http://i62.tinypic.com/in6brd.jpg
Printable View
செந்தில் சார் உங்கள் பதிவுகள் அபார உழைப்பு
சொல்ல வார்த்தைகள் இல்லை
தொடருங்கள்.... எங்களுக்கு கொஞ்சம்
வாசிக்க இடைவெளிவிட்டு
'அண்ணே... தம்பி கணேசன் நடிச்ச படம் பார்த்திருக்கீங்களா...' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
வேகமாக தலையாட்டிய தேவர், 'அவர் படத்தைப் பார்த்து ரசிக்காம இருக்க முடியுமா... உத்தம புத்திரன்ல என்ன ஸ்டைலு... பாவமன்னிப்புல சாய்பு கேரக்டருல என்ன ஒரு உருக்கம். பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... பாகப்பிரிவினையில கை நொண்டியா வருவாரே... அடடா என்ன ஒரு நடிகரு அவர்...' என்ற தேவரின் குரல், புது வீரியம் பெற்று ஒலித்தது.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம் :smokesmirk:
பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... --தேவர்
வேறு காரணங்கள் ஏதுமில்லையென்றால், Tamil Films Forumல் உள்ள Methodology of Acting திரியை நடிகர் திலகத்துடன் இணைத்து விடலாமே..
முரளி சார் இதை கவனியுங்களேன்.
ஏனென்றால் ஏற்கெனவே School of Acting தலைப்பில் நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் கோபால் சார் அலசியிருக்கும் போது இந்தத் திரி தொடங்கியதற்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை.
டியர் ராகவேந்திரா சார்
சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைகள்;பத்திரிகை விளம்பரங்கள்
திரியில் தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு நன்ற சார்
தங்களைப்போல் அனைவரும் உதவிடவேண்டும் என்பதே என் அவா
செந்தில்வேல்,
எப்போதும் பழைய ஆவணங்களைப் பார்த்தால் அதுவும் தலைவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்த்தால் நமக்குள் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானது. என்னவோ கோடி பொன் கிடைத்தது போல. அப்படியே நம்மை கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் டைம் மிஷின்கள் இந்த ஆவணங்கள்.
பம்மலார், நீங்கள், ராகவேந்திரன் சார் போன்ற நண்பர்கள் ஆவணங்கள் பதியும் போது எப்போதுமே என் மனம் குதூகலிக்கும்.
ஆனால் இன்று நீங்கள் பதித்துள்ள ஆவணங்களில் உள்ள தலைவரின் ஒவ்வொரு கள்ளம் கபடமில்லாத நிழற்படங்களை பார்க்கும் போது என்னையுமறியாமல் என் கண்கள் கலங்குகின்றன.
என்ன மனிதர் அவர்! என்ன முக அமைப்பு, உடல் வாகு அவருக்கு! அவர் மேல் உள்ள அபிமானத்தால் சொல்லவில்லை...மனம் திறந்து சொல்கிறேன். அவரை இந்த நிழற்படங்களில் ஒரு மனிதராகவே என்னால் பார்க்க இயலவில்லை. எந்த ஒரு மனிதரிடமும் அவரை ஒப்பீடு செய்யவும் முடியவில்லை. ஈடு இணையற்ற ஒரு தனித்த தெய்வப் பிறவியாகவே தெரிகிறார். மனிதர்களோடு மனிதராக அவரை ஒட்டி வைத்துப் பார்க்கவே முடியவில்லை. தெய்வங்களில் கூட ஒப்பீடு செய்துவிட முடியும். இந்த மாபெரும் மனிதரை யாரோடு ஒப்பீடு செய்ய முடியும்?
படங்களின் ஸ்டில்களை விடுங்கள். அது ஒவ்வொரு இன்ச்சும் நமக்கு மனப்பாடம். ஷூட்டிங் ஸ்பாட்களில் அவரைப் பாருங்கள். அவர் உட்கார்ந்திருக்கும் தோரணையைப் பாருங்கள். அவர் நிற்கும் அந்த ஸ்டைலைப் பாருங்கள். தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்களுடன் அவரின் நட்புறவைக் கவனியுங்கள். சினிமாவுக்கென்று இல்லாமல் இயற்கையாக, இயல்பாக அவரிடம் மிளிர்ந்திருக்கும் அபரிமிதமான ஸ்டைலைக் கவனியுங்கள். வேண்டுமென்றே போஸ் தர வேண்டும் என்று எண்ணித் தருவது போல் உள்ளதா அது? இல்லை. கடவுள் வந்து அவர் உருவில் நுழைந்து தனக்கு பெருமை தேடிக் கொண்டது போல்தான் என்னால் இவற்றைப் பார்க்க முடிகிறது. அவர் மேல் இருக்கும் அன்பினால் நான் சொல்வது அதிகப்பட்சமாகத் தெரிவது போல் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அதுதான் உண்மை.
'சவாலே சமாளி' படப்பிடிப்பில் ஒரு சிம்பிளான வேட்டியோடு, அந்த அழகான சின்னக் கட்டங்கள் போட்ட ஷர்ட்டுடன், வசன பேப்பரைப் பார்த்தபடி அவர் 'மல்லிய'த்தின் தோளில் கை போட்டுக் கொண்டு நிற்பதை என்னவென்று சொல்வது?அது ஒரு சாதாரண, இயல்பான ஒரு நடிகனின் நிகழ்வுதான். ஆனால் இவர் மட்டும் அந்த ஒரு சாதாரணத்தில் கூட சரித்திர நிகழ்வாகத் தெரிகிறாரே!
அவர் தொழில் முறை நண்பர்களுடன் தரை விரித்த பெட்ஷீட்டில் ஷர்ட் கை மடித்து, தரை ஊன்றி, கால்கள் மடக்கி மிக சாதரணமாக அமர்ந்திருப்பது அசாதாரணமாக நமக்குப் படுகிறது அல்லவா!
குழந்தைகளுடன் குழந்தையாக எத்தனை போட்டாக்கள்! நீங்களே நிறைய பதிவு செய்து விட்டீர்கள். அதில் சிறிதாவது கள்ளமோ கபடமோ இருக்கிறதா? அதைப் பார்த்தவுடன் எனக்கு கீழ்க்கண்ட சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
1980 களின் வாக்கில் என்று நினைவு...ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மதிய வேளையில் ஒருமுறை நடிகர் திலகத்தை 'அன்னை இல்ல'த்தில் அவசர அவசரமாக சந்தித்தேன். என்னுடன் கடலூர் ரசிக மன்ற நண்பர்களும் வந்திருந்தனர். அன்று விடுமுறையாதலால் ஷூட்டிங் இல்லாமல் 'நடிகர் திலகம்' வீட்டில் இருந்தாலும் அப்போதும் அவர் அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அவரைச் சந்தித்த அந்த அவசர நேரத்திலும் எங்களுடன் அமர்ந்து ஒரு அரை மணி நேரத்துக்கு ஜாலியாக உரையாடிவிட்டுத்தான் சென்றார். அதற்கு நடுவில் சந்தோஷமாக எங்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
"இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை இல்லையா?....ஒரு வேலையா டெல்லிக்குப் புறப்பட்டுகிட்டு இருக்கேன்... பிள்ளைகளெல்லாம் வீட்டில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருகிறார்கள். என்.டி.ஆர் வீட்டுப் பசங்க, நாகேஸ்வரராவ் வீட்டுப் பசங்க, ராஜ்குமார் பசங்க எல்லாம் இங்கதான் விளையாடிகிட்டு இருக்காங்க. அவுங்களைப் பார்த்துட்டு அவுங்களுடன் கொஞ்ச நாழி இருந்துட்டு கிளம்பணும்"
என்று நடிகர் திலகம் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு குழந்தைகளைப் பார்க்க சென்று விட்டார்.பின்னால் குழந்தைகளின் கூச்சலும், கும்மாளமும் தோட்டத்திலிருந்து கேட்டது. அநேகமாக அந்தக் குழந்தைகள் நாகார்ஜுன், சிவராஜ் குமார், பாலகிருஷ்ணா இவர்களாக இருக்குமோ என்று நாங்கள் இப்போதும் பேசிக் கொள்வது உண்டு.
பாருங்கள். தென்னகத் திரைவானில் மின்னிய நட்சத்திரங்களின் வீட்டுக் குழந்தைகள் சென்னையில் உள்ள நடிகர் திலகத்தின் அன்னை இல்ல வீட்டில் விளையாடுகின்றன. இதற்கு மேல் நான் என்ன சொல்ல!
திருச்சி ரஞ்சனா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவில் ஒரு மகானைப் போல அவர் தாடி வைத்து எவ்வளவு மரியதைக்குரியவராய் திகழ்கிறார்!
பெயருக்குப் பாராட்டாமல் அன்றைய முன்னணி நடிகைகள் அவரை எவ்வளவு ஆழ்மனதிலிருந்து பாராட்டியிருக்கிறார்கள்!
லீனா சந்தவர்க்கர் (இந்திப் பாடகர் கிஷோர் குமாரின் மனைவி) 'கலைக்கடவுளி'ன் ஒரே ஒரு 'வியட்நாம் வீடு' பார்த்து விலை மதிக்க இயலாத அவருடைய மற்ற காவியங்களைப் பார்க்க ஆசைப்பட்டதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது?
பஸ் கண்டக்டர், மாணவர், சாஸ்திரி, ஆபீஸ் பையன் என்று அத்தனை பேரிடமும் அவர் நீக்கமற நிறைந்திருந்ததை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் அதை எவ்வளவு அழகாக எடுத்து வெளிக்காட்டுகிறது உங்களுடைய ஆவணங்கள்!
'தெய்வ மகன்' டைரக்டருக்கு மாலை போட்டு ஆரம்ப நாளன்று மரியாதை செய்யும் ஸ்டில்லைப் பார்க்கும் போது படத்தில் மேஜருடனான அந்த புகழ்பெற்ற அமர்க்கள உணர்ச்சிபூர்வமான ஆரம்பக் காட்சி அப்படியே மனக்கண் முன்னே ஓடுகிறதே!
'பிரஸ்டீஜ்' பத்மநாபன் என்ற உலகப் புகழ் பெற்ற பிராமண முதியவர் 'வியட்நாம் வீடு' பூஜையில்அவ்வளவு அழகாக சிறு பையன் போல் தாயுடன் வெள்ளை உடையில் நிற்பதை பார்க்கும் போது ஆச்சர்யங்கள் மனதில் விரியாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். பத்மாவின் பரத நாட்டியத்திலும் காலேஜ் மாணவன் போல அப்படி ஒரு இளமைத் தோற்றம்.
திருலோக்குடன் 'துஷ்யந்தன்' என்ன ஒரு கம்பீரம்! தேஜஸ்!
'எங்க ஊர் ராஜா'வின் சீரியஸ் தோற்றம் மாதவனுடன். 'வியட்நாம் வீட்'டின் நூறாவது நாளுக்கு மேசையில் கைவிரல்கள் ஊன்றி அவர் நிற்கும் அழகை யாராவது பாராட்டித்தான் விட முடியுமா? அல்லது எழுதிதான் தணித்துக் கொள்ள முடியுமா?
அதே போல இன்னொரு 'சவாலே சமாளி' வண்ண ஸ்டில். மடித்துவிடப்பட்ட வேட்டியில், சைட் போஸில் தொடையில் கைவைத்து கால்களை சற்றே மடக்கி நிற்கும் அழகை வர்ணிக்கவே முடியாது. வார்த்தைகளும் கிடையாது.
உங்களின் அற்புதமான இந்த இறைபணிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும், நன்றிகளும். அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே உண்டு செந்திவேல்.
பாடல்களுக்கும், படங்களுக்கும் ஆய்வுகள் எழுதிக் கொண்டிருக்க, இப்போது தங்கள் ஆவணங்களுக்கே ஆய்வுகள் எழுத வைத்து விட்டீர்கள்.:) அதற்கு என் சந்தோஷமான நன்றி மீண்டும் தங்களுக்கு.
நிஜமாகவே ஒவ்வொரு வினாடியும் நினைத்து நினைத்து நம்மை ஆச்சரயப்பட வைக்கும் சிருங்கார மனிதர் அவர். மனிதனும் தெய்வமாகலாம்தான். ஆனால் ஒரு தெய்வமே மனிதனானது இவர் ஒருவர் விஷயத்தில் மட்டுமே. இது சத்தியமான உண்மை.
Mr Senthilvel,
Even if we pay 1 crore we cannot get the treasure of NT's which you are posting. We salute you for the
Great work as well as safely preserving the golden details of NT.
நாதஸ்வர அறிஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் தீவிர ரசிகர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். தன்னுடைய இசைக்கு சினிமாவில் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு காருகுறிச்சி, ஏ.பி.என்.னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நாதஸ்வர இசையை பிரதானமாக கொண்ட திரைப்படம் ஒன்றினை இயக்க கதை தேடினார் ஏ.பி.என். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை படமாக எடுத்தால், அதில் காருகுறிச்சியின் இசையை பயன்படுத்த முடியும் என்று அவருக்கு தோன்றுகிறது.
கதையின் உரிமை ஆனந்த விகடன் அதிபரிடமே இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவரை தொடர்பு கொண்டார். “நானே அதை படமா எடுக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டார் வாசன்.
இதையடுத்துதான் ‘திருவிளையாடலை’ கையில் எடுத்தார் நாகராஜன். ‘திருவிளையாடல்’ வெளியானவுடன் ஏ.பி.என்.னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார் வாசன். இதுதான் சமயமென்று அவரிடம் மீண்டும் தில்லான மோகனாம்பாளை கேட்கிறார். மீண்டும் மறுக்கிறார் வாசன்.
வேறு வழியில்லாமல் ‘சரஸ்வதி சபதம்’ எடுக்கப் போய்விட்டார் ஏ.பி.என். இந்த படமும் சூப்பர்ஹிட் ஆக மீண்டும் வாசனை அணுகுகிறார். “வேணும்னா பார்ட்னர்ஷிப் போட்டு பண்ணலாமா?” என்று கொஞ்சம் இறங்கி வந்தார் ஆனந்த விகடன் அதிபர். ஏ.பி.என்.னுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால், திரும்பவும் ‘திருவருட் செல்வர்’ செய்ய போய்விட்டார்.
அதுவும் வெளியான பிறகு, தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாக மீண்டும் வாசனிடம் வந்து, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று இழுக்கிறார்.
வாசனுக்கு இம்முறை மறுக்க மனமில்லை. ஐந்து ஆண்டுகளாக ஒரு பெரிய இயக்குனர், இந்த கதையை கேட்டு திரும்பத் திரும்ப வந்து நிற்கிறாரே என்று ஆச்சரியம்.
“அந்த கதையை என்னாலே சரியா திரைக்கதை அமைக்க முடியலை. நீங்களே எடுத்துக்கங்க. ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுத்துடுங்க” என்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு கதைக்கு இது பெரிய தொகைதான்.
ஐம்பதாயிரம் கேட்டாலும் கொடுக்க தயாராகதான் இருந்தார் ஏ.பி.என். உடனே ஒரு பத்தாயிரத்துக்கு செக் கிழித்து விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் கொடுத்துவிட்டார்.
அடுத்து கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை தேடிப் போனார். சுப்பு அப்போது கண் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் தேடிப்போய் ஒரு தொகையை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார் நாகராஜன். “இந்த காலத்துலே அதுவும் சினிமாத்துறையிலே இப்படிப்பட்ட ஆளா இருக்கியேய்யா... உன் படம் நல்லா வரும்” என்று வாழ்த்தினார் சுப்பு.
ஏ.பி.என். கொடுத்த தொகையை வாங்க மறுத்து, ”என் கதைக்கு எனக்கு ஏற்கனவே சம்பளம் வந்தாச்சி” என்றார்.
இவருக்கு ஆச்சரியம். எப்படி என்று கேட்டபோது பாக்கெட்டில் இருந்த செக்கை எடுத்து நீட்டினார். இவரிடம் வாசன் வாங்கிய செக், அப்படியே சுப்பு பெயருக்கு endorse செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏ.பி.என். தன் திருப்திக்காக வற்புறுத்தி சுப்புவுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்தார்.
எந்த காருகுறிச்சிக்காக ‘தில்லானா மோகனாம்பாள்’ எடுத்தே ஆகவேண்டும் என்று ஏ.பி.என். அடமாக நின்றாரோ, அந்த காருகுறிச்சி ’தில்லானா மோகனாம்பாள்’ வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே காலமாகிவிட்டார்.
படம் பிரமாதமான வெற்றியை பெற்றபிறகு அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளவும் ஏ.பி.என். மறுத்துவிட்டார். “அந்த கதையில் நடித்த நடிக நடிகையரின் வெற்றி அது” என்றார்.
அந்த காலத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பெருந்தன்மை காட்டுவதில்தான் போட்டியாக இருந்திருக்கிறார்கள்.
- யுவகிருஷ்ணா
நினைப்போம்.மகிழ்வோம்-22
"பராசக்தி".
ரங்கூனிலிருந்து படாத பாடு
பட்டு கப்பலில் நம் தாயகம்
வந்து சேர்ந்து, எதையோ
வென்று விட்ட நிம்மதி மிகுந்த
பெருமிதப் புன்னகையுடன்
கப்பலிலிருந்து இறங்கி
வருவாரே.. !?
நினைப்போம்.மகிழ்வோம்-22
"பராசக்தி".
ரங்கூனிலிருந்து படாத பாடு
பட்டு கப்பலில் நம் தாயகம்
வந்து சேர்ந்து, எதையோ
வென்று விட்ட நிம்மதி மிகுந்த
பெருமிதப் புன்னகையுடன்
கப்பலிலிருந்து இறங்கி
வருவாரே.. !?
நினைப்போம்.மகிழ்வோம்-23
"நவராத்திரி".
'இரவினில் ஆட்டம்' பாடலில்
அலட்சியப் புன்னகையுடன்,
அடர்ந்த ஒற்றைப் புருவம்
மட்டும் உயர்த்திக் கொண்டு
"பகலினில் தூக்கம்" பாடி விட்டு, விரலிடுக்கில் புகையும் துண்டு சிகரெட்டை சுண்டி விடுவாரே..!?
நினைப்போம்.மகிழ்வோம்-24
"பார்த்தால் பசி தீரும்"
"உள்ளம் என்பது ஆமை"
பாடலின் இடையே 'தண்ணீர்
தணல் போல் எரியும்..' என்கிற
வரி இரண்டாம் முறையாக
பாடப்படும் போது,பக்கவாட்டில்
அழகு முகம் காட்டி, தத்ரூபமாய் செய்யும் வாயசைப்பு.
வாசு சார்
ஆவணங்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் பேசும் பொழுது பல விஷயங்கள் தெரியமுடிகிறது.அவரை பிரிண்ட்செய்த காகிதங்களும் கட்டுரைகளும்தான் தனிமனிதரைப்பற்றிய அதிகமான ஆவணங்களாக தமிழில் அவர் கோலோச்சிய காலகட்டங்களில் இருந்திருக்கும். ஓவ்வொருவரிடமும் உரையாடும் போதும் நமக்குத் தெரியாத கேள்விப்படாத விஷயங்களை அவர்கள் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
தங்களின் உயர்ந்த பாராட்டிற்கு நன்றி.