http://i68.tinypic.com/2qa4b5d.jpg
Printable View
தொடரும்..
http://i67.tinypic.com/24g2f6f.jpg
அடுத்த பாகம் துவங்க திரு.ஆதவன் ரவி அவர்களை பணிக்கிறோம்.
திரண்ட மக்கள்தலைவரின் இதயங்கள், மிரண்ட மதுரை சென்ட்ரல் தியேட்டர்.
கடந்த 11.03.2016 வெள்ளியன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்தலைவரின் காலத்தால் அழியாத மாபெரும் காதல் காவியம் வசந்தமாளிகை திரைப்படம் திரையிடப்பட்டது.
நாம் ஏற்கனவே கூறியது போல் மக்கள்தலைவரின் படங்களை திரையிட பல விநியோகஸ்தர்கள் சென்ட்ரல் தியேட்டர் நிர்வாகத்திடம் தேதி கேட்டுள்ளனர். அதில் கலைமதி சார்பில் வசந்தமாளிகை திரையிட தியேட்டர் நிர்வாகம் அனுமதியளித்தது. பட விளம்பரத்திற்கு போதுமான சுவரொட்டிகள் இல்லை என்பதனால் இருக்கின்ற சுவரொட்டிகளை வைத்து படத்தை திரையிட போவதாக தகவல் வந்தது. உடன் தியேட்டர் நி்ர்வாகத்திடம் முறையிடப்பட்டது, சரியாக விளம்பரம் செய்யாமல் படத்தை திரையிட்டு கூட்டம் வரவில்லையென்றால் சிவாஜி படம் சரியாக போகவில்லை என்றால், ரசிகர்களாகிய எங்களது உழைப்பு வீணாகிப் போகும். எனவே, எல்லா படத்திற்கும் செய்வது போல் விளம்பரம் செய்யாவிட்டால் நாங்கள் எப்படி ரசிகர்களிடம் எடுத்துச் செல்வது என்று கூறினோம். தியேட்டர் நிர்வாகம் உடனே தலையிட்டு விநியோகஸ்தரிடம் நன்றாக விளம்பரம் செய்யவேண்டும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள், எனவே நன்றாக விளம்பரம் செய்யுங்கள் என்று கூறினார். மறுநாள் நானும் (சுந்தராஜன், பிரபு வெங்கடேஷ், பழனிச்சாமி, பச்சைமணி, பாண்டி, ராஜன் ஆகியோர் விநியோகஸ்தரை சந்தித்து பேசினோம். ஆனால், அதற்கு முன்னதாக இரவோடு இரவாக புதிய சுவரொட்டிகள் தயாராகி அதிகாலை வந்து விட்டது என விநியோகஸ்தர் எங்களிடம் காட்டினார். மேலும் தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கும் பேனர் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அலங்கார் தியேட்டரில் வைத்தது அந்த பேனரை இங்கு வைப்பதாக கூறுகிறார்கள் அதன் அளவு வேறு சென்ட்ரல் தியேட்டர் அளவு வேறு என்று கூறியதும், வேறு புதிய பேனர் வைத்து விடுகிறோம் என்று கூறினார்.
ஆண்டாணடு காலமாக சிவாஜி படமென்றால் விநியோகஸ்தர்கள் போஸ்டர் ஒட்டாமல் மக்களுக்கு தியேட்டரில் சிவாஜி படம் ஓடுகிறது என்பதே தெரியாத அளவிற்கு தான் விளம்பரம் இருக்கும்.
விநியோகஸ்தர் சொன்னது போல் போஸ்டர் விளம்பரம் புதன் இரவு நன்றாக செய்யப்பட்டது. இதிலும் சோதனை என்னவென்றால் தேர்தல் நடத்தை விதியைக் காட்டி போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறி போஸ்டர் ஒட்டியவர்களிடமிருந்து போஸ்டர், ஏணி மற்றும் சைக்கிள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு காலையில் தான் கொடுத்தார்கள். விநியோகஸ்தர் வியாழன் மாலை மலர் நாளிதழில் விளம்பரம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் கொண்டாட்டம் புதன் கிழமையிலிருந்தே துவங்கிவிட்டது. அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் இரண்டு போஸ்டர்கள், பிரபு வெங்கடேஷ் மற்றும் சிவாஜி குமார், சிவாஜி ராஜன் சார்பில் வசந்த மாளினை சாதனை பேனர் வைக்கப்பட்டது, சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பிரமாண்ட போஸ்டர், மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் போஸ்டர்கள் மற்றும் அவனியாபுரம் சிவாஜி ரசிகர்கள் சார்பில் மாபெரும் பேனர் என தியேட்டர் திருவிழாக் கோலம் பூண்டது. நமது மக்கள்தலைவரின் இதயங்கள் செய்யும் அலங்காரங்களைப் பார்ப்பதெற்கென்ற ஒரு கூட்டம் வரும், அது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
படம் வெளியான வெள்ளியன்று காலை காட்சியிலேயே வசூல் மழை பொழிய துவங்கி விட்டது. ஆம் சில மாத காலமாக எந்தப் படம் போட்டாலும் தியேட்டரில் வசூல் சரியாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோடையில் கோடை மழை வருகிறதோ இல்லையோ நமது தலைவரின் படத்திற்கு வசூல் மழை வந்து விட்டது. வெள்ளியன்று படத்தின் வசூல் 17,000 ஐ தாண்டியது. விழாக்காலம் இல்லாமல் திரையிடப்படும் எந்தப்படமும் மறுநாள் சனியன்று வசூல் 13,000 ம் தான் வரும் ஆனால் வசந்தமாளிகை படத்திற்கு மறுநாளும் வசூல் 15,000 ம் ஆனது. மறுநாள் ஞாயிறு தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது. ஞாயிறும் வந்தது,
ஞாயிறு காலை, மதியக் காட்சியும் வசூல் அட்டகாசமாக இருந்தது. மாலைக் காட்சிக்கு மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவின் கூட்டத்தைப் பார்த்து வியந்தவர்களுக்கு மற்றொரு வியப்பாக இருந்தது கூட்டம். தியேட்டர் நுழைவு வாயில் முழுவதும் மாநாட்டிற்கு வந்த கூட்டம் போல்
ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட் கொடுக்கப்பட்டது. பழைய ரசிகர்கள் நிறைய பேர் மீண்டும் வந்திருந்தனர், ஒவ்வொரு படத்திற்கும் பல புதிய ரசிகர்களும் பழைய ரசிகர்களும் அதிகமாகிக் கொண்டே வருவதைப் பார்க்க எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அன்று மதியம் சன் டிவியில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதால் பாதி ரசிகர்கள் வரவில்லை என்பது எங்களுக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவர்களும் வந்திருந்தால் தியேட்டரில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது.
