-
ஆம்.சார்.மேற் சொன்ன பதிவில் நான் கூறியது 100% முற்றிலும் உண்மை.எங்குமே என் கற்பனை கிடையாது.அக்காலத்தை இப்போது நினைத்துப் பார்த்தால், என் மனதில் ஒரு நோஸ்டால்ஜியா(சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) உணர்வு தோன்றுகிறது.தலைவர் படங்களை ரசித்தது, தலைவர் உயிருடன் இருந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தது, ரேடியோவில் ஞாயிறு மதியம் ' நீங்கள் கேட்டவை' நிகழ்ச்சியில் முதல் பாடலாக 'ஆடலுடன் பாடலைக் கேட்டு, அழகிய தமிழ் மகள் இவள், போன்ற பாடல்கள் வருமா என ஏங்கியது போன்றவை...... Thanks...
-
நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெயரைக்குறிப்பிடுவார்கள்.எல்லோரும் தலைவர் பாட்டை விரும்பி கேட்டவர் எண்ணிக்கையை கேட்டுக் கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்... Thanks...
-
மனிதாபிமானம், தாய்ப்பற்று, தேசப்பற்று, கண்ணியம், இவையெல்லாம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் எம்ஜிஆர் ரசிகர்களே..... Thanks...
-
அன்பானவரே! எனக்கும் இதேப்போல் நிகழ்வு ஒன்று என் வாழ்க்கையில் நடந்து.எனக்கு அப்போது 22வயது,என் எதிர் வீட்டில் 62 வயது நிறைந்த B& C மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்,குடும்பமே காங்கிரஸ் குடும்பம். எம்.ஜி. ஆர் படங்கள் ஒன்றுகூட பார்க்காதவர்கள். அவரை முதல் முறையாக பல்லாண்டு வாழ்க M.G.R.படத்துக்கு அழைத்துச்சென்றேன். அதைப்பார்த்த அவர், M.G.R.ரின்,அழகையும்,சுறுசுறுப்பையும்,பாடல் காட்சிகளையும்,சண்டைக் காட்சிகளையும்,பார்த்துவிட்டு
அன்றிலிருந்து 36M.G.R. படங்களைப்பார்த்தார்.M.G.R.வெறியராகவே மாறிவிட்டார்....... Thanks...
-
எனக்கு தெரிந்து மற்றொரு நடிகரின் ரசிகராக இருந்து எம்.ஜி.ஆரின் ரசிகராக பிற்பாடு மாறியவர்கள் ஏராளம்.ஆனால் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தன் உயிர் உள்ளவரை தலைவரின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.இதுதான் நிதர்சனமான உண்மை....... Thanks.........
-
கோடி கொடுத்தாலும் இடம் மாறமாட்டார்கள், இறக்கும்வரை.... Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வரும் அனைவருக்கும் தன் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார்.
ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்கள் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.
வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆர் அவர்களை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.
முதல்நாள் எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டதற்கு, ‘‘உங்களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., அவர்கள் ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்...... Thanks...
-
இசை வந்த திசை நோக்கி !
திருச்செந்தூர் ,பெரியதாழை, பகுதியில் வசிக்கக்கூடிய, அருமைச்சகோதரர்,
ஆர் எஸ் கணேச பாண்டியன் அவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, திருச்செந்தூரில் இருந்து, தன்னுடைய மனைவிக்கு , சிகிச்சை பெற்றிட அரசு அனுமதி பெற்று, காரில் பயணித்து,
மதுரை நகருக்கு வந்தார்கள்
ஓரிடத்தில், சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காலைச் சிற்றுண்டி
அருந்தி கொண்டிருந்த வேளையிலே, அருகிலிருந்த தோப்பில் இருந்து, தொடர்ந்து எம்ஜிஆர் பாடல்கள், ஒலித்துக் கொண்டே, இருக்கின்றன. ஆனால் , ஆளரவம் எதுவும் தட்டுப்படவில்லை .
எனவே, எம்ஜிஆர் பக்தனான அண்ணன் அவர்களும், அந்த திசையை நோக்கி, நடந்து சென்று பார்த்த பொழுது,
மிகவும் வயதான நபர் ஒருவர்,
எம்ஜிஆர் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
அந்த நபரிடம், இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மருத்துவமனைக்குச் செல்லும் அவசரத்திலும், அவருடைய எம்ஜிஆர் பற்றினை, வியந்து போற்றி, ஒரு சிறு பேட்டி எடுத்திருக்கிறார்.
அந்த பேட்டி தான் இது....... Thanks...
-
மற்றவர் துயர் கண்டு இரங்குபவன் மனிதன்
மற்றவர் துயர் கண்டு உதவநினைப்பன் வள்ளல்
மற்றவர் துயர் நீக்குபவன் கடவுள்
இந்த மூன்றும் இணைந்தது M G R என்ற மூன்று எழுத்தில்
வாழ்க எம்ஜிஆர் புகழ்... Thanks...
-
97 வயது ரசிகர். தலைவர் தான் என் தெய்வம் என்கிறார். இவரைப் போல் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் நம் தலைவர்........ Thanks...
-
இதோ கழகத்தின் அடிமட்ட தொண்டராக இருந்து அமைச்சராக உயர்ந்தவரின் கதை இது..
பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிக எளிய குடுப்பத்தில் பிறந்தவர் இவர்.
சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கியவர்...
சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
'ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்,
அமைச்சர்' என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர்...
பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று #புரட்சித்தலைவர் அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர்...
வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தவர்...
அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தவர்..
பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்டு வந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து பல ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி புதிய பேருந்துகளை இயக்க வழிவகை செய்தவர்..
பேராவூரணியில் புதிதாக தியனைப்பு நிலையத்தை நிறுவியவர்....
கால்நடை மருத்துவமனைகளை கொண்டு வந்தவர்..
பேராவூரணி தொகுதியில் பல கிராமங்களை இணைக்கின்ற வாட்டாத்திக்கொள்ளைக்காடு காட்டாற்று பாலம் கட்டிவர்... கட்டயங்கங்காடு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியவர்.*..
பேராவூரணியில் பல துவக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும், பெருமகளூர் உள்ளிட்ட பல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல புதிய பள்ளி கட்டிடங்களை
கட்டியவர்...
பேராவூரணி தொகுதியில் எழுபதுபேருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை, நூற்றி ஐம்பது பேருக்கு தலையாரி வேலை. இருநூருக்கு மேற்பட்டோருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி. பலருக்கு சமையலர் பணி என்று எவரிடத்திலும் ஒரு ரூயாய் பெறாமல் வேலை கிடைக்க வழிவகை செய்தவர்...
தான் பதவியில் இருந்த காலத்தில் பேராவூரணி பகுதியில் பலருக்கு அரசுவேலை பெற்றுத்தந்தார்...
பேராவூரணி பகுதியில் அரசியல் அதிகாரமற்று கிடந்தவர்களை "ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், தனது கட்சியில் ஒன்றியச் செயலாளர், நகரச்செயலாளர்' என்று வெல்லவைத்து அழகு பார்த்தவர்.
ஆம் அவர்தான் அந்த கடைக்கோடி தொண்டன் தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி கோவேந்தன்...
இப்படிப்பட்ட அடிமட்டத்திலிருந்து கழகத்தின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்தோர் பலருண்டு...
அவரில் ஒருவர்தான் இவர்...
இதுதான் எங்களின் #அஇஅதிமுக.......... Thanks...
-
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!
தலைவரின் அருமையான பாடல் வரி...
நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால
நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால.... Thanks...
-
[அமெரிக்காவில் பேசிய புரட்சிதலைவரின் பேச்சு!!!
புரட்சிதலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதறகாக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக்கிடப்பதைப் பார்த்து அந்த நபரை தன் காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நிகழ்சசிக்கோ நேரமாகிவிட்டது.
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார்... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .
தொடர்ந்து பேசிய புரட்சித்தலைவர் ... "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."
ஆனால்...!
"இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய #மனிதாபிமானம் #உள்ளவர்கள் #உலகிலேயே #எங்கள் #தமிழ்நாட்டினர்தான்...#என்று #பெருமையோடு #தெரிவித்துகொள்கின்றேன் ..."
என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது........ Thanks...
-
தன் கண்முன்னே நடக்கும் எந்த செயலையும் பாா்த்து விட்டால் உடனே ஓடிச்சென்று உதவி புாிவாா் மக்கள்திலகம் அவா் சிறு வயது முதலே இந்த குணம் அவ௫க்கு உண்டு அந்த வகையில் அவா் ஒ௫ தனிப்பிறவி சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் உதவுவதில் இவா் ஒ௫ மன்னா் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலாரை போல் துன்படுவரைக் கண்டால் உதவிக்கரம் நீட்டுபவா் இத்தகைய தெய்வத்தை நாம் தினம் தினம் நினைத்து வாழுவோம் வாழ்க மக்கள் திலகம் வளா்க அவரது பண்பு நம்எல்லோ௫க்கும்....... Thanks...
-
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் Hits.- Audio Time- 03:25:45
பாடல்கள் விவரம்
00:00:05 - Kumari Pennin Ullatthile
00:05:44 - Naan Paarthathile
00:10:16 - Thottaal Poomalarum
00:14:48 - Vizhiyae Kathai Ezhuthu
00:18:25 - Un Vizhiyum
00:21:37 - Methuva Methuva
00:25:02 - Neela Niram
00:29:24 - Nanga Pudusa
00:32:35 - Aval Oru Navarasa
00:36:04 - Kalyana Naal Paarkka
00:40:27 - Mellappo Mellappo
00:44:42 - Naam Oruvarai Oruvar
00:48:55 - Kadaloram
00:52:17 - Poovaitha
00:55:40 - Androru Naal
00:58:48 - Endrum Pathinaaru
01:02:19 - Ponnezhil Poothathu
01:07:04 - Nethu Poothale
01:11:30 - Andru Vanthathum
01:15:44 - Vaanga Machan Vaanga
01:21:56 - Puttam Puthiya
01:25:08 - Kattodu Kuzhal Aada
01:29:50 - Thuliuvatho Ilamai
01:33:16 - Thedralil Aadum
01:37:49 - Hallo Hallo
01:40:51 - Yenna Porutham
01:44:35 - Ponnandhi Maalai Pozhuthu
01:50:22 - Katti Thangam
01:54:02 - Nilladi Nilladi
01:57:34 - Siriththu Siriththu
02:01:20 - Pattu Selai Kaatthaada
02:04:22 - Aanandam
02:07:48 - Thottuvida Thottuvida
02:11:35 - Vettaiyaadu Vilaiyadu
02:17:23 - Yennai Kathalithal
02:20:37 - Ithuthan Muthal Raaththiri
02:24:54 - Paartthukondathu
02:28:01 - Naan Alavodu
02:31:46 - Maasilaa Unmai Kaathalae
02:35:00 - Rajaavin Paarvai
02:39:22 - Azhagiya Tamizh
02:45:53 - Pani Illaatha
02:49:21 - Javvadhu Mediayittu
02:54:10 - Vannakkili
02:57:47 - Intha Punnagai
03:02:58 - Aasai Irukku Nenjil
03:06:35 - Paadinaal Oru Paattu
03:09:51 - Muthamo Mogamo
03:15:13 - Konja Neram Ennai
03:20:46 - Nerungi Nerungi..... Thanks...
