தொண்டு செய்கிறேன் தொண்டு செய்கிறேன் என்று துண்டு விரித்து ஏமாற்றுபவர்கள் மத்தியில்,
தான் நடிக்கும் திரைப்படம் மக்கள் கொடுக்கும் பணத்தால் தான் பெருகி வருகிறது..அதற்க்கு மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு
...திரை உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களை விட அதிகமான கதாபாத்திரங்களை அதாவது
தமிழறிஞர்கள்,
தேசத்தலைவர்கள்,
விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
கலை விற்பன்னர்கள்,
புராண நாயகர்கள்,
சமுதாய சீர்திருத்தவாதிகள்
என பல நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !
இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை இன்று முதல் புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :
முன்னுரை
1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !
உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....
இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் தமிழ் திரைப்படத்தில் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும், தமிழை, முதலில் அறிதல் வேண்டும் ..
அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்
நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்
http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0
http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4
http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM
ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..
உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!
அந்த உடல் தான் நடிகன் !
ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!
தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!
உதாரணமாக :
ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...
அதுதான் தமிழின் வலிமை...!
1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.
அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று அவரை பற்றி அறியாதவர், அறிந்தும் தாழ்புனற்சியால் தூற்றுபவர், பலர் நினைக்கலாம்...
அப்படி நினைபவர்களுக்கு :
முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் திலகத்தை படத்தை விட்டு தூக்கவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம்.
PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.
என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் ! ஒரு தயாரிப்பாளர் ஒரு புதுமுகத்தின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்தது திரை உலகம் அகில உலகத்திலும் நாம் கேள்விபடாத நடக்காத ஒரு சாதனை.
இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...
ஒரு நடிகனுக்கு பல படங்களில் சிறு சிறு வாயிப்புகள் வந்து நடித்துகொண்டிருந்தால் கூட பரவாஇல்லை,அது மிக மிக நல்ல விஷயம் காரணம், திரை துறையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆறுதல், தொடர்ந்து கிடைக்கும் (சிறு வேடமானாலும் )வாய்ப்பு இவற்றால் கிடைக்கும் வாழ்வாதாரம் இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்.
ஆனால் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது தயாரிப்பாளர் அந்த நாயகனை பாதியில் தூக்கி எறிந்தாலோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் ஒரு வழியாக 8 மாத இடைவெளிக்கு பிறகு படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...
அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , திரையுலகில் ஒரு புரட்சி புயலாய், "புரட்சி" என்ற வார்த்தையை திரைஉலகில் அனைவரையும் பராசக்தி என்ற பெருவெற்றியின் மூலம் முதன் முதலில் பேசவைத்ததே, அதை நடைமுறையில் கொண்டுவந்ததே, நம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ யாராலும் முடியாது ! ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.
முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !
முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு
http://www.youtube.com/watch?feature...&v=KsqfDbJv33U
கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு
http://www.youtube.com/watch?feature...&v=B2ai_eNPkCs
அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.
அவரது திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.
இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள்.
நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .
பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!
அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை !
பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..!
உதாரணம் :
நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !
உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !
http://www.youtube.com/watch?feature...&v=eCVQAzG8_14
நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....
அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.
நமது அன்னை
தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,
கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!
இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார்
அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !
பக்கம் பக்கமாக வசனம் என்று கேள்விப்பட்டவுடன் ஆளவிடு சாமி என்று கொடுத்தவரிடம் காரணமே சொல்லாமல் பயந்தோடிய நடிகர்கள் மத்தியில், ஒன்ற, இரேண்டா, மூன்றா, பத்துபக்கமா..? கொடு வசனத்தை...பிடி முதல் takilayae ஓகே என்ற ரீதியில் கலை களஞ்சியமாக விளங்கியவர் திரை உலகில் நடிகர் திலகம் மட்டுமே என்றால் அது மிகையாகாது !
அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !
http://www.youtube.com/watch?feature...&v=SdnOlP94x2g
வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம்,
வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு ,
ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை,
தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே
கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் இந்த புவியில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அந்த திறம் ...அடேயப்பா..! !
தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !
இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...
தொடரும் ....