http://oi67.tinypic.com/s63ugz.jpg
Printable View
சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மறைந்த பழம்பெரும் இயக்குனர் திரு கே.எஸ். ஜி அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பின் வரும் கேள்வியை முன் வைத்தார்,
"நடிகர்திலகம் அவர்கள் அரசியலில் பின்னடைவு அடைந்ததற்கு முக்கியமான காரணமாக எதை எடுத்துக்கொள்ளலாம்?
கே.எஸ்.ஜி அவர்கள் சட்டென்று பதிலலித்தார்
ஒரே ஒரு காரணம் " குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே மேடை ஏறியதும், மேடையில் யாரையும் தாழ்த்தி பேசாமல் போனது மட்டுமே,"
அரசியலில் முன்னேற்றம் பெற்றவர்கள் என உதாரணம் காட்டக்கூடிய அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அனைவரும் மேடைகளில் பிறரை தரம் தாழ்த்தி பேசியதாலும் பொது மக்களை வெகு நேரம் மேடைக்கு முன் காக்க வைத்ததாலும் அரசியலில் நிலை பெற்றனர் "
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b2&oe=5C2CE9B4
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...34&oe=5C2ACC7F
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...49&oe=5C2A1F9E
courtesy krishnamurthi.G f b
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c2&oe=5BEE3C99
courtesy sivaji pakkam f b
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...5c&oe=5C39E542
courtesy aathavan ravi F B
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் சிவாஜி பிலிம் கிளப் சார்பில் கடலை மிட்டாய் வழங்க பட்டது
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a1&oe=5C2D6682
courtesy sivaji annadurai sivaji annadurai F B
ஆகஸ்டு 15 சுதந்திர தின விழாவில் திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்க நிர்வாசிகள் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடலை மிட்டாய் வழங்க பட்டது
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...d6&oe=5C36268C
courtesy sivaji annadurai sivaji annadurai F B
ஒரு கல் ஒரு கண்ணாடி,
வழக்கு எண் 18/9
கலகலப்பு,
தடையற தாக்க,
மனம் கொத்தி பறவை,
நான் ஈ ஆகிய திரைப்படங்களை நான் பார்க்க காரணமாக அமைந்தது டிஜிட்டல் கர்ணன்,
கர்ணன் 2012'ஆம் வருடம் டிஜிட்டலில் வந்து அமர்க்களப்படுத்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் திகைக்க வைத்தது,
கர்ணனை நான் கண்ட விதம் பற்றி எழுதுகிறேன்,
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அளவிற்கு மதிப்பிற்குரிய திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் தினத்தந்தியில் அடிக்கடி அரைப் பக்க அளவிற்கு புதிய படங்களுக்கும் மேலாக விளம்பரங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார், அன்றைய நாட்களில் கர்ணனின் விளம்பரத்திற்காக மட்டுமே தினத்தந்தி பேப்பரை வாங்கிய நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நானும் ஒருவன்,
தொடர்ந்து டிரெய்லர் வெளியீடு நடந்தது, டிரெய்லர் வெளியீடு நடந்த அரங்கில் நுழைய முடியாமல் போன அனுபவத்தை பெற்றிருந்தேன், இன்றைய நாட்களில் முகநூல் தொடர்பு போல அப்போது பெற்றிருக்கவில்லை,
கர்ணன் வெளியாகும் தேதி உறுதியான பிறகு தியேட்டரில் பார்த்து விட பெரும் ஆவலோடு காத்திருந்த நான் முதன் முதலாக ஆன்லைன் புக்கிங் செய்ய ஆசைப்பட்டு நான் பணி புரிந்து வரும் அலுவலகத்தில் சும்மாவாகவே எல்லோரையும் சீண்டி விடுவேன் " 16 ந்தேதி கர்ணன் ரிலீஸ் டிக்கெட் இருக்கா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் " அவர்களும் கம்ப்யூட்டரில் பார்த்து ஆச்சர்யமாவார்கள் என்ன சார் சிவாஜிக்கு இன்னமும் இத்தனை பெரிய எதிர்பார்ப்பா? எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகி இருக்கிறதே? அவர்கள் அப்படி கேட்கும் போது நமக்குத் தான் எத்தனை பேரின்பம், இந்தச் செயல் முதல் வாரத்தில் தொடங்கி இடம் மாறி இடம் மாறி அனைவரையும் சீண்டி அவர்களிடமிருந்து கர்ணனை பற்றி பேச வைத்துவிடுவேன்,
என் அலுவலகத்தோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளவில்லை இன்டெர்நெட் மையங்களில் வேண்டுமென்றே கர்ணன் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என கேட்பேன் அவர்களும் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பார்கள், நானோ எனக்கு அவ்வளவு நேரமெல்லாம் வேண்டாம் சார் நீங்களே கர்ணன் டிக்கெட் புக் செய்து கொடுத்து விடுங்கள் என்பேன் அந்த உரிமையாளரும் உடனே அலசுவார் எந்தத் தியேட்டரிலும் டிக்கெட் இல்லாமல் இருப்பதைக் கண்டு புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப் பார்வை பார்த்ததை என்றும் மறக்க முடியாத நினைவு,
இந்த சூழலில் நான் ஆன் லைன் டிக்கெட் கேட்டிருந்ததை எனது அலுவலக நண்பர் ஞாபகத்தில் வைத்து அந்த வார ஞாயிறு மார்ச் 18 மாலைக் காட்சி என அபிராமி தியேட்டரில் அவருக்கும் சேர்த்து மூன்று டிக்கெட்டை பிடித்து விட்டார்,
இடைப்பட்ட நேரங்களில் தியேட்டர் ஹவுஸ்புல் எனத் தெரிந்தும் சாந்தி தியேட்டருக்கு வெறுமனே போன் செய்வேன் " சார் கர்ணன் படம் டிக்கெட் வேண்டும் " என்பேன் எதிர்முனையில் " இன்னமும் ஒரு வாரத்திற்கு டிக்கெட் இல்லை " என்பார்கள், இதில் நமக்கு ஒரு சந்தோஷம்,
கர்ணன் ரிலீஸ் வெற்றி உற்சவத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன், அந்த வார இறுதி ஞாயிறு அபிராமி தியேட்டருக்கு செல்வதற்கு முன் சாந்தி தியேட்டரில் ஆஜர் ஆகினேன், அப்பப்பா என்னா கொண்டாட்டம், வெடி, பேண்டு வாத்தியம் சிங்கத் தமிழன் சிவாஜி வாழ்க என்ற வின்னைத் தொடும் முழக்கங்கள் இவற்றையெல்லாம் பார்த்த எனக்கு புதிய உலகத்திற்கு வந்ததைப் போன்ற சிலிர்ப்பு, இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள், இத்தனை உயிர் நாடியாய் நடிகர் திலகத்தை ஜீவிக்கும் இந்தப் பக்தர்களை இவ்வளவு நாள் நான் எப்படி காணமல் இருந்தேன், பக்தர் ஒருவர் வேலூர் ராஜாவில் படம் பார்த்த கையோடு மாலைக் காட்சியை சாந்தியில் பார்த்து விட டிக்கெட் கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார், அலைகடலென திரண்ட கூட்டம் கர்ணனை கொண்டாடுகிறது,
பிளாக்கில் டிக்கெட் வாங்கி சாந்தி தியேட்டரிலேயே படம் பார்க்க ஆசைப்பட்டு டிக்கெட் எவ்வளவு? என்றேன் ஒரு டிக்கெட் 400 ரூபாய் என்றார்,,
நான் செல்ல வேண்டிய Train வந்துவிட்டது நாளை தொடர்கிறேன்--
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...96&oe=5C37C55F
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2a&oe=5C265683
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7b&oe=5C353C98
courtesy sekar F B
சேலம் பேலஸ் தியேட்டர்
சிவாஜி ரசிகர்களின் கோயில் என்றால் அது மிகையாகாது.
1980 களில் பல்லாயிரம் சிவாஜி ரசிகர்களை செதுக்கிய பட்டறை...
வருடத்திற்கு 25 முதல் 30 படங்கள் சாதாரணமாகவும் ஒவ்வொரு சமயம்
தொடர்ந்து 10 சிவாஜி படங்களும் திரையிடப்படும்..சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்காட்சியும் 50% ரசிகர்கள் இரண்டுகாட்சியிலும் இருப்பார்கள்...
காரணம் அதெல்லாம் திருவிழாக்காலம்
ஜாதி மதம் இனம் மொழி கடந்து நாங்கள் நடிகர்திலகம் என்ற பல்கலைக்கழகத்தில்
பேலஸ் தியேட்டர் எனும் வகுப்பில் சிவாஜியை வாசித்து நேசித்தது வாழ்ந்த காலத்தில் அனுபவித்த சொர்க்கம் ...
சிவாஜி அவர்
வந்தால் ..
நின்றால்..
பார்த்தால்..
திரும்பினால்..
பாடினால்
பேசினால்...
சிரித்தால்...
அழுதால்...
முறைத்தால்...
இருமினால்...
சளி சிந்தினால்..
ரத்தவாந்தி எடுத்தால்
சாப்பிட்டால்...
நடந்தால்...
ஓடினால்..
காதலித்தால்.. ஏன்
அடி வாங்கினாலும்
அந்த மனிதனின்
ஒவ்வொரு அங்க
அசைவிற்கும்
ஓராயிரம் கைகள் ஒரே
நேரத்தில் தட்டி ஒலி எழுப்பும் எங்கள்
மன ஒற்றுமை மாற்றானை
மலைக்க வைத்தது...
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நான்கு போலீஸ் வேண் நிறைய காவலர்கள் பாதுகாப்பிற்கு
தியேட்டர் உள்ளே நின்றது
கட்டுக்கடங்காத
கூட்டத்தை பார்த்து கௌரவத்திற்கு 5 மணிக்கு டிக்கெட் கொடுக்க கொடுக்க படம் போட்டு 7 மணிக்கு மாலை காட்சியை முடித்தது (அருகில் அப்சரா தியேட்டரில் 7 மணிக்கு அந்த நேரம் Mgr படம் காத்து வாங்கியது) வருகிறது என்று ஒட்டப்பட்ட 10 சிவாஜி பட போஸ்டரை பார்க்க 100 பேர் காத்திருந்தது
பல படங்கள் 7 நாளும் House full ஆக ஓடியது
சிவாஜி வரும் காட்சியில் காசு எறிவதற்காக பக்கத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள் இராஜகணபதி கோயில் பிச்சைக்காரர்களை தேடி பிடித்து
சில்லரை காசு
வாங்குவது
மூட்டை மூட்டை யாக
பூக்கள் வாங்கியது
கட்டுக்கட்டாக லாட்டரி
சீட்டு வாங்கியது
கையில் இருக்கும் காசை எல்லாம் கொடுத்து விட்டு
டிக்கெட் எடுக்க கடன்
வாங்கியது
அடடா
அந்த வசந்த காலம் வாழ்கையின் பொற்காலம்
வாழ்க சிவாஜி
இன்னும் 27 நாள்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...be&oe=5BFB6CF7
courtesy ranganathan kalyan F B
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1e&oe=5BF451DE
courtesy k v senthilnathan F B