-
மதுரையின் திரையுலகச் சரித்திரம் தெரியுமா உங்களுக்கு?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கநிகர் கலைஞன் சிங்கத்தமிழன் சிவாஜியின் தன்னிகரற்ற சாதனையை அறிவீர்.
அங்கு நடிகர்திலகத்துக்கு 100+ நாள்களுக்கும்மேல் ஓடிய திரைப்படங்களின் எண்ணிக்கை 60. இதில், நாற்பதுக்கும் கீழ்தான் மற்றவர்களின் எண்ணிக்கை என்பது வரலாற்றுப் பதிவு.
இதோ, வசூலுடன் கூடிய ஒரு செய்திப்பதிவு உங்களுக்கு...
#பராசக்தி #முதல்வெளியீடு
திரையிட்ட நாள் : 17:10:1952
திரையரங்கம் : தங்கம்
மொத்த இருக்கைகள் : 2593
ஓடிய நாள் : 112 நாள்
மொத்த வசூல் : ரூ.1,63,423.9 - 9
வரி நீக்கிய வசூல் : ரூ.1,30,719.4 - 0
விநியோகஸ்தர் பங்கு : ரூ.68,227.10 - 2
#மறுவெளியீடு ( SHIFTING)
திரையிட்ட நாள் : 06:02:1953
திரையரங்கம் : சிட்டி சினிமா
மொத்த இருக்கைகள் : 1186
ஓடிய நாள் : 126
மொத்த வசூல் : ரூ.74,628.7 - 8
வரி நீக்கிய வசூல் : ரூ.59,419.6 - 9
விநியோகஸ்தர் பங்கு : ரூ. 35,272.10 - 5
( தொடரும்)
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத் பாபு, மதுரை
தொகுப்பு :வான்நிலா விஜயகுமாரன்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a4&oe=5F089F24
வான்நிலா விஜயகுமாரன்
-
மதுரை மாநகரில் நடிகர்திலகத்தின் வெற்றிப்பட்டியல்...
1952- 53 ஆம் ஆண்டுகளில் பராசக்தி திரைப்படமே இருவேறு அரங்குகளில் நூறுநாள் ஓடிய சாதனையைக் குறிப்பிட்டிருந்தேன். அதே ஆண்டில் வெளியாகியிருந்த பணம் திரைப்படம் ஸ்ரீதேவி அரங்கில் 84 நாள் ஓடி சாதனை படைத்தது.
1953ல் வெளியான ஐந்து நேரடித் தமிழ்ப் படங்களில் #பூங்கோதை #செண்ட்ரல் அரங்கில் மூன்று வாரங்களும், #திரும்பிப்பார் திரைப்படம் #தங்கம் அரங்கில் 56 நாள்களும் ஓடின.
மேலும், #அன்பு திரைப்படம் #சந்திரா அரங்கில் 84 நாள்களும், #கண்கள் திரைப்படம் #சிந்தாமணி யில் 36 நாள்களும், #மனிதனும்மிருகமும் திரைப்படம் #ஸ்ரீலட்சுமி அரங்கில் 35 நாள்களும் ஓடின.
1954ல் வெளியான திலகத்தின் முதல்படமான #மனோகரா திரைப்படம் வெள்ளிவிழா ஓட்டத்தை நூலிழையில் தவறவிட்ட மாபெரும் வெற்றிப்படமாகும்.
அதன் அசாத்திய சாதனைக் கண்ணோட்டம் உங்களின் பார்வைக்கு...
#மனோகரா
வெளியான நாள் : 03 மார்ச் 1954
திரையிட்ட அரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 156
மொத்த வசூல் : ரூ.1,51,690.5-0
வரி நீக்கிய வசூல் : ரூ.1,20,387.1-5
வி.பங்குத்தொகை : ரூ.67,644.5-6
இதே ஆண்டில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற படங்களின் சாதனை விவரம் அடுத்தப் பகுதியில்...
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத்பாபு,மதுரை
பதிவு : வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...51&oe=5F07FD7E
Thanks வான்நிலா விஜயகுமாரன்
-
13-06-2020
சந்திப்பு - பகல் 12 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
முதல் மரியாதை- பகல் 1 மணிக்கு ஜெயா மூவியில்
சந்திப்பு - இரவு 7 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
-
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!
திருவருட்செல்வர் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவனடியாரான திருநாவுக்கரசர் வேடத்தில் நடித்தார். இதில் காஞ்சி மகாசுவாமிகளின் முக பாவனைகளை அப்படியே உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும்.
இது குறித்து ரசிகர்கள் சிவாஜி கணேசனிடம் கேட்ட போது மகாசுவாமிகளின் ஞாபகம் வந்தவராக ''பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நேரில் வந்து சந்திக்கும்படி சுவாமிகள், சொல்லியனுப்பினார். அப்போது சென்னை மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார் சுவாமிகள். மனைவி, குழந்தைகளோடு தரிசிக்கச் சென்றேன். பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். பேச்சு முடிந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த வெளிச்சத்தில் எங்களை நோக்கி சுவாமிகள் நடந்து வந்தார். நாங்கள் அவரது திருவடியில் சாஷ்டாங்கமாக வணங்கினோம்.
''யாரு சிவாஜி கணேசனா?'' என்றார் சுவாமிகள். ''ஆமாம்... சுவாமி'' என்றேன் பவ்வியமாக.
'நெறைய தான தர்மமெல்லாம் பண்றியே? அதுவும் வித்தியாசமா பண்றே. திருப்பதிக்குப் போனேன். ஒரு யானை வந்து என் கழுத்தில் மாலை போட்டது. எங்கிருந்து வந்தது இந்த யானை என்று கேட்டேன். சிவாஜி கணேசன் கொடுத்தது என்றார்கள்.
திருச்சியில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு போயிருந்தேன். யானை மாலை போட்டது. அதுவும் நீ கொடுத்தது தான் என்றார்கள். புன்னை வனநல்லுார் மாரியம்மன் கோயிலுள்ள யானையும் நீ கொடுத்தது என்றார்கள். சுண்டைக் காயளவு ஏதாவது கொடுத்துட்டு அதை யானையளவு விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். நீ யானையையே கொடுத்துவிட்டு விளம்பரம் செய்துக்காம இருக்கியே?
இப்படி ஒரு நல்ல பிள்ளையைப் பெற்ற உன் பெற்றோர் பாக்கியசாலிகள். உன் குடும்ப ஷேமத்திற்காக அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்' என்று சொல்லி ஆசியளித்தார்.
