Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
கலைஞரின் பிறந்தநாள் பதிவுகளின் முத்தாய்ப்பாக, நடிகர்திலகத்தின் உணர்ச்சி பொங்கும் உரை கண்களில் நீரை வரவழைத்தது. அரசியல் எல்லைகளைத்தாண்டி எப்பேற்பட்ட நட்புணர்வு அவர்களிடையே இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
அதே சமயம் ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல, அறுபதுகளின்போது (குறிப்பாக 67 தேர்தலின்போது), தங்களிடம் இருந்த 'இன்னொரு சக்தி'யின் உதவியுடன் நமது நடிகர்திலகம் எப்படியெல்லாம் கேலி செய்யப்பட்டார், அவமானத்துக்குள்ளாக்கப் பட்டார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அந்த இன்னொரு சக்தியே அவருக்கு சத்ருவான போதுதான் உண்மையான நட்பின் மகிமை அவர்களுக்குப் புரிந்தது. அதே சமயம் அந்த இன்னொரு சக்தியுடன் நடிகர்திலகம் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய நேர்ந்ததெல்லாம், தான் சார்ந்திருந்த கட்சிக்காக சகித்துக்கொண்ட காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறில்லை. அதைவிட இவர் தனிக்கட்சி துவங்கி அவரது துணைவிக்கே துணையாகப்போனது மகா பெரிய கொடுமை.
'தங்கை' படத்தின் விளம்பரங்கள் அருமை. குமுதம் பத்திரிகைக்கு விளம்பரத்திலேயே கொடுத்த சூடு, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விமர்சிப்போருக்கு நல்ல பாடம்.
'தியாகம்' 100வது நாள் விளம்பரத்தில் விகடன், இதயம் பத்திரிகைகளுக்கு பாலாஜி கொடுத்த சாட்டையடி நினைவிருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது தங்கையிலேயே அதைத் துவங்கி விட்டார் என்று தெரிகிறது.
அரிய ஆவணங்களை அள்ளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.