http://i59.tinypic.com/52149.jpg
Printable View
இன்று கும்பகோணத்தில் கலைப் பாடசாலை நடத்தும் விவேகானந்தன் என்ற இள வயசு நண்பருடன் மக்கள் திலகத்தின் சிறப்பு பற்றியா உரையாடலின் போது அவர் சொன்னார். தனது தந்தையாரும் ஒவ்வொரு வருடமும் தலைவனின் பிறந்த நாள் அன்று வீட்டு வாசலில் தலைவனின் திரு உருவப் படத்திற்கு மாலையிட்டு வருவோர் எல்லாருக்கும் தானம் செய்து மகிழ்வார்.
இவரின் தந்தையார் அரசு ஊழியராக இருந்தபோது இவர் செய்யாத தவறுக்கு அதிகாரிகள் இவரை தண்டித்த வேளையில் மனமுடைந்த இவர் தந்தையார் அப்போதைய முதல்வர் எங்கள் தலைவனுக்கு நடந்தததை எழுதி ஒரு கடிதம் தபாலில் அனுப்பினார்.
முதல்வரும் உண்மையை விசாரித்து அறிந்து உடனே ஆவன செய்தார். எங்கள் முதல்வருக்கு இவரின் தந்தையாரை இதற்கு முன்பு தெரியாது.
எங்கள் தலைவனின் ஆட்சியின் சிறப்பு அத்தகையது என்று விவேகானந்தன் கூறியதைக் கேட்ட போது ................
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்
இங்கு
ஏழைகள் வேதனைப் படமாட்டார்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
ஒரு தேவன் என்றாலும் விட மாட்டேன்