-
இந்தப் பகிர்வை எழுதுவதற்கே மிகுந்த மன உறுதி வேண்டும்...பார்ப்பதற்குக் கலங்காத நெஞ்சுரம் வேண்டும்.....மணியான காட்சி....மிகையில்லாத நடிப்பு...அதை நடிப்பென்று கூட சொல்ல முடியாது....அத்தனை இயல்பு...ஒன் மேன் ஷோ என்பார்களே.....மூன்று பேர் காட்சியில் இருந்தும் இந்த ஒரு மனிதனின் ஆளுமை....அய்யா...இவர் மட்டுமே நடிக்கப் பிறந்தவரய்யா .......நடையழகில் எத்தனை வகை, குரல் உயர்த்தி,தாழ்த்தி,கண்ணாலே பேசி,கெஞ்சி,கொஞ்சி......இனிமேல் பிறந்து வரணும்...அதுவரை நான் சாகாதிருக்கணும்...ஒரு அல்ப ஆசை....காட்சியின் துவக்கத்தில் குமாரி பத்மினி ,பகவதி அண்ணாச்சி ...பணக்காரக் குடும்பம்...கணவனுக்காக வாசலில் காத்திருக்கும் மனைவி,,,,மகளிடம் மருமகனின் தொழில் பக்தி பற்றி பிரஸ்தாபிக்கும் தந்தை...கல்யாணத் தரகர் உள்ளே நுழைகிறார்....அவரிடம் பகவதி (நாடகப் பிரியர்)ராஜப்பார்ட் ரங்கதுரையைப் பற்றி நலம் விசாரிக்க...உண்மை தெரியாத தரகர் ராஜபார்ட் ரங்கதுரை நாடகம் இல்லாமல் வறுமையில் உழல்வதையும்,கஷ்டப்பட்டு படிக்க வைத்த ரங்கதுரையின் தம்பி பாஸ்கர் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை என்று(பாஸ்கர் அவர் மருமகன் என்பதை உணராமல் )சொல்லி விடுகிறார்.வந்த காரியம் முடிந்தது என்று மானஸ்தனாக அவர் நகர,பாஸ்காராகிய ஸ்ரீகாந்த் உள்ளே நுழைகிறார்.கோபத்தில் பகவதியும் குமாரி பத்மினியும் ரங்கதுரையைப் பற்றியும்,அவர் இவருடைய அண்ணனா என்று கோபத்துடன் விசாரிக்க,ஆடம்பர வாழ்விற்குப் பழகிப் போன ஸ்ரீகாந்த் யாரோ தவறான தகவல் தந்திருப்பதையும்,தான் ரங்கதுரையின் தம்பியல்ல,கப்பல் முதலாளி கண்ணபிரான் அவர்களின் தம்பி என்றும் நிரூபிக்கும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று சூளுரைத்து அண்ணனைக் காணச் செல்கிறான்......'ராஜாமணி அம்மா தர்மச் சத்திரத்தில்,தரையில் படுத்துறங்கும் ரங்கதுரை....தட்டி எழுப்பும் ஸ்ரீகாந்த்....'வாப்பா"ஆதுரத்துடன் அழைப்பவரிடம்,"அண்ணே உங்க கிட்ட பேசணும் கொஞ்சம் வெளியே வாங்க "அழைக்க உடன் செல்கிறார்.அவரிடம் தன மாமனார் மனைவிக்கு,தான் ஏழை ரங்கதுரையின் தம்பி என்று தெரியாது என்றும்,தன மரியாதையைக் காப்பாற்ற ஒரு பெரிய தனவந்தனாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்.வெள்ளந்தியான ரங்கதுரை"அவுங்கதான் என்னைப் பார்த்திருக்கிறார்களே?என்று வினவ.....நாடகத்தில் பல வேடங்கள் போட்டிருக்கும் அவர் பெரிய கனவானாக நடிப்பது பெரிய விஷயமில்லை என்றும் சொல்கிறான்.அதிர்ந்து போன நடிகர் திலகத்தின் கண்களையும் உடல் மொழியையும் இனிமேல் பார்க்கணும் ஒவ்வொரு நொடியும் ஒரு பாடம்...நடிகன் என்று பேர் சொல்லிக் கொண்டிருக்கும் அனைவரும் பலமுறை ரீவைண்ட் செய்து செய்து பார்க்கணும்.....பாடமாகவும் நடிப்புக் கல்லூரியில் வைக்கணும்..."நான் உங்கண்ணன் மாதிரி நடிக்கணுமாப் பா??நான் மேடையில் அர்ஜுனனாக நடிச்சிருக்கேன்,அரிச்சந்திரனாக நடிச்சிருக்கேன்...சொந்த தம்பிக்கே அண்ணனாக முதன் முதல்ல வேஷம் போடப் போறேம்பா?"தோள் துண்டும்,உடல் குறுகிக் கூனும் நெகிழ்வும்...ஆஹா....உன் அண்ணனில்லைஎன்று நானே வந்து சொல்லணு மாப்பா...கேட்கும் பொழுதே நெஞ்சு வெடித்து விடும் நமக்கு...சொன்னபடியே ஒரு பெரிய தலைப்பாகை,கம்பீரமான நடை,பகட்டான உடை,கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் அதை சுழட்டும் லாவகம்...'ஏண்டா இதுதான் உன் மாமனார் வீடா...என்னமோ பேலஸ் மாதிரின்னு சொன்னே நம்ம செர்வெண்ட்ஸ் குவாட்டர்ஸ் மாதிரி இருக்கு......தோரணை....ஸ்டைல்....கம்பீரம் என்றால் இது!பகவதியைக் காட்டி யார் இவரு உன் மேனேஜரா?எடக்கு ...என்ன நினச்சுகிட்டு இருக்காரு உன்னை....திருவாங்கூர் திவான் தில்லை நாயகத்தின் பேரனா இல்ல தோட்டக்காரனா?கப்பல் முதலாளி கண்ணபிரானின் தம்பியா இல்லை இவுங்க வீட்டுத் தோட்டக்காரனா?ராயல் பேமிலி....அவர் நிறுத்தியதும் பகவதி மன்னிக்க வேண்டுகிறார்...அவரிடம்'அய்யா நெல்லைக் கொட்டினா மணிமணியாகப் பொறுக்கிடலாம்...நெய்யைக் கொட்டினால் முடியுமா?'பேசி முடித்து தலையில் இருக்கும் தலைப் பாகையையும்,மீசையையும் கலைக்க....கலந்குவோம் நாம்...தொடருவார் அவர்....ஆமாய்யா ரங்கதுரையே தான்....இந்த லட்சாதிபதி வேஷம் பொய்,,,எல்லாம் பொய்.....அய்யா நாங்க லட்சாதிபதிக்குப் பிறக்கலை...ஆனால் தேசத்தின் விடுதலைக்காக மேடையில் நடித்த ஒரு லட்சியவாதிக்குப் பிறந்தவர்கள்...என் தம்பி நல்லவனய்யா...பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டதன் விளைவு.....தம்பி மனைவியிடம் அம்மா என் தம்பி நல்லவன் என்று சொல்லி வெளியேறும் முன்...பகலெல்லாம் பட்னி கிடக்கிற நான் இரவில் மேடையில் ராஜாவாக நடிக்கிறேன்.....பகலெல்லாம் நல்ல வாழ்க்கைக்காக என் தம்பி நாளும் நடிக்கிறான் ஒருத்தன் பொழைப்புக்காக நடிக்கி றான்...இன்னொருத்தன் பகட்டுக்காக நடிக்கிறான்.....சொல்லி நடக்கிறார்.பகவதியும் பத்மினியும் விக்கித்து நிற்க,ஸ்ரீகாந்த் வெட்கி நிற்க நாம் சொக்கி,திக்கு முக்காடிப் போகிறோம் சோகத்தில்.....என்றும் நீரே உமக்கு நிகரானவர் நடிகர் திலகமே....காட்சி உங்களுடன்...
