self confident senior citizen!
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
Printable View
self confident senior citizen!
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
How sweet is this gentleman Gemini in making the environ so sweet stealing the show!
https://www.youtube.com/watch?v=rEEJkehsdTo
Guest performance outshining others! that is this magician GG and his Midas touch!!
https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
1. காலங்களில் அவள் வசந்தம் ..../ பாவமன்னிப்பு
https://www.youtube.com/watch?v=52kDVborPjQQuote:
ஜெமினிக்கான பி பி ஸ்ரீனிவாசின் இனிமைக்குரல் குழைவில் காலங்களையும் கடந்து ரசிக நெஞ்சங்களில் வசந்த அலைகளை தென்றலாக தவழ விடும் சிரஞ்சீவித்துவம் பெற்ற மதுர கீதம் !
பாடலின் மெல்லிசைக் கோர்ப்பும் கற்பனை வளம் மிக்க வரிகளும் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதமும் காதல் மன்னரின் இயல்பான மேன்மை நிறைந்த உடல் மொழியும் மென்மையான பாடல் வரிகளுக்கேற்ற அசைவுகளும் உடையலங்காரமும் என்றும் பசுமையே !
https://www.youtube.com/watch?v=bZYcTwSDYG0
https://www.youtube.com/watch?v=vbn4CT3gXtw
https://www.youtube.com/watch?v=w6f_WJFYH-Y
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 2 இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுது.....வீரபாண்டிய கட்டபொம்மன்
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTEQuote:
ஏ எம் ராஜாவின் மாற்றுக் குரலாக பின்னாளில் ஜெமினியின் குரலாகவே மாறிப் போன பி பி சீனிவாசராவ் முதன் முதலில் ஜெமினிக்குப் பாடியது !
வெள்ளிவிழாக் கண்ட வெற்றிச் சித்திரத்தில் வெள்ளித்தட்டில் பாலன்னமாக சுவை சேர்த்த என்றும் இனிக்கும் தேனமுதப் பாடல் ஜெமினி பத்மினி இணைவில் !நடிகர்திலகமும் காட்சியளித்து பெருமை சேர்ப்பார் பாடலின் இறுதிவரி காட்சியமைப்பில் ...
https://www.youtube.com/watch?v=jQyQjsgwFBs
https://www.youtube.com/watch?v=BBmQp0ZlSaU
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 3
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ....சுமைதாங்கி
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0Quote:
வாழ்க்கையில் எப்போதேல்ல்லாம் நாம் சரிவை சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் வழுக்கி விடாமல் வீழ்ச்சியையும் எழுச்சியாக மாற்றிட நம்மை ஆக்கிரமிக்கும் நமது மனசாட்சியின் மன தைரியமூட்டும் நம்பிக்கையின் தும்பிக்கை எக்காலத்திலும் இப்பாடலே!
குறும்புத்தனமெல்லாம் அடங்கி ஒடுங்கி யதார்த்த வாழ்வின் சிக்கல்கள் சிலந்தி வலையாய் தன்னை சுற்றும் போது மனம் வெறுத்து ஜெமினி என்னும் உன்னதமான நடிப்புப் கலைஞர் இப்பாடல் காட்சிக் கோர்ப்பில் காட்டியிருக்கும் உடல்மொழி முகபாவங்கள் நமது மனங்களில் அதிர்வலைகளை உண்டு பண்ணி நெஞ்சத்தை நெகிழச் செய்து கன்னங்களில் கண்ணீர்க் கோடுகளை வரைந்திடும் ஒரு வித்தியாசமான உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாத அற்புதமான ஜெமினி முத்திரை !
https://www.youtube.com/watch?v=qd3kEym6ULU
https://www.youtube.com/watch?v=i2DaIx1BDDk
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 4 / ராமு
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை.....
Quote:
ஓய்வு பெற்ற ராணுவ வீரராக கச்சிதமான தோற்றப் பொலிவில் ஜெமினி தனது நடிப்பாற்றலை பறைசாற்றிய மறக்க முடியாத காவியம் ராமு !
போர்வீரனின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள். மனைவியைப் பறிகொடுத்து மகனும் அதிர்ச்சியில் ஊமையாகிவிட்ட பாலை வாழ்வில் அவர்
பாதையில் குறுக்கிடும் பாலைவனச் சோலையாக காதலை உணர்த்தும் பருவப் பெண் விஜயா!
அவள் நினைப்பே தவறு என்று கண்ணியமான மறுப்பை சோகக் கனிவுடன் மனதில் என்றும் ரீங்கரிக்கும் அமர அமுத மதுரமாக ஜெமினியின் குரல் பிரதிபலிப்பாக இழைக்கிறார் பி பி ஸ்ரீனிவாஸ் !
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=GymE4x-QRb8
https://www.youtube.com/watch?v=SE56rBItOO4
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 5 பாதகாணிக்கை
பூஜைக்கு வந்த மலரே வா......... பூமிக்கு வந்த நிலவே வா
Quote:
முக்கோணக் காதலின் பிராண்ட் அம்பாசடராக காதல் மன்னர் வலம் வந்த தமிழ்த் திரைக் காதலின் பொற்காலம் !
வித்தியாசமான கதைக் களமாக இருந்தாலும் ஜெமினியின் இனிமை நிறைந்த காதல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை !
மனதை அள்ளும் இசையில் நிலைத்து நிற்கும் மதுர கானம் விஜயகுமாரியின் இணைவில் நேர்த்தியான ஒளிப்பதிவில் இன்றளவும் ரசிக்கப் படுகிறது !
பாடலின் ஆரம்ப இசைக்கோர்ப்பு அபாரம் !
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U
https://www.youtube.com/watch?v=M_EmXesLIGI
https://www.youtube.com/watch?v=8ylJjTyc4FA
Gap filler / Monotony breaker from the movie Poojaikku Vandha Malar!
https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
https://www.youtube.com/watch?v=k3qrYh0oFUI
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!
ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்
பாடல் 6
வாழ்க்கைப் படகு
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ...
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே ,,,
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே ..
Quote:
காதல் மன்னரின் கண்ணியமான காதல் காட்சிகள் எத்தகைய இதமான சுவடுகளை நமது மனங்களில் பதிக்கின்றன என்பதற்கும் நிகரற்ற காதல் நடிப்பின்
நிலையான காதல் சக்கரவர்த்தி அவரே என்பதற்கும் இப்பாடலே சாட்சி ! தேவிகாவின் இணைவில்....
அந்தக்கால இசைக்குழுக்களின் ஆதர்ச கீதம் !!
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE
https://www.youtube.com/watch?v=5z91QaHxzDI
https://www.youtube.com/watch?v=EmnxtbnKrwo