-
-
https://youtu.be/5Cr ku_Ida92vQ... Thanks...
-
-
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 10/04/2020
"நல்லதுதான் செய்கின்றோம்; நியாயமாகத்தான் பேசுகின்றோம்"
என்று நினைக்கவும் நம்பவும் வைக்கும் அந்தச் சந்தர்ப்பம்.
ஆனால், பேசுகிறவனுக்கு நியாயமாகத் தோன்றக்கூடிய அந்தச்
செய்தி, கேட்கின்றவனுக்கும் நியாயமாகத் தோன்ற வேண்டுமே!
அறிவுக்கு மாறுபடாமல், அந்த அறிவின் தூண்டுதலாலேதான்
பேசுகிறான் என்றாலும், மற்றவர்களின் அறிவுக்கும் கருத்துக்கும்
அது ஏற்புடையதாயிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஆகவே, நாம் நமது அறிவின்படி பேசுவது மற்றவருக்கும் நியாயம்
என்று தோன்றினால்தான் அதன் விளைவு சரியாக இருக்கும்.
நமக்கு மட்டும் அது நியாயமாக இருந்து, எதிர்த் தரப்புக்கு
நியாயமாக இராவிட்டால், ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியை அது
இழப்பதுடன், அதற்கு ஒரு தண்டனையும் கிடைப்பதுண்டு.
ஆனால், அந்தத் தண்டனை தன்னுடைய அகந்தைக்குக்
கிடைத்த அறிவுரை என்று எடுத்துக்கொள்ள எத்தனை பேர்
தயாராக இருக்கிறார்கள்?
"சந்தர்ப்பம் பார்த்து நம்மைப் பழிவாங்கி விட்டார்கள்' என்று
அல்லவா மற்றவர் மீது ஆத்திரப்படுகிறோம்
யோசனை, நிபந்தனை, கட்டளை!
நான் என் வாழ்க்கையில் ஒரு நேரத்தில், 'நல்லதையே
நினைக்கிறேன், நல்லதையே செய்கிறேன்' என்ற நம்பிக்கையுடன்,
என் அறிவுக்கேற்ற வகையில் பிறருக்கு ஒரு யோசனையை - ஒரு
நிபந்தனையை - ஒரு கட்டளையை விதித்தேன். ஆனால், அதே
யோசனை - நிபந்தனை - கட்டளை பின்னர் அவர்களால் எனக்கு
விதிக்கப்படவும் நான் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் நேர்ந்த
போது நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா!
திரு.ஏ.எல். சீனிவாசன் அவர்கள், 'பாக்கெட் மார்' என்ற
இந்திப் படத்தை எனக்குக் காட்டினார். அந்தப் படக்கதையைத்
தழுவித் தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான்
கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவருக்கு அப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற
விருப்பம் இருந்தது போல், எனக்கும் நல்ல கதையுள்ள அந்தப்
படத்தில் நடிக்கும் விருப்பம் நிறைய இருந்தது.
"என்னுடைய நிலைமை"
இதே தயாரிப்பாளரின் 'ரத்னாவளி' என்ற படத்தில் அப்பே
நான் நடித்துக்கொண்டிருந்தேன். இதில் திருமதி பத்மினி அவர்கள்
என்னுடன் கதாநாயகியாக நடித்தார். மேலும், திருமதி அன்
தேவி, திருமதி பானுமதி முதலிய பெரிய நடிகையரோடு லே
சில படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தேன். அவர்கள்
படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது உள்ளதைப்
போல், அப்போது எனக்குப் பல படங்களும் இல்லை .
இப்போது நான் வாங்குகிற சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு
கூட அப்போது நான் வாங்கவும் இல்லை.
எனக்குப் படங்கள் அதிகம் இல்லை என்றாலும், நாடகங்களில்
நடித்துக்கொண்டிருந்தேன். அதோடு வேறு பல பொது
நிகழ்ச்சிகளிலும், பொதுப்பணிகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்து
வந்தது.