அப்போது சுவாமிகளை நெருக்கமாக தரிசித்ததில் அவரது முகபாவனை என் மனதில் ஆழமாக பதிந்திருக்கலாம். அதுவே திருவருட் செல்வர் திரைப் படத்தில் வெளிப் பட்டுள்ளது. எப்பேர்ப் பட்ட மகான் அவர்'' என்று சொல்லி சிவாஜி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...03&oe=5F09E379
Thanks Vasudevan Srirangarajan
-
-
-
-
-
-
-
-
சிவாஜி என்றொரு இமயம் !
டாக்டர் ஜமுனா அவர்கள்.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி !
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னையே அர்பணித்த காந்தி மகானின் பிறந்த நாள். உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் கொண்டாடும் உன்னத திருநாள்.
அதற்கு முந்தைய நாள் அக்டோபர் 1 அண்ணன் சிவாஜியின் பிறந்த நாள். கலையுலகிற்கு தன்னையே அர்பணித்து ,உலகமெங்கும் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்திருக்கிற மகோன்னத நாள்.
மகாத்மா காந்தியை பொறுத்தமட்டில் அவருடைய வாழ்க்கையை படித்து அறிந்திருக்கிறேன். காந்திய சிந்தனையில் எம்.ஏ. முதுகலை பட்டம் பெற்றதை இன்றைக்கும் ஒரு சாதனையாகத்தான் பார்க்கிறேன்.
அண்ணன் சிவாஜியை பொறுத்தமட்டில் அவரது வாழ்க்கையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரோடு பழகி உணர்ந்திருக்கிறேன்.
கேமராவுக்கு முன்னால் நடித்துக்கொண்டு, வாழ்விலும் நடித்துக் கொண்டு இருக்கிற நடிகர்களுக்கு மத்தியில் , கேமராவிற்கு முன்னால் மட்டுமே நடிக்கத் தெரிந்த இயல்பான மனிதர் அண்ணன் சிவாஜி என்று எண்ணுகிற போதே மனம் நெகிழ்கிறது.
அவரது நடிப்பைப் பற்றி அண்ணா ஒருமுறை சொன்னபோது, உலகின் தலை சிறந்த நடிகர் என்று பெயர் பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால் சிவாஜி மாதிரி நடிக்கலாம் என்றார்.
அப்படி நடிப்பின் கலைக் களஞ்சியமாக , நடமாடும் பல்கலைக்கழகமாக அண்ணன் சிவாஜி நம் மத்தியில் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச்சென்று இருக்கிறார். இன்று மட்டுமல்ல என்றும் தமிழ் சினிமா என்றால் அது சிவாஜிதான். சிவாஜியின் பாதையில் தான் எல்லோரும் பயணிக்க முடியும். சினிமாவில் நடிக்க வருகிற புதிய நட்சத்திரங்கள் கூட அவரது வசனத்தை பேசிக்காட்டி தான் நடிக்க வாய்ப்பு பெறமுடியும்.
தொடரும் .....
நன்றி ! டாக்டர் ஜமுனா பத்திரிக்கை பேட்டியிலிருந்து ....
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...de&oe=5F09F26F
Thanks Ganesh Pandian
-
-
-
14-06-2020
திரிசூலம் - காலை 11 மணிக்கு சன் லைப்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி- மாலை 3 மணிக்கு முரசு
நான் வாழ வைப்பேன்- இரவு 8:30 மணிக்கு ராஜ் டிஜிட்டல்,
-
-
இன்று 14/06/2020 - மாலை 03.00 p.m. மணிக்கு முரசு தொலைக்காட்சி இல்
நடிகர்திலகம் நடித்த முழு நீள சிரிப்பு படம் - ' கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி ' கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்து உள்ளனர். !!!
Subject to last minute change
-
-
'எந்தன் பொன் வண்ணமே அன்பு பூவண்ணமே..நெஞ்சில் போராட்டமா.. கண்ணில் நீரோட்டமா..அதை நான் பார்க்கவா..மனம்தான் தாங்குமா..
எந்தன்பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே...கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை.. இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை...'
இன்று 14/06/2020 - இரவு 08.30 p.m மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் (அ) ராஜ் தொலைக் காட்சியில். !!!
நடிகர்திலகம் நடித்த - "நான் வாழவைப்பேன்"- படத்தை காண தவறாதீர்கள். !!!
நடிகர்திலகம், ரஜினி, கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
-
-
-
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி3
1954 ஆம் ஆண்டு வெளிவந்த மனோகரா படத்தின் வெற்றிக்குப்பிறகு #மதுரையில் நூறுநாள் ஓடிய மூன்றாவது படம் "உத்தமபுத்திரன்"
இதற்கு இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் நடிகர்திலகம் நடித்து தமிழில் வெளியான படங்கள் 32 ஆகும். அதில், மதுரையில் 50 நாள் முதல் 84 நாள்வரை ஓடியவை 18 படங்களாகும். மேலும், இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்டு இணைந்து 50+ நாட்களுக்கும்மேல் ஓடிய படங்கள் நான்காகும்.
அந்த பதினெட்டு + நான்கு படங்களின் ஓட்டத்தை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுவது நண்பர்களின் புரிதலுக்காக...
