M/s. Murali / Gopal,
Amazing and fitting responses with authentic data.
Hats off to you both!
Regards,
R. Parthasarathy
Printable View
M/s. Murali / Gopal,
Amazing and fitting responses with authentic data.
Hats off to you both!
Regards,
R. Parthasarathy
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!
என் பதிவுகளை பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எல்லா புகழும் நடிகர் திலகதிற்கே!
நமது திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் எங்கள் மதுரையின் இளஞ்சிங்கம் சுந்தர் அவர்களை
நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன்.
அன்புடன்
திரி நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மாற்று முகாம் நண்பர்கள் சிலர் நமது படங்களின் ஓட்டத்தைப் பற்றியும் வசூலைப் பற்றியும் அவதூறு சொன்னதால் அதற்கு பதில் கொடுத்தோம். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவர்தம் படங்களைப் பற்றியோ நடிப்பைப் பற்றியோ எந்த வித விமர்சனங்களும் நமது இந்த திரியில் முன் வைக்க வேண்டாம் என்பதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு என்று ஒரு தரம் இருக்கிறது. அதிலிருந்து நாம் எந்த காலத்திலும் தாழ வேண்டாம். யார் மனதையும் நாம் புண்படுத்த வேண்டாம்.
நண்பர் rks சொன்னது போல் நடிகர் திலகம் புகழ் மட்டும் பாடுவோம்.
அன்புடன்
கோவை ராயலை கலக்கிய அழகாபுரி சின்ன ஜாமீன் ஆனந்த் ஒரு வாரத்தில் nett மட்டும் Rs 80 ஆயிரத்தை தாண்டியும் மொத்த nett வசூலையும் விட gross வசூல் அதற்கும் சில ஆயிரங்கள் தாண்டி ஒரு சாதனை புரிந்துள்ளார்.
அதே போன்று நாம் முன்னரே இங்கே பகிர்ந்து கொண்ட செய்தியான நெல்லை சென்ட்ரலில் தியாகம் ஒரு வாரம் ஓடிய போது வெளியீட்டாளர் பங்கு மட்டும் ரூபாய் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக (Above Rs 12,000/-) பெற்று தந்திருக்கிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
Wishing you All Happy Independence Day. Nadigarthilagam left his marks or footprints on every goodthings to remember him on all occasions.
கப்பலோட்டிய தமிழன்-1961
சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் நடிப்பு தெய்வத்தின் சாதனைகளில் ஒன்றான, நாங்கள் கொண்டாடும் கப்பலோட்டிய தமிழன் மீள் பதிவு.
இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.
இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.
நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.
கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .
இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.
இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).
அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.
மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase.
படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.
ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.
ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .
முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?
Wish You All A Very Happy Independence Day!!!
இலங்கையில் கர்ணன்
http://i61.tinypic.com/4rx8pi.jpg
happy independence day to all thread friends