இரண்டு மூன்று நாடகங்கள் நடத்த வெளியூர்களுக்குப்
போகிற நிலை ஏற்பட்டுவிட்டால் போதும், ஐந்தாறு நாட்கள்
ஓடிவிடும்.
அதனால் படப்பிடிப்பில் தொடர்புகொள்ள நேரம் இல்லாமல்
போய்விடும்.
ஆகையால், அதிகப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்
மற்றவர்களுக்கு, படப்பிடிப்புக்குக் 'கால் ஷீட்' கொடுப்பதில்
எவ்வளவு கஷ்டம் இருந்ததோ, அவ்வளவு கஷ்டம் எனக்கும்
இருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் திரு.ஏ.எல்.எஸ். அவர்கள்
புதுப்படத்தில் நடிக்க அழைத்தார்.
நானும் விரும்பினேன்.
வெள்ளை மனம் படைத்தவர்
'திருடாதே' என்பது அப்படத்தின் பெயர். தயாரிப்பாளர்
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் உடனேயே படத்தைத் தொடங்க
வேண்டும் என்றார்.
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் எப்போதும் சிரித்தபடியே பேசுவார்
என்ன தொல்லை ஏற்பட்டாலும்
அவரது சிரிப்புப் பேச்சு ஓயாது.
அவருடைய இயல்பு. மனத்தில்
பட்டதைக் கூறிவிடுவது, எதிராளியை
அவமானப்படுத்த வேண்டு
மென்றோ, தலைகுனிவுக்கு
ஆளாக்க வேண்டுமென்றோ
யாதொரு கெட்ட எண்ணமும்
அவருடைய உள்ளத்தில் இராது.
ஆனால், கள்ளமின்றி அவரால்
விமரிசனம் செய்யப்படுகிற மனிதர்
அவருக்கு விரோதியாக மாறக்
கூடிய நிலைகூட ஏற்படலாம்.
அப்போதும், கோபித்துக்
கொண்டவரை அவர் விரோதியாக
நினைக்கமாட்டார்!
திரு. ஏ.எல். சீனிவாசனுடன்
'விளையாட்டாகப் பேசினோம்!
அது ஒரு வேடிக்கை தானே! அதிலென்ன விபரீதம் வந்து விடும்'
என்ற வெள்ளை மனம் படைத்தவர் அவர். எனக்கு அருமை
நண்பர்.
"என்னைக் கதாநாயகனாகப் போட்டு நீங்க இந்தப் படம்
எடுக்கறதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனா, படம் வேகமாக
வளரணும் என்றால், கதாநாயகி, வேடத்திற்கு விளம்பரமான
பெரிய நடிகையரைப் போட்டால் சரிவராது. கால்ஷீட்
'ப்ராப்ளம்' வரும். நான் கொடுக்கற கால்ஷீட்டுகளை நீங்க
வீணாக்காமல் பயன்படுத்திக்கிட்டாதான் படம் வளர முடியும்”
என்று சொன்னேன்.
"அப்படியே செய்யறேன். முதல்லே கதாநாயகி வேஷத்துக்கு
யாரைப் போடலாம்? சொல்லுங்க! புதுமுகமே போடலாம்னாலும்
போடறேன்" என்றார் அவர்.
இயக்குநர் சொன்ன புது முகம்!
அந்தப் படத்தின் இயக்குநரான திரு.ப. நீலகண்டன் அவர்கள்,
"தாராளமா புதுமுகத்தையே போடலாம்” என்றார்.
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ...... Thanks...
-
சென்னை பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழா 20.09.1983 இல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது அறிவிக்கும்போது .மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவைக்காகவும், வள்ளல் தன்மைக்காகவும் இந்த பட்டம் வழங்கப்படுவதாக துணைவேந்தர் சாந்தப்பா தெரிவித்தார்.
விழாவிற்கு தமிழக கவர்னர் எஸ்.எல். குரானா தலைமைத்தாங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் குரானா வழங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் கைகுலுக்கி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி திரையுலகம் சார்பில் சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி நடிகர்- நடிகைகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.
பிறகு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் விழா நடந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தார். சத்துணவுத் திட்டத்திற்கு திரையுலகின் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை பாரதிராஜா வழங்கினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க. .... Thanks...
-
ஏசுவாக நடிக்க விரும்பி எம்ஜிஆர் நடிக்க கருணை நிரம்பிய எம்ஜிஆர் முகம் ஏசுவாகவே மாற இந்த படம் பிரபலமானால் எம்ஜிஆரையே ஏசுவாக வணங்க படுவார் என்பதை பலர் கூற படம் பாதியில் கைவிடபட்டது
கருணை தேவன் ஏசு
கருணை எம்ஜிஆரிடம்
வாழ்க எம்ஜிஆர் புகழ் ..... Thanks...
-
மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கி
சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.
1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.
அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!
ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.
தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்ற
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.
அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது...... Thanks...
-
#கேள்விக்குப் #பதில்
ஒரு சமயம் பொங்கல் பண்டிகையின் போது தன் ஊழியா்களுக்கு தர பணம் இன்றி தவித்துள்ளாா் மக்கள்திலகம்...