#1954ல்
01. இல்லறஜோதி / சிந்தாமணி /63 நாள்
02. அந்தநாள் / மீனாட்சி / 52 நாள்
03. தூக்கு தூக்கி / செண்ட்ரல் / 52 நாள்
04. எதிர்பாராதது / தங்கம் / 71 நாள்
05. க.ப.பிரம்மசாரி/ தங்கம் & நியூசினிமா இணைந்து 83 நாள்
#1955ல்
06. காவேரி / செண்ட்ரல் / 66 நாள்
07. மங்கையர்திலகம் / மீனாட்சி / 79நாள்
மற்றும் சந்திரா / 50 நாள் = 129 நாள்
08. கள்வனின் காதலி / ஸ்ரீதேவி / 83 நாள்
#1956ல்
09. நான் பெற்ற செல்வம் / கல்பனா / 55 நாள்
10. பெண்ணின் பெருமை / தங்கம் / 77 நாள்
11. அமரதீபம் / நியூசினிமா / 71 நாள் +
கல்பனா / 56 நாள் = 127 நாள்
12. வாழ்விலே ஒருநாள் / கல்பனா / 50 நாள்
13. ரங்கோன் ராதா / ஸ்ரீதேவி / 71 நாள்
#1957ல்
14. மக்களைப்பெற்ற மகராசி / கல்பனா / 64 நாள்
15. வணங்காமுடி / தங்கம் / 78 நாள்
16. புதையல் / ஸ்ரீதேவி / 84 நாள்
17. தெனாலிராமன் / மீனாட்சி & சந்திரா
இணைந்து 70 நாள்
18. தங்கமலை ரகசியம் / தங்கம் / 55 நாள்
19. அம்பிகாபதி / செண்ட்ரல் / 66 நாள்
20. பாக்கியவதி / செண்ட்ரல் / 56 நாள்
21. மணமகன்தேவை / மீனாட்சி &
தினமணி இணைந்து 63 நாள்
22. ராணி லலிதாங்கி / மீனாட்சி &
லட்சுமி இணைந்து 59 நாள்
#1958ல்
#23உத்தமபுத்திரன்
வெளியான நாள் : 07:02:1958
திரையங்கம் : நியூசினிமா
மொத்த இருக்கைகள் : 1358
ஓடிய நாள் : 105 நாள்
மொத்த வசூல் : ரூ.1,27,290.71
வரி நீக்கி வசூல் : ரூ.0,99,858.13
வி.பங்குத்தொகை : ரூ.0,55,966.66
இதே ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்று நூறு நாள்களைக் கடந்த பிற படங்களின் சாதனைப் பட்டியல் அடுத்தடுத்த பகுதிகளில்...
#பின்குறிப்பு :
இப்பகுதியில் இடம் பெறும் திரையரங்குகளின் இருக்கைகள் தொடர்பான தகவல்கள் 1960 களில் வெளியிடப்பட்டிருந்த பேசும்படம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை என் யூகங்களல்ல... அதற்கு ஆதாரமாக அந்த புத்தகத்தில் வெளியான திரையங்கு தொடர்பான செய்தியை கீழே பின்னூட்டத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் கவனிக்கவும்.
தகவல் உதவி. திரு.சிவனாத்பாபு, மதுரை
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...16&oe=5F0EF9DF
Thanks வான்நிலா விஜயகுமாரன்
-
இன்று 16/06/2020 - மதியம் 02.30 p.m. மணிக்கு மெகா 24 தொலைகாட்சி இல்.¶
நடிகர்திலகத்தை - கே. பாலசந்தர் இயக்கிய முதல் படம் " எதிரொலி "- காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், கே.ஆர். விஜயா, லட்சுமி, மேஜர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.
-
-
-
இன்று 16/06/2020- மதியம் 02.30 p.m. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த " ராஜ மரியாதை "!
கண்டு களியுங்கள். !
இப்படத்தில் நடிகர் திலகம், கார்த்திக், ஜீவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
Subject to last minute change
-
-
-
-
சிவாஜியும், கருணாநிதியும் நண்பர்களும் ஆவார்கள், பகைவர்களும் ஆவார்கள்...
ஆம், கையில் காசு இல்லாதபோது இருவரும் அவ்வளவு நெருக்கம், ஏற்கனவே கலைஞர் பவளவிழாவில், அண்ணன் சிவாஜி உருக்கமாக பேசியது அனைத்தும் உண்மை. அதன் பிறகு பராசக்திக்கு பிறகு சிவாஜியின் வளர்ச்சி அபார வளர்ச்சி, கருணாநிதி கொஞ்சம், கொஞ்சமாக திமுக வில் வளர்ச்சி, பதவி ஆசையும், பொறாமை வெறியும் எந்த மனிதனையும் விட்டு வைக்காது என்பதற்கு உதாரணமாக கருணாநிதி, சிவாஜி அவர்கள் அண்ணாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது பிடிக்காமல், எங்கே விட்டுவைத்தால், அண்ணாவுக்கு அடுத்த படியாக திமுக வில் சிவாஜி வந்துவிடுவாரோ என்ற பயம் மற்றும் பொறாமை காரணமாக (இத்தனைக்கும் சிவாஜி அச்சமயம் திமுக வில் உறுப்பினர் கூட கிடையாது, அண்ணாவுடன் அதிக நெருக்கம், அவ்வளவுதான் ) கருணாநிதி மிகவும் கிரிமினலாக , எப்படி ஒருவரை போட்டு தள்ளணுமோ அப்படி போட்டு தள்ளும் மனிதர், உதாரணமாக கட்சியில் இவரை விட சீனியர்கள் 5 பேர் இருந்தாலும், அவர்களை எல்லாம் எப்படி போட்டு தள்ளிட்டு அண்ணா இறந்தவுடன் திமுக தலைமை பொறுப்பை பெறறாரோ?
பிறகு எம்ஜிஆர் எங்கே நாளை நமக்கு கட்சியில் போட்டியாக வந்திடுவாரோன்னு அவரையும் கட்சியிலிருந்து விலக்கினாரோ? பிறகு வை கோ வுக்கு கட்சியில் ரொம்ப மரியாதை இருக்கு பின்னாளில் அவர் மகன் ஷ்டாலினை தலைமைக்கு கொண்டு வர இயலாது என அவரையும் கட்சியை விட்டு விரட்டினாரோ? பிறகு தனது சொந்த மூத்த மகனான அழகிரியையும் விலக்கி இன்று ஷ்டாலினை அவருக்கு போட்டியாக யாரையும் இல்லாமல் செய்து, அவரை திமுக தலைவராக்கி, நாளை அவரது மகன் உதயநிதி யை திமுக தலைவராக கொண்டுவருவதர்கான அனைத்து வேலைகளையும் சாவதற்கு முன் செய்துவைத்து விட்டு சென்றார்.
அதேபோல அன்று உயிருக்கு உயிரான நண்பர் சிவாஜியை எப்படியும் கட்சியில் பெரிய ஆளாக வளர விட கூடாது என திட்டம் தீட்டி, 1956 இல் புயல் நிவாரண நிதியை தமிழகத்திலேயே அதிகமாக வசூல் செய்துகொடுத்த சிவாஜிக்கு பாராட்டு விழாவுக்கு அழைப்பு கொடுக்காமல், எம்ஜிஆரை தூக்கி அந்த விழாவில் அண்ணா முன்னாடி நடத்தி, சிவாஜியை மறைமுகமாக ஓரம் கட்டினார்.
