http://i67.tinypic.com/2w6xs2f.jpg
Printable View
பாக்யா வார இதழ் 09/11/18
http://i63.tinypic.com/2cgbgqq.jpg
http://i66.tinypic.com/6y1npl.jpg
http://i65.tinypic.com/116hljl.jpg
https://i.postimg.cc/C1nnyH7Y/6cedf3...8e6a441720.jpg
கோவை
ராயல்
திரையரங்கில்
தீபாவளி
முதல்
புதுமைப்பித்தன்
மறு வெளியீடு காவியங்களின் ஒரே வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் "புதுமை பித்தன்" தினசரி 4 காட்சிகள் 6-11-2018 தீபாவளி திருநாள் முதல் கோவை- ராயல் திரையரங்கில் வெளியாகும் நிகழ்வு.... இதுதான் உலக சாதனை, நாமெல்லாம் மக்கள் திலகம் ரசிகர்கள் என்பதில் என்றும் பெருமிதம் கொள்வோம் 👍 👌.......
"சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருந்தேன்..!
சிவகாசியில் ஏறிய, கிராமத்துச் சாயல் கொண்ட அந்த கணவனும், மனைவியும்
(வயது சுமார் 40 இருக்கும்) நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தார்கள்.
பிறகு மெதுவாக அந்தக் கணவன்
என்னிடம் கேட்டார்:
'சார்... இந்த ரயில் எக்மோர் ஸ்டேஷன்லதானே நிக்கும்..?'
'ஆமா..'
'எக்மோரிலிருந்து எம்.ஜி.ஆர். சமாதிக்கு எப்படிப் போகணும்..?'
நான் அவரை உற்றுப் பார்த்தேன்..
கணவன் சொன்னார்:
'மெட்ராசுக்கு முதல் முதலா இப்பத்தான் போறோம்.. சொந்தக்காரங்க கல்யாணம். ஒரே ஒருநாள் பயணம்தான்.'
'சரி..'
'ஊருக்கு திரும்பறதுக்குள்ள என் மனைவிக்கு சென்னையில் ஒரே ஒரு இடத்தை மட்டும் காட்டினால் போதுமாம்..'
நான் சொன்னேன்: 'சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்குங்க..'
கணவன் மறுத்தார் : 'இல்லையில்லை... வேறு எந்த இடமும் இந்த தடவை போறதா இல்லை... என் மனைவி புறப்படும்போதே போட்ட ஒரே கண்டிஷன்... எம்.ஜி.ஆர். சமாதியை பாக்கணுமாம்....! அதுல காது வச்சு எம்.ஜி.ஆர். வாட்ச் ஓடுற சத்தத்தைக் கேக்கணுமாம்...'
எனக்கு அதிசயமாக இருந்தது..!
என்ன மந்திரம் போட்டார் எம்.ஜி.ஆர்...?
எத்தனையோ மக்கள் இன்னும் எம்.ஜி.ஆர். மயக்கம் தீராமலே இருக்கிறார்களே..? அது எப்படி..?
இந்தக் கேள்விகளுக்கான பதில் ,
ஒரு மூத்த பத்திரிகையாளர் எழுதிய அனுபவத்தைப் படித்தபோது கிடைத்தது.
எஸ். ராமசாமி என்ற மூத்த பத்திரிகையாளர், எம்.ஜி.ஆருடனான தனது அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார் :
'1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். எம்.ஜி.ஆரின் பிரசாரத்தைக் குறிப்பெடுப்பதற்காகக் கூடவே சென்றேன். பிரசாரத்தின் போது, உடன் வரும் செய்தியாளர்களுடன் சேர்ந்து உணவருந்துவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
ராணிப்பேட்டையில் இரவு நீண்டநேரம் எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார்.
இரவு உணவுக்காக, அதிகாலை 3 மணி அளவில் அமர்ந்தோம். அனைவருக்கும் இலை வைத்து உணவு பரிமாறப்பட்டது. கோழிக்கறி, ஆட்டுக்கறி என வகை வகையாக உணவுகள் பரிமாறப்பட்டன.
எல்லோரும் சாப்பிட ஆரம்பித்த சமயத்தில், ஓர் இலை மட்டும் காலியாக இருந்ததை எம்.ஜி.ஆர். கண்டுவிட்டார். அது என்னுடைய இலை. ‘நீங்கள் சைவமா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன்.
‘இவருக்கு உடனடியாக சைவ உணவு தயார் செய்து வாருங்கள். அதுவரை நான் உணவருந்த மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.
அதிகாலை 3 மணிக்கு எங்கே உணவு கிடைக்கும்? எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டாரே! மேலும் அவரும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.
கட்சிக்காரர்கள் ஓடிப்போய் எங்கேயோ பக்கத்து வீட்டில் இட்லி, சட்னி தயார் செய்துகொண்டு வந்து எனக்கு கொடுத்தனர். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆரும் சாப்பிட்டார்.'