அப்போது ஒரு தயாாிப்பாளா் தலைவாிடம் கால்ஷீட் கேட்பதற்கு தயக்கத்துடன் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரை வரச்சொல்லி கால்ஷீட் கொடுத்து பதினெட்டு இலட்சம் பெற்று அதனைஅப்படியே ஒருவர் விடாமல் அனைத்து ஊழியா்களுக்கும் கொடுத்துள்ளார்...
அந்த படம் தான்
#நான் #ஏன் #பிறந்தேன்....!
பொன்மனச்செம்மல், 'நான் ஏன் பிறந்தேன்' என்ற தனது படத்தலைப்பின் கேள்விக்குத் தன் இந்தச் செயலையே பதிலாக்கிவிட்டார்...... Thanks...
-
-
எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!
M.G.R. எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.
‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.
எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.
இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.
அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.
அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.
தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.
‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்..... Thanks...
-
புரட்சிநடிகர் எம்ஜியார் திமுகவில் இருந்து நீக்க பட்ட உடன் எம்ஜியார் ரசிகர்கள் ,பொதுமக்கள் தவிர சில திமுக நல்ல உள்ளங்களும் அந்த செயலை கண்டித்தன.
தென்னகம் என்ற பத்திரிகையை திரு. கே.ஏ.கே. அவர்கள் நடத்தி வந்தார்
தலைவர் நீக்க பட்டதும் அந்த பத்திரிகையில் கண்டனம் தெரிவித்து எழுதினார். அப்போது அவர் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆகவும் இருந்தார்.
இவர் மறைந்த கே.ஏ. மதியழகன் சகோதரர் ஆவார். எம்ஜியார் இல்லாத திமுக மணமக்கள் இல்லாத திருமணவீடு என்று எழுதினார்.
தீயசக்தி கோவம் கொண்டு இவரையும் கட்சியில் இருந்து நீக்கியது. கவலை கொள்ளாத இவர் நம் தலைவர் உடன் இணைந்து செயல் பட தொடங்கினார்.
அக்டோபர் புரட்சி 1972 இல் ஏற்பட்ட போது தலைவர் அதிமுகவின் முதல் உறுப்பினர் ஆக இவர் இரண்டாம் உறுப்பினர் ஆனார்.
ஆர்.எம்.வீ போன்றவர்கள் அப்போது கட்சியில் இணையவில்லை. அக்டோபர் மாதம் 72 இல் 29 ஆம் தேதி அன்று சென்னை சீரணி அரங்கில் அதாவது மெரினா கடற்கரையில் மாபெரும் அதிமுக பொது கூட்டம்.
மறைந்த சிகப்பு கொடி தோழர்கள் கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, மற்றும் கே.டி.கே. தங்கமணி இந்த பொது கூட்டத்தில் கலந்து கொள்ள.
அப்போது ஆவேசமாக பேசிய திரு கே.ஏ. கே. அவர்கள் நம் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களுக்கு அந்த தீய சக்தி கொடுத்த புரட்சிநடிகர் என்ற பட்டம் இனி தேவை இல்லை.
இனி நம் தலைவர் இன்று முதல் புரட்சிதலைவர் என்று அழைக்க படுவார் என்று அறிவிக்க அப்போது எழுந்த கரகோஷம் கடல் அலைகள் சத்தத்தை விட அதிகமாக எழுந்தது வரலாறு.
இதுதான் புரட்சிநடிகர், புரட்சிதலைவர் ஆன வரலாறு.
நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி...வாழ்க எம்ஜியார் புகழ்....... Thanks...
-
-
புர*ட்சித்த*லைவ*ர் 1977ல் திரையுலகை விட்டு விலகி முத*ல்வ*ரானார். அப்போதும் அவ*ர்தான் நெ.1. அதிகப*ட்ச ஊதிய*மும் பெற்றார். அப்போது மட்டும் அவ*ர் கைவ*ச*ம் இருந்த ப*ட*ங்க*ள் எந்த ந*டிக*ருக்கும் இருந்ததில்லை. அதன் ப*ட்டிய*ல் இதோ!
1. அண்ணா நீ என் தெய்வ*ம்
2. ந*ல்லதை நாடு கேட்கும்
3. நானும் ஒரு தொழிலாளி
4. மக்கள் என் ப*க்க*ம்
5. தியாக*த்தின் வெற்றி
6. இதுதான் ப*தில்
7. ச*மூக*மே நான் உனக்கே
சொந்த*ம்
8. உன்னை விடமாட்டேன்
9. இமய*த்தின் உச்சியிலே
10. கேப்ட*ன் ராஜா
11. உங்க*ளுக்காக நான்
12. அண்ணா பிற*ந்த நாடு
13. ஊரே என் உற*வு
14. கிழ*க்கு ஆப்பிரிக்காவில் ராஜு
15. எல்லைக்காவ*லன்
16. மீண்டும் வ*ருவேன்.
17. புர*ட்சிப்பித்த*ன்
இவ*ற்றில் ந*ல்லதை நாடுகேட்கும் மற்றும் அண்ணா நீ என் தெய்வ*ம் ஆகிய ப*ட*ங்க*ளின் காட்சிக*ள் வேறு இயக்குனர்க*ளின் ப*ட*ங்க*ளில் இட*ம்பெற்று வெளிவ*ந்த*து.
