Originally Posted by
Yukesh Babu
சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை
சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.