http://i60.tinypic.com/2rcs5lv.jpg
Printable View
இந்த வார குங்குமம் இதழில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/656dmf.jpg
குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.
http://i57.tinypic.com/4uvz9h.jpg
THANTHAI PERIYAR PIRANTHA NAAL - INDRU - 17.9.2014
http://i62.tinypic.com/317bn1j.png
TUTUCURIN - CHARLES [ NO MORE NOW]
http://i57.tinypic.com/1t4lqq.jpg
ULAGAM SUTRUM VALIBAN RELEASED IN THIS THEATER -1973
இணையம் இல்லை; ஃபேஸ்புக் இல்லை; செல்போன் இல்லை. ஏன், சுவரொட்டிகள்கூட இல்லை. ஆனால், அரங்குக்கு வெளியே கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூடிநின்ற அதிசயம் இன்று சாத்தியமா தெரியவில்லை.
சார்லஸ் திரையரங்கில், படம் மூன்று நாள் கழித்துத் திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதைத் தடுக்க, அரை கிலோமீட்டர் அகலம் கொண்ட வாயில் வெளியில் சிலர் காத்திருந்தனர்.
கவுன்ட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித் தாகிவிட்டது. நீ....ண்ட வரிசைகள். வரிசை களைத் தாண்டி, தலைகளில் நடக்கும் சாமர்த்தியமான கால்கள்; சத்தங்கள்; சர்ச்சைகள்; ஆரவாரங்கள்; ஆர்ப்பாட்டங்கள்!
11 வயது நிரம்பிய நானும், அண்ணன் மணியும், மச்சினன் பிரபாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, மூச்சு வாங்க, அதிகாலையில் இருந்தே காத்துக்கிடந்த மயக்கம் தலையைச் சுற்ற, போராடி கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் எடுத்தபின் வந்த வெற்றிக்களிப்பு மறக்க முடியாதது.
“ஏலே! படம் போட்டாம்லே; படம் போட்டாம்லே'' - திடீரென்று பதற்றமான குரல்கள் சுற்றிலும் அதிர்வலைகளை உருவாக்கின. வாசலில் நின்றிருந்த ‘தடுக்கும் படையாளர்கள்' அதிர்ச்சி ஆனார்கள். அரங்கத்தின் உள்ளிருந்து சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் பாட்டு வரிகள் காற்றின்மீது போர் தொடுத்து அதிரடியாய் வெளிவந்தது: “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்''.
எப்படி ரீல் பெட்டி உள்ளே போனது என்ற ரகசியம் சற்று நேரத்தில் தெரியவந்தது. சற்றுமுன் உள்ளே போன பஸ்ஸின் இன்ஜின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது ரீல் பெட்டி.
“அத்தான்! படம் போட்டான்.... படம் போட்டான்'' என்ற பதற்றத்துடன், அண்ணன் வாங்கிக்கொடுத்த கண்ணாடி டீ டம்ளரைக் கீழே தவற விட்டான் மச்சினன் பிரபா. மணி அண்ணன் மடமடவென்று கூட்டத்தின் உள்நுழைந்து இன்னொரு டீயும் சமோசாவும் வாங்கிக்கொடுக்க, அவற்றைக் காய்ந்த வயிற்றுக்குள் அனுப்பி விட்டு, மூவரும் திமுதிமு என்று ஓடிய கூட்டத்துக்குள் நுழைந்து அரங்கத்தில் ஒருவாறு இடம்பிடித்தோம்.
மாலைகளும் பூக்களும் கற்பூர ஆரத்திகளும் ரசிகர்களின் வெறிபிடித்த ஆரவாரங்களும் விஞ்ஞானி எம்ஜிஆரின் மின்னல் ஆராய்ச்சிக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தன.
படம் முடிந்து பசியும், களைப்பும் பின்னியெடுக்க, கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வருகையில், அடுத்த காட்சிக்குத் திரண்டிருந்த கூட்டம், “டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா'' என்ற கவலையோடு நின்றதை, இறுமாப்பும் கர்வமும் கலந்த ஏளனப் பார்வையோடு பார்த்தது இன்னும் ஞாபகக் குகையில் ஒளிந்திருக்கிறது.
இன்று அந்த சார்லஸ் திரையரங்கம் இல்லை. அந்த இடத்தில் ஷாப்பிங் மால் வந்துவிட்டது. பழமையைப் பின்தள்ளிவிட்டு, புதுமை அரசாள்கிறது.
