திருமதி பானுமதியை அன்னை இந்திராவிடம் அறிமுகபடுத்தும் தேசிய திலகம்
http://i501.photobucket.com/albums/e...ps47cc8a5b.jpg
Printable View
திருமதி பானுமதியை அன்னை இந்திராவிடம் அறிமுகபடுத்தும் தேசிய திலகம்
http://i501.photobucket.com/albums/e...ps47cc8a5b.jpg
BILLIARDS விளையாட்டில் கைதேர்ந்த நம்முடைய தேசிய திலகம் ! இன்றும் பிரபலமாக உள்ள CHECKED DESIGN SHIRT ! படு ஸ்டைல் போஸ் !
http://i501.photobucket.com/albums/e...psa92c8309.jpg
இது போல ஒரு போஸ் தான் நடிக்கின்ற காலத்திலோ நடித்தகாலத்திலோ கொடுத்ததுண்டா பலர் ?
http://i501.photobucket.com/albums/e...psced7601d.jpg
முரளி - அலைபேசியில் குறுப்பிட்டது போல் , பல நாட்களாக போடும் பதிவுகளின் எண்ணக்கை உயருவதே இல்லை - இந்த திரியில் இதை பலர் கவனித்து இருக்க மாட்டார்கள் - தயவு செய்து இதை உடனே கவனிக்கவும்.
உ .ம் : RKS - இன்று திரியை கலக்கினவர் இவர் - பல பதிவுகள் இன்று இவர் போட்டும் posts -729 இல் தான் இன்னும் இருக்கிறது
ஒரு திரைப்பட நடிகருடைய பிறந்தநாள் விழாவை இரண்டு தினங்கள் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது, அதில் அகில இந்திய அளவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டது திரை உலக வரலாற்றில் இதுவே முதல் முறை !
தனது 42 வயது பிறந்தநாள் விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணி !
மற்றவர்கள் சேர்ப்பது கூட்டம் ..!
ஆனால் நம் தேசிய திலகத்திர்க்கோ அவருடன் மனமுவந்து சேர்ந்த கூட்டம் !
இதை படிக்கும் இந்த கால இளைஞர்கள் மற்றும் நடிகர் திலகத்தை பற்றி ஆதாரமற்ற தவறான தகவல்களை மட்டுமே கேள்விபட்டவர்கள் இது போல ஆதாரங்களை மற்றவர்களிடமிருந்து இனி சிவாஜியை பற்றி தவறாக கூறுபவர்களிடம் கேட்கவோ காண்பிக்கவோ சொல்லவேண்டும் !
அதுமட்டுமல்ல ! தாம் விரும்பும் நடிகருக்காக சிவாஜியை பழிப்பவர்களை முக்கியாமாக அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு அதை உறுதிபடுத்தும் பொது, நடுநிலை நாளேடுகளின் ஆதாரங்களை காட்டசொல்லவெண்டும்.
காரணம் அவர்கள் அவர்களுடைய ரசிகர் மன்றம் வெளியிட்ட நோட்டீஸ், மற்றும் அவர்கள் ஆதரவு பத்திரிகை செய்திகளை காண்பித்து பொய்யை உண்மையாக்க முயற்சிக்ககூடும் !
ஆகவே நடுநிலை நாளேடுகளில் வந்த ஆவணம் நீங்கள் கேட்டால் நல்லது !
http://i501.photobucket.com/albums/e...psd617e4f3.jpg
இதில் முன்னாள் திரைப்பட நடிகை ஜெயலலிதா அவர்களின் உரை அனைவரயும் கவர்ந்ததாக கூறப்பட்டது ! கடைசி பத்தி பார்க்க படிக்க !
http://i501.photobucket.com/albums/e...psd82e4c8f.jpg
நடிகர் திலகம் பற்றி பொத்தம் பொதுவாக தவறாக பேசுபவர்கள் கூறும் பொய்கள் - அவர் யாரையும் சந்திக்கமாட்டார். அவருக்கு நடிப்பு மட்டும் தான் தெரியும்..வேறு ஒன்றுமே அவருக்கு வராது, வெளிவிழாகளுக்கு அவரை அழைப்பது, அவர் வருவது நடக்காத காரியம், அவர் reserved மற்றும் பல..!
ஆனால் பொது நிகழ்சிகள் மட்டுமல்லாது திரையுலக விழாக்கள் பலவற்றில் அவரை அழைக்கும்போது அழைபிர்க்கு மரியாதை கொடுத்து அவர் நேரம் தவறாமல் வருவது வழக்கம்.