இந்த அனுபவத்தைப் படித்தபோது ,
எம்.ஜி.ஆரின் மேஜிக் ரகசியம் புரிந்தது..!
அது ... அன்பு....! தன்னைப் போல் பிறரையும் எண்ணும், தன்னலமற்ற அன்பு...!
நண்பர் எழுதியது நினைவுக்கு வந்தது:
'தாய்மையைப் படைத்த பின்னர் தன்னலமற்ற அன்பு கொஞ்சம் மிஞ்சி விட்டது..! பார்த்தான் இறைவன்...
படைத்து விட்டான் எம்.ஜி.,ஆரை...!' "
- John Durai Asir Chelliah அவர்களின் பதிவு... Thanks Friends...
சினிமாவில் முதலிடம் எம்ஜிஆர் படங்கள் .
வசூலில் முதலிடம் எம்ஜிஆர் படங்கள்
மறு வெளியீடுகளில் இன்னமும் சாதனை செய்பவை எம்ஜிஆர் படங்கள்
70 வருடங்கள் தொடர்ந்து இருப்பவர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்
எம்ஜிஆர் நினைவிடம்
எம்ஜிஆர் அருங்காட்சியகம்
எம்ஜிஆர் நினைவு இல்லம்
எம்ஜிஆர் தோட்டம்
எம்ஜிஆர் பல்கலைக்கழகம்
எம்ஜிஆர் கல்லூரி
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
எம்ஜிஆர் நினைவு தூண்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் ஸ்டாம்ப்
எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம்
எம்ஜிஆர் உலக பேரவை
எம்ஜிஆர் மன்றங்கள்
எம்ஜிஆர் பற்றிய நூல்கள்
எம்ஜிஆர் மாத இதழ்கள்
எம்ஜிஆர் இருக்கை
எம்ஜிஆர் ஆராய்ச்சி மய்யம்
எம்ஜிஆர் இணையதளத்தின் வல்லமைகள்
எம்ஜிஆர் உருவாக்கிய முதல்வர்கள்
எம்ஜிஆர் உருவாக்கிய தலைவர்கள்
எம்ஜிஆர் அரசு
எம்ஜிஆர் என்றென்றும் வெற்றி வேந்தன்
எம்ஜிஆர் திரை உலகின் அமுத சுரபி
எம்ஜிஆர் அரசியலில் பலரை வாழவைப்பவர்
எம்ஜிஆர் ஊடகங்களில் இன்னும் வாழ்கிறார்
எம்ஜிஆர் பத்திரிகைகளில் செய்தியாக உள்ளார்
எம்ஜிஆர் காலத்தை வென்றவர்
.எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் கொடுத்து வைத்தவர்கள் .... Thanks Friends...
❤எம்.ஜி.ஆர் உடல் அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5
*********************************************👀
அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்த எம்.ஜி.ஆரின் மூளையில் ஒரு கட்டி ஏற்ப்படிருப்பதாகவும் அந்த ரத்தக்கட்டியை கரைப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானிய நிபுணர்கள் கானு, நகமோரா ஆகியோர் தனி விமானம் மூலம் அக்டோபர் 20_ந்தேதி சென்னை வந்தார்கள்.
காலை 7.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். எம்.ஜி.ஆர். அறைக்குச்சென்று அவருடைய உடல் நிலையை பரிசோதித்தனர்.
மொத்தம் 2 மணி நேரம் பரிசோதனை நடந்தது.
எம்.ஜி.ஆரின் மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்கட்டியை கரைக்க அறுவை சிகிச்சை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதுவும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து போய் பண்ன திட்டமிட்டார்கள்
அதாவது இன்னும் சில வாரங்கள் கழித்து "பைபாஸ்" முறையில் ரத்த குழாய்களில் ஒட்டு அறுவை சிகிச்சை பெறச்செய்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது பற்றி சிந்திப்பதாகவும் ஜப்பான் டாக்டர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானில் இருந்து சில முக்கியமான மருந்துகளையும் ஜப்பான் டாக்டர்கள் கொண்டு வந்தார்கள். மூளையில் உள்ள வீக்கத்தை குறைக்க அவர்கள் கொண்டு வந்த "கிளிசரால்" என்ற மருந்து எம்.ஜி.ஆர். உடலில் ஏற்றப்பட்டது.
மேலும் விமானப்பயணத்தை எம்.ஜி.ஆர். உடல் தாங்குவ தற்கான விசேஷ மருந்தும் ஜப்பானில் இருந்து வர வழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு வாரம் சென்று மீண்டும் வருவதாக கூறிவிட்டு டாக்டர்கள் கானு, நகமோரா ஆகியோர் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிர்ச்சியால் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் மாண்டனர். கோவையைச் சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று, பிரார்த்தனை செய்தார். கிறிஸ்தவ ஆலயம், மசூதி மற்றும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமான பேர் பாதயாத்திரை சென்று வழிபாடு நடத்தினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அவருடன் அன்பழகன், துரைமுருகன், அன்பில் தர்மலிங்கம், டி.ஆர்.பாலு, நீலநாராயணன் ஆகியோரும் சென்றனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், டாக்டர்கள் ஆகியோரை கருணாநிதி சந்தித்து எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து விசாரித்தார்.
