http://i67.tinypic.com/213263a.jpg
Printable View
நாடோடி மன்னன் படத்தை பற்றி மக்கள் திலகத்தின் பதில்
கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?
பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.
இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.
இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".
‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.
திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள் கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக் கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின் முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:
"நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'
"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'
ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல் வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:
""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன். படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.
உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு வந்தேன்.
தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.
நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற "தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல "தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.
நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால் ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.'' என்கிறார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'
நன்றி: தினமணி.காம்
thanks karthik sir . Repeating your aug- 2014 posting.
பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)
1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்).
ரிக்ஷாக்காரனுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா நடித்து வெளியான இரண்டாவது படம். இதற்கு முன் மஞ்சுளா நடித்து படப்பிடிப்பு நடந்த உலகம் சுற்றும் வாலிபன் மேற்கொண்டு வேலைகள் நடைபெறாததால், அதற்குப்பின் துவங்கப்பட்ட இதயவீணை வெளியீட்டில் முந்திக்கொண்டது. இதற்கு அடுத்த படமாக உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.
இதயவீணையில் இன்றைய என் விருப்பமாக வருவது 'பொன் அந்தி மாலைப்பொழுது' என்ற மனதை மயக்கும் ரம்மியமான பாடல். பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் அருமையான டூயட்டாக அமைந்தது. அழகிய வண்ணத்தில் எழிலான காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்துக்கே ஹைலைட் பாடலாக அமைந்தது. குடியிருந்த கோயில் படத்தில் 'நான்யார் நான்யார் நீ யார்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் இது.
பாடகர்திலகம் மற்றும் இசையரசியின் அருமையான ஹம்மிங்கோடு துவங்கும் இப்பாடலுக்கு மூன்று சரணங்களுக்கும் மூன்று வித்தியாசமான மெட்டைத்தந்து அசத்தியிருந்தார்கள் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ். அவர்களது இசைப்பயணத்தில் இந்தப்படமும், இந்தப்பாடலும் மைல்கல் என்றால் மிகையில்லை.
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
(முதல் சரணம் ஒரு மெட்டில்)
மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளிப்
பனிவிழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலின்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக்காலையில் விழிக்கின்ற வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
(அடுத்த சரணம் வேறொரு மெட்டில்)
கட்டுக்கூந்தல் தொட்டுத்தாவி என்னைத்தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடிவர
சொல்லிசொல்லி வழங்கட்டும் கவிதை
எண்ணி எண்ணி மயங்கட்டும் இளமை
எந்நேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
(மூன்றாவது சரணம் பிறிதொரு மெட்டில்)
ஆடைமூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசைகொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
கண்ணோடு கண் பண்பாடுமோ
என் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
இந்தப்பாடலில் மக்கள்திலகம் மற்றும் மஞ்சுளாவுக்கு அருமையான கண்ணைக்கவரும் உடைகள். மக்கள்திலகம் முதலில் மஞ்சள், அடுத்து ஆரஞ்சு, இறுதியில் சிவப்பு வண்ணங்களில் பேண்ட் கோட், அணிந்து கூடவே விதவிதமான கூலிங்க் கிளாசும் அணிந்து அசத்த, மஞ்சுளாவும் அதற்கேற்றார்போல வண்ண உடைகளணிந்து நம்மை கிறங்கடிப்பார்.
பாடல் வரிகள், சிறப்பான இசை, அருமையான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நாயகன், நாயகி என எப்போது பார்த்தாலும் மனதைக்கவரும் பாடல் 'பொன் அந்தி மாலைப்பொழுது...
எந்த கட்சியானாலும் என் தலைவன் பெயரை சொல்லித்தான் ஆகவேண்டும் !
http://i67.tinypic.com/25yuddw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்