அப்படி ஒரு விழா - புகுந்த வீடு என்ற திரைப்படத்தின் 100வது நாள் விழா !
நடிகர் திலகம் எவ்வளவு சந்தோஷத்துடன் பரிசு வழங்குகிறார் பாருங்கள் அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு. பரிசு வாங்குபவர்கள் முகத்தில் உள்ள சந்தோஷத்தை கவனித்தால் அவர்கள் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை என்பது போல உள்ளது பாருங்கள் !
கலைத்தாயின் தலைமகன் உச்ச நட்சத்திரம், திரை உலகின் துருவ நட்சத்திரம் அல்லவா ...அவர் கையால் அல்லவா வாங்குகிறார்கள் ! சந்தோஷம் இருக்கதானே செய்யும் அதன் உச்சத்தில் !
http://i501.photobucket.com/albums/e...ps37d3e9ed.jpg
என்னமோ பெரியார் அவர்கள் சிவாஜி அவர்களுக்கு பட்டம் கொடுத்ததுதான் அவர் வந்த ஒரே கலை விழா என்று ஒரு சாரர் பொய் தகவல் பரப்புவதுண்டு.
அந்த பொய் தகவலை பொய்யாகும் மற்றொரு ஆவணம்.
நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த நாடகம் வேங்கையின் மைந்தன். நல்ல கருத்துக்கள் பல கொண்ட நாடகம் !
அதற்க்கும் தந்தை பெரியார் வந்து நடிகர் திலகத்தை கௌரவித்தார் பெருந்தன்மையுடன். !
கலையை வெறுத்தவர்...கலைஞர்களை கூத்தாடிகள் என்று அழைத்தவர் என்னமாய் நம் நடிகர் திலகத்தின் நடிப்பால் ஈர்க்கபட்டார் என்று பாருங்கள் !
இதுதான் உண்மையான யாரும் செய்யமுடியாத அதே சமயம் நடிகர் திலகம் சர்வ சாதாரணமாக செய்து காட்டிய "புரட்சி" !
http://i501.photobucket.com/albums/e...ps8eb392c4.jpg
தமிழ் திரை உலக வரலாற்றில் கருப்பு வெள்ளை படங்களிலயே மிக அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற பட்டிகாட பட்டணமா படபிடிப்பு சோழவந்தானில் நடந்தபோது நடிகர் திலகம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த இசை வேந்தர் திரு TR மகாலிங்கம் அவர்களை தமது துணைவியாருடன் சென்று மரியாதை நிமித்தமாக அவர் இல்லத்தில் சந்தித்தபோது !
http://i501.photobucket.com/albums/e...psdfbaebeb.jpg
தொழிலில் நடிகர் திலகம் ஒரு THOROUGH PROFESSIONAL என்பதற்கு உதாரணம் திரு பாக்யராஜ் அவர்களின் இந்த மொழி !
இதில் கூட கவனிதொமேயானால் திரு பாக்யராஜ் அவர்களும் பேட்டி எடுப்பவரும் சிவாஜி ..சிவாஜி என்று திரு சிவாஜி அவர்களை கூறுவதை காணலாம் . இவர்கள் மடிமீது வைத்து அவருக்கு பெயர் இட்டது போல ! சிறிது கூட CULTURE இல்லாமல் !
ஆனால் திரு பாக்யராஜ் அவர்கள் உரையில் நடிகர் திலகம் பேசியதை கூறும்போது பாருங்கள்...இவரை நடிகர் திலகம் எவ்வளவு மரியாதையுடன் கூறியிருப்பதை கவனிக்கவும்.
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்று சும்மாவா சொன்னார்கள் !
http://i501.photobucket.com/albums/e...psd29e6a27.jpg
ராணி வாராந்திரி பத்திரிகையில் நடிகர் திலகம் அவர்களை பற்றிய நினைவலைகள் !
http://i501.photobucket.com/albums/e...ps02f0d6f9.jpg
தான் நடித்த காலத்தில் தன்னை தேடி வந்து விருதுகள் கொடுத்த கண்டங்களில் ஆசிய, ஆப்ரிக்க, அமெரிக்க இருந்தாலும் , இவர் நடிப்பில் விட்டு வைத்த கண்டம் ஐரோப்பா ! அதையும் நம் தேசிய திலகம் அவர்களுக்கு அந்த ஐரோப்பாவை சேர்ந்த பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதாம் மாவீரன் நெப்போலியன் அறிமுகபடுத்திய "செவாலியே " விருதை கொடுத்து இந்திய அரசாங்கத்தை நாங்களும் கொடுத்துவிட்டோம் ..இவர் உங்கள் நாட்டு பிரஜை அரசியல் ஆதாயத்துக்காக நடிப்பு திறமை இல்லதவர்கேல்லாம் நீங்கள் விருது கொடுத்தீர்களே இவருக்கு இன்னும் கொடுக்க வில்லையா என்பது போல ஒரு கேள்வியை எழுந்தது இந்த விருது !