நடிகர் சிவாஜிகணேசனும் ஆஸ்பத்திரிக்குச் சென்று விசாரித்தார். இதற்கிடையே எம்.ஜி.ஆரிடம் இருந்த இலாகாக்களை, அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று கவர்னர் குரானா அறிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் இந்திரா காந்தி 31.10.1984 அன்று டெல்லியில் அவருடைய மெய்க்காவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி புதிய பிரதமராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் உடல் நிலையைக் கருதி, இந்திரா காந்தி மரணம் அடைந்தது பற்றி, அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிவிட்டது. விமானப் பயணம் செய்யும் அளவுக்கு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்காக எம்.ஜி. ஆருக்கு ஜப்பானில் அறுவை சிகிச்சை செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது அல்லவா?.
அதையொட்டி எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் 3ந்தேதி சென்னை வந்தார். எம்.ஜி.ஆரை பரிசோதித்து விட்டு, "எம்.ஜி.ஆரின் மூளையில் இருந்த வீக்கம் முழுவதுமாக நீங்கிவிட்டதால் அவருக்கு ஆபரேஷன் தேவை இல்லை" என்று அறிவித்தார். எனவே, மூளை ஆபரேஷனுக்காக எம்.ஜி.ஆரை ஜப்பானுக்கு கொண்டு செல்லும் யோசனை கைவிடப்பட்டது.
ஆனாலும், சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந் தன. அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனை சிறுநீரக கோளாறுக்காக, சிகிச்சை அளிப்பதில் உலகப்புகழ் பெற்றதாகும். அந்த ஆஸ்பத்திரியில்தான் எம்.ஜி. ஆருக்கு ஆபரேஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்று அமைக்கப்பட்ட விசேஷ விமானம் தயாரானது. அந்த `போயிங்' ரக விசேஷ விமானம் 4_ந்தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த விமானத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டு படுக்கை வசதி, ரத்த சுத்திகரிப்பு (டயாலிசீஸ்) கருவிகள், ரத்தப்பரி சோதனை கருவி, பிராணவாயு சிலிண்டர்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விமானம் பறக்கும்போது சிகிச்சை கருவிகள் சரிவர இயங்குகின்றனவா? என்று பரிசோதிக்க இந்த விமானம் 70 நிமிடம் வானத்தில் சென்னை நகரை சுற்றி பறந்தது. பின்னர் தரை இறக்கப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் மந்திரி நரசிம்மராவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், ஜி.பார்த்தசாரதி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தார்கள்.
ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆரை பார்த்தார்கள். ராஜீவ் காந்தியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்கள். 5.11.1984 இரவு 9.05 மணிக்கு எம்.ஜி.ஆரை `ஆம்புலன்ஸ்' வேன் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடி ஜன்னல்களின் திரை தொங்கவிடப்பட்டிருந்தது.
இருபுறமும் போலீஸ் ஜீப்புகள் சென்றன. ஜானகி அம்மாள், டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். இரவு 9.55 மணிக்கு ஆம்பு லன்ஸ் வேன் விமான நிலை யத்தை அடைந்தது. அங்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள் காத்திருந்த னர். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, அவர் மனைவி மீனா அம்மாள் மற்றும் குடும்பத்தினர் நின்று கொண்டு இருந்தனர்.
விமானத்தின் அருகில் கவர்னர் குரானா, அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்றனர். விமானம் அருகே ஆம்புலன்ஸ் வேன் சென்றதும் எம்.ஜி.ஆர். இருந்த தூக்குப் படுக்கையை (ஸ்டிரெச்சர்) இயந்திர கருவி மூலம் அப்படியே தூக்கி விமானத்துக்குள்ளே வைத்தார்கள். சரியாக இரவு 10.45 மணிக்கு விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதல்_அமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் சென்றார்கள். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் விமானம் தரை இறக்கப்பட்டது.
பின்னர் இந்திய நேரப்படி 6.ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரத்தை அடைந்தது. அமெரிக்க டாக்டர்கள் விமானத்துக்குள் சென்று எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதித்தனர். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் எம்.ஜி.ஆர். ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி புரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு ஏற்கனவே அவருக்காக தயார் செய்து வைக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியின் 5 வது மாடியில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
10ந்தேதி எம்.ஜி.ஆரை சாய்வு நாற்காலியில் அமர வைத் தார்கள். 2 மணி நேரம் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்ததாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்தது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.👣👣👣..... Thanks Friends...
அனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் எல்லோருக்கும் இனிய "தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...
தீபாவளியை
முன்னிட்டு
கோவை
டிலைட்
திரையரங்கில்
பல்லாண்டு வாழ்க
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள்,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
http://i63.tinypic.com/2s8lnc5.jpg
ஆர். லோகநாதன்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .