http://i63.tinypic.com/eaiotz.jpg
http://i63.tinypic.com/180v3l.jpg
http://i68.tinypic.com/hu3c41.jpg
http://i66.tinypic.com/168bwbl.jpg
http://i63.tinypic.com/180v3l.jpg
http://i63.tinypic.com/qrlw5e.jpg
Printable View
கோவை, தாய் ஓட்டலில் (ரயில் நிலையம் அருகில் ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
உருவப்படத்துடன் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு .
http://i68.tinypic.com/qqspcp.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் நண்பர் திரு.சுந்தரவேலு (கோவை ராயல் அரங்கு அதிபர் ) தலைவரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் .
.http://i65.tinypic.com/2v9br0w.jpg
அத்திப்பூ -மே 2019
http://i67.tinypic.com/2rejtd3.jpg
முல்லைச்சரம் -மே 2019
http://i64.tinypic.com/x5uwdx.jpg
http://i67.tinypic.com/2n6anq1.jpg
பசுமை இந்தியா -மே 2019
http://i67.tinypic.com/28gwhe8.jpg
http://i64.tinypic.com/12529a9.jpg
மாலை மலர் -22/05/2019
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி "சக்கரவர்த்தி திருமகள் " திரைப்படத்தில் நடித்தபோது , அவரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவியாக ஆக்க , எல்லா நடிகர் நடிகைகளும் சேர்ந்து முடிவெடுத்து உள்ளார்கள் என்கிற செய்தியை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகை அஞ்சலிதேவியிடம் தெரிவித்தார் . முதலில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள அஞ்சலிதேவி பெரிதும் தயங்கினார் . எனக்கு தமிழ் சரியாக படிக்க தெரியாது . அதுமட்டுமின்றி இதுபோன்ற பொறுப்புகளில் இருந்து பணியாற்றிய அனுபவமும் எனக்கு இல்லை , அதனால் என்னை விட்டுவிட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுங்கள் என்று சொன்னபோது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காதில் வாங்கி கொள்ளவில்லை .,
நடிகர் சங்க தலைவியாக பொறுப்பேற்றுக் கொண்ட அஞ்சலிதேவி , ஒரு வருடம் அந்த பதவியில் மிக சிறப்பாக பணியாற்றினார் .
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கு அடையாளமாக ,நான்கு குழந்தைகளை நடிகர் சங்கம் என்னும் தாய்
அரவணைத்தபடி உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான சின்னம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்னிலையில், நடிகை அஞ்சலிதேவியின் பதவிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது .
http://i63.tinypic.com/2003clu.jpg
http://i68.tinypic.com/11soyme.jpg
http://i68.tinypic.com/2d6kygy.jpg
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "ரிக்ஷாக்காரன் " வெளியான நாள் 29/05/1971. வெளியாகி 48 ஆண்டுகள் நிறைவு.
சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .ரிக்ஷாக்காரனாக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மிக சிறப்பாகவும் , இயல்பாகவும், நடித்ததற்காக மத்திய அரசின் " பாரத் " விருது கிடைத்த படம் . நடிகை மஞ்சுளா கதாநாயகியாக நடித்த முதல் படம் .
1971ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூலில் முதலிடம் பெற்ற காவியம்
சென்னை அண்ணாநகரில் , ரவுண்டானா அருகில் 1971ல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டப்பந்தயத்தில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் , பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு நடுவில் கலந்து கொண்டு , பொதுமக்களின் ஏகோபித்த ,பலத்த ஆரவாரத்திற்கு இடையில் வண்டி ஒட்டி முதல் பரிசு பெற்றது படத்தின் சிறப்பு அம்சம் .சண்டை காட்சிகள் அபாரம்.சண்டை பயிற்சியாளர் ஷியாம்சுந்தர் பாராட்டத் தக்கவர் , மஞ்சுளாவை ரிக்ஷாவில் அமர்த்திக்கொண்டு வில்லன் நடிகர் ராமதாஸ் குழுவோடு சண்டையிடும் காட்சியில் அரங்கமே அதிரும் .இதேபோல ஹிந்தியில் ரிக்ஷாவாலாவில் நடித்த ரன்திர்கபூர் இந்தக்காட்சியில் நடிக்க மறுத்தார் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல சண்டையிடுவது கடினம் என்று கூறினார் .கிளைமாக்ஸ் காட்சியில் சுருள்பட்டா வீசும் காட்சியிலும் கலைச்சுடர் எம்.ஜி.ஆர். தனது திறமையை காட்டி அபாரமாக நடித்து அரங்கத்தையே அதிரவைத்தார் . தமிழ் திரைப்படங்களில் எந்த நடிகரும் இனிமேல் இதுபோன்று நடிக்க முடியாத வகையில் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் கைதட்டல்கள் வாங்கினார்.கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் இதை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை .
இந்த படத்தில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, அரங்க அமைப்பு, இசை அமைப்பு, கதை வசனம், நகைச்சுவை, பாடல்கள் ,நடிக -நடிகையரின் நடிப்பு, வெளிப்புற படப்பிடிப்பு, சண்டை காட்சிகள் அனைத்தும்
ஒருங்கே அமைந்து ஈடு கொடுத்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தன .
டைட்டில் இசை, ஓவியம் மிக பிரமாதம் . மெல்லிசை மன்னருக்கு பாடல்கள் இசையமைப்பு, பின்னணி இசை ஆகியவற்றிற்கு பலத்த சபாஷ் .
தேங்காய் ஸ்ரீநிவாசன், ஐசரி வேலன் நகைச்சுவை படத்திற்கு கூடுதல் பலம்
பத்மினி , அசோகன், மனோகர், மேஜர் சுந்தரராஜன் , பூர்ணம் விஸ்வநாதன், ராமதாஸ் ஜி.சகுந்தலா , குண்டு கல்யாணம், உசிலைமணி அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து படத்திற்கு சிறப்பு சேர்த்து வெற்றியடைய செய்தனர் .
கவிஞர் வாலியின் பாடல்கள் காலத்தால் அழியாதவை .
1. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ,
2. பொன்னழகு பெண்மை சிந்தும்
3.கடலோரம் வாங்கிய காற்று
4. அழகிய தமிழ்மகள் இவள் (அந்த காலத்தில் வானொலியில் நேயர் விருப்பத்தில் நூற்றுக்கணக்கான வாசகர் கடிதங்கள் மூலம் தேர்வாகி முதல் பாடலாக ஒலித்து வந்தது )
5.பம்பை உடுக்கை கொட்டி
சென்னை தேவிபாரடைஸில் தொடர்ந்து 163 காட்சிகள் அரங்கு நிறைந்தது
ஸ்ரீகிருஷ்ணாவில் 110 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
ஸ்ரீகிருஷ்ணாவில் மூன்றாவது நாள் காலை காட்சியில்தான் பார்க்கமுடிந்தது .
ரசிகர்கள் ஆரவாரத்தில்,அலப்பரையில் பல இடங்களில் நகைச்சுவை வசனங்கள், பன்ச் வசனங்கள் புரியவில்லை . தேவிபாரடைஸ், ஸ்ரீகிருஷ்ணாவில் 142 நாட்கள் (21 வாரம் ) ஓடியது சரவணாவில் 105நாட்கள் .