கேரளா மாநிலம் நடிகர் சங்கம் தான் முதன் முதலில் தமிழ் நடிகரான நடிகர் திலகதிற்கு செவாலிய விருது அறிவித்தவுடன் விழா கொண்டாடியது !
இதற்க்கு மேலும் நாம் சும்மா இருந்தால் நாம் வரலாற்று பிழையாக ஆகிவிடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ அப்போதைய தமிழகத்தின் ஆட்சியாளர்கள் !
சுதாகரித்துக்கொண்டு இவர்கள் தலைமையில் அந்த விருது வழங்கும் விழா எடுப்பதுபோல ஒரு விழா எடுத்து வரலாற்று பிழை வராமல் பார்துகொண்டார்கள் !
http://i501.photobucket.com/albums/e...psbcc11232.jpg
ரவி,
ஒரு இரண்டு மூன்று விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். PM மூலமாக சொல்வதைத்தான் நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் நீங்களே திரியில் பொதுவாக எழுதியிருப்பதால் இங்கே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்.
நண்பர் சிவா உங்கள் பதிவில் ஒரு சில எழுத்து பிழைகளை சுட்டிக் காட்டினர். உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழை எப்படி பேச வேண்டும் என்பதை இந்த அகிலத்திற்கே கற்றுக் கொடுத்த தமிழன், தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் மத்தியில் எந்த வித சுயநலமுமின்றி தமிழ் வளர்த்த தமிழ் தாயின் தலைமகன் நடிகர் திலகம். அவரின் ரசிகர்கள் தமிழை தவறாக கையாண்டுவிடக் கூடாது என்ற உணர்வின் அடிப்படையில் வந்த பதிவே அது. அதற்கு உங்கள் பதில் தேவையை விட சற்று அதிகமாகவே காரமாக இருப்பதாக எனக்குப் படுகிறது. நம்மை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் சிவா சார்.
இரண்டாவது பாயிண்ட். பதிவுகளை பாராட்டுவதில்லை. இதற்கும் நான், நான் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவன். காரணம் நீங்கள் மட்டுமல்ல இங்கே பலருக்கும் என் மேல் இந்த குறை உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். நான் பாராட்டுவதில்லை என்று சொல்லி விட்டு, பாராட்டுவதால் உங்கள் இடம் பறி போகாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். என் இடம் என்று நீங்கள் உத்தேசிப்பது moderator என்ற பதவியை என்றால் அதை எனக்கு தந்தவர்கள் Hub Admin. அவர்கள் நாளை நான் இந்த பதவிக்கு தகுதியற்றவன் என்று நினைத்தால் இதை என்னிடமிருந்து எடுத்து விடுவார்கள். எனவே எனக்கு அந்த நாற்காலி மோகம் இல்லை. அதல்ல, திரியில் எனக்கு இருக்கும் இடம் என்பதைதான் நீங்கள் சொல்லுகிறீகள் என்றால் அது தர வரிசையில் அமைந்தது அல்ல. எழுது பொருளும் எழுதும் முறையுமே பதிவுகளை வாசகனுக்கு பிரியமுள்ளதாக மாற்றுகிறது. இது பலருக்கும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எழுதுவதில்லை. நான் என மனதில் என்ன உணர்கின்றேனோ அதை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன். வாசகனின் மனமும் என் எழுதும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது அது அவனுக்கு பிரியமுள்ளதாக மாறுகிறது. அப்படியில்லாத பட்சத்தில் எந்த எழுத்தும் கவனிக்கப்படாமல் போகும். இதை நன்கு உணர்ந்த நான் மற்றவர்களை போட்டியாக நினைப்பதோ அவர்கள் வந்தால், வளர்ந்தால் என் இடம் போய் விடுமோ என்று ஒருக்காலும் நினைத்தில்லை. இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் பல ரசிகர்களுக்கும் இந்த திரியை அறிமுகம் செய்து வைத்து அவர்களை உள்ளே இழுத்து வந்திருக்க்றேன். இந்த திரியைப் பொறுத்தவரை நான் கடைசி தொண்டன் இந்த திரியில் என்னால் முடியும் காலம் வரை பதிவிடுவதே என் இலக்கு.