இவை த*விர எம்ஜிஆர் மறைந்த* பிற*கு அவ*ர*து வாழ்க்கை வ*ர*லாற்றை ப*திவு செய்யும் வ*கையில் காலத்தை வென்ற*வ*ன், ந*மது தெய்வ*ம், த*ர்ம தேவ*ன் ஆகிய ப*ட*ங்க*ள் வெளியாகி உள்ளன.
இன்னமும் அவ*ர் ப*ழைய ப*ட*ங்க*ளில் 80 ச*த*வீத*ம் தியேட்ட*ர்க*ளில் வெளியிட*ப்ப*ட்டு வ*சூலை வாரி கொடுக்கின்ற*ன.
புர*ட்சித்த*லைவ*ர் ச*ரித்திர நாய*க*ர் மட்டுமல்ல! சாத*னை நாய*கரும் ஆவார்!..... Thanks...
-
M G R
வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்
எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது
வாழ்க எம்ஜிஆர்புகழ்... Thanks...
-
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?"
இந்த வரிகளுக்கு அன்றும் இன்றும் என்றும் பதிலாக நிற்கும் காலத்தை வென்றவன்...காவியமானவன்......இவர் ஒருவர்தான்.
எழுச்சிப் பாடல்.,சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் மனித இனத்தைத் தட்டி எழுப்பும் பாடல்.புரட்சித் தலைவரே வெளியே கிளம்பும் முன் ஒரு முறைக் கேட்டுச் செல்லும் பாடலாம்.....
ஒரு எழுச்சிப் பாடலோடு பயணிக்கிறேன்.கவியரசரின் வரிகள்...மெல்லிசை மன்னர்களின் இசை....ஏழிசை வேந்தனின் அற்புதக் குரலில்..
.மன்னாதி மன்னனின் டைட்டில் பாடல்.சம்பூர்ணமான சங்கராபரணத்தில் சுருதி சுத்தமாக "அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை திராவிடர் உரிமையடா"கணீரென்று துவங்கும் இந்தப் பாடலின் துவக்கம்...குதிரைகளின் குளம்பொலி...திரையில் மாமன்னனாக கையில் சாரட்டின் கயிற்றோடு எம்.ஜி யார் அவர்கள், குலதெய்வம் ராஜகோபாலுடன்
"அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை திராவிடர் உரிமையடா....ஆ ஆ ஆ ஆ .......ஆஹா...
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பதில் பெருமையடா....தாயகம் காப்பதில் பெருமையடா"....
பாடலின் துவக்கமே அமர்க்களம்...அஞ்சாமை.....அஞ்சுவது நம் மரபிலே இல்லையென்று சொல்லும் அஞ்சா.....மை.....
டி.எம்.எஸ்ஸின் முத்திரைப் பாடல் என்றெ சொல்லலாம்...
"கனக விஜயரின் முடித்தலை எரித்துக் கல்லினில் வடித்தான் சேரமன்னன்....ஆ ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆஹா ஹா...
இமயவரம்பிலே மீன் கொடி ஏற்றி இசைப் பட வாழ்ந்தான் பாண்டியனே......"ஒரு சரித்திரம் 2 வரியில்...
..பாடல் நடுவில் தென்றலாய் முகம் காட்டும் பப்பிம்மா..மறைந்த அஞ்சலி தேவிம்மா...
நாட்டிய பேரொளி பத்மினியும்...
.பாடலின் வரிகள் புரட்சித்தலைவருக்கென்றே தைக்கப் பட்ட சட்டை...கவியரசரின் தீர்கதரிசனம்"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்"....காலம் உள்ளவரை நிற்பவர் இவரே என்று அன்றே முத்திரைக் குத்தின கவிநயம்..."கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை..களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவன் பிள்ளை"இந்த வரிகளை உச்சச்தாயியில் இசை அமைத்திருக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை நயம்...தன் குரல்வளத்தால் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நம் மெய்யெல்லாம் சிலிர்த்துப் போகும் டி.எம்.ஸ் அய்யாவின் குரல் வளம்...இவையெல்லாம் சேர்ந்து இந்தப் பாடலை காலத்தை வென்ற பாடலாக, என்றும் உச்சம் தொட்ட பாடல் ..,இன்று உங்களோடு.... Thanks...
-
#ஒருதாய்மக்கள்நாமென்போம்...
#உன்னையறிந்தால்நீஉன்னையறிந்தால்.
#ஏமாற்றாதேஏமாற்றாதேஏமாறாதேஏமாறாதே..
#இன்னொருவர்வேதனைஇவர்களுக்குவேடிக்கை..
#தொட்டுவிடதொட்டுவிடதொடரும்..
#தைரியமாகச்சொல்நீமனிதன்தானா..
#நான்பாடும்பாடல்நலமாகவேண்டும்..
மேற்கண்ட தலைவரின் பாடல்கள் இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக கருதுகிறேன்,
நண்பர்களே, உறவினர்களே எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்திடுங்கள்,
உங்களையும், உங்கள் சந்ததிகளையும் காத்திடுங்கள், அனைவரும் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்,
அலட்சியம் வேண்டாம்...... Thanks...
