காத்து கருப்பு எதுவும் அண்டாது என்பார்களே...அது இது தானோ...>
காத்து கருப்பு எதுவும் அண்டாது என்பார்களே...அது இது தானோ...>
http://www.youtube.com/watch?v=P0OHD...yer_detailpageQuote:
பல ஊர்கள் பயணப்படும் ஆரம்பக்காட்சி மிக புத்திசாலித்தனமாகக் காட்டப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், மதுரைக் கோவில், ஆலப்புழை படகுப் போட்டி என்று பல கோப்புக் காட்சிகள். அதன் மேலேயே அதை ரசிக்கும்/கண்டு வியக்கும் சிவாஜியின் முகபாவங்கள் என்று காட்சியின்-மேல்-காட்சி பதிக்கும் உத்தி. இது இதற்கு முன்னர் (1958) கையாளப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.
காத்தவராயன்
தஞ்சைப் பெரியகோவிலை முதன்முதல் பார்க்கும் ஆச்சரியம் கலந்த வியப்பான ஆனந்த வெளிப்பாட்டை அருமையாகப் பிரதிபலிப்பார்
வடநாட்டு யாத்திரையில் மினார்களும், மசூதிகளும் மறக்காமல் நினைவுபடுத்தப்படும்.
ஜி.ராமனாதனின் பின்னணி இசை மாநிலங்களின் யாத்திரை ஷேத்திரங்களுக்கேற்ப அற்புதமாய் மாறி மகிழ்விக்கும். முக்கியமாக படகுப் போட்டின் போது அந்த கேரள வாசனை வாத்தியக் கருவிகளின் பங்குகள்
சிவன் பார்வதி நடனத்தில் புகழ் பெற்ற கோபி கிருஷ்ணா, குமாரி கமலா
சண்டையினூடே சிறுவன் பார்த்திபன் பெரியவனாய் வாள் பிடிப்பது உத்தமபுத்திரனிலேயே உண்டு.
அவர் பெயர் பயில்வான் அமீர் அலி. நிஜ மல்யுத்த வீரர்.Quote:
சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன்.
சிவாஜியே ஒரு நிஜ மல்யுத்த வீரரோ என்று நினைக்கத் தோன்றும்.
தங்கவேலு அற்புதம். அடித்துவிட்டு ஓடும் சிவாஜியைப் பிடிக்க ஆணையிடுவார். பிடிடா... பிடிடா....
அடிதாங்க மாட்டாமல் உடம்பைத்தான் பிடித்து விடச் சொல்லுகிறார் என்று தங்கவேலு உடம்பை அமுக்கிவிடும் அதிபுத்திசாலி அஸிஸ்டென்ட். வயிறு வலிக்காது!?
இன்னொன்று
தன்னைச் சுற்றி மந்திர வளையம் போட்டு கிழ வேடம் தரித்த சிவாஜி மரத்தின் கீழ் அமர்ந்து ஆரியமாலையை ஜெபிக்க, தளபதி தங்கவேலுவின் ஆட்கள் மாயாசக்தியின் மகிமையினால் கோட்டைத் தாண்ட முடியாமல் குத்தாட்ட நாட்டியம் வரிசையாக ஒருவர் பின்னாக ஒருவர் ஆட, அதைக் கண்ட தங்கவேலு அதிர்ச்சியுற்று அந்த நேரத்திலும் ஒருவன் ஆடுவதைக் கவனித்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று தன்னை மறந்து certificate கொடுப்பது.
ஒவ்வொரு காட்சியும் ரம்மியம். மந்திரக் கோலில் கட்டுண்டது போல காட்சிகளில் கட்டுண்டு போகிறோம். சுவையான அதே சமயம் திகட்டாத பணியாரம். சுவாரஸ்யம்....சுவாரஸ்யம்.
இது சிவாஜி படமல்ல...சிவாஜிக்கு ஒரு(அம்சமான)படம்.