பாராட்டு என்று சொன்னால் ஒரு பதிவு என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் அதை நான் மனதார பாராட்டுவேன். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஜோ எழுதிய சில கவிதைகள், சாரதா எழுதிய சில திரைப்பட ஆய்வுகள் [ராஜா, நீதி, என்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் 100வது நாள் விழா இப்படி நிறைய சொல்லலாம்], கார்த்திக்கின் கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, உத்தமன் பட அனுபவங்கள், வாசுவின் பாதுகாப்பு படப்பிடிப்பு நேரிடை வர்ணனை, கடலூரில் சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவம், என் மண் என் மக்கள் பதிவு, சுவாமியின் பாவமன்னிப்பு - 51, புதிய பறவை காட்சிக்கு காட்சி வர்ணனை, கோபாலின் ஸ்கூல் of acting-ல் வந்த கட்டபொம்மன், தெய்வமகன், ராகவேந்தர் சாரின் சில பொக்கிஷ பதிவுகள், பார்த்தசாரதியின் பாடல் ஆய்வுகள், அவரின் அன்னை இல்லம் படத்தில் இலை போட்டு சாப்பிடும் காட்சியின் continuity பற்றிய பதிவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் சில நாட்கள் முன்பு நீங்கள் எழுதிய கர்ணன் பற்றிய பதிவும் அது நன்றாக அமைந்திருந்ததால் பாராட்டியிருக்கிறேன்.
ஆனால் அதே நேரத்தில் 1000 பதிவு, 2000 பதிவு போட்டுவிட்டார். ஆகவே உடனே பாராட்ட வேண்டும் என்று சொன்னால் சாரி, அது எனக்கு உடன்பாடில்லாத விஷயம். ஆகவே இது போன்ற விஷயங்களை புறந்தள்ளி திரியின் மேன்மைக்கு பங்களிப்பு செய்யுமாறு அனைவரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
இதுவரை என்னுடைய பழைய பதிவுகளை 2008 மற்றும் 2009 காலகட்டங்களில் வந்தவற்றை திரியின் புதிய வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீள் பதிவு செய்து வந்தேன். எனக்கு அந்த சிரமம் வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ சில நண்பர்கள் என் பதிவுகளை மீள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம். பதிவுகளில் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சில நகாசு வேலைகள் செய்து போடுகின்றனர். முழுமையாக எடுத்து போட்டு விட்டால் எனக்கும் மீள் பதிவு போடும் வேலை மிச்சம்.
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் acid test-ற்கு போவதற்கு முன் மதுரையில் 1969 முதல் இருவர் படங்களும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற விஷயத்தில் எப்படி perform செய்தன என்பதை ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.
1969-ல் மே மாதம் 1-ந் தேதி வெளியான அடிமை பெண் மதுரை சிந்தாமணியில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை அந்த குழுவில் இருக்கக்கூடிய சில முதிர்ந்த ரசிகர்கள் 1961-லேயே இதே சிந்தாமணியில் தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்த சாதனை பாச மலர் திரைப்படத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 1969-ல் நடந்தது பத்திரிக்கையில் விளம்பரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 1961-ல் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதேயாகும்.
அதே 1969 நவம்பரில் தீபாவளிக்கு மதுரை சென்ட்ரலில் வெளியான சிவந்த மண் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றை ஒன்றை ஒன்று மிஞ்சும் போட்டியை அரங்கேற்றிடதானே இரு தரப்பும் விரும்பும்? சிவந்த மண் சாதனையை முறியடிக்க 1970 பொங்கலுக்கு மதுரை சிந்தாமணியில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தை நம்பினர் எம்ஜிஆர் ரசிகர்கள். அந்த படத்திற்கு வணிக ரீதியாக நல்ல response இருந்தும் 75 காட்சிகள் மட்டுமே தொடர் அரங்கு நிறைந்தது. சிந்தாமணி அரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் அரங்கத்திற்கு மிக அருகிலே அமைந்திருக்கும் பிரபலமான அசைவ உணவகம் அம்சவல்லி பவன். அதன் உரிமையாளர் அன்றைய நாட்களில் திமுக ஆதரவாளர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர். சிந்தாமணியில் வெளியாகும் எம்ஜிஆர் படங்களை பெரிய அளவில் சப்போர்ட் செய்வது அவர் வழக்கம். அவர் போன்றோர் முயற்சித்தும் கூட மாட்டுக்கார வேலன் 75 காட்சிகள் மட்டுமே தொடர்ந்து அரங்கு நிறைந்தது.