https://external.fybz1-1.fna.fbcdn.n...DCbM0bYmPnAyys
Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
Rajapart Rangadurai - Tamil Movie Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ra...
youtube.com
(முகநூல் விசாலி ஶ்ரீராம்)
-
டி.எம்.எஸ்....நடிகர்திலகம்...கவியரசர்....மெல்லிசைம ன்னர்.இந்தப் பாடலில் எது என்னைக் கவர்ந்தது?இசையா?டி.எம்.எஸ் அவர்களா?மெல்லிசைமன்னரா?இல்லை கவியரசரா என்றால் என்னால் சொல்ல இயலாது என்பதே உண்மை...அப்படி ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைத்துக் கொண்டு நெஞ்சத்தில் ரீங்காரம் செய்து கோலோச்சுகிறார்கள் என்பதே உண்மை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...1962 இல் வந்த படித்தால் மட்டும் போதுமா படப் பாடல்.
திருமணம் முடிந்து விடுகிறது.ஆனால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை...அவன் என்ன செய்வான் பாவம்....இத...ு வெளியில் சொல்லக் கூடிய விஷயமா?
நான் கவிஞனும் இல்லை என்று ஒரு பாடல் இப்பொழுது உங்களுக்காக!!!
ஒரு வீரமான வாலிபன் திருமணம் முடிந்து ஓராயிரம் கனவுகளோடு முதலிரவு அறைக்கு செல்கிறான்!அவ்ளோ அவன் படிக்கதவன் என்று வெறுத்து ஒதுக்குகிறாள்!அவனின் வாலிப விரகம் இந்தப் பாடல்!நடிகர் திலகம் அந்த ஆண்,அந்த ஆணுக்கு ஒரு ஆண்மைகென்றே அமைந்த குரலோன் டி.எம்.ஸ் குரலில்,மெல்லிசை மன்னரின் இசைப்பூங்கொத்து இது!
நான் கவிஞனும் இல்லை,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!!!
அவன் விரகம்,கவியரசரின் கண்ணியமான வரிகளில்........
இரவு நேரம் பிறறைப் போலே என்னையும் கொல்லும்,துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் என்று பாடி ஆஹாஹாஹா என்று வார்த்தைகளே இல்லாமல் ஊமைகீதத்தில் தன் வருத்ததை அழுதும் அழாமலும் புரியவைக்கிறான்!!!
உடலை முறுக்கிக் கொண்டு உடம்பெல்லாம் வலிப்பதாகக் காட்டும் லாவகம்,மேலிருந்து ஒரு மாண்டலினை எடுத்து பிரடையை சரி செய்து சுருதி சேர்க்கும் நயம்....நடிகர் திலகத்துக்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா?வாழ்ந்திருப்பார்...'அன்பே ஆருயிரே,இன்பமே இனியவளே...பண்போடு அன்போடு படியேறி வந்தவளே!!!உன்மேல் பாட்டுப் பாட...நான் கவிஞனும் இல்லை என்று பாடும்போது நம் கண்ணை நிறைக்கும் கண்ணீர் துளிகள்....
'காட்டு மானை வேட்டையாடத் தயங்கவில்லையே...இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ மயங்கவில்லையே...கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்கை புரியவில்லையே...நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே..https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f641.png:(...நான் அழுதால் சிரிக்கிறால் சிரித்தாள் அழுகிறாள்....அம்மா தாயே.....இந்த வரிகளைப் பாடும்போது கெஞ்சும் அவன் முகம்...அதில் கப்பிக் கொண்டிருக்கும் சோகம்.....பெண்ணினமே பெண்ணை வெறுக்கும் காட்சி அது....ராஜசுலோசனாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...அந்த ஆணவப் பார்வை.....அற்புதம்.
எனக்குத் தெரிந்தவரையில் இந்த மாதிரி ஒரு விரகத்தை விரசமில்லாமல் விரிவாக இரண்டு வரிகளில் சொன்ன கவிஞன் வேறு யாரும் இல்லை என்பதால்,கவியரசர்,ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத கவிமாமன்னன்!!!!!!!பாடல் உங்களோடு.
See more
https://external.fybz1-1.fna.fbcdn.n...AF9Bw3qJF6uIWy
Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song
Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Naan Kavignanum Illai from the super hit classic film, Padithal Mattum Podh...
youtube.com
(முகநூல் விசாலி ஶ்ரீராம்)
-
1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...1a&oe=597C903C
(முகநூல் sekar .p)
-
-
-
Veerapandiya Kattabomman- 16/05/1959- 58 th Year of Completion.
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
-
Veerapandiya Kattabomman-16/05/1959
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
-
வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.
அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.
நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .
முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
-
'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)
https://i.ytimg.com/vi/M29SruOv6AQ/0.jpg
'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'
பாடல் ஒரு முழு ஆய்வு.
ஒரு பாடல்.ஒரே ஒரு பாடல். உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் ஊன் உயிரெல்லாம் கலந்து மௌனமான சிலிர்ப்பை உண்டாக்கும் சிந்தை கவரும் பாடல்.
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனது பாரமாகும். இனம் புரியா சோகம் நெஞ்சைக் கவ்வும். தொண்டைக்குழிக்குள் பலாப்பழம் அடைப்பது போன்ற உணர்வு. நாயகருடனும், பாடகனுடனும், இசை அமைப்பாளருடனும், கவியரசருடனும், காட்சியுடனும் இரண்டறக் கலந்து விடுவோம். பாடல் கேட்டு முடித்த பின் உணவு உண்ணப் பிடிக்காது. உறக்கத்தில் நாட்டம் இராது.
எதிலும் நாட்டமில்லாமல் சதா தொழில் தொழில் என்று அலைந்து பணம் புரட்டும் பெரும் வியாபார நாயகன் ஒரு நடன மாது மீது சொல்லொணாக் காதலுற்று, அவளை அடைவதற்காகவே பரதம் பயின்று, போட்டியில் அவளையே வென்று பல சோதனைக்களுக்கிடையில் அவளைக் கைப்பிடிக்கும் நேரம் அந்தஸ்து கெளரவம் என்று அலையும் தந்தையின் சதியால் அவளை பிரிகிறான். காசு காசு என்று அலைந்தவன் காதலிக்காக கலை, கலை என்று அதிலேயே மூழ்குகிறான் விபச்சாரி என்று பட்டம் கட்டப்பட்டு பரிதாபமாக அந்தப் பாவை பரத நாயகனை விட்டு நீங்குகிறாள்.