சிவாஜி ஒரு ரோஷக்காரர் என்பதால் அதற்காக மல்லு காட்டாமல் ச்சீ போங்கடா, நீங்களும், உங்க போக்கிரி தனமும் என்று ஒதுங்கி நின்று பிறகு காமராஜர் அழைப்பை ஏற்று பழைய காங்கிரசில் சேர்ந்தார், இது வரலாறு..
ஆனால் சிவாஜி என்ற நல்ல நண்பனுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு அவரால் ஆளாக்கப்பட்ட எம்ஜிஆர் பின்னாளில் அவருக்கே துரோகம் செய்து ஆட்சியை பிடித்தார். இதுதான் தெய்வம் நின்றுகொல்லும் என்பதற்கு சாட்சி. இந்த சம்பவத்திற்கு பிறகு சிவாஜி, கருணாநிதி இடையே இருந்த நட்பு உடைய ஆரம்பித்து விட்டது, கருணாநிதி, சிவாஜி இருவரும் சும்மா பெயரளவுக்குத்தான் பழகி கொண்டனர். பழைய பாசம் இல்லை, பிறகு அண்ணன் மறைந்தவுடன், மனசாட்சி உறுத்தியத்தின் காரணமாக, புதுவை சென்றிருந்த போது அங்கே இருந்த சிவாஜி வெண்கல சிலையை பார்த்து, மீண்டும் மனசாட்சி உறுத்தி சென்னை மெரினா சாலையில் சிலை வைக்கிறேன்னு சொல்லி, அதுவும் காந்திக்கும், காமராஜருக்கு நடுவில் கொண்டுபோய் வைத்து, அதற்கான வில்லங்கங்களை கூட சரி செய்யாமல், பிரச்சனை இல்லாத எத்தனையோ நூற்றுக்கணக்கான இடங்கள் சென்னையில் இருக்கும்போது, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அங்கே கொண்டு போய் அவசரஅவசரமாக வைத்து, ஒரு மிக பெரிய ஈடு, இணையற்ற உலக மகா கலைஞனை, பூப்போன்ற மனம் கொண்ட, ஒரு கள்ளம், கபடமற்ற சிவாஜி என்ற பச்சிளம் குழந்தையை இன்று அச்சிலையை அங்கிருந்து அகற்ற வைக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கி அவரை அவமானப்படுத்தி விட்டார், அதற்கு சிலையே வைக்காமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு அசிங்கமாகி இருக்காது.
வேறு ஏதாவது பிரச்சனை இல்லாத இடத்தில் வைத்துருந்தால், யாரும் வழக்கு தொடர்ந்து இருக்க மாட்டார்கள், அப்படியே தொடர்ந்து
இருந்தாலும், அந்த வழக்கு தோல்வியையே தழுவி இருக்கும், இன்று கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இடம் பெற்ற ஷ்டாலின், தன் தந்தை சிவாஜிக்கு வைத்த சிலையை அரசு எடுக்க முன் பட்டபோது வழக்கு தொடராதது ஏன்?
நமக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ் எல்லா பயலுகளும் எந்த வகையிலும் அக்கறை காட்டுபவன்கள் அல்ல.. சும்மா உதட்டளவில் சிவாஜி ஒரு மாபெரும் கலைஞன், அவரைப்போல ஒரு நடிகனை பார்க்க முடியாது, அது, இதுன்னு வாய் கிழிய பேசுவான்களே தவிற, மற்றபடி எந்த வித அக்கறையும் கிடையாது, அவ்வளுவும் நடிப்பு.
இந்த நன்றிகெட்ட தமிழ்நாடு இப்போது மட்டுமல்ல எப்போதுமே வெளங்காது..
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...3d&oe=5F103925
Thanks Trichy Srinivaasan
-
Sugar doll, மெழுகு பொம்மை என்ற அளவில் தான் கதாநாயகியரின் பங்கு இருந்தது இந்திய படங்களில்...
சலன படங்களில் துவங்கி, டாக்கியாக வளர்ச்சி பெற்று சமீப காலம் வரை கூட இதுதான் கதாநாயகிகள் கதி...
கதாநாயகனை காதலிப்பது, முடிந்த வரை கவர்ச்சி காண்பித்தால் இன்னும் விஷேசம்...
தயாரிப்பாளர், இயக்குனர் கதாநாயகர்கள் ஏன் சினிமா விசிறிகளின் விருப்பமும் கூட இதே ரீதியில் தான்...
விதி விலக்காக ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அன்னை, மங்கம்மா சபதம் என்று சில அத்தி பூக்கள்...
மாற்றி யோசிக்கவும் ஒரு கலைஞர் வந்தார்.. நடிகர் திலகம் என்று அவரை அழைத்தார்கள்... இருந்தாலும் நடிகையர்கள் பங்களிப்பு படங்களில் கவர்ச்சியோடு நில்லாமல் நடிப்பிலும் இருக்க வேண்டும் என்று நம்பியிருக்கிறார் அந்த நல்லவர்...
V.C.கணேசனுக்கு முதல் நாயகி பண்டரிபாய்....
அந்த படத்திலேயே அவருக்கு நல்ல வாய்ப்பு. சீர்த்திருத்தம் என்றால் என்ன, எங்கிருந்து அது துவங்க வேண்டும் என்று நாயகனுக்கு வகுப்பெடுக்கும் வனிதையாக தோன்றினார் பண்டரி பாய்...
அடுத்த படம் அந்த நாள்...
ஜப்பானியரோடு கை கோர்ப்பதில் தேச துரோகம் ஏதுமில்லை என்று எண்ணினான் காதல் கணவன்.
அல்ல, அதுவும் தேச துரோகம் தான் என்று வாதம் செய்கிறாள் மனைவி.. மாற்ற முடியவில்லை மணாளனை..
அவன் துரோகத்தை தடுக்கும் முயற்சியில் அவனையே கொல்லும் நிலை உண்டாகிறது...
எந்த நடிகனுக்கு வரும் துணிவு, இந்த வேடத்தில் நடிக்க?
துணிவு இருந்தது சிவாஜி கணேசனுக்கு...
வெண் திரையில் அந்த நாளும் வந்தது...
பத்மினி ! சிறு சிறு நடன காட்சிகளில் சகோதரிகளுடன் சேர்ந்து படங்களில் வருவார்.....
நடிகர் திலகத்தோடு இணைந்தார்... அத்தனை படங்களிலும் அவருக்கு நல்ல வேடங்கள்...