1970 ஏப்ரல் 11-ந் தேதி சனிக்கிழமை மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு மிகப் பெரிய வெற்றி பெற்று முதல் 32 நாட்களில் அதாவது ஏப்ரல் 11 முதல் மே 12 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 106 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 106 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் [106 Continuous House Full Shows] என்ற சாதனையை புரிந்தது. பாச மலர் இந்த சாதனையை புரிந்தபோது ஆவணப்படுத்த தவறி விட்டதால் இம்முறை எச்சரிக்கையாக இருந்து இதை ஆவணப்படுத்தினார்கள். ஒரு கருப்பு வெள்ளை படம் செய்த சாதனை மாற்று முகாம் தரப்பை மேலும் உஷ்ணப்படுதியது.
அதே 1970 மே மாதம் 21-ந் தேதி வியாழக்கிழமை மதுரை சென்ட்ரலில் என் அண்ணன் ரிலீஸ் ஆனது. மாட்டுக்கார வேலனை compare செய்தால் என் அண்ணன் படத்தின் ரிப்போர்ட் அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் மாற்று முகாம் ரசிகர்கள் விடவில்லை. எப்படியும் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை காட்டிட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். ஆனால் என் அண்ணனும் மாட்டுக்கார வேலன் போல் 75 காட்சிகளோடு ஹவுஸ் புல் விட்டுப் போனது. அதன் பிறகு அதே 1970-ம் வருடத்தில் எம்ஜிஆருக்கு மேலும் 3 படங்கள் வெளியாகின. என் அண்ணனுக்கு பின் ஜூலையில் வெளியான தலைவன் படமும் சரி ஆகஸ்ட் 28 வெளியான தேடி வந்த மாப்பிளை படமும் ரிப்போர்ட் பெரிதாக இல்லாததாலும் இரண்டுமே தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டதாலும் தொடர் ஹவுஸ் புல் வாய்ப்பே இல்லாமல் போனது. அதன் பிறகு 1970 அக்டோபர் 9-ந் தேதி சிந்தாமணியில் எங்கள் தங்கம் வெளியானது. ஆனால் அதுவும் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆக மொத்தம் மதுரை மாநகரில் 1970-ம் ஆண்டில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற இலக்கை எந்த எம்ஜிஆர் படமும் எட்டவில்லை.
நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை வியட்நாம் வீடு 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த பின் அடுத்து வெளியானது எதிரொலி. அது 1970 ஜூன் 27 சனிக்கிழமை அன்று தங்கத்தில் வெளியானது. அதன் பிறகு 1970 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை நியூசினிமாவில் ராமன் எத்தனை ராமனடி ரிலீஸ். நல்ல ரிப்போர்ட் பிளஸ் நல்ல பப்ளிக் audience, ஆயினும் மூன்றாவது வாரம் ஹவுஸ் புல் விட்டுப் போனது. தீபாவளிக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள். இரண்டு படங்களின் வெற்றி பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் ஒரு படத்திற்கு மூன்றாம் வாரத்தின் தொடக்கத்திலும் மற்றொரு படம் 3 வது வாரம் நடுவிலும் வைத்து விட்டுப் போனது. போதாக்குறைக்கு நான்கே வார இடைவெளியில் பாதுகாப்பு ரிலீஸ். அதுவும் தங்கத்தில். 1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.
(தொடரும்)
அன்புடன்
நாட்டாமை,
தூக்கிடுவேன்னு தெரியும். என்னா ....கொஞ்சம் எல்லோரும் ரசிச்ச பிறகு தூக்கியிருக்கலாம்.(அப்போ கண்ணீர் விட்டதாக சொன்ன அத்தனை பதிவுகளையும் தூக்கியிருக்க வேண்டுமே? ஏன் என்னுடையதை மட்டும்?)
100 நாள் தொடர் காட்சிகள் suspense போல விரிகிறது.
உன் கருத்தில் நான் உடன் படுகிறேன். selective ஆக பாராட்டுவதே சிறந்தது.
ஆனால் நீயும் பராட்டினவங்க லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன போது ,உன் கருத்தில் நீயே மாறு பட்டு விட்டாயோ என்ற சந்தேகம் தலை தூக்காமல் இல்லை.