நாயகியைத் தேடித் தேடி அலைகிறான் அந்த பரிதாபத்துக்குரிய நாயகன்.தேடுகிறான்...தேடுகிறான்....காடு மேடெல்லாம் தேடுகிறான்....மலைகளிலெல்லாம் தேடுகிறான்...அவளால் தான் கற்ற பரதத்தையும், இசை ஞானத்தையும் முதலாக வைத்து தேடுகிறான். பாவை கிடைத்தபாடில்லை. அவளின்றி அவனுக்கு இனி வேறோர் உலகம் உண்டோ. 25 வயதில் அவளைத் தொலைத்து விட்டு 60 வதிலும் அவளைத் தேடுகிறான். இன்னும் தோல்விதான் அவனுக்கு. ஆனால் அவனின் காதலுக்கு அல்ல.
இளமை போய் நரைத்திரை விழ, நடுத்தர வயதை நாயகன் அடைந்தும் முயற்சியை விடவில்லை. வருடங்கள் பறந்து வாலிபன் வயோதிகனாகிறான். பொலிவிழந்த உருவம்...களையிழந்த முகம்.. குன்றிய உடல்.. ஆனால் குன்றாத மன உறுதி. .காதல் அவனை உருக்கியது. ஆனால் அவனோ காதலை இன்னும் தன் உள்ளத்தில் இறுக்கினான். இருத்தினான். கிடைத்து விடுவாள் என்று தேடுதலை விடான்.
இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.
‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்'
என்ற தொகையறாவில் தொடங்கி
'தெய்வத்தின் தேரெடுத்து'
தன் தேவியைத் தேடுகிறான். தென்றலை தூதாக ஓடச் சொல்லி ஓடாய்த் தேய்கிறான்.
நாயகன் யார்? வேறு யார். நம் நடிகர் திலகமே. சதியால் காதலியைப் பிரிந்து துயருறும் துன்ப நாயகன். நடிப்பில் நமக்கு எப்போதும் இன்பமளிக்கும் இனிய நாயகன். பிரிந்த நாயகி கலைச்செல்வி
சால்வை அணிந்த ஜிப்பா பஞ்சகச்சத்துடன் நடிகர் திலகம் மலைப் பிரதேசங்களில் கவலை தோய்ந்த முகத்துடன் காதலியின் பிரிவுத்துயரை பாடல் வரிகளின் மூலம் பறை சாற்றும் கட்டங்களை எப்படி எழுதுவது?
மனதில் கவலை மேகங்கள். வானில் கலைந்து செல்லும் வெண் மேகங்கள்.
'பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு' வரிகளில் இந்த அதிசய நடிகன் காட்டும் கை பாவங்கள். வலது கை விரல்களில் நான்காவது விரலையும், சுண்டு விரலையும் சற்றே மடக்கி, நடு விரலையும், சுட்டு விரலையும் நிமிர்த்தி, கட்டை விரலை விரித்து, வளைத்து, வான் நோக்கி தலை உயர்த்தி, இடமிருந்து வலமாக காற்றில் விரல்களால் கோடு கிழிக்கும் உன்னத நடிப்பு. அந்த வரியை உச்சஸ்தாயியில் உயர்த்திப் பிடிக்கும் பாடகர் திலகம் நடிகர் திலகத்தினுடேயே இணைந்து விடுவார்.
ஷெனாய், சிதார், வீணை, சாரங்கி வைத்து வித்தை காட்டுவார் மெல்லிசை மன்னர். மலைப் பரப்புகளில் நடிகர் திலகம் லாங் ஷாட்டில் சோகமே உருவாய் நடந்து வரும் அழகை அற்புதமாக படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர். மென் குளிரில், மெலிதான தென்றலில் சால்வை அகல, அதை சரி செய்து கொண்டு நடந்து வரும்போது சூரியனைக் கொண்டுதான் திருஷ்டி சுற்றி போட வேண்டும் இந்த நடிப்புத் திருமகனுக்கு.
'மாமழை மேகமென்று கண்களில் இருப்பு' என்ற ஒரே ஒரு ஒற்றை வரியில் நாயகனின் மன நிலையை நம்முள் விரிய வைத்த மகா கவிஞன்.
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சைட் போஸும் ஒரு கோடி பெறும்.
பருவ காலங்கள் மாறி மாறி வர, காதோரம் நடிகர் திலகத்திற்கு நரைக்க ஆரம்பிப்பதை காலத்தின் ஓட்டம் காட்டும்.
கம்பனும், காளிதாசனும் தங்கள் நாயகிகளை மறந்து இவன் நாயகியை கண்டால் அவர்கள் நாயகி என்று சொந்தம் கொண்டாடுவார்களாம். அடடா! நாயகி மேல் நாயகன் வைத்துள்ள காதலை இதைவிட சிறப்பாக உணர்த்த இயலுமா?
'சீதையைக் காண்பான்' எனும்போது நடிகர் திலகம் கையை அருள்புரிவது போல அமைதியாக காட்டும் கட்டம் கன ஜோர். 'சகுந்தலை' எனும்போது காற்றிலே திலகத்தின் கைகள் சாகுந்தலம் வரையும். மஞ்சள் நிற சால்வை பெருமை கொள்ளும். பாந்தமான நடிப்பில், தோற்றத்தில் சிகரம் நம்மை சிறையிடுவார்.
'நாயகியே எனது காவிய எல்லை' வரிகளில் பாடகர் திலகமும், நடிகர் திலகமும் நிஜமாகவே அவரவர்கள் துறையின் எல்லைகளைத் தாண்டி அற்புதம் காட்டுவார்கள். நடிகர் திலகம் கண்களை மூடி
சைட் போஸில் 'காவிய எல்லை'யை வாயசைப்பில் ஜாலம் காட்டும் வித்தைக்கு ஆஸ்கர் எந்த மூலை க்கு? ஒவ்வொரு இடத்திலும் ஒரு நடிகன் எப்படி நிற்க வேண்டும்,எப்படி கைகளை வைத்துக் கொள்ள வேண்டும், எப்படி பாவங்களை தேவையான சமயம் காட்ட வேண்டும் என்ற நடிப்பு நாளந்தா பல்கலைக் கழகமல்லவோ இந்த பார் போற்றும் நடிப்புச் சக்கரவர்த்தி.
'நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை' வரிகளில் தன் தலை தொட்டு, நரை காட்டி, தன்னிரக்கம் காட்டுவார் நடிகர் திலகம். நம் இரக்கம் முழுதும் மொத்தமாக அவருக்கே போய்ச் சேரும். நம் மனம் இந்த இடத்தில் புண்பட்டு பழுதாகும்...ரணமாகும்.
நீண்ட நெடிய, யாருமே இல்லாத வளைந்து செல்லும் ஒற்றை சாலையில் கைகளை பின்புறம் கட்டி விட்டேர்த்தியாக திலகம் நடக்கையில் நம் இதயம் பரிதவிக்கும்.
சிதாரின் பின்னணியில் மலையருவி கொட்ட, காதல் வாழ்வை பாழ்படுத்திய தந்தை, மற்றும் காதலிக்கும், தனக்கும் வித்தை கற்றுத் தந்த குருக்கள், இவர்கள் மாலையிட்ட புகைப்படமாக மறைந்து விட்டதற்கு கா(சா) ட்சியளிக்க, காலங்கள் பறப்பதை இசைக்கருவிகள் அம்சமாக உணர்த்த, பாடகர் திலகத்தின் ஸ்வரங்கள், ஜதி கம்பீரமாக கேட்க, குழந்தையாய் ஆடும் இளம் ஸ்ரீப்ரியா இப்போது குமரியாக நடராஜர் சிலை முன் பரதம் ஆட, பாடலின் முடிவில் கழுத்தைக் கவர் செய்யும் வெள்ளைக் கலர் ஜிப்பாவுடன் முதிர் தோற்றத்தில் தாடியுடன் 'தாம் தீம் தாம் தகிடதகதிமி' ஜதி சொல்ல.....
காலங்கள் கடக்கும் வேகத்தை இசை மூலமாகவே நமக்கு உணர்த்திவிடும் மகா இசைக் கலைஞன் சொல்லி மெல்லிசை மன்னர். அந்த மகானுக்கு தன் பாடல் வரிகளால் தீனி போடும் கவியரசன். பிரிவுத் துன்பத்தை நம்முள் நடிப்பால் விதைக்கும் நடிகர் திலகம். கர்நாடக இசையோடு இழையும் இந்த இனிய பாடலை ஒரே ஒரு வித்தகன் மட்டுமே பாட முடியும். நாயகனின் பிரிவுத் துயரை தன் குரல் மூலம் பிரித்து மேயும் பாடகர் சிகரம் டி.எம்.எஸ்.
மனதை பிழித்தெடுக்கும் பாடல்களில் என்றும் முதலிடம் பெறும் உணர்ச்சிக் குவியல்களின் ஒருமித்த சங்கமப் பாடல். பாடல்களின் வேதம். கல்வி போல நீராலும், நெருப்பாலும், காலத்தாலும் அழிக்க முடியாத சிரஞ்சீவிப் பாடல்.
https://i.ytimg.com/vi/8rr_wLo9aLE/h...4mRfqXNPwUMzuo
கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்
கால் சலங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை.....
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு
இளங்குயில் பே டு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தினில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
மாமழை மேகமென்று கண்களில் இருப்பு
மார்கழிப் பனியன்றோ அவளது சிரிப்பு
அவளது சிரிப்பு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
கம்பனைக் கூப்பிடுங்கள்
சீதையைக் காண்பான்
கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
கம்பனைக் கூப்பிடுங்கள்
சீதையைக் காண்பான்
கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில்
திரை விழவில்லை
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
தாம் தீம் தாம்
தகிடதகதிமி
ததீம்தாங்கு ததீம்தாங்கு தகதிமி
தாம் தீம் தாம்
தகிடதகதிமி ததீம் தாங்கு ததீம் தாங்கு தகதிமி
ததரிட தகஜுனு ததரிட தகஜுனு
தகிட ஜூனுகு தகிட ஜூனுகு
தகிடதகமி தகிட தஜூனு
தகிடதனத்த தகிட தஜூனு
தஜூம் தஜூம் தஜூம் தகிடதா
https://www.youtube.com/watch?v=-M0MxspI6Xg
-
அன்பு வாசுதேவன் சார்,
சற்று இடைவெளிக்குப்பின் தங்களின் புத்தம்புது பதிவான 'தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு' பாடலின் விவரணை கண்டு சொக்கிப்போனேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் பரவச நிலை, அதை தலைவர் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மட்டுமே நீங்களும், கோபால் சாரும், முரளி சாரும் தர முடியும்.
பாட்டும் பரதமும் படத்தின் அத்தனை பாடல்களும் தேன் சொட்டு என்றால் மிகையாகாது.
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
தெய்வத்தின் தேரெடுத்து
உலகம் நீயாடும் சோலை
என ஒவ்வொரு பாடலும் அருமையோ அருமை.
நடிகர்திலகத்தின் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் பெரும்பாலும் டூயட் பாடல் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒன்றேயொன்று வைப்பார்கள். இப்படத்தில் மூன்று பாடல்களில் இணையாக தோன்றுவது மனதுக்கு இதமாக இருந்தது.
இப்படத்தின் துவக்கம் முதல் அண்டர் கரண்ட் என்பது போல ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கும். அதுவே படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும்.
பாடலின் ஒவ்வொரு வரியையும் வார்த்தைகளையும் அற்புதமாக அலசியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது எழுதியவரின் படைப்பாற்றல், இசையமைத்தவரின் அசாத்திய திறமை, பாடியவரின் அபார பங்களிப்பு என்று அனைத்தையும் விவரித்துள்ளீர்கள். நிச்சயமாக டி. எம். எஸ். தவிர வேறு யாரும் இந்தப்பாடலை அவ்வளவு ஜீவனோடு பாடியிருக்க முடியவே முடியாது. உச்ச ஸ்தாயியில் 'கற்பனைக்கு மேனி தந்து' என்று அவர் துவங்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்து விடும். பாடல் முடியும் வரை அந்த பரவசம் அடங்காது. பாடலின் இடையே கதையின் முக்கிய பாத்திரங்களான மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, மனோகர் ஆகியோர் மறைந்து விட்டதை காண்பிக்கும்போது நம் சோகம் இன்னும் அதிகரிக்கும். கதாநாயகியையும் காணவில்லை, கதாபாத்திரங்களும் மறைந்து விட்டனர். மேற்கொண்டு கதை எப்படி நகருமோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள நம் ஆவல் அதிகரிக்கும்.
சிறப்பான திறனாய்வுக்கு பாராட்டுக்கள்.
இதுபோன்ற சிறப்பு பதிவுகளுடன் அடிக்கடி வருகை தாருங்கள்.
-
http://i1028.photobucket.com/albums/...pse3au7pvn.jpg
எதை எதிர்பார்த்திருந்தோமோ... அது அப்படியே
சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதில் கூட அத்தனை சந்தோஷமில்லை.
இங்கே நாம் எதிர்பார்த்தது எங்கே கிடைக்கப் போகிறது என்று சலித்திருக்கும் சூழலில், நாம்
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைக்கிற
போது வருகிற சந்தோஷம் அலாதியானது.
அப்படியொரு சந்தோஷம் எனக்கு " வாணி ராணி"
திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு காட்சிகளைப் பார்க்கையில் கிடைத்தது.
*****
போன வருஷத்துக்கு முந்தின வருஷம் நான்
பணிபுரியுமிடத்தில் பெண்களெல்லாம் ஒன்று கூடி
மகளிர் தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்.
ஒரே விதமாய் உடையணிந்து, எல்லோருக்கும் இனிப்பு பரிமாறி... மிக உற்சாகமாய்க் கொண்டாடினார்கள்.
நான் மகளிர் தினத்திற்காக எழுதி வைத்திருந்த
ஒரு கவிதையை விழா துவங்குவதற்கு முன்பே
அவர்களிடம் கொடுத்து வாழ்த்துச் சொன்னேன்.
ஆனால், விழா துவங்கிய சில நிமிடங்களில் அதை
மீண்டும் என்னிடமே தந்து, என்னையே ஒலிபெருக்கியில் வாசிக்கும்படி கேட்டுக் கொள்ள,
பெண்கள் விழாவில் என் குரலா என நான் தயங்கத்துடனே வாசித்தேன்.
என் தயக்கத்தை சந்தோஷத் திகைப்பாக மாற்றியது அந்த மகளிர் அரங்கம். கைதட்டல்கள்
என் எழுத்துகளைக் கௌரவித்தன. நிறைய பாராட்டுகள்.
" வென்று சிரிக்கிற
ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால்
நின்று சிரிப்பது நீங்கள்தானே?"