-
மாமனிதர் எம் .ஜி .ஆர் .
நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்
நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !
ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்
ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !
தோன்றின் புகழோடு தோன்றுக என்று
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !
மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !
நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி
நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !
ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்
ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !
ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை
ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !
வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்
வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !
என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்
என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !
நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்
நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !
பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்
பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !
விருதுகள் பல பெற்றபோதும் என்றும்
விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !
ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி
எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !
திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !
புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்
புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !
இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் ! கவிஞர் இரா .இரவி
தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்
ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்
சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்
மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்
திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்
உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்..... Thanks...
-
எம்.ஐி.ஆரும், சரோஐாதேவியும் இணைசோ்ந்து சுமாா் 10 ஆண்டுகளில் 26 படங்களில் நடித்திருக்கின்றனா். இந்த இணை நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்களில் ஒன்று பத்மினி பிக்சா்ஸ் சாா்பில் இயக்குநா் பந்தலு தயாாித்த 'நாடோடி'.
இப்படத்தில்தான் நடிகை பாரதி தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானாா். இப் படத்தில் பல பாடல்கள் நம் காதுகளுக்கு இனிமை சோ்த்தன.
கவிஞா் வாலி இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றி மக்கள் திலகத்திடம் வாிகளை வாசித்து காட்டினாா்.
புரட்சி தலைவா் "இது என்ன சாித்திரப் பாடலைப் போலிருக்கிறது" எனறு சொல்லி பாடலை நிராகாித்தாா். ஆனால் அழகான அா்த்தமுள்ள அவ்வாிகளை வீணாக்காமல் இசையமைப்பாளா் கே.வி.மகாதேவனிடம் பாடி காட்டினாா் கவிஞா் வாலி.
இசையமைப்பாளருக்கு பிடித்துப் போக, அப்போது அவா் இசையமைத்துக் கொண்டிருந்த எம்.ஐி.சக்கரபாணியின் சொந்த தயாாிப்பான 'அரச கட்டளை' எனும் சாித்திர படத்தில் சோ்த்து கொண்டாா்.
'நாடோடி' படத்திற்கு எழுதப்பட்டு 'அரச கட்டளை' யில் சோ்த்துக் கொள்ளப் பட்ட அந்தப் பாடல் "புத்தம் புதிய புத்தகமே".......... Thanks...
-
நமது "ஆண்டவன்MGRகுடும்ப" தளத்தில் பயணிப்பவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்....!
புரட்சித்தலைவரின் புகழ்காக்க நாள் தோறும் உழைத்துக் கொண்டிருக்கும் விசுவாச ரத்த உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
நமதுஆண்டவன் MGR
குடும்ப தளமானது இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களை மட்டுமே, முதன்மை படுத்தி... நமது சுய விளம்பரங்களை ஓரங்கட்டி , காழ்புணர்ச்சி யின்றி நல்ல பல தகவல்களை பகீருகின்றவர்களை நாம் வாழ்த்தாமலும், வரவேற்க்காமலும் இல்லை.
அதே நேரம் தளத்தின் நலன் கருதி சில வேண்டதகாத பதிவுகளை பதிவிடுவோரை பலமுறை எச்சரித்தப் பிறகே, தவிர்க்கமுடியாத சூழலில் பலரை தளத்தை விட்டே வெளியேற்ற வேண்டிய நிலையும் உருவாகிறது. நமது இந்திய நாடு மட்டுமல்ல... அயல் நாடுகளில் வசிக்கின்றவர்களில் கூட , படிப்பறிவே இல்லாத பலரும் அவர்களால் முடிந்தவரை... தெறிந்தவரை நம் தலைவரின் புகைப்படங்கள், ஆடியோ /வீடியோ பதிவுகள், பத்திரிக்கை - தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற , அரும் பெரும் தகவல்கள், விழா தொகுப்புக்கள், மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தோற்றத்தில் அசத்தும் கலைஞர்களின்... ஆடல் பாடல் , இசைக் கச்சேரியின் படைப்புகள், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கவிதை , புகழ் மணக்கும் விரல் பதிவுகளென ஏராளமாக பதிவுகள் செய்து... தங்களால் முடிந்த வரை நம் பொன்மனத் தலைவருக்கு புகழ்மாலை சூட்டிவரும் வேளையில்...
நமது தளத்தில் பயணிப்பவர்களில்,
கற்றறிந்த நல்லோர்கள், வல்லோர்கள்... மூத்தோர்கள், சகல திறன் கொண்ட விசுவாசமிக்க பற்றாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள்... எந்தவொரு பதிவுகளையும் பதிவிட முடியாது போனாலும், அசத்தலான, காணக் கிடைக்காத பல அறிய தகவல்களை நாள் தோறும் பதிவிட்டு , தளத்திற்கு பெருமை சேர்ப்பவர்களை உற்ச்சாகப் படுத்த நம்மாள் முடிந்த ஒரு கமெண்ட் கூட போட முடியாதென்றால்.....?
மன்னிக்கவும்,
தளத்தை விட்டு நீக்குவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.
