நன்றி ஆனா, கீதா, லதா....
அபியின் வீடு....
அபி, ஆனந்தி, கற்பகம் ராஜேந்திரன், சாரதா எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, திருவேங்கடம் வருகிறார். எல்லோர் முகத்தில் குழப்பம் நிறைந்த ஆச்சரியம்...
'என்ன எல்லோரும் அப்படிப்பார்க்கிறீங்க. என்னடா இவன் வீடு தேடி வந்திருக்கான்னா?. சாரதா அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, நான் நாட்டு நிலைமையைப்பத்தி தீர்க்க மான சிந்தனையில் இருந்தேன், நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைபற்றி கவலையில் ஆழ்ந்திருந்ததால் உன்னை கோபமாக பேசி அனுப்பிட்டேன்'.
இவருக்கு வேறு வேலை கிடையாதா என்பது போன்ற சிந்தனை அபி மற்ரும் ஆனந்தி முகத்தில்.. திருவேங்கடமோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அரசியல்வாதியாயிற்றே.
'நீ போன பிறகுதான் யோசித்தேன். அபி மற்றும் ஆனந்தி கல்யாணத்தில் நானும் நீயும் நின்று தாரை வார்த்துக்கொடுப்போம் என்று முடிவு செஞ்சேன்'.
இப்போது அபி மற்றும் ஆனந்தி முகத்தில் லேசான அதிர்ச்சி....
'ஏன் சித்தி, நீங்க போய் அவர் கிட்டே கேட்டீங்களா?'.
'ஆமா அபி, உங்க அம்மா எல்லாம் சம்பிரதாயப்படி நடக்கணும்னு விரும்புறதாலே, நான்தான் அவரிடம் போய்க்கேட்டேன்'
'என்ன சித்தி இதெல்லாம்?. ஏன் அம்மாவும் நீங்களும் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?'
திருவேங்கடம் 'ஏன் ஆனந்தி கோபப்படுறே. அண்ணி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது உங்க கடமை. அதுபோல், இந்த கல்யாணத்தில் நான் வந்து தாரை வார்த்துக்கொடுக்கணும்னா ஒரு சின்ன கண்டிஷன்'
அபி அவரைப்பார்த்து 'என்ன கண்டிஷன்?'
'அது பெரிசா ஒண்ணுமில்லே அபி. வரப்போற உங்க அசோசியேஷன் எலக்ஷன்ல நீ ஆதிக்கு எதிரா நிற்க்கக்கூடாது. அவ்வளவுதான்'.
அபிக்கு புரிந்துவிட்டது ... ஓ.. இது அவனுடைய வேலையா?
'அக்கா ஏன் எலக்ஷன்ல நிற்கக்கூடாதுன்னு சொல்றீங்க?' (யாருமே சித்தப்பான்னு கூப்பிடவில்லை)
'கல்யாணம் செஞ்சுகிட்டு குடும்பம் நடத்தப்போற நேரத்துல எதுக்கும்மா எலக்ஷனும் பதவியும்?. பேசாம கல்யாணம் பண்ணினோமா, குடும்பம் நடத்தினோமா, பிள்ளை குட்டிகளைபெத்தோமான்னு இருக்கிறதை விட்டுட்டு எதுக்கு அவளுக்கு இந்த தலைவலியெல்லாம்?. அண்ணி, நீங்களாவது சொல்லக்கூடாதா?'
கற்பகம் கூட இப்போது புத்திசாலித்தனமாக பேசுகிறாள், 'நீங்க குடும்ப விஷயம் பேசத்தான் வந்திருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா வியாபாரம் பேசுறதுக்கில்ல வந்திருக்கீங்க'.
'ஓகோ. அப்படீன்னா உங்க பொண்ணுகளுக்கு தாரை வார்த்துக்கொடுக்க நான் தேவையில்லையா?'
இப்போது சாரதாவே முன்வந்து, 'தேவையில்லை, நீங்க தாரை வார்த்துக்கொடுக்காட்டாலும் அவங்க நல்லா இருப்பாங்க. நீங்க போங்க இங்கிருந்து'.
'அதாவது நான் என்ன சொல்றேன்னா....'
அபி, 'மரியாதைக்குறைவா எதுவும் சொல்றதுக்குள்ளே இங்கிருந்து போயிடுங்க ப்ளீஸ்'.
ராஜேந்திரன், 'அதான் சொல்லிட்டாங்கல்ல... இடத்தைக் காலி பண்றது...'
மேனகாவும் ஆதியும் எதிரெதிரே மர்ந்து பேசிக்கொண்டிருக்க...
'அசோஸியெஷன் சூழ்நிலையைக்கவனிச்சீங்களா ஆதி?. அந்த அபிக்குத்தான் சப்போர்ட் அதிகம் இருக்கு. நீங்க தோத்திடுவீங்கன்னு நினைக்கிறேன்' ரொம்பவே கூலாக பேசுகிறாள்.
'இல்லே மேம், நான் கண்டிப்பா ஜெயிக்கிறேன். பார்த்துக்கிட்டிருங்க'.
'இஸ் இட்.. எப்படி ஆதி?. அந்த அபிதான் சப்போர்ட்டர்ஸை சாலிடா வச்சிருக்காளே. அதை எப்படி உடைக்கப்போறீங்க?'
'எல்லாம் நிச்சயம் நடக்கும் மேம். இப்போ சொல்ல விரும்பலை. நான் ஜெயிச்ச பிறகு பாருங்க'
'அப்படியா... குட்'
அபியின் அலுவலகத்தில் தேர்தல் நிலவரம் குறித்து அபி, விஸ்வநாதன், வரதராஜன், ராஜாமணி ஆகியோர் பேசிக்கொண்டுள்ளனர். எப்படியும் வெற்றி கிடைத்துவிடும் என்பத்ற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது என்றும், ஆதி கடைசி நேர தகிடுதத்தங்கள் செய்வதில் மன்னன் என்றும், அதனால் எல்லா சப்போர்ட்டர்களையும் மீண்டும் சந்திப்பது என்றும், அதற்காக மறுநாள் காலை நால்வரும் வரதராஜன் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு, அவர்களின் ஆதரவாளர்களை மட்டுமல்லாது, ஆதியின் சப்போர்ட்டர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்றும் முடிவு செய்து, மறுநாள் சந்திப்பதாகக்கூறி புறப்படுகின்றனர்.
விஸ்வநாதனின் காரில் ராஜாமணி செல்ல, வரதராஜன் தனியே தன் காரை ஓட்டிச்செல்லும்போது, இன்னொரு காரில் வந்த குண்டர்கள் அவரது காரைத்தொடர்ந்து வந்து ஓரிடத்தில் அவரை வழிமறிக்க, அதிலிருந்து ஒருவன் வரதராஜனின் காரில் ஏறிக்கொண்டு, துப்பாக்கியைக்காட்டி மிரட்டுகிறான்...
'ஏய், யாருப்பா நீ?. எதுக்காக என் காரில் ஏறினே?'
'யோவ் பெரிசு, கேள்வியெல்லாம் கேட்டீன்னா சுட்டுத்தள்ளிவிடுவேன். பேசாம நான் சொல்ற ரூட்ல வண்டியை விடு'.
'என்ங்கேப்பா போகணும்?'
'பேசாம நான் சொல்ற பக்கம் போய்க்கிட்டே இரு. எதிர் கேள்வி கேட்காதே'