கற்றோரைக் கற்றோரே காமுறுவர்... இங்கு படிக்காத மேதையுடன் ஆவலுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள விழைந்த சான்றோரைப் பாருங்கள். மணிபாலில் ... கர்நாடகத்தில் அந்தக் காலத்தில் ஒரு சிறிய டவுன். மணிபால்... அந்த ஊரின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கல்லூரி நிறுவனர் திரு டி.எம்.ஏ.பாய் மற்றும் டீன் திரு கிருஷ்ணா ராவ் அவர்களுடன் நடிகர் திலகம்.
https://scontent-b-iad.xx.fbcdn.net/...b7&oe=54330C3A
இவ்விழாவினைப் பற்றிய மேல் விவரங்களையும் மேற்காணும் நிழற்படத்தினையும் நமது அருமை நண்பர் திரு ஸ்வாமி துரைவேலு அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் தனிப்பட்ட முறையிலும் நம் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி. இதே போல் இவ்வாய்ப்பிற்காக முகநூல் பக்கத்திற்கும் நன்றி.
https://www.facebook.com/photo.php?f...t=like_tagged#
dear Kalnayak sir.
சிலசமயங்களில் நாம் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக அமைந்துவிடுவது சகஜமே. சிவாசார் ஒரு யதார்த்தத்தில் ரவிசாரைப் பாராட்டிய கையோடு optimistic ஆக சில எழுத்துப் பிழைகளைசுட்டிக்காட்டப் போய் அது positive criticism ஆக எடுத்துக்கொள்ளப்படவில்லை. Grown ups still need to grow up! யாரும் யாரையும் காயப்படுத்தி சுகம்காண எண்ணுவதில்லை. தற்செயலாக அமையும் சில நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவையே. வலிகளை மறப்போம். வழியினில் தொடர்வோம், நடிகர்திலகத்தின் புகழார்வலர்களாக! This thread should not become a see-saw game centre!
ரவிசார். சிவா உங்கள் எழுத்துக்களை மனதாரப் பாராட்டியுள்ளார். உங்கள்மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாகவே சில பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளார். Kindly take it positively and continue to contribute sir. A friend is one who indicates our mistakes at right time right before our face. If one just endorses whatever we do, he may be a friendly foe!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உண்மை பேசும் அவரது பல ரசிகர்கள் - இவர்களை ஒரு இயக்கத்தை சார்ந்த பலர் இப்படிதான் எப்போது பார்த்தாலும் உண்மையை ஆவணங்களுடன் கூறும்போது, ஆவணம் பார்த்த பிறகும் வீம்புகேன்று அது உண்மை இல்லை என்றும் ஆதாரம் ஆவணம் இல்லாமல் என்னமோ இவர்கள் காற்றில் கூறுவது தான் உண்மை என்பது போல இன்னும் மாயையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று நாம் சற்று சிந்தித்து பார்த்தால் உண்மை உலங்கை நெல்லிக்கனிபோல விளங்கும்.
தகவல் தொழில்நுட்ட்பம் வளர்ச்சிபெறாத காலகட்டத்திலிருந்து இவர்கள் தொடர்ந்து கூறிய பொய்கள், மாய செய்திகள், தூஷணங்கள் மக்களை சென்றடைந்து ஒருவேளை இது உண்மையோ என்று சலனப்பட்டு, குழம்பி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரை நம்பவும் செய்தார்கள்.
அனால் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு முக்கியமாக hub facebook twitter போன்ற சமூக வலைத்தளங்கள் பல வந்தபிறகு நடிகர் திலகம் பற்றிய நடுநிலை நாளேடுகள், நடுநிலையாளர்கள் கூறிய பதிவிட்ட ஆவணங்களை scan செய்து அதை வெளியிடுவதால், வெளிவந்துகொண்டிருப்பதால் மக்களுக்கு உண்மை செய்திகள் உடனுக்குடன் உலகத்தில் எங்கிருந்தாலும் கண நேரத்தில் பார்க்க கிடைக்கிறது,
இதன் மூலம் உண்மைகள் அவர்களை உணர்த்தி, நடிகர் திலகம் அனைவரிலும் சிறந்தவர் என்று ஆக்கபூர்வமாக அறிவுபூர்வமாக முடிவெடுக்க வைத்துள்ளது.
காலம் காலமாக தாம் சொன்ன ஆதாரமற்ற பொய்கள், ஆதாரமற்ற பொய் தகவல்கள், இன்று இவர்கள் வெளியிடும் ஆதாரங்களால் வெளிச்சத்திற்கு வருகிறதே...எங்கே இன்னும் பல உண்மைகள் வெளியில் வந்துவிடுமோ, இன்னும் என்னென்ன ஆதாரங்கள் இவர்கள் வசம் உள்ளதோ, எதை எந்தநேரத்தில் பதிவிடுவார்களோ, அதை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்து நம்முடைய நம்பகத்தன்மை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் அந்த குறிப்பிட்ட பலருக்கு வர தொடங்கியதன் விளைவு, இன்று நாம் கண்ணார காண்பது.
