http://i64.tinypic.com/2rqht2a.jpg
Printable View
http://i65.tinypic.com/fc4geg.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு அவர்கள்
இன்று (27/05/2019) பிறந்த நாள் கொண்டாடுகிறார் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரையுலகின் "சந்திரோதயம் " உதயமான தினம் அன்று .
திரு.குமார் அவர்கள் நீண்ட ஆயுளுடன், எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
கடந்த வெள்ளி முதல் (24/5/2019) வேலூர் ராகவேந்திராவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2hhg9iu.jpg
தகவல் உதவி : வேலூர் நண்பர் திரு.ராமமூர்த்தி .
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மையம் திறப்பு பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
திருவாளர்கள் : கலீல் பாட்சா, எம்.ஜி.ஆர் மணி , மேகநாதன், மணிவாசகம் ,கா.நா. பழனி, மதியழகன், தமிழ் நேசன் ஆகியோர் .
http://i67.tinypic.com/2wfnxnp.jpg
http://i64.tinypic.com/2qi0lrm.jpg
திருவாளர்கள் : மேகநாதன் , எம்.ஜி.ஆர். மணி, கலீல் பாட்சா, கா.நா. பழனி, மற்றும் சிலர்
திருவாளர்கள் : எம்.ஜி.ஆர். மணி, கலீல் பாட்சா, கா.நா. பழனி, மேகநாதன் மற்றும் சிலர்
http://i67.tinypic.com/20f3ngy.jpg
திருவாளர்கள் : கா.நா. பழனி, எம்.ஜி..ஆர். மணி, கலீல் பாட்சா, ,மணிவாசகம் மற்றும் சிலர் .
http://i68.tinypic.com/v4udqv.jpg
திரு.எம்.ஜி.ஆர். மணி திரு.நெல்சன் முருகனுக்கு பொன்னாடை அணிவித்தல் அருகில் திரு.கலீல் பாட்சா .
http://i66.tinypic.com/2zsp2c4.jpg
http://i65.tinypic.com/289y7a9.jpg
தமிழ்நாடு மற்றும் மலேசியா எம்.ஜி.ஆர். பக்தர்கள் மேடையில்
திருவாளர்கள் : கா.நா. பழனி, கலீல் பாட்சா, எம்.ஜி.ஆர். மணி
http://i63.tinypic.com/209k9ci.jpg
#1977_ல் பொன்மனசெம்மல் Dr.எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது...
#திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார்.
"#உடன் பிறப்பே...
#பார்த்தீரா?...
#நடிகரின் ஆட்சியை... #நாடெல்லாம் ஊழல்...
#நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்...
#அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘#ஏய்_கருணாநிதி!... என்று தொடங்கி புரட்சித்தலைவர் ஆட்சியிலா ஊழல்? என்று கேள்விக்கணைகளை வீசி, “#அரசியலின் அசிங்கமே.
#தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்...
#அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது...
‘#உடன்பிறப்பே பார்த்தாயா?...
#நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா??...
#மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா???...
#யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்)?
#இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்...
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில்...
“#ஏய்_கருணாநிதி என்று தொடங்கி ‘#அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? #விற்பதுக்கு நான் தயார்...
#வாங்குவதற்கு நீர் தயாரா?’
என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்...
#அடுத்த நாள் முரசொலியில்...
‘#உடன் பிறப்பே பார்த்தாயா?...
#நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது??...
#வீட்டை வாங்கத் தயாரா? என்று கேட்கும் போதே...
#உதிரம் கொதிக்கவில்லையா??#தோள்கள் துடிக்கவில்லையா???...
#அனுப்பு பணத்தை!...
#வாங்கு வீட்டை!!’ என்று எழுதி முடிக்கிறார்...
#அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது...
#ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை. கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது...
#ஏழைகளின் இறைவன் எம்ஜிஆர் அவர்களிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்து விடுகிறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள்...
#மைக்கைப் பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா?’ என்கிறார்...
#கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே!...
சொல்லி பணத்தை வசூலிச்சே!!...
இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே!!!...’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை...
#தொண்டன் தொண்டனாகவே இருக்கின்றான்...
#தலைவன் தலைவனாகவே இருக்கிறான்...
#படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளைக் கடந்த சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்தத் தொண்டனும் கேட்கவில்லை...
#அன்று நடிகரின் கட்சி ஊழலைப் பார்த்து கொதித்தவர், இன்று நாடே பார்த்ததிர்ந்த ஊழலைப்பற்றி பேசவில்லையே என்று எந்தவொரு தொண்டனும் கேட்கவில்லை...
#இதுதான் தொண்டர்களின் தியாகம்...
இந்தத் தேர்தலிலும் தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்...
................ Thanks wa.,
From 24/05/2019 Vellore Sri Ragavendira Theatre DTS., MakkalThilagam MGR in " Dharmam thalai kaakkum " daily 4 Shows Successful running......
27-05-2019 திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "சந்திரோதயம்" 53 ஆம் ஆண்டு துவக்கம்......... ஊடக துறை எப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அன்றே மக்கள் திலகம் ஆணி அடித்தார் போல சொல்லி வாழும் சிறந்த காவியம்.....வெளியான நாள் இன்று...
