http://i50.tinypic.com/2nvb3i0.jpg
Printable View
வினோத் சார்,
பரமபிதா படம் ஆரம்ப நிலையிலேயே நின்று போனதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் படம் பாதி வளர்ந்த நிலையில் நின்று போனதாக ஒரு செய்தி நான் படித்திருக்கிறேன். வேறு சில பரமபிதா படத்தின் புகைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் சேகரித்து வைக்க இயலவில்லை. இது குறித்து மேலும் விவரங்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அதே போல நவரத்தினம் படத்தில் மானும் ஓடி வரலாம் என்ற பாடல் இசைத்தட்டில் மட்டும் உண்டு படமாக்கப்படவில்லை என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்தேன். ஆனால் அந்த பாடல் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். பின்னர் அது நீக்கப்பட்டிருக்கலாம். அந்த பாடல் காட்சியை பார்த்தது எனக்கு நன்றாக நினைவு உள்ளது.முடிந்தால் அந்தக் காட்சியை பதிவு செய்யவும்.
சமீபத்தில் etvல் மக்கள் திலகத்தின் சர்வாதிகாரி தெலுங்கு படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திலகம் சொந்தக் குரலில் தெலுங்கில் பேசியிருந்தது பரவசமளித்தது. வலைத்தளங்களில் கிடைக்கவில்லை. நண்பர்கள் எவரிடமேனும் இருப்பின் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி
நேற்று இரவு தந்தி டிவியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களது பேட்டி இடம்பெற்றது. அப்போது மக்கள் திலகத்தால் வளர்க்கப்பட்ட நீங்கள் ஏன் அவரது கட்சியில் இணையவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன் அவர்கள் "Second BA" முதல் என்னுடைய படிப்பு செலவுகளை எம்.ஜி.ஆர் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டார். அடிக்கடி அவரது பிளைமவுத் காரை எனது கல்லூரிக்கு அனுப்பி என்னை அழைத்துக் கொள்வார். அவரது வீட்டில் தான் அதிக காலம் செலவளிப்பேன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 12 செட் பேண்ட் சட்டை எடுத்துக் கொடுப்பார். என் தந்தையிடம் இனி அவன் என் பையன் என்று கூறி அழைத்து வந்துவிட்டார். நான் சிறந்த வழக்கறிஞராகத் திகழவேண்டும் என அவர் விரும்பினார். தேர்தலில் கூட அவரை மீறி தான் பங்கெடுத்தேன். சட்டசபையில் எதிர்பாராமல் நேருக்கு நேர் சந்திக்கு நிலை ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர் என்னிடம் எனது ரசிகர்கள் எல்லாம் மந்திரிகளாக இருக்கிறார்கள். என் மடியில் வளர்ந்த நீ ஏன் என்னுடன் இருக்கக் கூடாது என கேட்டபோது கலைஞர் என் தலைவர் நீங்கள் என் வணக்கத்திற்குரியவர். என்னால் என் கொள்கையிலிருந்து மாற இயலாது என நான் தெரிவித்தேன். எம்.ஜி.ஆர் என்னை கட்டி அணைத்துக் கொண்டு இப்படியே இரு எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது எடுத்துக் காட்டு. சிறிது கூட கோபமில்லாமல் தன்னால் வளர்க்கப்பட்டவர் எதிரணியில் இருக்கும் போதும் கட்டியணைத்து வாழ்த்தியது எப்படி சொல்வது . எம்.ஜி.ஆரால் மட்டுமே இது சாத்தியம்.
நேற்றிரவு சன்லைப் சானலில் கலையரசி படத்திலிருந்து கலையே உன் எழில் மேனி கனியாவதேன் பாடல் ஒளிபரப்பப்பட்டது. எம்.ஜி.ஆரின் நடிப்புற்றல் அற்புதமாக வெளிப்பட்ட பாடல் காட்சி. நொடிக்கு நொடி மாறும் முக பாவங்கள். சோகம், பரவசம் ஆகிய உணர்ச்சிகளை மிக அற்புதமாக காட்டியுள்ளார். இந்தப் பாடல் காட்சியை பார்க்கும் போது அன்பே வா படத்தில் வரும் சோக காட்சி நினைவுக்கு வந்தது. அற்புதமான உடை அலங்காரத்தில் இருப்பினும் முகத்தில் மட்டும் உச்ச கட்ட சோகத்தைக் காட்டி குரல் தழுதழுக்க அசோகனிடம் பேசும் அந்தக் காட்சி எம்.ஜி.ஆரின் இயற்கையான சோக நடிப்புக்கு உச்சகட்ட எடுத்துக்காட்டு. அற்புதம் . கலையரசி பாடல் காட்சியும் அது போலத்தான். மிக அற்புதமான உடை அலங்காரம். கலைந்த தலை, அழுத கண்கள், அதிகபட்ச பின்னணி இசைக்கருவிகள் ... இப்படி எதுவும் இன்றி சோகத்தை நம்மையும் தொற்றிக்கொள்ளச் செய்திருக்கிறார் மக்கள் திலகம்.
posting sum more pics from bangalore and dindigul
ravichandran sir excellent images u r uploading.... wonderful