்களில் நடித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். மட்டும்தான் கடைசி வரை கதாநாயகனாகவே நடித்தார். அதே போல வயதானவராக எம்.ஜி.ஆர். மாறுவேஷம் தான் போட்டிருக்கிறாரே ஒழிய முதிய-வராகப் படங்களில் நடித்ததே இல்லை. எல்லாப்படங்களிலும் எம்.ஜி.ஆர். ‘இளம் வாலிபர்’தான்! (எம்.ஜி.ஆருக்கு முன் எம்.கே.டி. பாகவதரும் பி.யூ.சின்னப்பாவும் கதாநாயகர்களாக மட்டும் நடித்த-வர்கள். அப்படிப் பார்த்தால் ஜி.என்.-பி.-யைக் கூடத்தான் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியிருக்கும். எஸ்.எஸ்.ஆர். கூட வயதானவராக நடிக்கவில்லை, இளைஞனாக மட்டும் நடித்தவர். ஆனால், அவர் ‘செகண்ட் ஹீரோ’வாக நிறையப் படங்களில் நடித்தவர்; அவருடைய கடைசிப் படங்கள் உள்பட. ‘வைராக்கியம்’ படத்தில் ஜெமினி-யுடன், ’எதிரொலி’யில் சிவாஜியுடன்.)
அதே போல பெண்ணுக்கு வலை வீசும் ஷோக்குப் பேர்வழியாகவும் எல்லாக் கதாநாயகர்களும் நடித்திருக்-கிறார்கள். எம்.ஜி.ஆர். மட்டுமே ஸ்த்ரிலோலராக நடித்ததேயில்லை. குடி, சிகரெட் விஷயங்களில் நடிக்-கும்--போது அவர் பிடிவாதமான கண்ணி--யம் காட்டினார். ‘தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர். ஒரு புனிதர். என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர். கால் உடைந்த போது, ‘சரிதான் எம்.ஜி.ஆர். ஜேப்டர் குளோஸ்!’ என்றார்கள். ‘மன்னாதி மன்னன்’, ‘திருடாதே’, ‘பாசம்’, (பாசம் படத்தில் எம்.ஜி.ஆர். இறந்து --போவார்!), ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக்காத்த தனயன்’, ‘பணத்தோட்டம்’, ‘கொடுத்து வைத்--தவள்’ என்று அதன்பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எந்த ஒரு ஹீரோவும் பார்த்து ஏங்கும் படம். ஜெயலலிதாவுடன் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோவில்’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்றவை அவருடைய தனித்து-வ-மான பாணியின் உச்சம்.
தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடி--கனிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.
மாறுவேடம் போட்டுவிட்டால் எம்.ஜி.ஆர். நடிப்பில் புது பரிமாணம் வந்துவிடும். கூடு விட்டுக் கூடு பாய்-வது போல ஆளே மாறிவிடுவார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தப் படங்களில் மாறுவேஷம் விஷேசப் பரிமாணத்தைத் தொடுவதைக் காண---முடியும்.
எம்.ஜி.ஆர்., ஏசுநாதராக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது. அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூடப் பார்க்கக் கிடைக்-கின்றன. சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.
குண்டடிபட்ட பின் ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்குச் செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. ‘சிவந்தமண்’ பிரமாதமான பரபரப்புடன் வெளி-யான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான ‘நம் நாடு’ பெரிய வெற்றி--பெற்றது.
‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’, ‘மகா-தேவி’, ‘நாடோடி மன்னன்’, ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’ படங்களில் மட்டுமல்லாமல் ‘பெற்--றால் தான் பிள்ளையா’ வரை அவர் வசனங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால், என்னிடம் மனோரமா சொன்னார்: ‘வெண்-கலமணி அடித்தாற்போல உச்சரிப்பு சுத்தமா இருக்கும்.’ “வெண்கலக்குரல். கணீர்னு மணியடிச்சாப்பல எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு ‘காவல்காரன்’ படத்தில், “பா(ர்த்)தேன் சுசிலா... பா(ர்த்)தேன்... இந்த ‘றெண்டு கன்-னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழு-தேன்யா. அப்படி அழுதேன்” என்றார்.
இவ்வளவுக்கும் எம்.ஜி.ஆர். படங்-களில் பாடல்கள், வசனம் அவர் எதிர்-காலத் தலைவர் என்பதை அறி----விக்கும் வண்ணம்தான் இருந்தன.