எதிர்பாராதது, தெய்வ பிறவி என்று நல்ல நல்ல படங்கள்..... சம வாய்ப்பு பத்மினிக்கு... யாரோடு? நடிகர் திலகத்தோடு.....
தில்லானா மோகனாம்பாள் !
பேரே எனக்கு பிடிக்க வில்லை ! மாற்றுக, சிக்கல் சண்முக சுந்தரம் என்று சொன்னாரில்லை சிவாஜி கணேசன்...
தில்லானா மோகனாம்பாளாகத்தான் வெளியானது படம்... வெற்றியும் பெற்றது....
பானுமதியோடு சில படங்கள் !
அறிவாளி, அம்பிகாபதி, தெனாலி ராமன் என்று...
ரங்கோன் ராதாவும் தான்.
படம் பார்க்க வரும் தாய்குலத்தின் ஒட்டு மொத்த அனுதாபமும் ரங்கோன் ராதா மீதுதான் ....
அத்தனை பேர் சாபமும் நடிகர் திலகத்திற்கு தான்...
காரணம், கொடுமைக்கார கணவன்.
மட்டுமல்ல, சமூகம் குறித்து அக்கறை இல்லா கள்ள சந்தை முதலாளி...
இருந்தும் படுத்து விடவில்லை படம்..பாராட்டுக்கள் குவியத்தான் செய்தது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு...
நடிகையர் திலகம் என்றே அவருக்கு பெயர்.. வேறு எந்த நடிகைக்கும் வழங்க பெறாத சிறப்பு....
சாவித்திரி !
பாசமலர், கை கொடுத்த தெய்வம், நவராத்திரி எல்லாம் பின்னாட்களில்...
முதலில் பெண்ணின் பெருமைதான்..
களிமண்ணாகத்தான் கட்டிவைக்கிறார்கள். அந்த களிமண் கணவனை உயர்த்தி ஜமீன் மக்கள் வணக்கத்திற்கு உரியவனாக மாற்றும் பெண்குல பெரு விளக்கு சாவித்திரி, அந்த படத்தில்...
நடிகர் திலகத்திற்கோ வில்லன் வேடம்...
தீய வழக்கங்கள் அனைத்திற்கும் உறைவிடம்...
அனுதாபத்திற்குரிய அண்ணனை அடித்து உதைக்கும் தம்பி...
மிக அருமையான நடித்தார் நம் திலகம்... அந்த வில்லன் வேடத்தில்...
மூன்று முடிச்சு ரஜினி, ஆசை பிரகாஷ் ராஜ் இரண்டு பேரும் பெண்ணின் பெருமை யில் நம் திலகத்தின் நடிப்பை நிறையவே imitate செய்தனர் அந்த படங்களில்...
பின் இருக்கவே இருந்தது பாசமலரும், நவராத்திரியும்.....
காட்சிக்கு காட்சி சம வாய்ப்பு இரு திலகங்களுக்கும்....
இன்றும் யார் performanc மேல் என்று கண்டவர் எவரும் விண்டிலர்....
சாந்தி ! படத்திற்கு பெயர்...
விஜயாகுமாரி ஏற்ற பாத்திரத்தின் பெயர் சாந்திதான்... ஆனால் வாழ்வில் சாந்தியே கிட்டாத பரிதாபத்திற்குரிய பாவை சாந்தி ..
அந்த படத்தில் கதாநாயகன் நடிகர் திலகம்...
அவருக்கும், விஜயகுமாரிக்கும் போட்டி நடிப்பில்...
ஏன், பச்சை விளக்கில் கூட அப்படிதான்...
மனப்புழுக்கம் மருந்துக்கு கூட இருந்ததில்லை அவருக்கு....
அந்த திலகத்திற்கு ஆஸ்தான நாயகிதான் அபிநய சுந்தரி !
ஆனாலும் அந்த திலகத்தின் படங்களில் அவர் sugar doll தான்....
பாக பிரிவினை, ஆலய மணி, புதிய பறவை, இருவர் உள்ளம்..........
இருவர் உள்ளம் படத்தில் ஒரு முக்கிய காட்சி ! சரோஜாதேவி, சிவாஜி இருவர் மட்டுமே அந்த காட்சியில்.....
சரோஜாதேவி தன்னை மிஞ்சி விட கூடாது என்று அருமையாக நடித்தாராம் நடிகர் திலகம்..
Cut சொல்லி விட்டு வந்த படத்தின் இயக்குனர் L.V.பிரசாத் சிவாஜி, நன்றாக செய்தீர்கள் இந்த காட்சியில்.... ஆனால் இந்த காட்சியில் மிளிர வேண்டியவர் சரோஜாதேவி. அப்படி இருந்தால் தான் படத்திற்கு ஜீவன், வெற்றி...
நீங்கள் அவரை outsmart செய்தால் படத்தின் ஜீவன் செத்து விடும் என்றாராம்.
வேறு எவராக இருந்தாலும் மாற்று டைரக்டரை என்றிருப்பார்கள்...
ஆனால் நடிகர் திலகம் அடுத்த take இல் அபிநயசரஸ்வதிக்கு வழி விட்டு அடக்கி வாசித்தாராம்....
எவருக்கு வரும் இந்த உயர்ந்த பண்பு?
உத்தம குணம்...
எங்கிருந்தோ வந்தாள் !
அப்படி வந்தவள் மாற்றியமைக்கிறாள் மனநலம் குன்றிய ஒரு மகாகவியின் வாழ்வை.....
தன் சீலத்தை, வாழ்வை எல்லாமே பணயம் வைக்க நேர்கிறது அந்த சீரிய பணியில்...
ஒரு விதத்தில் பார்த்தால் சகுந்தலையின் சாயல் தான் ! ஆனால் சகுந்தலையை விட உயர்ந்த குணம், மனம் அந்த எங்கிருந்தோ வந்தவளுக்கு..... ஜெயலலிதாவிற்கு கிடைத்த மிக மிக அருமையான பாத்திரம் அது...
புன்னகையுடன் ஏற்று கொண்டார் நடிகர் திலகம்......
பாட்டும் பரதமும், அவன்தான் மனிதன் படங்களிலும் அருமையான வேடங்களே ஜெயலலிதாவிற்கு... இவரும் எதிர்முகாமில் இருந்து வந்தவர்தான்..
அந்த முகாமில் அவருக்கு வாய்த்ததெல்லாம் ஜிகினா உடையும், குளுக்கு நடனங்களும் தான்...