அன்று சார்லஸ் திரையரங்கில், ‘தங்கத் தோணியிலே…’ பாட்டுக்கு, திரைமுன் இருந்த பிரத்தியேகமான வட்டவடிவ, அகலத் திண்டில் பூக்களைத் தூவி, சட்டை, லுங்கியோடு பாடி ஆடிய இளைஞர்கள், இன்று அந்த நினைவுகளை அசைபோட்டபடி சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கலாம். சிலருக்கு அந்த நினைவே இல்லாமலும் இருக்கலாம். காலமும் ஆடுமல்லவா நடனம்!
- மஹாரதி, தொடர்புக்கு: lakshmison62@gmail.com
இன்றைய தமிழ் ஹிந்து தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/15ffzv5.jpg
http://i60.tinypic.com/ws0nsg.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2rgyhkz.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/f2n6t2.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/6qb39u.jpg
Courtesy: Vanambadi MAGAZINE, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/242adub.jpg
Courtesy: Vanambadi MAGAZINE, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தமிழ்ப்பட உலகுக்கு எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகம் ஆன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்'' படத்தில் "ஆயிரம் நிலவே வா'' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார்.
மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.
அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, "எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!'' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.
"ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?'' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, "தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே'' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, "காதலிக்க நேரமில்லை'' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற "நாளாம் நாளாம் திருநாளாம்'' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.
அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். "தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்'' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.
பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.
இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.
இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.
தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நìனைத்தார். ஆனால் அவரோ, "தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?'' என்று கேட்டார்.
ஆமாம்'' என்று பதிலளித்தார், பாலு.
"மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?'' என்று எம்.எஸ்.வி. கேட்க, "தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை'' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.
"இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!'' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. "ஓட்டல் ரம்பா'' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம்.
முதன் முதலாக அவர் பாடிய "ஓட்டல் ரம்பா'' படம் வெளிவரவே இல்லை!
சில நாள் கழித்து "சாந்தி நிலையம்'' படத்தில், "இயற்கை என்னும் இளைய கன்னி'' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது.
தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு.
அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய "அடிமைப்பெண்'' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஆயிரம் நிலவே வா'' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.
அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.
ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.
பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். "தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!'' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.
சாந்தி நிலையத்துக்காக, "இயற்கை என்னும் இளைய கன்னி'' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) "அடிமைப்பெண்'' வெளிவந்துவிட்டது!
எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "ஆயிரம் நிலவே வா''தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.
நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.
தன்னம்பிக்கை நாயகன்!
“ஏல...”
“ஏல...”
“யாழி...”
“யாழி...”
“கோவேல்...”
“வாங்க...”
“வலிய...”
“பணிய...”
“ஏல...”
“ஏல...”
- கடற்கரையை நெருங்கும்போதே அழைக்கிறது அம்பா பாடல். கடலையே கயிறு கட்டி இழுப்பதுபோல, கரை வலை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். மீன்பிடி முறைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமான முறை கரை வலை முறை. கரையிலிருந்து சில மைல் தூரத்தில், கடலில் வலையை அரை வட்ட வடிவில் விரித்துவிட்டு, கரையிலிருந்து அதைக் கயிறு கட்டி இழுக்கும் மீன்பிடி முறை இது. விசேஷம் என்னவென்றால், ஆண்களோடு பெண்களும் பங்கேற்கும் மீன்பிடி முறை. பெரும் பகுதியான உழைப்பு கரையிலிருந்தே கொடுக்கப்பட்டாலும், கடலிலும் சிலர் நின்று ஒழுங்குபடுத்துவார்கள். கயிற்றை இழுக்கும்போது கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய தருணங்களில் அவர்கள் பாடும் அம்பா பாடலைக் கேட்கத்தான் கோதண்டராமர்கோவில் சென்றிருந்தேன். ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி இது. முத்துமுனியன் முனிய சாமியை அங்குதான் சந்தித்தேன். பாரம்பரியமான பாடலினூடே, அன்றைய தினம் ராமேஸ்வரம் பகுதி கடலோடிகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற செய்தியையும் கலந்தடித்துப் பாடியவாறே வலையை இழுத்துக்கொண்டிருந்தார். மிகுந்த உற்சாகத்தோடு பாடிக்கொண்டே வலை இழுத்தபோதுதான் அவரிடம் அந்த வேறுபாட்டை உணர்ந்தேன்: அவருக்குக் கண்களே இல்லை!