அந்த காலத்தில் வடசென்னை ஏரியாவில் ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் ரூ.5 லட்சம் வசூலான முதல் படம் .சென்னையில் வெள்ளிவிழா ஓட வேண்டியபடம் .நீரும் நெருப்பும் பட வெளியீடு காரணமாக எடுத்துவிட்டார்கள் . 12 அரங்குகளில் 100நாட்கள் ஓடியது . மதுரை நியூசினிமாவில் 161 நாட்கள் ஓடியது .58 அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக்குவித்தது . திருச்சி பேலஸ் 142 , ஈரோடு கிருஷ்ணா -138, சேலம் அலங்கார -118, கோவை ராஜா 126, நெல்லை லட்சுமி 104, தஞ்சை யாகப்பா 105, குடந்தை டைமண்ட் 105, மாயவரம் சுந்தரம் 110
சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் தயாரித்து வெளியிட்டார்கள். நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் வெட்டப்பட்டன .டைட்டில் இசையில் சிறு மாற்றம் .
பின்னணி இசையில் சில தவறுகள் .இருப்பினும் மீண்டும் தேவிபாரடைஸில்
வெளியாகி வெற்றிநடைபோட்டது . ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறைந்தது .
பல அரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது .
http://i65.tinypic.com/2uonhhu.jpg
ரிக்ஷாக்காரன் 100 வது நாள் வெற்றிவிழா வடசென்னை ராபின்சன் பூங்கா விளையாட்டு மைதானம் அருகில் (நான்குமுனை தெரு சந்திப்பில் ) நடைபெற்றது .
அந்த நிகழ்ச்சியினை நானும் கண்டுகளித்தேன் என்பது பசுமையான நினைவு .
காதலர் தினம்!
காதல் மன்னன், காதல் இளவரசன் ..........................! காதல் சக்கரவர்த்தி யார்? நம்ம எம்.ஜி.ஆர் [ புரட்சித்தலைவர் ]!
"ரிக்ஷாக்காரன்" பாராட்டு விழாவில் இயக்குனர் நீலகண்டன்: பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் காதல் கட்சியில் பெண்களைத் தொட்டு நடிக்கவே கூசுவார் புரட்சி நடிகர். அது அவசியம் தானா என்பார். ஆனால் இப்பொது அவர் அதிலே "சக்ரவர்த்தி" ....என்றார்.
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் மேடையில் புரட்சித் நடிகர் புன்னகையோடு அருகே இருந்த ஜெமினி கணேசனைப் பார்த்தார். அவரோ "ஆமாம்" என்பது போல தலையாட்டினார். மீண்டும் மக்கள் ஆரவாரம்.......
அழகிய தமிழ்மகள் இவள் -
இருவிழிகளில் எழுதிய மடல் -
மெல்லமொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்
🖕🖕🖕...... .. ......... Thanks wa.,
இன்று முதல் (31/5/2019)
கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்" உழைக்கும் கரங்கள் "
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி :நெல்லை நண்பர் திரு .வி .ராஜா............ Thanks wa.,
அருமை சகோதரர் திரு லோகநாதன் அளித்த திரையுலக களஞ்சியம் மக்கள் திலகம் வழங்கும் பிரம்மாண்ட வெற்றி காவியமாம் "ரிக்க்ஷாக்காரன்" பதிவுகள் சூப்பர்... அபாரம்...👌 👍💐.......
எவ்வளவு காலமானாலும், மறு வெளியீட்டு திரை காவியங்களின் ஏக போக சக்கரவர்த்தி... வசூல் இலக்கணம் கண்ட , இன்றும் திரையரங்குகளை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அமுதசுரபி... அட்சய பாத்திரம்... கற்பக விருட்சம்... காமதேனு... மக்கள் திலகம் வழங்கும்...." நீதிக்கு தலை வணங்கு" காவியம் சென்னை- புரசை- பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி பவனி ஆரம்பம்......👍 👌 💐................. Thanks wa.,
ஜூனியர் விகடன் -05/06/19
http://i68.tinypic.com/2rc1rad.jpg
http://i64.tinypic.com/3504bib.jpg
http://i63.tinypic.com/1zq8nxt.jpg
பயணிக்கிறார்கள்
வெள்ளி முதல் (31/05/19) கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i68.tinypic.com/28a2il2.jpg
வெள்ளி முதல் (31/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/25qyvkx.jpg