K.R.விஜயா.....
நெஞ்சிருக்கும் வரை, சொர்க்கம், தங்க பதக்கம் ராமன் எத்தனை ராமனடி என்று அவருக்கும் வாய்த்த படங்கள், வேடங்கள் அருமைதான்....
முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன் பாடலில்
இன்று மட்டும், நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை என்று தீ கக்குவார் விஜயா... குன்றி, குறுகி நிற்பார் நடிகர் திலகம்...
வாணி ராணியில் வாணிஸ்ரீ தான் எல்லாமே..
முத்து ராமனுக்கும் நடிகர் திலகத்திற்கும் வித்தியாசமே இல்லை இந்த படத்தில்... இருந்தும் பார்த்து போ ! ஏய் ! பார்த்து போ ! பாடல் ஒன்றிலேயே ரசிகர்களை திருப்தி செய்து விட்டார் அவர்.
வசந்த மாளிகையிலும் வாணிஸ்ரீக்கு சம வாய்ப்பு, யாரோடு? நம் திலகத்தோடு....
வழங்கி விட்டு போட்டியில் வென்றார் நடிகர் திலகம்.....
முன்னாள் extra நடிகர்கள் பேச வேண்டியதில்லை நடிகர் திலகத்தின் மாண்பை....
பெரும் ரசிகர்கள், வாழ்வின் சகல நிலைகளிலும் இருக்கும் உயர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள் லட்சோப லட்சம் பேர். அவர்கள் பேசுகிறார்கள் நடிகர்திலகம் பற்றி... பெருமிதத்தோடு, கர்வத்தோடு,
மகிழ்ச்சியோடு, மலர்ச்சியோடு.
வேறென்ன வேண்டும் நமக்கு?
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...83&oe=5F0EB5E3
Thanks Vino Mohan
-
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி4
கம்பூன்றி நடந்துவரும் வயதான ஒருவரைப் பார்த்துவிட்டு இவர் இளமைப் பருவத்திலும் இப்படித்தான் கோலூன்றி நடந்திருப்பாரோ என்று நினைப்பது எத்தனைப் பெரிய அபத்தமோ, அப்படித்தான் அபத்தத்திலும் அபத்தம் நடிகர்திலகத்தின் இறுதிக்கால படங்களின் ஓட்டத்தை வைத்து அவர் புகழேணியின் உச்சத்தில் நின்று கோலேச்சிய காலத்திலும் இப்படித்தான் ஓடியிருக்குமோ என்று நினைத்துக் கொள்வதும்.
இன்றைக்கு பெரும்பான்மை திரைஆர்வலர்களின் எண்ண ஓட்டம் அப்படியாகத்தான் இருக்கிறது. அவர்களின் சிந்தை முழுதும் மசாலா ஹீரோக்கள்தான் திரையுலக மகாராஜாக்கள் என்று! அவர்களைப் போன்றவர்களுக்குத்தான் திலகத்தின் இந்த சாதனைப்பதிவுகள்.
தமிழ்த்திரையுலகில் நடிகராகவும், நட்சத்திர நாயகராகவும் மின்னிய முதலும் கடைசியுமான நடிகர் நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே.
இவர் ஒருவருக்குத்தான் சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், காதல் பாடல்கள் இல்லாவிட்டாலும், உடல் ஊனம்போல் இருந்தாலும், ஏன்... ஆண்மையின் அடையாளமாய் கருதும் மீசையே இல்லாவிட்டாலும் படங்கள் வெற்றி நடையிட்டன. படம் முழுதும் படுத்துக் கொண்டே நடித்தாலும் நூறுநாள் ஓடின. வசூல் முரசும் கொட்டின. மற்றவர்களை இப்படியெல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அப்படி வெல்வதற்கான அறிகுறியும் இல்லாத ஒன்று.
அன்றைய சராசரி நாயகர்களிலிருந்து விலகி, தனக்கென்று தனிப்பாதையிட்டு அதில் வெற்றிநடையிட்டவர்தான் நடிகர்திலகம்.
அன்றைக்கு ஆண்டுக்கு முப்பது நாற்பது படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் இவர் நாயகனாக நடித்தப் படங்களாகத்தான் அமைந்திருந்தன. ஆம். சினிமாவும் சிவாஜியும் ஒன்றாக வளர்ந்த காலமது.
#அதுஒரு_பொற்காலம்!
தமிழ்த்திரை வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நாயகனாக நடித்ததில் இவரே முதலாமவர் என்பது மட்டுமல்ல... ஒரே ஆண்டில் அதிக 100 + நாள் ஓடிய வெற்றிப்படங்களைத் தந்ததிலும் இவரே முதல்வராகவும் திகழ்ந்தார். இன்று வரையிலும் திகழ்கிறார். சான்றாக,
1958ல் நடிகர்திலகம் நடித்த மொத்தத் திரைப்படங்கள் தமிழில் எட்டு; தெலுங்கில் ஒன்று. அவ்வெட்டுத் தமிழ்ப் படங்களில் 100 நாட்களைக் கடந்தவை 5.
உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம், சபாஷ்மீனா மற்றும் அன்னையின் ஆணை ( திருச்சி நண்பர்கள் இதனை உறுதிப் படுத்தவும்)
தமிழ்த்திரையுலகில் ஒரே ஆண்டில் (1958) ஐந்து நூறுநாள் படங்களைத் தந்த முதல் நாயகர் இவரே.
இதில் மதுரையில் மூன்று படங்கள் நூறு நாள்களுக்கு மேலும், இரண்டு படங்கள் 70 நாள்களையும் கடந்தன.
#அன்னையின்ஆணை கல்பனா 70 நாள்
#காத்தவராயன் சிந்தாமணி 84 நாள்
#உத்தமபுத்திரன் நியூசினிமா 105 நாள்
#பதிபக்தி கல்பனா 102 நாள்
#சம்பூர்ணராமாயணம் ஸ்ரீதேவி 165 நாள்
மற்ற மூன்று படங்களும் மதுரையைப் பொறுத்தவரை 50 நாள்களுக்குக்கீழ்தான் ஓடின.
இன்றைய நான்காம் பகுதியில் இடம்பெறும் வசூல் பட்டியலின் திரைப்படங்கள் பின்வருவன...