“எனக்குச் சொந்தூரு தனுஷ்கோடி. பெரும்புயலு அடிச்சுச்சுப் பாருங்க, அதுலயே நான் தப்பினவன். சின்ன வயசுல நல்ல பழக்கம் ஏதுமில்ல. காலியாதான் திரிஞ்சன். மொரட்டு சுபாவம். கைக்துடுக்கு வாய்த்துடுக்கு. பேச்சு நீண்டா சாத்திருவேன். ஒரே அடி. இப்பமே அறுவத்தியஞ்சி நெருங்குது, நல்லாத்தானே இருக்கன்? அப்ப இன்னும் நல்லா வாட்டஞ்சாட்டமா இருப்பன்.
உத்த ஒரே தொணயா எங்கய்யா இருந்தவரைக்கும் கஸ்ட நஸ்டம் தெரியல. ஒரு நா கடலுக்கு எங்கய்யாகூடப் போயிருந்தன். வலய இழுக்குறப்போ, மீனுங்ககூடவே ஒரு சொறி வலயில ஏறிடுச்சு. வலய இழுத்த வேகத்துல அவரு நெஞ்சுல பட்டுடுச்சு. ‘ஏ... யப்பா... சொறிடா... தொட்டுராதடா’ன்னார். அவ்ளோதான். நெஞ்சை அரிச்சிக்கிட்டு ரத்தம் கொப்புளிச்சிச்சி. போய்ட்டார். அப்பவும் திருந்தல. வாரிக் கொடுக்குற கடல்ல வெடிய போட்டு மீன் புடிச்சேன்.
கடலம்மா எவ்வளவு பொறுப்பா? ஒருநா வெடிய போடும்போது, கையிலேயே வெடிச்சிடுச்சு. அப்பிடியே மண்டை ரெண்டா செதறிட்டு. கண்ணெல்லாம் காலி. படகுல போட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடுறாங்க. ‘ஏ... யய்யா... புயல்லயே பொழச்சவன் நானு, என்னய காப்பாத்தி மட்டும் உட்ருங்க, நாஞ் சாவ மாட்டன். பொழச்சிக்குவன்’னு அனத்திக்கிட்டே இருந்தவன் அப்படியே மயங்கிட்டன். ஆஸ்பத்திரில ஒரு வாரஞ் செண்டு நெனப்பு வந்தப்போ, கண்ணு இல்ல. உசுரப் பொழைக்கவெச்சதே பெரிசுன்னுட்டாங்க.
நெலகொலஞ்சி ஊர் திரும்பினப்போதாம் தெரிஞ்சிது, எம் மேல ஊருக்கு இருந்தது பயம் இல்ல, அருவருப்புன்னு. ச்சீ... என்னடா வாழ்க்க நாம வாழ்ந்ததுன்னு போயிட்டு. ஒரு பய சீந்தல. கடக்கரயில நெதம் வந்து ஒக்காந்திருக்குறதைப் பாத்துட்டு, ஒரு கூட்டம் ஒரு நா எரக்கப்பட்டு கொஞ்சம் மீனும் சோறும் தந்துச்சு. ‘அய்யா... எனக்கு சோறு வேணாம், நா பிச்ச எதிர்பாக்கல, வேல கொடு, என்னால செய்ய முடிஞ்சதுக்குக் கூலி கொடு’ன்னு கேட்டேன். அவங்களுக்கு மலப்பு. கடத் தொழிலுக்கு ஒடம்புதான் உசுரு. கடலோடுறவனுக்கு ஒடம்பு முழுக்க கண்ணா இருக்கணும். எனக்குக் கண்ணே இல்ல. நா வுடுறதா இல்ல. சேத்துக்கிட்டாங்க.
ஒடம்பு அத்துக்கெடந்தப்போ, கிராமத்துல ஒரு ஆத்தாதான் எரக்கப்பட்டு உதவுனா. ஒழைச்சத அந்த ஆத்தாகிட்ட கொண்டுபோய் கொடுத்தன். ஒரு நா அந்த மவராசி செத்துட்டா. அந்த ஆத்தாளுக்கு ஒரு மவ. ஏ... ஆயா நா ஒன்னக் கடசி காலம் வரைக்கும் என் ராணி மாரி வெச்சு பாத்துக்குவேன். என்னய கட்டிக்குறீயான்னேன். சரின்னுச்சு. கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. என்னய நம்பி வேல கொடுத்தவங்களுக்கும் வாழ்க்க கொடுத்தவளுக்கும் நம்பிக்க கெடாம விசுவாசத்தக் காப்பாத்துறன்.