- என்கிற வரிகள் மிகவும் ரசிக்கப்பட்டவை.
பெண்கள் பேசப்படுமிடத்தில், ஒரு ஆண்.. நான்
பேசப்பட்ட கர்வமிகு மகிழ்விலிருந்த எனக்கு
அப்போது "வாணி ராணி" எனும் பெண் பேசப்படும்
கலைக்களத்தில் ஒரு ஆணாக வென்று வந்த
வணங்குதலுக்குரிய முன்னோடி நடிகர் திலகம்தான் நினைவுக்கு வந்தார்.
*****
" வாணி ராணி" யில் அய்யன் ஏற்றிருக்கிற அந்த
"ரங்கன்" கதாபாத்திரத்தை வேறு யாரேனும்
செய்திருந்தால், ரங்கனை வாணியும், ராணியும்
சுலபமாய் ஜெயித்திருப்பார்கள்.
கால் பதித்த மாத்திரத்திலேயே நுழைந்த இடத்தை
தனதாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நடிகர்
திலகத்தாலேயே ரங்கன் நம் மனதில் நின்றான்.
வென்றான்.
இத்துடன் நான் இணைத்திருக்கிற 11.09 நிமிடக்
காணொளியின் முதல் 4.00 நிமிடங்களை எடுத்துக் கொண்ட இரண்டு காட்சிகளே இங்கு நான் குறிப்பிட விரும்புவது.
ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் என்கிற சராசரி
நிலையிலிருந்து ஒரு திரைப்படத்தின் போக்கை
மாற்றி, ஒரு கதாபாத்திரத்தை ஜனங்கள் ஊன்றிக்
கவனிக்கிற உயர் நிலைக்கு நடிகர் திலகம் மாற்றியிருக்கிறார்.
மூன்று மணி நேர சினிமாவில் மொத்த நேரமும்
பேசப்படுவது அந்த கதாநாயகியரின் இரட்டை
வேடங்களே. அவற்றை ஜெயித்து தன் பாத்திரத்தைப் பேச வைக்க நான்கே நிமிடங்கள்
போதுமானதாயிருக்கிறது... நடிகர் திலகத்திற்கு.
நிறையக் குடித்து விட்டு, தன் வீடே தெரியாது
தள்ளாடும் நாயகனை நாயகி அவனது குடிசை வீட்டுக்குள் அழைத்து வருகிறாள். " இதுதான்
உங்க வீடு" என்கிறாள். அங்கேயே அய்யனின்
திறமை விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது.
அவன் குடிப்பது உற்சாகத்துக்கில்லை.. உள்ளே வாட்டும் கவலை வெப்பம் தணிக்கவே என்பதும்,
அவனருந்தும் மதுத்திரவம் அவன் அநாதையாகி
அவலப்பட்ட கொடுமை எரிக்க அவன் மனதில்
ஊற்றும் அமிலமென்பதும் நமக்கு விளங்குகிறது.
படிப்பறிவற்ற ஒரு எளியவன் அவன் மீது கரிசனம்
கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், நமக்குமாக
தன் வேதனை பகிரும் அந்த முதல் காட்சி அற்புதமானது.
கிண்டல் மிகுந்த ஒரு மொழியில் நாயகன் தன் வேதனை வாழ்வுக்குத் தரும் விளக்கத்தில்தான்
எத்தனையெத்தனை உணர்வுகள் வெளிப்படுகின்றன?
" காரை உதிர்ந்து போன சுவரு, கயிறு அறுந்து
போன கட்டில், கரையான் புடிச்சுப் போன ஜன்னல்.. ஓட்டை.. உடைசல்.. ஈயம், பித்தளை.. பேரீச்சம்பழம்..." - இது, தனது ஏழ்மையில் சலித்துப் போய் கொட்டும் கேலி மழை.
" யாராவது குடியிருந்தா அது வீடு. இங்க யாரு
குடியிருக்கா? யாரு " குடி" இருக்கான்னு கேக்கிறேன்..!? - இது, தன்னையும், தனது சாராய சிநேகிதத்தையும் திறமையாய் வெளிப்படுத்தும்
சாதுர்யம்.
சிறு வயதில் தான் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட
சோகம் பகிரும் இடத்தில் அய்யனின் முகம் காட்டும் பல நூறு பாவங்களில் ஒரு அநாதை இளைஞன் தாண்டி வந்த இருபத்தைந்து வருட
வாழ்க்கை கண் முன்னே வருகிறது.
" எல்லோரும் இந்நாட்டு மன்னராம்" என்று மகா நக்கலாக சொல்லி விட்டு நமக்கு நேரே கை நீட்டி,
நாக்கு மடித்து, ஒரு கெட்ட வார்த்தையை தவிர்த்து
அவர் காட்டும் பாவனை... நம்மில் இயல்பு மீறி
வக்கணையாய்ப் பேசிப் பழகுவோருக்கு மௌன
எச்சரிக்கை.
தனக்கென்று யாருமில்லாத சோகம், உனக்கு நான் இருக்கிறேன் என்றொருத்தி வந்தவுடன் மாறுவதாய் அந்தக் குமுறல் காட்சி முடிகிறது.
*****
விடிகிறது.
இதோ... தொடரும் இந்தக் காட்சியில் வேறொரு
அய்யனைப் பார்க்கலாம்.. சற்று முன் புயல் போல்
ஆட்டங் காட்டியவர், இப்போது தென்றலாய் இதம்
பேசுகிறார்.
உறங்கி எழுந்தவனின் முகத்தை மட்டுமல்ல.. திருந்தி எழுந்தவனின் முகத்தையும் அவரில்
பார்க்கலாம்.
முன்னே பின்னே கடவுளை வணங்கியறியாதவன்
கோயிலுக்குப் போய் கடவுளிடம் மனம் விட்டுப்
பேசினால், அது இப்படித்தான் இருக்கும் என்பது
சர்வ நிச்சயம். இப்படியொரு நடிப்பற்புதம் இதற்கு
முன்போ.. இதற்குப் பின் இன்று வரையுமோ நம்
நடிகர் திலகத்தினாலன்றி வேறு யாராலும் நிகழ்ந்ததில்லை என்பதும் சத்தியம்.
பாசாங்கு என்பதே துளியும் இல்லாத ஒரு எளியவன் கடவுளை நோக்கிப் போகும் நடையைப்
பாருங்கள்.. ஏதோ.. இது வரை தவறாக நினைத்து,
இப்போதுதான் நல்லவர் என்றுணர்ந்த ஒரு பெரிய
மனிதரைப் பார்க்கப் போவது போல் ... எளிமையாக!
" நம்ம ராணி இல்ல ராணி..." தனக்கானவளை கடவுளுக்கு அறிமுகப்படுத்தும் வெள்ளந்தித்தனம், ஒரே ஒரு " ஒப்புரானே" கொண்டு செய்யும் உயர்ந்த சத்தியம், "புத்தி சொல்லி பக்கத்தில வச்சுக்கப்பா" என்று தன் தவறு திருத்தி தன்னைக் கடவுளிடம் சரண் செய்யும் நற்பண்பு, " மத்தபடி நீ அதைச் செய்யி..
