-
Ramiah Narayanan
பாசமலர் !
இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் வழக்கம் மக்களிடே இருக்கிறது இன்றைக்கும் கை வீசம்மா கை வீசு என்று சிவாஜி உருகி கண்ணீர...் மல்கி பேசுவதை கண்டு கண்ணீர்விடுகின்றவர்கள் இருக்கிறார்கள்.
*படம் என்கிறார் சிலர் பாடம் என்கிறார் பலர் பாசத் தேன் குடம் அது.
* சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை பாசமலர்.
* முதல்நாள் படம் பார்த்த எவர் முகத்திலும் புன்னகையில்லையாம் எதையோ பறிகொடுத்தமாதிரி, சோகத்தில் ஆழ்ந்த நிலையில் வீடு திரும்பினார்களாம்.
* ராஜசேகரன் போன்ற அண்ணனுக்காக தங்கைகளும், ராதா மாதிரியான சகோதரிக்காக அண்ணன்களும் கோடிக்கணக்கில் ஏங்கினார்களாம்.
* முதலில் ஆண்குழந்தை பெற்றவர்களுக்கு இரெண்டாவது பெண் குழந்தை பிறந்தால் ராதா என்றே பெயர் சூட்டினார்களாம்.
* சிவாஜியுடன் ஜோடியாக நடிக்க கூடாது என்று சாவித்திரிக்கு பலர் கடிதம் எழுதினார்களாம்.
* அடுத்து சிவாஜியுடன் சாவித்திரி நடித்த எல்லாம் உனக்காக படம் முதலில் ஓடவில்லையாம். பின்னர் தான் பார்க்க ஆரம்பித்தார்களாம்.
கிளைமேக்ஸ் காட்சிதான் நம் நெஞ்சை பிழிந்துவிடும். அது குறித்து வசனகர்த்தா ஆருர்தாசும் சாவித்திரியும் கூறியது ............!
ஆரூர்தாஸ்!
சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?
ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.
‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா? என தேம்பி தேம்பி அழுகிறார். கைவீசம்மா கைவீசு என சிவாஜி அவர்கள் பாட விம்மி விம்மி அழுதார்கள். தியேட்டரில் கேட்க வேண்டும்மா ?
சாவித்திரி !
அண்ணன் சிவாஜி கணேசனின் மேக் அப்பும் இதில் ஸ்பெஷலாக இருந்தது. மீசை, தாடி, கோட் இவைகளுடன் அவர் குலைந்து போய் வரும் கடைசிக் காட்சியில் யாரும் மனம் நெகிழாமல் இருக்க முடியாது. படத்தின் இறுதிக் காட்சியை எப்படி எடுத்து முடிக்கப் போகிறோம் என்று எல்லாரும் ஒரு சஸ்பென்ஸூடன் காத்துக் கொண்டிருந்தோம்.
கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!
நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
தோல்வியுமில்லை ஆ…
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்,
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f2&oe=5A2EE0E9
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...71&oe=5A19BA37
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b9&oe=5A3970FE
-
-
-
சிவாஜி யின் சிலையை அகற்றியவர்கள் அடையாளம் தெரியாமல் போகலாம் - ஆனால் எங்கள் சிவாஜியின் அடையாளம் இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும் உலகத்தமிழர்களிடமிருந்து அகற்ற முடியாது என வீர முழக்கம் செய்து அணைத்து சிவாஜி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த மாவீரன் சேரன் அவர்களுக்கும் இந்த போராட்டத்தை சிறப்புற ஏற்பாடு செய்து முடித்த தமிழ் இனப்போராளி எங்கள் சிவாஜி படையின் வீரத்தமிழர் சீமான் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் -கடல் வெள்ளம் தடுத்தாலும் சுனாமி காற்று துளைத்தாலும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் முரட்டு தமிழன் சீமான் - அடங்கா தமிழன் சேரன் பின்னால் அணிவகுப்போம் - சிவாஜியின் புகழ் காப்போம் - தமிழையும் சிவாஜியையும் போற்றுவோம்
-
Sivaji Dhasan Sivaji Dhasan shared Jahir Hussain's post.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...07&oe=5A1FCE79
Jahir Hussainவிதவிதமான கதாபாத்திரங்களை சலிக்காமல் சிலுவை போல தோளில் சுமந்த ஒரு நடிகனின் சில கதாபாத்திரங்கள்,,,,,,, முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நட...ித்த சிவாஜி,
'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார்.
'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் எம்.ஜி.ஆருடன் இணைந்து வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார்.
'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார்.
'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம்.
'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார்.
'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார்.
'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார். 'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார்.
'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார்.
'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார்.
'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார். 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார்.
ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார்.
'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார். 'முதல் மரியாதை' படத்தில் ஒரு சிக்கலான வேடத்தில் எளிதில் நடித்திருப்பார்,,,
'படிக்காதவன் படத்தில் படித்த மேதையாக,
தேவர் மகன் படத்தில் பெரிய தேவராக வாழ்ந்திருப்பார்,,,
'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. . 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும்,
நடித்திருப்பார்,, இன்னும் பல நூறு கதாபாத்திரங்களை கட்டுரைக்குள் அடைக்க முடியாது போனேன்,,, இதுபோன்ற வெரைட்டியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க யாரால் முடியும்,,,, சிவாஜி என்கிற பெயரை நாவில் உச்சரிக்கும் போதே இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வந்து போகுமே! (நன்றி ,,, படம் உதவி திரு நாகி-நாகராஜன்)
-
-
Sivaji Peravai is with தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு.
நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல்
நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல் என்பது ஏதோ ஒரு சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைத்துவிட்டோம் என்று தமிழக அரசு நிம்மதியடைந்திருக்கலாம்.
ஆனால், இது வெறும் சில அகற்றல் அல்ல, தமிழினத்திற்கு ஏற்பட்ட ஒரு அவமானம், கலைக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.
ரசிகர்களின் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, கடந்த 17 -08 - 2017 கோவை மாநகரில், ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கலைப்பிரிவின் சார்பில் ஒரு உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கினோம்.
... அதன் தொடர்ச்சியாக, 22 -08 -2017 அன்று மாலை, திரு. சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான அளவில் நம் ரசிகர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகும்.
அடுத்து, மதுரையில் ஒரு அறப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்று நண்பர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோலவே, திருநெல்வேலி, கடலூர் போன்ற இடங்களிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நம் உணர்வுகளை மதித்து, விரைவில் மீண்டும் மெரீனா கடற்கரையின், காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கிடையே நடிகர்திலகத்தின் சிலை அமைக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும். அரசின் செவிகளில் நம் கோரிக்கை விழுந்து, நம் கோரிக்கை நிறைவேறும் வரை நம் அறப்போர் ஓயாது.
நன்றி.
K .சந்திரசேகரன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c1&oe=5A29CE41
-
-
-