அதிகாலயிலயோ நடுராத்திரியிலயோ தொழிலுக்குக் கூப்பிட்டா ஒடனே ஓடியாந்திருவேன். கவனமா தொழில் பண்ணுவேன். கடுசா உழைப்பென். கண்ணில்லேன்னு நா நெனக்கிறதே இல்ல. மனசு முழுக்க நம்பிக்க கெடக்கு. வாரிக் கொடுக்க கடலம்மா இருக்கா. நாம இயற்கய துன்புறுத்தலன்னா, அதவிட நமக்குத் தொண கெடயாது. என்ன நா சொல்றது?”
கேள்விக்குப் பதில் எதிர்பார்க்காமல் ஓடுகிறார். அம்பா பாடல் தொடர்கிறது...
“ஏல...”
“ஏல...”
தர்மத்தின் தலைவன் !
“யாரு, எங்கூரு எம்ஜிஆரையா தேடிக்கிட்டு ருக்கீங்க?” - இயேசுபுத்திரனைக் கன்னியாகுமரி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது.
கடல் நடுவே இருக்கும் பாறைகள் வெளியிலிருந்து கடற்கரைக்குச் செல்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அழகானவை. கடற்பாறைகளின் முழு அடியையும் ஆபத்தையும் கடலோடிகள் மட்டுமே அறி வார்கள். கரைக்கடலில் பாறைகள் நிறைந்த பகுதியைத் தாண்டிச் செல்வதை ஆழி தாண்டுதல் என்று சொல்வார்கள் அவர்கள். மிகச் சவாலான பகுதி அது.
இந்தியப் பெருநிலத்தின் எல்லையான குமரிக் கடலில் இப்படி நிறைய ஆபத்தான பாறைகள் உண்டு. “அதோ தெரியிதே அது பேரே மரணப் பாறன்னுதாம் சொல்லுவம். அதுக்கிட்ட அலயில விழுந்தம் விறுவிறுன்னு இழுத்து, பாறயிடுக்குல கொண்டுபோயி சொருக்குன்னு சொருகியிரும். அதோ தெரியிதே கொஞ்சம் சின்னதா, அந்தப் பாறகிட்ட ஆப்புட்டாலும் அப்பிடித்தாம். மேல பாக்க ரெண்டு ஆளு ஒசரம் தெரியிதுல்ல, உள்ள போய்ப் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க. அவ்ளோ உசரம். மத்ததெல்லாமும் லேசுபட்டதுன்னு நெனைக்க வேணா. கடத் தொழிலுக்குப் போறவங்களே அசந்தா சிக்கிக்குற எடம் இது. கடலப் பத்தி ஒண்ணுந் தெரியாத சுற்றுலா பிராயணிங்க சிக்கிக்கிட்டா என்னாவும்? இதுவரைக்கும் பல நூறு பொணம் வுழுந்துருக்கு, பாருங்க இங்கெ...” - உள்ளூர்க்காரர்கள் இப்படி ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள்.
குமரிக் கடலில் கடலலையின் அடியில் படகு தவறிக் கவிழ்ந்தாலும் சரி, பாறையில் ஏறி ஆட்கள் யாரும் விழுந்தாலும் சரி, உடனே அழைப்பு செல்லும் இடம் இயேசுபுத்திரன் வீடு.
“சின்ன வயசுலேந்தே எம்ஜிஆர்னா ஒரு பிரியம். அதுவும் கடலோடியா, படகோட்டியா நடிச்சாரு பாருங்க சார், அவரு மேல உசுராயிட்டு. அப்போ மனுசன்னா, என்னா சார்?
(பாடிக்காட்டுகிறார்)
‘உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...’
‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...’
இதாம் நம்ம லட்சியம். சும்மா பேசுனா, லட்சியமாயிடுமா? ஒதவின்னு வந்தா ஒதவணும் சார், ஒதவணும். எங்கிட்ட யாரு ஒதவின்னு கேட்டு வந்தாலும் ஒதவிருவன். அப்படி ஒரு நா, கடக்கரயில நின்னுக்கிட்டிருக்கன். திடீர்னு கடல்ல தவறி வுழுந்துட்டாங்கன்னு கூட்டம் ஓடுது. நான் யோசிக்குறன். என் தலைவன் படத்துல இந்நேரத்துக்கு என்னா செய்வான்னு. ‘டேய் இயேசுபுத்திரா, நீ யோசிக்காதரா... நீ மனுசன்னா ஒதவணும்... ஓடு.. குதி’ன்னு நெஞ்சுலேந்து ஒரு கொரல். அவ்ளோதாம். குதிச்சுட்டன். அப்போலேந்து இது பழக்கமாயிடுச்சு சார். இங்கெ பாருங்க, கையில தலைவன்...” என்று கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்ஜிஆரைக் காட்டுகிறார்.
“கடலப் பாக்க வந்து, பாறயில ஏறிக் கடல்ல வுழுந்து, சுழல்ல மாட்டிக்கிறவங்க மட்டுமில்ல சார், எங்காளுங்களே பலரு கடல்ல கட்டுமரத்துல, வள்ளத்துல போம்போது மாசா அடிச்சித் தூக்கிக் கவுத்துரும். ஓடுவன். தேடித் தூக்கியாருவன். நெறய பேரு பொணமாவே போயிருவாங்க சார், அதயும் தூக்கிட்டு வந்து போடுவன். நல்ல ஆழத்துல படகுல என்ஜின் கடச்செடி கொடிங்கள்ல சிக்கிரும். ஓடுவன். கடலுக்குள்ள குதிச்சு, ஆழம் போயி, சிக்கியிருக்க செடி கொடிங்களை அறுத்துடுவன். சமயத்துல, வள்ளம் ஒருபக்கமா கவுந்துரும். கீழ போயி சங்கிலியைக் கோத்துட்டு, தூக்க ஒத்தாச பண்ணுவம்...”
“கடல் பயமாக இருக்காதா?”
“நம்ம கடலம்மா புள்ளைங்க சார். அதாம் ஒரே நம்பிக்க. நம்ம நமக்காவ குதிக்கல. நாலு பேர் உசுருக்காகக் குதிக்கிறம். கடலம்மா பாத்துக்குவான்னு ஒரு நம்பிக்க.
எல்லாமே சாவுக்குத் துணிஞ்சு எறங்குற வேலதான் சார். பயங்கர ஆழம். சொழலு வேற இழுக்கும். வரிப்புலியன் சுறா, மொரட்டுத் திருக்கைங்க கெடக்கும். கடப்பாம்புங்க கெடக்கும். கண்ணுல சிக்கினம், சிக்குன வேகத்துல மேல போய்ச் சேர வேண்டியதான். அதெல்லாம் வுடுங்க. மூச்ச அடக்குறது இருக்கே, அத சரியா கணக்குப் பண்ணாம வுட்டோம்னாலும் அவ்ளோதான். மாரடச்சு, கண்ணு தெரிச்சுப் போய்சேர வேண்டியதுதாம். எங்கண்ணனே ஒருத்தரு அப்பிடிப் போய்சேந்துருக்கார்.
ஒவ்வொருவாட்டியும் இப்பிடிப் போயி கடல்ல குதிச்சு முங்கி வெளிய வரும்போது எதாவது ஒடம்புல அடியோடுதான் வருவன். வூட்டுல திட்டுவாங்க. இனிமே இந்த வேல பாக்கக் கூடாது, நமக்கும் வயசாயிட்டுன்னெல்லாம் எனக்குள்ளயே சொல்லிக்குவேன். ஆனா, யாரோ ஒருத்தர் ஒதவின்னு கேட்டு வரும்போது எல்லாமே மறந்துரும். என் தலைவனா இருந்தா, என்னா செய்வான்னு நெனச்சுக் குதிச்சுருவன். இதுவரைக்கும் பதினெட்டு உசுரக் காப்பாத்திருக்கன் சார். இருபத்தியஞ்சி பொணத்தத் தூக்கிப்போட்டுருக்கன். போலீஸே நம்மளத் தேடித்தான் வருவாங்க. எதயும் காசு பணத்துக்காவ செய்யிறதுல்ல.