ஆனால், கடைசி வரை எம்.ஜி.--ஆர். பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை. டி.எம்.எஸ். பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றி-ருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி. பாட்டுக்குத் தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார். பாடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். அனுபவித்து நடித்தார். முன்னர் டி.எம்.எஸ். பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காகத் தெரிந்தாரோ அதே மாதிரிதான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி. பாடல்களிலும் ஜேசுதாஸ் பாடல்களிலும். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை இதனை செக் செய்துப் பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவரின் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும் போது அந்தக் கால மனிதர்களுக்குக் கண்ணில் நீர் கோர்த்து விடும்.
அனுபவித்து நடித்தார் என்-பதால் எந்தப் பின்னணி பாடகரின் பாடலும் அவருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது. சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர். பாடல், ‘உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு / உயி-ரோ--வியமே கண்ணே நீயும் நானும் ஒன்று.’ (கல்யாணி ராகம்.) ‘புதுமைப்பித்தன்’ படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். ‘நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்--தானத்தன தன்னானத்தன தன்-னானத்தன தானா.’ அதற்கு ஆர்ப்--பாட்டமாகச் சில ஸ்டெப் போடு--வார், எம்.ஜி.ஆர்.
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்துத் தலையாட்டுவார். கதாநாயகியைப் பார்த்துச் சிரித்துத் தன் உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டி சைட் அடிப்பார். (மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர். மேனரிசம் தான். ‘ஜாரி’ மிரண்டு ஓடும்!) கதாநாயகியின் உதட்டைச் செல்லமாகக் கிள்ளி ஆட்டி விடுவார். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும். பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும். ‘உலகம் பிறந்தது எனக்காக / ஓடும் நதிகளும் எனக்காக / அன்னை மடியை விரித்தாள் எனக்காக’ பாடலில் கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துக்காட்டுவார். ‘எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான்’ பாடலில் காலைத் தரையில் சந்-தோச--மாக உதைத்துக்கொள்வார். ‘அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ என எஸ்.வரலட்சுமி பாடும்போது செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்வார். ‘நான் ஒரு கை பார்க்கிறேன் / நேரம் வரும் கேட்கிறேன் / பூனையல்ல புலிதானென்று போகப் போகக் காட்டு--கிறேன் / போகப் போகக் காட்டுகிறேன்’ பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்! முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம். தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவுதான். பாடல்களுக்கு அவர் வாயசைப்பது அழகு!
எம்.ஜி.ஆர். இசை ஞானமிக்கவர். கர்நாடகச் சங்கீத ரசிகர். வாய்பாட்டு என்றில்லை, தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால், சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் அசாத்தியத் திறமை பெற்றிருந்தார். இசையமைப்பாளர்களுக்கு ‘பென்டு’ கழண்டுவிடும்!
டான்ஸ் போல் ஸ்டண்ட் காட்சி-களிலும் அவரிடம் இருந்த ‘குயிக்னெஸ்’ அலாதியானது. சண்டைக் காட்சியில் விசேஷம்... முதலில் வில்லனிடம் ‘மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’ என்று ரொம்ப கனி-வாகச் சொல்வார். வில்லன் அலட்-சி--யமாக ஒரு குத்து விடுவான். ‘தயவு செய்து வழிய விடுங்க’ என்று புன்னகையுடன் மீண்டும் சொல்லிப் பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதைச் சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர். உதட்டைத் தடவிப் பார்ப்பார். விரல்களில், ‘ஆ... ரத்தம்’! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி, கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார். மற்றபடி பல சமயங்களில் சிரித்துக்-கொண்டே தான் கத்திச் சண்டையும் போடுவார்.
எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு ஆகும் ஆசை நிறைய பேருக்கு இருக்கிறது. ‘விஜயபுரி வீரன்’ படத்--தில் ஆனந்தன் அறிமுகமான போது கத்திச் சண்டையில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றார்கள். ஆனந்தன், எம்.ஜி.ஆரின் கால் தூசுக்குப் பெற-மாட்டார். ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று பேர் பெற்ற-போது எம்.ஜி.ஆரிடமே, ‘ஜெய்சங்கர் தான் உங்கள் வாரிசா?’ என்று கேட்கப்பட்டது. மு.க.முத்து, கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாக அப்படியே எம்.ஜி.ஆர். பார்-முலாவில் நடித்துப் பார்த்தார். முத்து சிரிப்பு மட்டும் எம்.ஜி.ஆர். மாதிரியே இருந்தது. ஆனால், அது இமிடேசன். ‘மு.க.முத்து உங்கள் வாரிசா’ என்று கூட எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். சிரிப்புப் பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் எழுதுகிறார்: ‘‘ஒரு குழந்தை முன் பல புகைப்படங்களைப் போட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தை எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”
எம்.ஜி.ஆர். சிரிப்பைப் பின்னால் சத்-யராஜ் சிரித்துக் காட்டினார். சத்யராஜ் மட்டும்தான் எம்.ஜி.ஆர். பாணியை எல்லோருமே ரசிக்-கும்--படி செய்த ஒரே நடிகர். (சத்ய-ராஜ், எம்.ஆர்.ராதாவின் வக்-கிரத்தை-யும் தன் வில்லன் நடிப்---பில் வெளிப்படுத்திய அற்புத நடிகன்!)
விஜயா கார்டனில் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்திய திரைப்படத் தொழி-லாளர் சம்மேளன விழா... எம்.பி.-சீனி-வாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்--பித்தது. (அக்ரஹாரத்தில் கழுதை எம்.பி.சீனிவாசன் தான்) முதல்வர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்-டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர். படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள், அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிர-பலங்--கள் ஆஜர்.
எம்.ஜி.ஆர். வந்தார். மேடை யேறினார். விஜயா வாஹினி அதி-பர் நாகிரெட்டி மேடையே--றிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.- ஆர்., காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். விஜயா வாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர். அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் றீஷீநீளீ செய்துவிட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்-சரியம், எம்.ஜி.ஆர். முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்! மேடையில் எம்.ஜி.ஆர். செல்லக் கோபத்துடன், ‘என்ன இப்படி? நீங்களுமா?’ என்று கையை விரித்துச் சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கண் கலங்கினார். . ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எடுத்தவர் அல்லவா?
ஒரு தேர்தல் பொதுக்கூட்டம். எம்.ஜி.ஆர். பேசுகிறார்... எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம். கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கும் முன் எம்.ஜி.ஆர். சொன்னார்: “தயவுசெய்து தாய்-மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். நான் ஆண்களிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”
பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளி-யேறிச் சென்றுவிட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர். சொன்--னார்: “இப்போது ஆண்கள் செல்-லலாம்.”
எம்.ஜி.ஆர். சினிமா நடிப்பைக் கைவிட்ட பிறகும்கூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால், அவர் அதிகாரம் என்பதைப் பார்க்க முடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர். பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது. எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்! வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்-பானது. ஆனால், அவர் ஜனவசியம் தமிழகத்துக்குச் செய்தது நன்மை. அவர் வெற்றி மேல் வெற்றி கண்டு மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரான காலங்களில் இவ்வளவு ஜாதிக்கட்சிகள் கிடையாது; மதக் கட்சிகள் கிடையாது. எம்.ஜி.-ஆருக்கு ஓட்டுப் போட்ட பாமர மக்-கள் இன்றைக்கு ஜாதிக் கட்சி-களில் தமிழ்நாடெங்கும் சிதறிப் போய்விட்டார்கள்..... Thanks Friends...
தீபாவளி திருநாளை முன்னிட்டு , வெள்ளி முதல் (02/11/18) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.புகழ் "பல்லாண்டு வாழ்க " திரைப்படம்
தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரையில் வெற்றிநடை போடுகிறது .
http://i67.tinypic.com/2cxyzgw.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
விவசாயி வெளியான தேதி 01/11/1967.(தீபாவளி வெளியீடு )
வெளியாகி 51 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
http://i67.tinypic.com/vo8iv5.jpg
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளி முதல் (02/11/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு )நடைபெறுகிறது
http://i64.tinypic.com/28qwac3.jpg
தீபாவளி திருநாள் முதல் (06/11/18) கோவை ராயலில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர். நடித்த "புதுமை பித்தன் " தினசரி 4காட்சிகள் திரையிடப்படுகிறது .
http://i67.tinypic.com/34qphqh.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
சமீபத்தில், கோவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதில் திருவாளர்கள் :காளியப்பன் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு காரோட்டியாக பணிபுரிந்தவர் ),கமலக்கண்ணன், சேகர், கணபதிதாஸ் மற்றும் சிலர் கலந்து கொண்டனர் .அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/2ly1xjq.jpg