தாம் கூறும் கூற்றுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை ! அனால் அவை உண்மை என்று மக்கள் நம்பவேண்டும் ..அதே சமயம், இங்கே ஆதாரங்களை பதிவிட்டு விளக்கம் அளிக்கும்போது அது விஷயம் தெரியாமல் பதிவிடுகிறோம்..தெரியாமல் பதிவிடிகிறோம், தவறாக பதிவிடுகிறோம் என்று மறைமுக சாடல் !
இதை படிக்கும் பொது மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டியது !
இங்கு பதிவு செய்பவை அந்த செய்திகளை ஆதாரங்களுடன் பதிவிடுபவை. இது அனைவருக்கும் விளங்கும், புரியும் .
ஆனால் ஆதாரமில்லாமல் பதிவுகள், சும்மா குறை சொல்லிகொண்டிருக்கும் வெதும்பல்கள் இவைகளுக்கு ஆதாரம் எதுவும் பதிவிடுவதில்லை என்பதுடன் பொய் தகவல்கள் யார் பதிவு செய்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ளவேண்டும் !
ஒரு சிறு உதாரணம் :
கல்வி கண் திறந்த காமராஜர் பசியுடன் படிக்கும் ஏழை குழந்தைகளுக்காக அப்போதைய பாரத பிரதமர் நேரு மூலம் கொண்டுவந்த திட்டம் என்ன திட்டம் ?
மதிய உணவு யார் முதலில் கொண்டுவந்தது ?
காமராஜருக்கு பின் ஒருமுறை மீண்டும் அவர் கொண்டுவந்த திட்டம் சிறிது நவீனபடுத்தி மீண்டும் கொண்டுவரப்பட்டது இல்லை என்று கூறவில்லை.
ஆனால் அந்த திட்டத்தை முதன் முதலில் அறிமுகபடுத்தி, நடைமுறை படுத்தியது காமராஜர் என்பதை உலகறியும் அப்படியிருக்க முதன் முதலாக கொண்டுவந்தது 1977உக்கு பிறகு என்பதுபோல ஒரு பதிவு !
இதிலிருந்தே எந்த செய்தி உண்மை செய்தி என்பதை இதை படிக்கும் மக்கள் உணரவேண்டும் !
Rks
மேலும் மேலும் தொடர்ந்து பதிலுக்கு பதில்
எழுதினால் வேதனைதான் மிஞ்சும்
அவற்றை மறந்துவிடுவோம்
அன்பு ரவி எனது எழுத்து தங்களை காயப்படுத்தியிருந்தால்
அதற்காக மிகவும் வருந்துகிறேன்
தயவு செய்து அதனை மறந்து
மன்னித்துவிடுங்கள்
அன்பு நண்பர் முரளி
இதன்மூலம் விவகாரம் பெரிதாகாமல் இருப்பதற்காக
எனது பதிவை நான் நீக்கிவிட்டேன்
மேலும் ரவியின் பதிவு(3736....3738)இரண்டும்
கோபாலின் பதிவையும(3745) மற்றும்
உங்களது பதிவு( 3785 )ஆகியவற்ரை
தயவு செய்து அவரவர் சம்மதத்துடன் நீக்கிவிடுங்கள்
ரவி சார்
கோபால் சார்
நான் மேலே குறிப்பிட்ட உங்கள் பதிவுகளை
நீக்கிவிட அனுமதிக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன
நடிகர் திலகத்தின் திரி தொடர்ந்து மென்மேலும்
மெருகேற வேண்டும் என அண்ணன் நடிகர் திலகத்தின்
பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி நன்றி நன்றி
http://i1146.photobucket.com/albums/...ps83d02e54.jpg
Our heartiest best wishes for YGeeM for restaging the Play which was made into a classic movie by NT's sterling performance and a classic in the film history of YGeeM.
[/QUOTE]Quote:
எல்லோரும் படித்து மகிழ்ந்தாயிற்று என்றால் நீக்கி விடலாம். ஆனால் ,இப்படி நீக்கி கொண்டிருந்தால், அடுத்த திரிக்கு நாள் அதிகமாகி,ரவி கிரண் சூர்யா டென்ஷன் ஆகி விடுவாரே?
Gopal Sir. RKS is different. He won't get a tension for the extension of days. For every removal he will replenish with 5 postings like a cannon ball run!
dear Sivaa sir.
நடிகர்திலகத்தின் படங்களின் தாக்கத்தினால் நாமும் உணர்ச்சிக்குவியல்களாக மாறவேண்டாமே!மனப்புண்ணுக்கு மருந்து மறதி மட்டுமே! முன்பின் பார்த்துப் பழகியிராத நாம் இணைந்திருப்பது நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் என்னும் பெருமையில்தானே!மறப்போம். மீண்டும் இணைவோம்
ரவி,
படிக்காத மேதை - நல்ல உழைத்து செய்திருக்கிறீர்கள்.