ஆக்ராலேந்து அசோக் ராணான்னு போலீஸ் அதிகாரி. எஸ்பியா இருந்தவரு. அவரு பையன் இங்கெ வந்தப்போ தவறி வுழுந்துட்டான். உசுரக் கொடுத்துக் காப்பாத்தினேன். என்ன வேணும் கேளுன்னு புடியா நிக்கிறாரு மனுஷன். ஒண்ணும் வேணாம் சார்னு சொல்லி அனுப்பிட்டன். கொஞ்ச நாள் கழிச்சு ஆள் வுட்டு ஆக்ரா அழைச்சுக்கிட்டு வரச் சொன்னார். வீட்டுக்குப் போய்ப் பாத்தா என் படத்த சாமி படத்தோட வெச்சிருக்காங்க. இந்த அன்பு போதும் சார்னு சொல்லிட்டு வந்துட்டன். அன்பைவிட மேல என்னா சார் இருக்கு இந்த ஒலகத்துல? நான் சொல்றது சரிதான?”
நெகிழவைக்கிறார் இயேசுபுத்திரன்.
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
படம்: எஸ். முஹம்மது ராஃபி
http://www.youtube.com/watch?v=h2R8zOFkgns
thanks sailesh sir
http://i62.tinypic.com/azcjd.jpg
Courtesy: Vanambadi MAGAZINE, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
After MGR, Ajith is the most-loved hero, opines Cho
May 29th, 2013 | Tamil Cinema News | Tags: Ajith, MGR
MGR-Ajith Veteran journalist ‘Cho’ Ramasamy, one of the most widely respected media person and political analysts in the country, has said that in his opinion, after the legendary hero MGR, it was Ajith who had the maximum number of fans who loved him on and off-screen. Cho, who started off as an actor before moving to the field of journalism, carries a lot of weight among political circles.
Cho rarely appreciates film personalities or politicians. Getting positive comments from him is almost equivalent to winning the toughest of wars on the battlefront . Now Cho Ramasamy has compared Ajith would be next hero who sets a role model to the next generation after the former great MGR. His fan base has been increasing gradually despite the fact he never tries to cash in on his popularity like other stars stand.
The ‘MGR Magic’ is still at work and is very much tangible among the supporters of the present ruling party in the State. A MGR fan never switches his loyalty and always stays a die-hard MGR fan and follower. Their limitless support, patronage, love and affection paved the way for MGR in ascending the throne and remaining as the ‘indisputable’ top politician in the State till his demise in 1987.
Comparing Ajith with the late MGR in terms of the number of fans he has got is surely a shot in the arm for Ajith, who disbanded all the Fans’ Clubs operating in his name more than a couple of years ago. “In my opinion, Ajith comes next only to the great MGR in terms of loyal fans. But it is not easy to match MGR’s charisma,” Cho has said.
பண நாயக தேர்தல்கள்!
=====================
1957 இல் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962 தேர்தலில் அந்த 15 இடங்களிலும் திமுகவை தோற்கடிக்க காமராஜரின் கட்டளைக்கு ஏற்ப டிவிஎஸ் நிறுவனமும், போள்ளசி மகாலிங்கம் நிறுவனமும் பெரும் பணத்தை தண்ணீராக செலவு செய்தது. வோட்டுக்கு பணம் கொடுத்தார்கள்.
.
காஞ்சிபுரத்தில் அண்ணா உட்பட 15 பெரும் தோற்று போயினர். ஆனால் புதிதாக 50 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
.
1967 இல் காமராஜர் தோற்றார். பின் நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி இட்டார். அவரை தோற்கடிக்க கருணாநிதி தலைமையிலான அமைச்சர்கள் வோட்டுக்கு 2 ரூபாய் கொடுத்தார்கள். ஆயினும் காமராஜர் வெற்றி பெற்றார்.
.
1972 இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் பிரயோகித்தும் சொற்ப வாக்ககுகள் வாங்கி மூன்றாம் இடத்தையே பிடித்தது. ஆலமரமாக வேரூன்றி இருக்கும் எம்ஜிஆரின் இரட்டை இலை அங்கேதான் துளிர்த்தது.
.
1989 இல் மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைதேர்தலில் திமுக பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் பிரயோகித்தும் பிரிந்து கிடந்த அண்ணா திமுக ஒன்றாகி வென்றது.
.