#பதிபக்தி
வெளியான நாள் : 14 மார்ச் 1958
திரையரங்கம் : கல்பனா
ஓடிய நாள் : 102 நாள்
மொத்த வசூல் : ரூ.1,34,748.81
வரி நீக்கிய வசூல் : ரூ.1,13,015.40
வி.பங்குத்தொகை : ரூ. 61, 005.42
#சம்பூர்ணராமாயணம்
வெளியான நாள் : 14 ஏப்ரல் 1958
திரையரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 165 நாள் ( ஷிப்டிங் முறையில் மதுரையில் 250 நாள்களுக்கும்மேல் ஓடியது)
மொத்த வசூல் : ரூ. 1,81,592.76
வரி நீக்கிய வசூல் : ரூ.1,35,701.41
வி.பங்குத்தொகை : ரூ.77, 914.57
.......தொடரும்
மதுரை தகவல் உதவி : திரு. சிவனாத்பாபு
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...bc&oe=5F10B543
Thanks Nilaa
-
-
பெருந்தலைவர் காமராஜர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர்.. கக்கன் அவர்கள்.. காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்.. அந்த சமயத்தில் கட்சி கூட்டம் காலை 10 மணிக்கு.. எல்லோரும் வந்தாச்சு.. தலைவர் வரவில்லை.. 10 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.. எல்லோரும் காரணம் கேட்கும் முன்னரே பஸ் தாமதமாகி விட்டது.. மன்னிக்கவும் என கைகூப்பி வருத்தம் தெரிவிக்க.. அருகிலிருந்து அய்யா சிவாஜிகனேசன் அவர்கள் மெதுவாக கக்கனிடம் பெரியவர்( காமராஜர்) 10 நிமிடம் முன்னாடியே வந்தாச்சு என சொல்லி இனிமேல் தாமதமாக வருவது தலைவனுக்கு அழகல்ல என்று சொன்னதோடு நில்லாமல் உடனே டிவிஎஸ் கம்பெனிக்குசென்று ஒரு அம்பாசடர் கார் வாங்கி கொடுத்திருக்கிறார் சிவாஜி அவர்கள். நான் தனி ஆள் எனக்கு கார் ஓட்ட தெரியாது. தினமும் பெட்ரோல் போட பணமில்லை என காரை ஏற்க மறுத்திருக்கிறார் கக்கன் அய்யா. சிவாஜி இது கக்கனுக்காக அல்ல காங்கிரஸ் தலைவனுக்கு.. அவர் தாமதமாக வருவது தவறான உதாரணம் என்றார்!
இப்போதான் நான் தலைவர் இல்லையே எனக்கெதுக்கு கார் என தெரிவித்தாராம் போலீஸ் மந்திரியாக இருந்த கக்கன் அய்யா... எப்படி தூய்மையாக அரசியல் செய்திருக்கிறார்கள் பாருங்கள்.. அதனால் தான் அன்று தேசியகீதம் படம் எடுக்க முனைந்தேன்.. கக்கன் அய்யாவை நினைவு கொள்வோம் இளைஞர்களே... நன்றி.
நடிகர் சேரனின் ட்விட்டர் பதிவு!
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...87&oe=5F13BECF
Thankss Venkat Vpt
-
இன்று (22-06-2020)
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைப்பட மழை!!
1) புதிய பறவை - காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
2) திருமால் பெருமை - காலை 10 மணிக்கு ஜெயா டிவியில்,
3) நல்லதொரு குடும்பம் - பகல் 12 மணிக்கு முரசு சேனலில்,
4) தாவனிக் கனவுகள் - பிற்பகல் 1:30 க்கு ஜெயா டிவியில்,
5) அன்பே ஆருயிரே- பிற்பகல் 2 மணிக்கு கேப்டன் டிவியில்,
6) ராஜபார்ட் ரங்கதுரை - மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்,
7) நல்லதொரு குடும்பம்- இரவு 7 மணிக்கு மீண்டும் முரசு சேனலில்,
8) எங்க மாமா - இரவு 7:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,
Thanks Sekar
-
சென்ற ஆண்டு இதே நாளில் தமிழகமெங்கும் டிஜிட்டலில் மறு வெளியீடாகி வசூல் சாதனை படைத்த
" வசந்த மாளிகை "
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f0&oe=5F163B62https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ea&oe=5F1544E9
Thanks Sekar
-
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#சாதனைப்பட்டியல்
#பகுதி5
#1959ல்
நடிகர்திலகம் நடித்து வெளியான மொத்தப்படங்கள் ஆறு. அதில், நூறு நாள்களைக் கடந்த திரைப்படங்கள் மூன்றாகும். மதுரையில் நூறு நாள்களைக் கடந்த படங்கள் இரண்டு. அந்த இரு படங்களுமே வெள்ளிவிழாவைக் கடந்து வெற்றி நடைபோட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று படங்கள் 50 நாட்களைக் கடந்த ஓடியவை.
அதன் விவரம் வருமாறு...
#தங்கப்பதுமை 10:01:1959/ லட்சுமி/94 நாள்.( இந்தப்படம் மதுரையில் அரங்கம் மாற்றி அரங்கம் இணைந்து வெள்ளிவிழா ஓடியது குறிப்பிடத்தக்கது)
#நான்சொல்லும்ரகசியம்/07:03:1959/ஸ்ரீதேவி/64 நாள்
#வீரபாண்டியகட்டபொம்மன்/16:05:1959/நியூசினிமா/181 நாள்
#மரகதம்/21:08:1959/தங்கம்/67நாள்
#பாகப்பிரிவினை/31:10:1959/சிந்தாமணி/216 நாள்
தமிழ் சினிமாவில் முதல் #டெக்னிகலர் திரைப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் தென்னிந்தியாவிலேயே வெள்ளிவிழா ஓடிய முதல்படமாகும். பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு.
சரவணா பிலிம்ஸ் தயாரிப்பான பாகப்பிரிவினை நடிகர்திலகம் நடித்து மதுரையில் அதிக நாள்கள் ஓடிய திரைப்படமாகும். இது மூன்று லட்ச ரூபாய்க்குமேல் வசூலித்த கருப்பு வெள்ளைப் படமாகும்.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழாப்படங்கள் என்ற வரலாற்றுச் சாதனையை தியாகராஜ பாகவதற்குப்பின் நடிகர்திலகம் படைத்தது இந்த ஆண்டில்தான்.