வெளியில் நின்றிருந்த எங்களுக்கு அரங்கிற்குள் இருந்து பயங்கரச் சத்தம் வர தியேட்டருக்கும் ஓடினோம். ஆம் நாங்கள் எதிர்பார்த்தது போல் நமது மக்கள்தலைவரின் அறிமுகக் காட்சி, படம் வெளிவந்த போது இப்படி ஒரு அலப்பரை இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
அடுத்து ஏன் ஏன் பாடல் தியேட்டரில் ஒருவர் கூட இருக்கையில் இல்லை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஆடித் தீர்த்து விட்டனர். ஒட்டு மொத்த கூட்டமும் ஆடினால் தியேட்டர் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதிலும் தலைவர் அதில் நான் சக்கரவர்த்தியடா என்று சொல்லும் போது, நாங்கள் உள்ளே வெடி போடக்கூடாது எவ்வளவோ தடுத்திருந்தும் ரசிகர்கள் அரங்கினுள் வெடியை வைத்தனர். அடுத்து குடிமகனே பாடல் சொல்லவும் வேண்டுமா ரசிகர்களின் குதுாகலத்திற்கு. இடைவேளையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏன் ஏன் பாடல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதே ஆட்டம் ரசிகர்கள் சோர்வடையவே இல்லை. ஆம் நம் தலைவரின் முகம் தான் நமது சத்து டானிக் ஆயிற்றே, அவரைப் பார்க்க பார்க்க உடல், மனது எல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறதே.
இன்னும் முழுவதும் எழுதினால் இதைப் படிப்பவர்கள் மனம் புண்படும், ஆம், நாம் இந்தக் காட்சியைக் காண முடியவில்லையே என்று எனவே இத்தோடு நிறுத்தி விட்டு வசூல் சக்கரவர்த்தியின் வசூல் விபரங்களுக்கு வருகிறேன்.
ஞாயிறு மாலைக் காட்சி வசூல் 14,700 சில மாதங்களாக சென்ட்ரல் ஞாயிறு மாலைக்காட்சியின் வசூல் 10,000 ஐ தொடுவதே சந்தேகமாக இருந்த நிலையில் 15,000 ஐ நெருங்கியது தியேட்டர் நிர்வாகம் தொடங்கி விநியோகஸ்தர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஞாயிறு இரவுக் காட்சியும் சேர்த்து மொத்த வசூல் 25,000 ஐ நெருங்கியது.
திங்கட்கிழமையும் வசூல் குறையாமல் நின்று கொண்டிருக்கிறார் நமது மக்கள்தலைவர், ஆம் திங்கள் மாலைக் காட்சி வரை வசூல் 10.000 ம். திங்கட்கிழமை மாலைக்காட்சி வரை மொத்த வசூல் 67,000. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிலர் சிவா மூவீஸ் சார்பில் போடப்படும் படங்களுக்கு மட்டும் தான் அவர்கள் வசூல்சக்கரவர்த்தி சிவாஜி என்று விளம்பரம் செய்வார்கள் மற்ற விநியோகஸ்தர்கள் செய்யமாட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக படத்தை திரையிட்ட கலைமதி கம்பைன்ஸார் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி விஜயம் என்று படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து மக்கள்தலைவரின் புகழ் காக்க எனக்கும் (சுந்தராஜன்) பிரபு வெங்கடேசிற்கும் ஒத்துழைப்புக் கொடுத்த அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு, பழனிச்சாமி, சோமசுந்தரம், சிவாஜி சமூகநலப் பேரவையைச் சேர்ந்த பாண்டி, சிவாஜி செல்வம், பச்சைமணி, மதுரை நகர் சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ்கரன், சிவாஜி வெங்கிடு மற்றும் சிவாஜி ராஜன், சிவாஜிகுமார் அவனியாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.sivajiganesan.in/Images/140316_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_8.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_9.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_10.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_11.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_12.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_13.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_14.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_15.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_17.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_16.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_18.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_20.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.