The above posting on Ravi's padikkatha methai by me yesterday.
Friends,
"என்னுடைய இந்த வார்த்தையை எந்த நண்பர்களும் புரிந்து கொள்ளவே இல்லை. நமது நண்பர்களின் பதிவை நாம் படிப்பதோ,நினைவில் நிறுத்தி கொள்வதோ இல்லை.பொத்தாம் பொதுவாக பாராட்டு மழை . எதுவாக இருந்தாலும். பழைய பதிவர்களின் பதிவை அப்படியே உருவி,துடைத்து,கழுவி போட்டாலும் ......
எனக்கு ஒவ்வொரு பதிவும் ஞாபகத்தில் உள்ளது.(எல்லா நண்பர்களுடையதும்) .உழைப்பு என்றால் என்ன புரிந்திருக்குமே?
சாரதி கூட எங்கள் எழுத்தை முழுக்க பார்த்ததில்லை என்று அவர் kcs வகை பாராட்டே அத்தாட்சி. என்ன சொல்ல....
விழலுக்கு நீர் இறைத்த நாங்கள் முட்டாள்கள்."
திரி நண்பர்கள் திரு செந்தில் சார் , சிவா சார் , கோபால் சார், ரவி சார் மற்றும் இதர நண்பர்களுக்கு
நடிகர் திலகம் திரி பாகம் 12 எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ தெரியவில்லை. இப்படி சரக்கு ரயில் போல ஊர்ந்து போய்கொண்டிருக்கிறது.
இதில் பதிவிடுபவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை குடும்பத்துடன் கூட செலவழிக்காமல் நடிகர் திலகம் புகழ்பரப்பும் செயல் என்ற ஒத்த நோக்குடன் பதிவிடுகிறோம் என்பது நான் கூறிதான் தெரியவேண்டும் என்றில்லை.
சில மாதங்களாக பல திசை திருப்பல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிகவும் வருந்ததக்கது...கடந்த சில நாட்களில் இதன் கடினம் அதிகரித்து வருகிறது ....நானும் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை திசை திருப்பும் வகையில் பதிவுகள், நிகழ்வுகள், பதிலுக்கு பதில்கள் என்று பதிவு செய்கிறேன்..
யாரும் அதை பற்றி பொருட்படுத்தியதாக தெரியவில்லை. தொடர்ந்து தங்களுடைய ego clash இல் கவனம் செலுத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது !
இந்த திரி இன்னும் 2 தினங்களில் நிறைவடைய யாரும் முன்வருவதில்லை ...ஆனால் சர்ச்சைக்கு மட்டும் மிகுந்த ஆர்வம் காட்டுவது போல இருக்கிறது.
இப்படி நடக்கும் நிகழ்வுகளால் இந்த திரியில் பதிவிட்டு என்ன பயன் ...பதிவிடாமல் இருந்தென்ன பயன் ? இரெண்டும் ஒன்று தான் என்று என்ன தோன்றுகிறது !
முதலில் உங்கள் ego வை ஒழித்து தொட்டதற்கெல்லாம் குற்றம் காணும் வழக்கத்தை நமது திரியின் முன்னேற்றத்திற்காக சிறிது தற்காலிகமாக discount செய்து வழிவிடவும் !
நமக்குள் என்ன பேதம் ? நமக்குள் எதற்கு இந்த வாக்குவாதங்கள், விதண்டாவாதம் ?
எண்ணித்துணிக கருமம் என்றுள்ளதை என்னத்த நீங்க..கருமம்...கருமம் என்று மற்றவர் நம்மை பார்த்து இகழும் நிலை வரவேண்டுமா ?
உங்கள் சண்டையெல்லாம் முடிந்தவுடன் we are through என்று பதிவிடுங்கள் அதற்க்கு பிறகு நான் திரிக்கு மீண்டும் வருகிறேன் !
இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை எது சொல்ல ?
Rks
Original Posting by Murai Sir.
படிக்காத மேதை
திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960
மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.
ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.
அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.
கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.
இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.
மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்
சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்
அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.
சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.
படிக்காத மேதை - Part II
நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.
NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.
கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")
ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.
இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.
கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.
கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.
சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்
பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது
சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது
இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.
ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை
உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.
எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.
படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.
இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.
இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.
அன்புடன்.
RKS,
Go ahead.We are thru. No issues. We are with you.