இவ்விரு படங்களைப் பற்றிய வசூல் சாதனைகள் நிழற்படத்தில் காண்க...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...58&oe=5F1802C2https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a3&oe=5F17D839
Thanks Nilaa
-
-
-
எம்ஜிஆர் இன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள நடிகர் திலகம் ரசிகர்களின் உதவியை நாடிய எழுத்தாளர் தமிழ்வாணன்,
இந்தச் செய்தியை சுவைபட "மறக்க முடியாத திரைப்பட தயாரிப்பு அனுபவங்கள்" என்ற நூலில் திரு மின்னல்( உதுமான் முகையுதீன்) அவர்கள் எழுதி இருக்கிறார்,
திரு மின்னல் அவர்கள் சினிமா துறையில் நிறைய அனுபவங்களை கொண்டவர்,
'கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர், 'துணிவே துணை' என்று சிறுவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் ஊட்டிக் கொண்டிருந்தவர்,
1970 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பார்ப்பதற்காக நான், தமிழ்வாணன் மற்றும் சிலர் சென்றிருந்தோம், வழியில் ஹாங்காங்கில் இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படக்குழுவினரும் தங்கியிருந்தனர், நாங்கள் சென்ற மறுநாள் எம்ஜிஆர் அங்கு வந்தார், அவரை சந்தித்துப் பேசலாம் என்று அவரது அறைக்கு தமிழ்வாணனை அழைத்துச் சென்றேன்,
' வாங்க, வாங்க என்று வரவேற்ற எம்ஜிஆர் பத்திரிக்கையாளர்களெல்லாம் எங்கே இவ்வளவு தூரம்?' என்று விசாரித்தார், ஜப்பான் செல்லும் விவரம் கூறினோம். இப்படி சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது , தமிழ்வாணன் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக , "நீங்கள் என்னைப் பற்றி 'தினமணிக் கதிரில் மோசமாக பதிலெழுதியிருக்கிறீர்களே, எதற்காக அப்படி எழுதினீர்கள்?" என்று கேட்டார், அந்த சமயம் தினமணி கதிரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு எம்ஜிஆர் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.
ஓர் அன்பர் கேட்ட கேள்விகளுக்கு "தமிழ்வாணன் அவர்கள் நேரில் பழகுவதற்கு நல்லவர், பின்னால் பேசுவதில் வல்லவர்" என்று பதில் எழுதியிருந்தார்,
இந்தப் பதிலால் தமிழ்வாணனுக்கு ஏற்பட்ட கோபத்தில், எம்ஜிஆரிடம் மேற்கண்டவாறு ஆத்திரத்தோடு கேட்டதும், எம்ஜியாருக்கு கோபம் உச்சிக்கு ஏறி விட்டது, சட்டென்று எழுந்த அவர், தமிழ்வாணனின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு அறைவதற்கு கையை ஓங்கி விட்டார், அருகிலிருந்த நானும் சித்ரா கிருஷ்ணசாமி என்பவரும் குறுக்கே விழுந்து இருவரையும் பிரித்து விட்டோம்.
"ஒரு காரணமும் இல்லாமல், என்னை மலையாளி என்றும், வயதானவன் என்றும் மோசமான அரசியல்வாதி என்றும் பலவாறாக கீழ்த்தரமாக எழுதுகிறாய், நான் உன்னைப் பற்றி அப்படியொன்றும் கீழ்த்தரமாக எழுதவில்லையே" என்று சப்தம் போட்டார் எம்ஜிஆர்.
சிறிது நேர சலசலப்புக்குப் பின் "நான் இதைப்பற்றி (அதாவது இந்த வன்முறை பற்றி ) எழுதப் போகிறேன் என்றார் தமிழ்வாணன்.
" தாராளமாக எழுதலாம், நானும் எழுதப் போகிறேன்" என்றார் எம்ஜிஆர்.
பின்னர் ஜப்பான் சென்றோம், தமிழ்வாணன் வீறாப்பாகப் பேசி விட்டாரே தவிர மனதுக்குள் ஒரு கிலி பிடித்துக்கொண்டது, ஊருக்குப் போனால் ஆள் வைத்து அடித்து விடுவாரோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டது, நீங்கள் போய் எம்ஜிஆரிடம் எப்படியாவது பேசி அவருடைய கோபத்தைப் போக்கி, சமாதானம் பண்ணி வையுங்கள்" என்று என்னைக் கேட்டுக் கொண்டார்,
படப்பிடிப்பு முடிந்து மாலை வேளைகளில் எம்ஜிஆர் இந்தியன் பெவிலியனில் உள்ள கேண்டீனுக்கு டிபன் சாப்பிட வந்து விடுவார், நானும் அங்கு சென்று அவரிடம்.தமிழ்வாணன் விஷயத்தை பற்றி பேசியவுடன் எம்ஜிஆர் மிகவும் கோபப்பட்டதால் அந்தப் பேச்சை தொடரவில்லை,
ஜப்பான், பயணத்தை முடித்துக்கொண்டு ஹாங்காங், பாங்காங், சிங்கப்பூர் வந்து சென்னை திரும்பினோம், ஒவ்வொரு நாட்டில் தங்கும் போதும், எம்ஜிஆர் தன்னை ஆள் வைத்து அடித்து விடுவார் என்பதைப் பற்றியே என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார் தமிழ்வாணன், நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவருடைய பயம் தெளியவில்லை.
சென்னை வந்த பின்பும், தமிழ்வாணன் என்னை பலமுறை தொடர்பு கொண்டு இது குறித்தே பேசினார்.
" நடிகர் திலகம் சிவாஜியிடம் போய் இதைச் சொல்லி, அவரது ரசிகர்களை எனக்கு பக்கபலமாக திருப்ப ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா " என்று கேட்டார், நான் இதுபற்றி நடிகர் திலகம் சிவாஜியை சந்தித்து ஹாங்காங்கில் நடந்த சம்பவத்தைச் சொல்லி, தமிழ்வாணனைப் பாதுகாக்க ஏதாவது செய்யலாமா என்று கேட்டேன், அவர் "இது அவர்கள் இருவருக்குமிடையேயான தனிப்பட்ட விஷயம், இதிலெல்லாம் நான் தலையிட மாட்டேன்" என்று சொல்லி விட்டார்,
இருப்பினும் மறுநாள் நடிகர் திலகம் சிவாஜிக்கு நெருக்கமான பிரமுகர் மூலம் முயற்சி செய்தோம், ஆனாலும் அவர் திட்டவட்டமாக தலையிட முடியாது என மறுத்துவிட்டார்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f0&oe=5F189B69
Thanks Sekar