பழனி, பெருந்துறை, மயிலாப்பூர், கும்மிடி பூண்டி, சைதாபேட்டை என தொடர்ந்து பல இடங்களில் இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் தொடர்ந்து ஆளும் கட்சிகள் பிரோயோகம் செய்தன, செய்கின்றன.
.
சென்ற திமுக ஆட்சியில் தான் மதுரை மத்தி, மேற்கு மற்றும் திருமங்கலம் என நடந்த தேர்தல்களில் பணம் அதன் உச்சத்தை தொட்டது. வோட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது. பண நாயக தேர்தல்! பண பலத்துடன் வழக்கமான ஆயுத பலம், அதிகார பலமும் உண்டு.
.
திருமங்கலம் பார்முலா என்ற அடைமொழி வேறு அதற்கு!
திருச்செந்தூர், கம்பம், தொண்டாமுத்தூர், பென்னாகரம் என பல தொகுதிகளிலும் அதே பார்முலா, அதே வெற்றி....
.
சென்ற திமுக ஆட்சியில் சென்னை யில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ரௌடிகள மட்டுமே வாக்களித்து வெற்றி பெரும் ஜனநாயக தேர்தல் நடந்தது. நீதிமன்றம் தலையிடும் வண்ணம் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது.
.
ஈழ போரின் துயரமான இறுதி நாட்களில் 2009 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வோட்டுக்கு 200 கொடுத்து வெற்றி பெற்றது. வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட ஈழ உணர்வாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஈழ விவகாரம் தமிழக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நிரூபிக்க இந்த 200 ரூபாய் உதவியது.
.
தோற்றவர் வென்றதாக அறிவிக்கப்பட்ட புதிய ஜனநாயக தேர்தல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ப சிதம்பரம் வெற்றி ஜனநாயகத்தின் மீது மிகுந்த "நம்பிக்கையை" உண்டாக்கிய தேர்தல்.
.
2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பண விநியோகம் வெற்றி தரவில்லை. 2g யின் ஆதிக்கம் அப்படி.
.
இந்த ஆட்சியில் சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பண பலத்துடன் வழக்கமான ஆயுத பலம், அதிகார பலமும் சேர்ந்தே நடைபெற்றது. சங்கரன் கோயில் பார்முலா என்ற பெயர் மாற்றம் வேறு.
.
புதுக்கோட்டை, திருச்சி, ஏற்காடு என அதே பார்முலா, அதே வெற்றி....
.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின் பண விநியோகம் வெற்றி பெற்றது. திமுக வின் பண விநியோகம் ராஜா, tr பாலு, ஜகத்ரட்சகன், காந்தி செல்வன் என முக்கிய வேட்பாளர்கள் போட்டி இட்ட இடங்களில் பணம் தண்ணீராக செலவிடப்பட்டும் வோட்டுக்கு பணம் கொடுத்தும் திமுக தோல்வியையே கண்டது.
.
அன்புமணி பணத்தை தண்ணீராக செலவழித்து ஜாதிய ஒருங்கிணைப்பு என்ற அஸ்திரத்தை ஏவி வெற்றி பெற்றார்.
.
இப்பொழுது உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் அதே பணம், அதிகாரம் புகுந்து விளையாடுகிறது.
.
ஆட்சியில் இருப்பவர்கள் பண அதிகார ஆட்டம் போடுவதும், ஆளும் கூட்டணி கட்சியினர் வாய் மூடி மௌனம் காப்பதும் , எதிர் கட்சியினர் ஆர்ப்பாட்டமாய் கேள்விகேட்பதும்...
.
பின்னர் இதே எதிர் கட்சி ஆளும் கட்சியாகும் போது இதை விட அதிகமாக அத்து மீறுவதும், அன்றைய எதிர்க்கட்சி ஆர்ப்பரிபதும் வாடிக்கையான ஜனநாயக கேலிக்கூத்துக்கள்.. இது ஒரு தொடர்கதை...
.
பணம் கொடுக்காவிட்டாலும் கேட்டு பெறுகின்ற சூழலில் இன்றைய மக்களும் தங்களை தயார் படுத்திகொண்டு விட்டார்கள். எதிர்கட்சிகள் போட்டி இடவில்லை என்றால் பண மழை பொழியாதே என மக்கள் வருத்தப்படும் சூழல் உள்ளது.
வாழ்க ஜனநாயகம்! வளரட்டும் பண நாயக தேர்தல்கள்!
.
வேற என்ன சொல்ல...