நான் இதைச் செய்யறேன்னு வியாபாரம் பேச வரலே.."- என்று கடவுளிடம் கூட விட்டுக் கொடுக்காத அற்புதமான நேர்மை, " காசிருந்தா
கற்பூரம்.. இல்லாட்டி கையெடுத்து ஒரு கும்பிடு"
- என்று கடவுளின் முன் கடவுளுக்கே கற்றுத் தருகிற யதார்த்த வாழ்வியல்...
இந்த கலை வியப்புகளையெல்லாம் நான்தான்
எழுதுகிறேன் என்கிற கர்வமல்ல.. இந்தப் பதிவு.
நானும் எழுதியிருக்கிறேன் என்கிற பெருமிதம்.
*****
இந்தக் காட்சியில் முருகனிடம் வாணிஸ்ரீ வேண்டிக் கொள்வார்.. "முருகா.. அவர் உன்னை
மறந்தாலும், நீ அவரை மறக்காதே!"
நான் வேண்டிக் கொள்கிறேன்.. " முருகா.. என்
மனதிலிருந்து எந்த நினைவை மறக்கடித்தாலும்,
அய்யனை மறவாமல் நினைக்க வை!"
Vaani Rani - Sivaji Ganesan | Vanisri ( Double Ro…: http://youtu.be/gG3zb81jy78
-
-
-
நன்றி வாசு அவர்களுக்க்கு. பதின்மூன்று வயதில் இந்த பாட்டைப் பார்த்து, நடிகர் திலகத்தின் ரசிகராகவும் தீவிர ரசிகராகவும் ஆனார். இந்த பாடல் என் மனதில் மிகவும் நெருக்கமாக இருக்கிறது, ஏனென்றால் உயர்ந்த இசைத்தட்டு T.M.S குரல் மற்றும் நடிகர் திலகத்தின் முகம், கை, விரல் வெளிப்பாடு, நம்பமுடியாத அற்புதம்.
Please do the analysis of vasanthathil oru naal song "vendum vendum ungal uravu" sad part. NT's facial expression simply amazing.
நடிகர் திலகத்தின் 1980 திரைப்படங்களில் ஒவ்வொன்றும் அவரது முந்தைய 1970 மற்றும் 60 இன் திரைப்படங்களை விட உயர்ந்ததாக இருக்கிறது.
-
[QUOTE=vasudevan31355;1320461]'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)
This movie re-released in Madurai Meenakshi on 1988 and run for 2 weeks houseful and made huge collection.
-
Sivaji Ganesan - Definition of Style 32 வசந்தத்தில் ஓர் நாள்காட்சி - படத்தின் உச்சக்கட்டம்கதை..டாக்டர் ராஜசேகர் மிகப் பெரிய செல்வந்தர். தொழில் நிமித்தம் மலேசியா செல்லும் அவர் எதிர்பாராத ஒரு உடல் வலியால், ஒரு நாட்டு வைத்தியரிடம் செல்லும் படியான நிர்ப்பந்தம் நேர்கிறது. அவருடைய மகள் நீலாவின் யதார்த்தமான அன்பும் பரிவும் அவளிடம் அவரை ஈர்க்கின்றன. அவளும் அவரை விரும்புகிறாள். தன் மகளுக்குத் திருமணமாக வேண்டும் என்கிற ஒரே ஆசையில் வாழும் வைத்தியரும் சம்மதிக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் திருமணமாகாமலேயே காதலர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விடுகின்றனர். அவசர காரணமாக தாய் நாடு திரும்ப வேண்டிய நிர்ப்ந்த்த்தில் ராஜசேகர் நீலாவை திரும்பி வந்து திருமணம் செய்து கொள்வதாய்க் கூறி புறப்பட்டு விடுகிறார்.பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி மலேசியாவுக்கு வருகிறார் நாட்டு வைத்தியர் காலமாகி விட்டார், தன் காதலி நீலாவும் ஒரு மகளை ஈன்று விட்டு பைத்தியமாய் பல ஆண்டுகள் திரிந்து கடைசியில் மாண்டு விடுகிறாள். அவள் மகளான ராஜி ஒருவனிடம் காதல் வயப்பட்டிருந்தாள். அவனும் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி விட்டு சென்று விடுகிறான்.பல ஆண்டுகளாக ராஜசேகர். பல வகையில் முயற்சி செய்து ஒரு வழியாய் தன் மகள் ராஜியைக் கண்ணால் பார்க்கும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் அவருடைய மகள் அங்கே ஒரு விலைமாதாய் வாழுகிறாள். தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறாமல், மெல்ல மெல்ல அவள் மனதைக் கரைத்து தன்னுடன் அவளை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.. ஒரு கட்டத்தில் அந்த விடுதி முதலாளியான பெண்மணியும் தன் நல்லெண்ணத்தின் காரணமாக ராஜியை அவர் அழைத்துச் செல்ல சம்மதிக்கிறாள்.ராஜியும் ஒரு கட்டத்தில் மனம் மாறி அவருடன் செல்ல சம்மதிக்கிறாள். . அவருடைய களங்கமற்ற அன்பு அவள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தன்னால் அவர் வாழ்வில் இன்னல் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவருடன் பொய்யாக சண்டை போட்டு விட்டு மீண்டும் விடுதிக்கு வருகிறாள். ஆனால் விடுதி முதலாளியான பெண்மணி அவருடனேயே சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவளைத் திருப்பி அனுப்புகிறாள்.அந்த விடுதியை விட்டு வெளியேறி ராஜசேகருடன் வாழ்வதற்காக அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு ராஜி வருகிறார்.இதன் பிறகு என்ன நடந்த்து. ராஜசேகர் தன் மகளுடன் சேர்ந்தாரா. ராஜி அவரை ஏற்றுக் கொண்டாளா. இது தான் உச்சக்கட்டக் காட்சி. இந்தக் காட்சியைத் தான் இன்று நாம் காண இருக்கிறோம்.ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்கு ஆய்வு செய்து கிட்டத்தட்ட ஒரு மனோதத்துவ நிபுணராய் தன்னை நிலைப்படுத்தி, (PSYCHO ANALYSIS) அதற்குள் புகுந்து அந்த கதாபாத்திரத்தின் மன நிலையை நன்கு உள்வாங்கி வெளிப்படுத்துவதால் தான் நடிகர் திலகம் இன்றும் ஈடிணையற்ற உன்னத கலைஞராய் விளங்குகிறார். மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் சிக்கிக் கொள்ளும் போது எப்படி அதை வெளிப்படுத்த வேண்டும், எப்படி அதற்கான REACTION தர வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். தன் மகளே தன்னை மணமுடிக்க வேண்டும், தன்னோடு வாழ வேண்டும் எனக் கேட்டு வரும் போது அவர் வெளிப்படுத்தும் அந்த அதிர்ச்சி, அவளிடம் உண்மையைக் கூறும் போது வெளிப்படைத் தன்மை, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என மகளிடம் கூறுவதன் மூலம் தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளுதல், மகளிடம் உண்மையைக் கூறி விட்ட பின் ஏற்படும் நிம்மதி, அவள் என்ன செய்தாலும் பரவாயில்லை என எதிர்கொள்ளும் துணிவு, தன் உணர்வை அவள் ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறும் போது ஏற்படும் ஏமாற்றம், சோகம், ஊரை விட்டுக் கிளம்பும் சமயம் அவளை சந்திக்கும் போது ஏற்படும் ஒரு சிறிய நம்பிக்கை, என அமர்க்களப் படுத்துகிறார் தலைவர்.எல்லாவற்றிற்கும் மேலாக வசனமே இல்லாமல் பார்வையிலேயே அன்பைப் பொழிந்து அவள் மனதை மாற்றி அவள் தன்னை நம்பும் படி செய்வது, தந்தையும் மகளும் சேர மாட்டார்களா என பார்வையாளர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அது நிறைவேறிய பின் அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியைத் தன் நடிப்பால் நகர்த்திச் செல்லும் அசாத்திய தன்னம்பிக்கை...