நடிகர் திலகம் தன் முதல் 50 படங்களிலேயே மகத்தான நடிப்புத் திறனை வாரி வழங்கியுள்ளார். குறிப்பாக காத்தவராயன் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் குறைந்த பட்சம் 50 முறையாவது பார்த்தால் தான் அதனை முழுமையாக அனுபவிக்க முடியும், உணர முடியும். துரதிருஷ்ட வசமாக, நம் நண்பர்கள் பெரும்பாலானோர் இப்படத்தைப் பற்றி தங்கள் கருத்தைப் பதிவிடாதது வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. பிரபுராம் சார் இப்படத்தை உணர்ந்து எழுதியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கது. முதல் வேலையாக இந்த 50 படங்களில் பெரும்பாலானவற்றை நமது நண்பர்கள் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பிட்ட சில படங்களுக்குள் தங்கள் ரசனைகளை அடக்கி விடாமல் அநைத்துப் படங்களின் நுணுக்கங்களையும் ஆழ்ந்து அனுபவித்து எழதுங்கள்.
வாசு சார், காத்தவராயன் திரைப்படம் நம்முள் எந்த அளவிற்கு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதற்கு தங்களுடைய சமீபத்திய பதிவே சாட்சி. இது போல் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தாங்கள் விரிவாக எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
வாசு,
நிஜமாகவே வருந்துகிறேன். காத்தவராயன் படத்தை எழுபதுகளில் பார்த்திருக்கிறேன். அதற்கு இவ்வளவு speciality இருப்பதை இப்போது இப்போதுதான் உணர்கிறேன். முழுக்க திரும்பி பார்த்து சுவைத்து ரசிப்பேன்.
இதை பற்றி என் முழு பங்களிப்பு தர இயலாததற்கு வருந்துகிறேன்.
நடிகர் திலகத்தின் காத்தவராயன் திரைப்படம் ...நான் அப்போது திருவல்லிகேணியில் குடியிருந்த சமயம்..திங்கள் வந்தால் +1 அரையாண்டு தேர்வு..Paragon திரை அரங்கில் மூன்று காட்சிகள் விளம்பரத்தை பார்த்தமாத்திரத்தில் "திரையுலக சித்தரை" எப்படியாவது தரிசனம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து ஞாயிறு மதிய காட்சி , நண்பன் வீட்டுக்கு படிக்க செல்வதாக ஒரு உண்மையை சொல்லி வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு Rs.2.90 டிக்கெட் வரிசையில் நின்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு பெண்மணியிடம் காசை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்த படம்.
திரையில் காத்தவராயன் தோன்றும்போதெல்லாம் ஒரே விசில் மாயம்...அதுவும் அந்த மல்யுத்த காட்சி...அடேயப்பா...நடிகர் திலகத்தின் உடலை நாம் பார்த்தால் அந்த அகன்ற விரிந்த பரந்த மார்பு "V " வடிவம் போல் இருக்கும் !
அப்பொழுது புரியவில்லை ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது தாழ்புனர்சியில் கேவலமானவர்கள் நம் நடிகர் திலகத்தின் உடல் அமைப்பை வேண்டுமென்றே தவறாக பேசி இருகிறார்கள் என்று.
ஒரு உண்மையான ஆணழகன் என்றால் அது நம் நடிகர் திலகம் தான் என்பதை மனசாட்சி உள்ளவன் ஒத்துகொள்வான்.
டியர் சௌரி சார்
காத்தவராயனைப் பார்த்த தங்கள் அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. இதைப் போன்ற பதிவுகளைத் தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட படம் இத்திரியில் பதிவிடப் படும் போது, அதை எப்போது முதலில் பார்த்தீர்கள், அந்த அனுபவம் எப்படி இருந்தது, அதனைப் பற்றி கேள்விப் பட்ட செய்திகள், அதைப் பற்றிய விமர்சனம் போன்ற தகவல்கள் மேலும் பயனுறச் செய்யும்.