TODAY MORNING SUNLIFE CHANNEL TELECASTED KANNAN EN KADHALAN @11.00 HRS
http://www.youtube.com/watch?v=xqoOqS4bpWs
மக்கள் திலகத்தின் சில படங்கள் மறு வெளியி ட்டில் நீண்ட இடைவெளியில் உள்ளது. ஒரிஜினல் பிரிண்ட் சேதமானதால் அந்த படங்கள் வருவதில்லை .
1. படகோட்டி ( சுமார் பத்து வருடம் கடைசியாக mgr வாரத்தில் மேகலா அரங்கில் பார்த்தது )
2.பெற்றால் தான் பிள்ளையா ( சுமார் ஏழு வருடம் )
3.பாசம் ( சுமார் ஏழு வருடம் )
4.நாடோடி ( சுமார் எட்டு வருடம் )
5.திருடாதே (சுமார் எட்டு வருடம் )
6.புதுமை பித்தன் ( சுமார் நான்கு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர்
7. ரிக்க்ஷா காரன் , நம் நாடு ( சுமார் நான்கு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர்
8.பண தோட்டம் சுமார் பத்து வருடம் கடைசியாக mgr வாரத்தில் தங்கம் அரங்கில் பார்த்தது )
9.மன்னாதி மன்னன் ( சுமார் ஏழு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர் .
மேற் சொன்ன ஐந்து திரை காவியங்களை விநோயோகச்தர்கள் டுப் நெகடிவ் போட்டு பிரிண்ட் எடுத்து திரை இட்டால் வசூலை அள்ளலாம் .
இன்று வரை தொடர்ந்து மறு வெளியீட்டில் வசூலில் சாதனை படைக்கும் காவியங்கள்
1.நாடோடி மன்னன்
2.அலிபாபாவும் 40 திருடர்களும்
3.சக்கரவர்த்தி திருமகள்
4.மலைக்கள்ளன்
5.மன்னாதி மன்னன்
6.தாய் சொல்லை தட்டாதே
7.தாய் யை காத்த தனயன்
8.தெய்வ தாய்
9.பணக் கார குடும்பம்
10.எங்கள் வீட்டு பிள்ளை
11.ஆயிரத்தில் ஒருவன்
12.தனிப்பிறவி
13.தொழிலாளி
14.தாய்க்கு பின் தாரம்
15.குலேபகவாலி
16.புதுமை பித்தன்
17.அன்பே வா
18.நான் ஆணை இட்டால்
19.தருமம் தலை காக்கும்
20.முகராசி
21.குடிஇருந்த கோவில்
22.ஒளிவிளக்கு
23.கண்ணன் என் காதலன்
24.அரச கட்டளை
25.தேர் திரு விழா
26விவசாயி
27காவல் காரன்
28.அடிமை பெண்
29.நம் நாடு
30.ரசசிய போலீஸ் 115
31.மாட்டு கார வேலன்
32.நீரும் நெருப்பும்
33.இதயக்கனி
34.இதயவீணை
35.நாளை நமதே
36.உலகம் சுற்றும் வாலிபன்
37.பட்டிகாட்டு பொன்னையா
38.நீதிக்கு தலை வணங்கு
39.தாயிக்கு தலை மகன்
40.நீதிக்கு பின் பாசம்
41.என் அண்ணன்
42.நல்ல நேரம்
43.நேற்று இன்று நாளை
44.கலங்கரை விளக்கம்
45.மீனவ நண்பன்
46.பல்லாண்டு வாழ்க
47.கன்னி தாய்
48.நினைத்ததை முடிப்பவன்
49.மதுரை வீரன்
50.மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
51.இன்று போல் என்றும் வாழ்க
52.ஊருக்கு உழைப்பவன்
53.உரிமை குரல்
54.உழைக்கும் கரங்கள்
55.காலத்தை வென்றவன்
56.குடும்ப தலைவன்
57.நான் ஏன் பிறந்தேன்
58.தேடி வந்த மாப்பிள்ளை
59.ஆசை முகம்
60.பெரிய இடத்து பெண்
61.வேட்டை காரன்
62.ரிக்சா காரன்
மேலும் படங்கள் விடுபட்டு இருந்தால் நண்பர்கள் இங்கே குறிப்பிடவும்
https://www.youtube.com/watch?v=td-vNao9FwA
THANKS SAILESH SIR