-
சின்னக் கண்ணன் சார்!
ரின் பாக்கெட்டா தர்றீங்க! ரின் பாக்கெட்!:)
மீதி இந்தாங்க 'கண்மலர்' படத்திலிருந்து.
http://www.inbaminge.com/t/k/Kanmalar/folder.jpg
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் நடந்ததையா நடராஜா..
இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா
பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும் போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா
பார்வை தெரிந்ததென்று பாவை வரும் போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா
உன் சேவை செய்ததற்கு தன் சேவை தான் மறந்த
உயிரைப் பறிப்பதென்ன நடராஜா
தந்தை பன்னீர் கொடுத்ததற்கு பதிலாக
நீ எனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் நடந்ததையா நடராஜா
ரகளை பாட்டு. பாலமுரளியும், ஜானகியும் மனசப் பிழிஞ்சுடுவாங்க.
நடித்தது உங்க சரோஜாதேவியும்:),சாமியாருக்குன்னே பிறந்த நாகைய்யாவும்:).
ஓகேயா!
சரி! நான் ஆபிசுக்கு கிளம்புற நேரம் வந்தாச்சு!:) பார்த்துக்கோங்க.:)
எப்படியோ நல்லா இருங்க :):)
-
-
கார்த்திக் சார்
நம்ம NT பாட்டு ஒண்னு சார் இளையராஜாவின் மோகன மெலடி
நான் வாழ வைப்பேன்
அசோகா brothers
யோகானந்த் direction
இந்த படத்தை பற்றி விகடன் விமர்சனம் நல்ல நினைவு
சிவாஜி படம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஆகியும் .. ரஜினி வந்தாரோ பொழைததோ
(எனுடைய வோர்டிங்க்ஸ் மாறி இருக்கலாம் விகடன் சொல்ல வந்த கருத்து இதுனு நினைவு )
சமீபத்தில் தந்தியில் ஆரூர் தாஸ் அவர்களும் சற்று கோடிட்டு இருந்தார்கள் இந்த படத்தை பற்றி
ஆனால் பாட்டு ஒவ்வொன்னும் மணி மணியாக இருக்கும்
அதிலும் இந்த டூயட் கண்ணை மூடிட்டு கேட்டிங்கனா
பாலா சிவாஜி சாருக்கும் சுசீலா விஜயா அம்மாவுக்கும் அப்படியே பொருந்தும் .
ராஜாவின் ஸ்டார்டிங் பீட் prelude கிடார் violin தபேல
பௌர்ணமி இரவில் சாரை பாம்பு பின்னியது போல் பிணைந்து
//தாலாட்டு கேட்கின்ற மழலை இது..
தண்டோடு தாமரை ஆடுது..
சம்பங்கி பூக்களின் வாசம் இது..
சங்கீத பொன் மழை தூவுது..
ராகங்களின் மோஹனம்..
மேஹங்களின் நாடகம்..
உன் கண்கள் எழுதிய காவியம்..
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.//
என்ன இந்த பாட்டு எல்லாம் நம் தலைவர் கொஞ்சம் ஸ்லிம் ஆக இருந்த போது வந்து இருந்தா செம ரகளை தான்
தலைவராவது பரவாயில்லை விஜயாம்மா தான் பெல்லஸ் மிடி maxi னு தன்னுடைய ஆசை எல்லாம் நிறைவேற்றி (கொல்லுவார்கள்)
மற்ற பாடல்களையும் அலசுவோம்
-
கிருஷ்ணா சார்.. அதுசரி திருத்தேரில் வரும் சிலையோன்னு ஆரம்ப வரி எழுதலைன்னா கண்டுபிடிக்க மாட்டோமா என்ன நல்ல பாட்டு தான்..ஆனா கே.ஆர்.வி தான் ஏதோ ஊர்பேர் தெரியாத காய்ச்சல்ல விழுந்து எழுந்த மாதிரி ஒல்லியா இளைச்சமாதிரி இருப்பாங்க..சொன்னாற்போல காஸ்ட்யூம் தான் கண்ணுக்கு க் கஷ்டம்..
வாசுசார்.. நன்றி ஃபர்த லிரிக்ஸ்..ரொம்ப்ப்ப பிடிச்ச ப்பாட்டு இது.. அது என்ன உங்க சரோஜாதேவி..ம்ம்(நி நி மெளலி மாதிரி.. ஏதோ ஆசைப்படறீங்க :) )
பாலா சார்.. நன்றி இணைப்பிற்கு..வீட்டிற்குப்போய்த்தான் பார்க்கணும் :)
-
ஒரு அழகான பாடல்.
பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :
இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். இருக்கவே இருக்கிறார் பாலு. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் (மணிஷர்மா-தெலுகிங்கில்) பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள். ஆ... இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் - அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட "கட் ஷாட்"கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் - இயல்பான செய்கைகளுடன்.
ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று "நிவேதா"வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள்.
இந்த பாடலின் வீடியோ இணைப்பு
http://www.youtube.com/watch?v=4cyZq1uvm7Y
-
bala sir
மிக நல்ல பாடல்களை நினவு கொண்டு வந்து உள்ளீர்கள்
கேளடி கண்மணி வெற்றிக்கு பிறகு வசந்த் கொடுத்த படம்
நீ பாதி நான் பாதி
படம் பாதி தான்
-
1982 இல் வெளிவந்த தணியாத தாகம்
ஒரு தலை ராகம் எ ம் இப்ராகிம் direction
மன்சூர் creations
மியூசிக் டைரக்டர் எ எ ராஜ்
ஒரு தலை ராகம் படம் வந்த போது ராஜேந்தருக்கும் இப்ராஹிம்கும்
ஒரு தலை ராகம் வெற்றிக்கு யார் காரணம்னு சண்டை வந்து
ராஜேந்தர் அவர் வழியில் வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்களில் ,
ராகம் தேடும் பல்லவி,நெஞ்சில் ஒரு ராகம் னு படமா எடுத்துட்டு இருந்தார்.
அப்ப இந்த எ ம் இப்ராகிம் தயாரித்து இயக்கி வெளிவந்த படம்
டெல்லி கணேஷ் சுபத்ரானு ஒரு புது முகம்
ஒரு தலை ராகம் படத்தில் ரூபாவின் பெயர் சுபத்ரா
மலேசியா ஜானகி
ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
(பூவே)
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் ...
என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
(நீ கோவில் )
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
(பூவே )
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
(கோவில்)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
(ஜானகியின் சிரிப்பு)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
(பூவே)
மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
(மலேசியவின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
(ஜானகியின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு
அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )
(பூவே)
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
புது மலர் புது மலர் ..
“””
-
-
-
//பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :// என் நண்பர் ஒருவர் பல வருடங்களுக்குமுன் கல்யாணமான புதிதில் பார்த்தபடம் இந்தப் படமாம்..பின் பிறந்த குழந்தைக்கு வைத்த பெயர் நிவேதா
நல்ல பாட்டு..வீட்டிற்குப் போய் பார்க்கிறேன்..