நடிப்பின் இமயத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி. இதில் நடிகர் திலகத்துடன் போட்டி போடுபவர்கள் பலர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர், இவர்களை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு நடிகர் திலகத்துடன் கைகோர்த்து இணையாய் நடந்து செல்லும் மெல்லிசை மன்னர்.காலங்களைக் கடந்து நிற்கும் காவிய நாயகனின் வசந்தத்தில் ஓர் நாள், காலமெல்லாம் நாம் ரசித்து மகிழுவதெல்லாம் திருநாள்.நடிகர்கள் ராஜசேகர் - நடிகர் திலகம்நீலா மற்றும் ராஜி - ஸ்ரீப்ரியாநாட்டு வைத்தியர் - வி.கே. ராமசாமிவிலைமாது விடுதி முதலாளி - மனோரமாவிலைமாது தரகர் - தேங்காய் சீனிவாசன்ராஜசேகரின் சமையல்காரர் - ராமராவ்ஒளிப்பதிவு - விஸ்வநாத் ராய்வசனம் - ஆரூர்தாஸ்படத்தொகுப்பு - பி.கந்தசாமிஇசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்திரைக்கதை டைரக்ஷன் ஏ.சி. திருலோக்சந்தர் https://www.facebook.com/vee.yaar/vi...4937166556951/
-
டிவி சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
காலை 10 மணிக்கு " கௌரவம்" ஜெயா மூவியில்,
பிற்பகல் 1:30 க்கு " பணம் " கலைஞர் டிவியில்,
பிற்பகல் 2:30 க்கு " கீழ் வானம் சிவக்கும்" வசந்த் டிவியில்,
மாலை 6:30 க்கு " ஆனந்தக் கண்ணீர் " கேப்டன் டிவியில்,...
இரவு 7:30 க்கு " பந்தம்" முரசு டிவியில்,
இரவு10 மணிக்கு "பட்டிக்காடா பட்டினமா" ஜெயா மூவியில்,
கண்டு மகிழ்வோம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3833a.jpg
http://i1110.photobucket.com/albums/...panamad1-1.jpg
http://i1065.photobucket.com/albums/...pswnyhdxcf.jpg
-
-
'பாபா முத்திரை'.1958-ல் வெளிவந்த உத்தம்புத்திரன் படத்திலேயே காட்டி விட்டார்.எனவே சிவாஜியின் பாதிப்பில்லாமல் எந்தப்படமும் இல்லை என்பதே உண்மை !
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...48&oe=59C088CF
இது போன்ற " நச் " பதிவுக
ளை தொடர்ந்து போடுங்கள்
இலுப்பை பூ சுவைத்திடும்
இன்றை சினிமா ரசிகனுக்கு
அன்றைய சிறப்புகள் தெரிய
வேண்டும் !
.................................................. ........
நம் தெய்வம் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம், பஞ்ச் டயலாக் பேசுவோரெல்லாம் அவருக்கு ஈடாக முடியாது VCGT அண்ணா....
.................................................. ......................
உண்மை. அந்த கண்கள் நம்மிடம் எப்படி பேசுகிறது. அது தான் நமது கலைக்குரிசிலின் சிறப்பு. இன்று வரை நம்மை கட்டி போட்டிருப்பதும் அவர் தான்.
(முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)
-
நான் +1 படித்துக் கொண்டிருந்த காலம் வருடம் 1987 விடுதியில் தங்கி படித்து வந்திருந்தேன், அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் " ஒளியும் ஒலியும் என்ற அரை மணி நேர நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் இருக்கும் என்பதனால் நாங்கள் விடுதியை விட்டு தெருவின் கோடியில் அமைந்திருந்த பஞ்சாயத்து டிவியில் பார்ப்பது வழக்கம், அப்போதெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் டிவி என்பது கிடையாது, அதனால் கூட்டம் நிரம்பி வழியும், ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஐந்து முதல் ஆறு பாடல்கள் மட்டுமே இடம் பெறும், அந்த ஐ...ந்து பாடல்களில் நடிகர் திலகம் பாடல் ஒன்றாவது இடம் பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும்,
அன்றைய நிகழ்ச்சியில் நான்கு புதிய பாடலுடன் நடிகர்திலகத்தின் " சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" எங்கிருந்தோ வந்தாள் படப் பாடல் இடம் பெற்றது, பாடல் ஓடிக் கொண்டிருந்த போது ஒருவர் நையாண்டி செய்தார், "சிவாஜி எதுக்கு பைத்தியம் பிடித்தவர் போல் நடிக்கிறார்"
நாங்கள் விடுதிக்கு வந்து அந்தப் பாடலை பற்றியே பேசிக் கொண்டோம் எதற்காக நடிகர் திலகம் அப்படி நடிக்கிறார், நாங்கள் யாரும் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பார்க்கவில்லை எனவே நடிகர் திலகம் கேரக்டர் பற்றி தெரிய வாய்ப்பில்லை,
ஆனால் நடிகர் திலகம் பாருங்கள் ஒரு பாடல் காட்சியிலேயே சாதாரண பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய நடிப்பை கொடுத்து இருக்கிறார்..
(முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)
கதாபாத்திரத்தை தாண்டி நடிகன் தெரியக்கூடாது,,, சிவாஜி அவர்களின் நடிப்பின் சூட்ஷமமே அதில்தான் அடங்கி உள்ளது,,, இன்ன வேஷம் என்ற கூடு ஒன்று செய்து வைத்திருப்பார்கள்,,, அதற்குள்ளே போய் அழகாக உட்கார்ந்து கொண்டு பர்ஃபாமென்ஸ் செய்வார்,,, சுறுக்கமாக சொன்னால் கூடுவிட்டு கூடு பாயும் மாயாவி,,,,
.................................................. ..........
ஒரே பாடல் உன்னை அழைக்கும்.!பாடலில்
அண்ணன் ரொம்ப அழகாக
அவருக்கு பிடித்த உடையில்
கண்களில் நீர் ததும்ப நடித்திருப்பார். படத்தில் திருப்பு முனை காட்சி அது.!.
-
-
-
-
-
-
-
http://i1028.photobucket.com/albums/...pspau7z2x4.jpg
பள்ளிப் பருவத்தில் காலாண்டு, அரையாண்டு,
முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்த தினத்தில்,
உற்சாகமாய் பள்ளியை விட்டு வெளியேறும் போது...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
அறிவிக்கப்பட்ட விடுமுறை தினங்களை ஆனந்தமாய் அனுபவிக்க, தாத்தாவின் கிராமத்திற்குப் போய் இறங்கினவுடன்...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
எப்போது ஊரிலிருந்து வந்தாலும், சிவாஜி படம்
கூட்டிப் போகிற மாமா வந்து இரண்டு நாள் தங்குகிறாரென்று அறிந்தால்...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
கல்லூரி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுக் கிடந்தவனுக்கு, கல்லூரியில் இடம் கிடைத்து
உள் நுழையும் முதல் நாளில்...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
பொறுப்பாய், சிறப்பாய் ஊன்றிப் படித்து ஜெயித்தவனுக்கு நல்ல வேலை கிடைத்ததென்று
தபால் வரும் போது...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு
வரும்.
கிடைத்த வேலையைச் சிரத்தையாய்ச் செய்து கத்தை, கத்தையாய் முதல் சம்பளம் பெறுகையில்...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
உடனிருந்து அன்பு பாராட்ட ஒருத்தி மனைவியாக
வாய்த்தால்...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
நம் ரசனையின் வெற்றியென ஒரு பாடல் அமைந்தால்...
அந்தப் பாடலின் நாயகனாக நம் நடிகர் திலகமே
இருந்தால்...
அய்யன் நடிகர் திலகத்தால் அப்பாடல் சிறந்தால்...
இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி - Happy indru mudhal ha…: http://youtu.be/0kGMCSvuQx8
-
http://i1028.photobucket.com/albums/...psfyxqtkcc.jpg
இது-
ஒரு சில வாத்தியக் கருவிகள் நம்மை வசியம் பண்ண உச்சரிக்கும் மந்திரமா?
காற்றைக் கௌரவப்படுத்த இரண்டு இனிய குரல்கள் கலந்து செய்த தந்திரமா?
கலையும் , இசையும் ரம் ரசனை வீதிகளில் செய்யும் நடை பழகலா?
கண்களும், காதுகளும் அதிசயமாய் செய்து கொள்ளும் கைகுலுக்கலா?
நாமெல்லாரும் மெய்மறந்திருக்கும் ஒரு விநாடியில், நடிகர் திலகம் தண்ணீருக்குள் குபீரென்று ஒரு குட்டிக்கரணம் அடிப்பாரே..?
அது...
"குட்டிக்கரணம் போட்டாலும் யாரும் இங்கே சிவாஜியாக முடியாது" என்பதன் விளக்கமா?
" என் விழியில் நீயிருந்தால்" என்று பாடுகையில்
விரிந்து பரந்த திரை முழுதும் வியாபிக்கும் அய்யனின் அற்புத விழிகள்.. ஒளி மிகுந்த சூரியனும், சந்திரனுமா?
" விண்ணோடு விளையாடும்" என்று பாடி முடிக்கையில், அய்யனின் இடது கை நளினமாய்
மேலேறிக் கீழிறங்குமே..?
அது...
" பாரடா என் திறமையை" என்று பாமர ரசிகனுக்குப் போடும் உத்தரவா?
குடும்பத்தோடு போன திருவிழாக் கூட்டத்தில்
திடீரென்று திரும்பிப் பார்த்தால், உடன் வந்த குடும்பத்தினரில் ஒருவரும் இல்லாமலிருந்தால்
ஒரு பயத் திடுக்கிடல் வருமே..?
அது போல..
இந்த உன்னதப் பாடலின் உருவாக்கத்திற்குக்
காரணிகளாயிருந்த மெல்லிசை மாமன்னர்கள்
இப்போது இல்லை.
தெய்வீகப் பாடகர் அய்யா டி. எம். எஸ் இல்லை.
தேன் குரலோன் அய்யா பி. பி. எஸ் இல்லை.
இயக்குநர் அய்யா பீம்சிங் இல்லை.
பாந்தமான நடிப்புக்காரர் அய்யா பாலாஜி இல்லை.
ஏன்...
கோடிக் கோடி நெஞ்சங்களில் கோயில் கொண்ட நடிப்புத் தெய்வம் அய்யா நடிகர் திலகமே இல்லை.
காலமே..! காலனே..! இது நியாயமா?
*****
நானே பேசிக் கொண்டிருந்தால் போதுமா?
நான் கண்ட பொன்னை நீங்கள் காண வேண்டாமா?
Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil …: http://youtu.be/rUmL6PFD1OE
-
-
கவரிமான் 2 பக்க விளம்பரம்.கவரிமானுக்கு செய்யப்பட்ட பேப்பர் விளம்பரங்களைப் பார்த்தால் அது பெரிய பட்ஜெட் படங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.
மதி ஒளியில் அது செய்தியாகவே வந்துள்ளது.
அதன் காப்பி:https://uploads.tapatalk-cdn.com/201...8eb3178d1c.jpg
தினந்தந்தி விளம்பரம்:
https://uploads.tapatalk-cdn.com/201...a9ac2c95b1.jpg
-
-
-
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புக...ழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,
நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் ............... அவர்கள் உருவாக்கிக் கொண்ட ........................................ என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில்(......... )அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...76&oe=59754BAC
-
Quote:
Originally Posted by
sivaa
சத்தமின்றி சாதனை செய்துகொண்டிருக்கிறது
-
உட்கார்ந்து இ௫க்கும்இந்த அம்மா தி௫விளையாடல் படத்தை தொடர்ந்து 100 நூறு நாள் 100முறை பார்த்து சாதனை படைத்ததற்கு ஏ.பி.நாகராஜன் பாராட்டி பரிசு வழங்கினார்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fb&oe=59B930A0
-
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான தேதி 16.05.1959
கட்டபொம்மன் இன்று 59வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறார்
வீரபாண்டிய கட்டபொம்மன்.
1. முதன் முதலாக சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடகம் திரைப்படமாக்கப்பட்டது இந்த படத்தின் மூலமாகத்தான்.
2. படமாக்கப்படுவதற்கு முன்பும், படம் வெளி வந்த பிறகும் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.
3. முதன் முதலாக ஒரு நாடகத்தின் மூலமாக கல்விக்கூடங்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தது கட்டபொம்மன் தான்.
4. முதன் முதலாக ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட தமிழ் படம் கட்டபொம்மன்.
5. முதன் முதலாக டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட தமிழ் படம் -கட்டபொம்மன்.
6. முதன் முதலாக லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம் - கட்டபொம்மன்.
1. முதன் முதலாக 26 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடின தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்.
2. மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்
அரங்கு - நியூ சினிமா
நாட்கள் - 181
3. மதுரையில் முதன் முதலாக 2 லட்சத்திற்கு மேல் வசூல் தந்த படம் - கட்டபொம்மன்
181 நாட்கள் மொத்த வசூல் - Rs 2,77.365.71
வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,08,113.44
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,13, 583.55
4. வெற்றிவிழாவிற்கு மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்ட முதல் கலைஞன் - நடிகர் திலகம்.
5. வெற்றி விழா பரிசாக 2-ம் வகுப்பு வரை சிலேட்- குச்சியும்,5-ம் வகுப்பு வரை பென்சிலும், 10-ம் வகுப்பு வரை பேனாவும், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும், அந்தந்த பள்ளிகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்பட்டது முதன் முதலாக மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாததும் கூட.
6. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று 1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் அது வரை எந்த தமிழ் படமும் செய்யாத சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகமும் பெற்றார்கள்.
கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது
1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.
ஊர் - திருவனந்தபுரம்
2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்
சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.
3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.
4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.
[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].
5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.
6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143
http://i1110.photobucket.com/albums/...GEDC5798-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5779-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5775-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5778-1.jpg
-
-
-
-