குறுகிய நாட்களில் அசூர வளர்ச்சி பெற்று, ஏராளமான பக்தர்களின் வாழ்த்துக்களை நாள்தோறும் நம் இதயங்களில் ஏற்று... "கொடுத்து சிவந்தகரம் " "கொள்கைச்சுடர் " பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பூரண நல்லாசியுடன்... சாதனைத் தளமாக இயங்கி வரும் நமது "ஆண்டவன்MGRகுடும்ப தளத்தை மேலும் வலுப்படுத்த,
"உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்...ஆண்டவன்.
MGR குடும்பதளத்தை வலு படுத்துங்கள்....
பொய்யான தகவல் தந்து மேதாவி பேரெடுக்க, அணைக்கின்ற தளமல்ல நம்ம தளம்.
நான் என்ற அகந்தையிலே, கொரோனாப் போல் வலம் வந்து.... தற்பெருமை காட்டாது நம், ஆண்டவன்MGRகுடும்ப தளம்.
என்பதை பணிவோடு கூறி ,
புரட்சித்தலைவரின் புகழ்பாடுவோம்....
"ஒரு தாய் மக்கள் நாமென்போம் - ஒன்றே எங்கள் குலமென்போம்... தலைவர் ஒருவர் தாமென்போம் - சமரசம் எங்கள் வாழ்வென்போம்....!
நன்றியுடன் :
நமது வழிகாட்டி
வள்ளல்மகான்
பொன்மனச்செம்மலின்
செய்திசேகரிப்பாளன்
புரட்சிபக்தன்
அட்மீன்ஆர்.ஜி.சுதர்சன்
ஆண்டவன்
"MGR குடும்பம்தளம்
பெங்களுரு.... Thanks...
-
-
🙏🙏🙏நன்றிகள்🙏🙏🙏
***********************************
புரட்சித்தலைவரின் விசுவாச ரத்த உறவுகளுக்காகவும் ,
உலக மக்களின் பொழுது மகிழ்வுடன் புலருவதற்காகவும் நாள்தோறும் மலேசியா நாட்டின் பொன்மனச்செம்மல் இசைக்குழு தலைவர் ஐயா , திரு. மேகநாதன் அவர்கள் வழங்கி வரும்...... நமது மக்கள் அரசர்...மும்முறை தமிழகத்தை சிறப்பான முறையில் ஆண்டு பல நல்ல திட்டங்களை வகுத்து , ஏழை மக்களின் துயர் துடைத்த தூயவர் மகான் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் நடித்து , பட்டி தொட்டியெங்கும் பாமரர்களின் காவல்காரன், தொழிலாளி , விவசாயி , மீனவ நண்பன் , படகோட்டி என வணங்கப்பட்ட , நமது தெய்வத்தின் நடிப்பில் வெளிவந்த , படகோட்டி படத்திலிருந்து " இல்லையென்போர் இருக்கையிலே - இருப்பவர்கள் இல்லையென்பார்...மடி நிறைய பொருளிருக்கும் , மனம் நிறைய இருளிருக்கும்......என்பதை உணர்த்திய கருத்தாழம் நிறைந்த பாடலை கேட்போமே....
இது ,
உழைக்கும் குரல் தளத்தின் முயற்ச்சி
ஆலோசனை :
திரு. ஆர்.ஜி.சுதர்சன் அவர்கள்.
(ஆண்டவன் mgr குடும்பத்தள - அட்மீன்🙏)... Thanks...
-
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் "
**********************************
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல; MGR கற்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும், தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு நஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி; எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பியிருந்தார். இது போன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.
நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது; அவர்களை, அந்த கயவர்களின்பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகைகளிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
நன்றி : யாழ் பதிவு - யாழ் இணையம்...... Thanks...
-
எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆர், இன்னமும் புரட்சி தலைவராகவே தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நடிகர் என்பதால் மட்டுமல்ல. அதையும் தாண்டிய அவரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த இயல்புதான் காரணம் என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக எம்.ஜி,ஆர் பற்றிய ஒரு ஸ்வாரஸ்யா சம்பவத்தை கூறி இருககிறார் எம்.ஜி.ஆரின் "தாய்" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார்.
"தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார் அந்த பத்திரிக்கையின் உரிமையாளரான எம்.ஜி.ஆர்.
ஆனால் அப்போதுதான் வலம்புரி ஜான் , அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.
‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’-அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’
‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’
‘’உங்க பேரு என்ன?’’
’’லச்சுமி’’
‘’எந்த ஊரு?’’
’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’
’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’
’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’
‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’
’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’
’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’
‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’
’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’
‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’
’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’
’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’
‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’
‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’
‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’
‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’
’’மறுபடி சொல்லுங்க....’’
‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.
ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பி இருக்கிறாள்.
நன்றி: தாய் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார் அவர்கள் !..... Thanks...
-
நமது தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் எப்பேற்பட்ட ஞானசிற்பி என்பதை நீங்களே பாருங்கள்.
திரைப்பட வசனங்கள் மூலம் .... உலக மக்களுக்கு நல்வழிகாட்டிய உண்மை கடவுளே எம்ஜிஆர் அவர்கள் தான் என்றால்அவை மிகையல்ல...
அன்பன் :
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி.... Thanks...