தொடர்ந்து இது போன்ற தங்கள் அனுபவங்களைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Sivaji Ganesan Filmography Series
53. Thanga Padhumaiதங்கப் பதுமை
http://www.thehindu.com/multimedia/d...i2_120952g.jpg
தணிக்கையான தேதி - 10.12.1958
வெளியான தேதி - 10.01.1959
தயாரிப்பு – ஜூபிடர் பிக்சர்ஸ் லிட், மதறாஸ்Quote:
விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
http://i1146.photobucket.com/albums/...ps49c32abf.jpg
நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால், புளிமூட்டை ராமசாமி, டி.பி.முத்துலக்ஷ்மி, டி.பாலசுப்ரமணியம், ஆர்.பாலசுப்ரமணியம், கே.துரைசாமி, எம்.ஆர்.சாமிநாதன்,
கதை வசனம் – அரு. ராமநாதன்
பாடல்கள் – உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், ஏ. மருதகாசி
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
குரல் கொடுத்தவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.ஸி.கிருஷ்ணன், எம்.எல். வசந்தகுமாரி, பி.லீலா, பி.சுசீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, ரத்னமாலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி.எஸ். பகவதி
நடன அமைப்பு பி.எஸ்.கோபால கிருஷ்ணன், ஹீராலால், சோகன்லால், டி.ஸி.தங்கராஜ்
நடனங்கள் – ல்லிதா, ஈ.வி.சரோஜா, லட்சுமி ராஜ்யம், ச்சி
ஒளிப்பதிவு – பி.ராமசாமி
ஒலிப்பதிவு – பாடல்கள் – வி.சீனிவாச ராகவன், ஏ.கோவிந்தசாமி
ஒலிப்பதிவு – வசனம் – எஸ்.விஸ்வநாதன்
ஸ்டில் படங்கள் – திருச்சி கே.அருணாச்சலம், பவனா, கே.வினாயகம்
கலை நிர்மாணம் – டி.வி.எஸ்.சர்மா
அரங்க அமைப்பு – எஸ்.ரங்கசாமி, என்.சுந்தரம்
மோல்டிங் – ஆறுமுகம், வேல்சாமி
எடிட்டிங் – ஏ.தங்கராஜன்
ஆடை அணிகள் – எஸ். நடராஜன்
மேக்கப் – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, தனக்கோடி, நனுபாய்
அரங்க அலங்காரப் பொருட்கள் – பிலிமோகிராப்ட், கிரி மியூஸியம், சினி கிராப்ட்
ஆபரணங்கள் – களஞ்சியம் பிரதர்ஸ்
உதவி டைரக்டர்கள் – எம்.ஜே.சேவியர், என்.கோபால கிருஷ்ணா, எஸ்.ஜகன்னாதன்
தயாரிப்பு மானேஜர்கள் – ஈ.சிஎச். சூரியநாராயணா, தாயாசு வெங்கட்
ப்ளோர் இன்சார்ஜ் – ஸி.ஸி.அந்தப்பன்
எலக்ட்ரீஷியன் – வி.சேஷாத்திரி நாதன், கே.முருகேசன்
ப்ராசஸிங் – பிலிம் சென்டர் பி.ஜி.ஷிண்டே, டி.ஈஸ்வர் சிங்
ஆர்.சி.ஏ. மற்றும் வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
ஸ்டூடியோ – நெப்ட்யூன், ரேவதி
தயாரிப்பு நிர்வாகம் – எம்.எஸ்.காசி விஸ்வநாதன்
தயாரிப்பாளர் – எம். சோமசுந்தரம்
சீனரியோ டைரக்ஷன் – ஏ.எஸ்.ஏ.சாமி
அறிமுக வாசகம் – படத்திலிருந்து...
http://i1146.photobucket.com/albums/...ps71e72e7d.jpg
.....
பாடல்களின் விவரங்கள்
1. வானம் பொய்யாது – சித்தர் பாடல்
2. எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா – கண்ணதாசன் – பி.லீலா கோரஸ்
3. விழி வேல் வீச்சிலே – உடுமலை நாராயண கவி – ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி
4. என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் – மருதகாசி – பி.சுசீலா
5. மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
6. இல்லற மாளிகையில் ஏற்றி வைத்த – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எஸ். பகவதி
7. வருகிறாள் உனைத் தேடி – கண்ணதாசன் – எம்.எல். வசந்தகுமாரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
8. ஒன்று பட்ட கணவனுக்கு – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எஸ்.பகவதி
9. முகத்தில் முகம் பார்க்கலாம் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா
10. விதியென்னும் குழந்தை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சீர்காழி கோவிந்தராஜன்
11. எழுந்தென்னுடன் வாராய் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.ஜி.ரத்னமாலா
12. இன்று நமதுள்ளமே – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா
13. கொற்றவன் மதுரை மூதூர் – கண்ணதாசன் – பி.லீலா
14. ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சி.எஸ்.ஜெயராமன்
15. பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – பி.லீலா