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகம் மற்றும் அரசியல் உலகின் "சந்திரோதயம் " உதயமான தினம் 27/05/1966. வெளியாகி 53ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபராக வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் .பத்திரிகைகளில் வெளியாகும் அபாண்டமான செய்திகளால் பெண்கள் மற்றும் குடும்பம் எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை உணர்த்தும் வகையில் அந்த காலத்தில் யதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டது . பத்திரிகை துறையில் நடைபெற்ற அநீதியான செய்திகளை எதிர்த்த காவியம் . வெகுளிப்பெண்ணாக செல்வி ஜெயலலிதா சிறப்பாக நடித்திருந்தார் .சோக நடிப்பில் பாரதி தனது திறமையை வெளிப்படுத்தினார் .
நாகேஷ் மனோரமா நகைச்சுவை நல்ல கலகலப்பு .பத்திரிகை நிர்வாகியாக நடிகவேள் எம்.ஆர்.ராதா தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தையும் அபாரமாக காண்பித்து வெளுத்து வாங்கியிருப்பார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா மோதல் காட்சிகள் படு சுவாரஸ்யம் .அசோகன், பண்டரிபாய் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒன்றி நடித்தனர் . இனிமையான பாடல்கள் அமைந்த வெற்றி சித்திரம் பல காட்சிகளில் முக்கால் கை சட்டையுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மிக அழகாக ஜொலித்தார் .
பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பே படத்தின் பெயரானது .
ஊடக பெருச்சாளிகளையும் , சமுதாய புல்லுருவிகளையும் தனது புரட்சிகரமான செயல்களினால் சாடும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ஆளுமை இதில் அதிகம் .
வசனங்கள் மிகவும் பேசப்பட்டது : எம்.ஆர். ராதா : விநியோகஸ்தரிடம் பேசுவது
அவன் படம் ஒரே தேதியில் வருகிறதா . அப்போ ஒன்னு செய்யறேன் . அவன்தை தாக்கறேன் . உன் படத்தை தூக்கறேன் ..தினகவர்ச்சி பத்திரிகை நிர்வாகியாக இருந்து கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்வோமா என்று தனது பெண் குமாஸ்தாவிடம் கூறுவது .. பத்திரிகை செய்திகளில் தவறை சுட்டிக்காட்டும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் அடிக்கடி நீ என்னுடன் மோதுகிறாய். என் லைனில் கிராஸ் பண்ணாதே . நாகேஷிடம் கவர்ச்சி பெண்ணின் புகைப்படம் கொண்டுவர சொல்லி கட்டாயப்படுத்தும் காட்சிகள் .இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஆர்.ராதாவிடம் என் எதிரி கூட எனக்கு சமமாக இல்லேன்னா அலட்சியப்படுத்துறவன் நான் . அதிருக்கட்டும். நான் கொடுத்த செய்தியை ஏன் திரிச்சி போட்டீங்க என்று பேசும் காட்சிகள் .இன்னும் பல காட்சிகள் உள்ளன . குடை பிடிச்சா சூரியன் மறையாது என்று எம்.ஆர்.ராதாவிடம் கூறும் வசனம் (அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் )
மந்தகாச புன்னகையுடன் சந்திரனில் இருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்சிமிட்டலுடன் கூடிய அறிமுக காட்சியை பார்ப்பவர்கள் நெஞ்சை அள்ளுவதாக இருக்கும் .பாவேந்தர் பாரதிதாசனை அறிமுகப்படுத்தும் டைட்டில் பாடல் புதியதோர் உலகம் செய்வோம் என்கிற அற்புத பாடல் அருமை.
புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பாடலில் சமுதாய சீர்திருத்த நோக்குடன் கூடிய
சமூக நலப்பாடல் -எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அழுத்தமான வரிகள் .
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் =அந்த காலத்தில் கல்யாணத்தில் நடைபெறும் சடங்குகள், சம்பவங்களை நினைவுபடுத்தும் பாடல் .
காசிக்கு போகும் சன்னியாசி -நாகேஷ் -மனோரமா (கணவன் மனைவி மோதலை )தீர்த்து வைத்து குடும்ப உறவுகள் மேம்பட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உபதேசம் செய்யும் வகையில் அமைந்த அருமையான பாடல்.
எங்கிருந்தோ ஆசைகள் - காதலை மென்மையாக உணர்த்தும் இனிமையான பாடல்.
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - எம்.எஸ்.வி. இசை அமைத்த மிக அழகான, அருமையான வரிகள் கூடிய இனிமையான, எப்போது கேட்டாலும் சலிக்காத காதல் பாடல் .
இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு பலமுறை சபாஷ் போடலாம் .
கெயிட்டியில் 89 நாட்கள் ஓடியது . (முகராசி 100 நாள் ஓடுவதற்காக 2 நாட்கள் தாமதமாக வெளியானது .). பாரத்தில் 70நாட்கள் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் கடைசியாக வெளியானது 1966ல் ) மேகலாவில் 92 நாட்கள் ஓடியது . ஸ்ரீநிவாஸாவில் 70 நாட்கள் ஓடியது .
100நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம். 1966ல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு 9 படங்கள் வெளியானது .குறைந்த இடைவெளிகளில் அடிக்கடி படங்கள் வெளியானதால் சில படங்களின் எதிர்பார்த்த வெற்றியில் பாதிப்பு ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது .. 1972க்கு பிறகு அதிக அரங்குகளில் பகல் காட்சியில்
மறுவெளியீட்டில் வெளியாகி சாதனை புரிந்தது .
பாட்டு புத்தகம்
http://i68.tinypic.com/2aev581.jpg
http://i64.tinypic.com/2ch86qf.jpg
நமது ஏனைய சகோதர பதிவர்கள் மக்கள் திலகம் மாண்பினை சிறப்பாக பதிவிட பாசத்துடன் வேண்டி கேட்டு கொள்கிறோம்..........